Blog

  • Thirupathy Hundiyal coins

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் செலுத்திய நாணயங்களை வங்கியில் வழங்கி மூன்றாண்டுகளுக்கு முதலீடு செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இரண்டு ஆண்டுகளாக மலை போல் குவிந்து இருந்த சில்லரை நாணயங்களுக்கு தீர்வு கொண்டு வந்துள்ளது தேவஸ்தான நிர்வாகம்.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் சிறப்பு அதிகாரி தர்மா ரெட்டி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் ஏழுமலையான் கோவில் உண்டியலில் செலுத்திய சில்லறை நாணயங்கள் 20 கோடியே 50 லட்ச ரூபாய் வரை தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் உள்ள சில்லறை நாணய பரக்காமணியில்   சேர்ந்து உள்ளது. 

    இந்த நாணயங்களை மாற்றுவதற்காக அனைத்து வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையில் தேவஸ்தானத்தில் உள்ள சில்லறை நாணயங்களை பெறக்கூடிய வங்கியில் மூன்றாண்டுகளுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் அதே தொகை செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

    மேலும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு சேவைகள் செய்து வருவது குறித்தும் வங்கி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக வங்கி அதிகாரிகளும் 24 கோடி ரூபாய் மதிப்புள்ள சில்லரை நாணயங்களை பெறுவதற்கு அவர்கள் முன்வந்துள்ளனர். 

    மேலும் ஒவ்வொரு மாதமும் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியலில் காணிக்கையாக 5 கோடி ரூபாய் வரை சில்லறை நாணயங்கள் வருகிறது. அதனை  சுழற்சிமுறையில் நீங்களே தேர்ந்தெடுத்து ஒரு பட்டியல் வழங்கும்படி வங்கி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஒவ்வொரு மாதமும் உண்டியலில் கிடைக்கும் சில்லரை நாணயங்களை பெறுவதற்காக பட்டியலை வழங்கியுள்ளனர். 

    அதன்படி ஒவ்வொரு மாதமும் 5 கோடி ரூபாய் சில்லரை நாணயங்களை தேர்தெடுக்கப்பட்ட வங்கியில் முதலீடு செய்யும் விதமாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. எனவே இன்னும் ஒரு மாத காலகட்டத்திற்குள் தேவஸ்தானத்தில்  நிலுவையில் உள்ள சில்லறை நாணயங்கள் அனைத்தும் அந்தந்த வங்கியில் செலுத்தப்பட்டு அதன் மூலமாக தேவஸ்தானத்திற்கு  வட்டி கிடைக்கும் விதமாக செய்யப்பட உள்ளது என அவர் தெரிவித்தார்.
     

  • Atthi Varadhar Kulam

    47 நாட்கள் வைபவம் முடிந்த நிலையில் அடுத்த 40 ஆண்டுகளுக்கு ஓய்வு எடுக்க அத்திவரதர் நாளை அனந்தசரஸ் குளத்திற்கு செல்கிறார். காஞ்சி அத்தி வரதர் ஜூலை 1- ம் தேதியிலிருந்து 31-ம் தேதி வரை சயன கோலத்திலும் அதற்கடுத்து நின்ற கோலத்திலும் தரிசனம் கொடுத்து வருகிறார். 

    46 நாள்களாகப் பக்தர்களுக்கு அருள்பாலித்துவந்த அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. நாளை முதல் அனந்த சரஸ் குளத்தில் சயன கோலத்தில் ஓய்வெடுக்கப் போகிறார். அடுத்ததாக, இனி 40 வருடங்கள் கழித்து 2059- ம் ஆண்டுதான் அத்திவரதைத் தரிசிக்க முடியும்.

  • Thiruchendur Avani Festival

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா வருகிற 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

     ஆவணி திருவிழாவை முன்னிட்டு வருகிற 20-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. ஆவணி திருவிழாவின் போது சுவாமி தினமும் காலை, மாலை நேரங்களில் ஒவ்வொரு வாகனத்தில் 8 வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுகின்றார்.

    திருச்செந்தூர் ஆவணி திருவிழா நிகழ்ச்சி நிரல்…..
     ஆகஸ்டு 24 ….
    காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்கிறார்கள். பின்னர் மாலையில் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனையாகி சுவாமியும், அம்பாளும் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

    ஆகஸ்டு 25…..
    6-ம் திருநாள் காலையில் சுவாமி கோ ரதத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து பந்தல் மண்டபம் மத்தியில் சேர்கிறார். இரவு 8 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளித் தேரிலும், அம்பாள் இந்திர விமானத்திலும் எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவிலில் சேர்கிறார்கள்.

    ஆகஸ்டு 26…..
    7-ம் திருநாள் அதிகாலை 5 மணிக்கு சண்முகபெருமான் உருகு சட்டசேவை நடக்கிறது. 6.30 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்து மேலக்கோவிலை சேர்கிறார். காலை 9 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் சண்முக விலாசத்தில் இருந்து வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பிள்ளையன் கட்டளை மண்டபம் சேர்கிறார். மாலை 4.30 மணிக்கு தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருள்கிறார்.

    ஆகஸ்டு 27…..
    8-ம் திருநாள் அதிகாலை 5 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் பெரிய வெள்ளி சப்பரத்தில், வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருள்கிறார். காலை 10.30 மணிக்கு சுவாமி பச்சை நிற கடசல் சப்பரத்தில், பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவில் சேர்கிறார். பின்னர் மேலக்கோவிலில் இருந்து குமரவிடங்க பெருமானும், அலைவாயுகந்த பெருமானும் வெள்ளிக்குதிரை வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து நெல்லை ரோட்டில் உள்ள வேட்டை வெளிமண்டபத்தில் திருக்கண் சாத்தி பின் மேலக்கோவில் சேர்கிறார்.

    ஆகஸ்டு 29…..
    10-ம் திருநாள் காலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் தேரோட்டம் நடைபெறும். இரவு சுவாமி, அம்பாள் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி வீதி உலா வந்து மேலக்கோவில் சேர்கிறார்கள். 11-ம் திருநாள் இரவு 7 மணிக்கு சுவாமியும், அம்பாளும் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி வெளிவீதி வழியாக தெப்பக்குளம் மண்டபம் சேர்கிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் 8 வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்கிறார்கள்.

    ஆகஸ்டு 31…. 
    12-ம் திருநாள் மாலை 4.30 மணிக்கு மேல் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளிலும் வலம் வந்து வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்த முதலியார் மண்டபம் சேர்ந்து, அங்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் வீதிஉலா வந்து கோவிலை சேர்கிறார்கள். 

  • Atthi Varadhar dharshan ends today

    காஞ்சிபுரம், ஸ்ரீ அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.  காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை 1 முதல் 31 நாட்கள் சயன கோலத்திலும், ஆகஸ்ட் 1 முதல் 15 நாட்களாக நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 

    அத்திவரதரை தரிசிக்க இன்றுடன் கடைசி நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நள்ளிரவு முதலே பல கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் நின்று 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    ஆடி மாத கருட சேவையை முன்னிட்டு நேற்று மாலை கருடசேவை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மாலை 5 மணியிலிருந்து அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் இரவு 8 மணிக்குப் பிறகு தரிசனம் தொடங்கவுள்ளது.

    நேற்று பகல் 12 மணியுடன் விஐபி மற்றும் விவிஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 47-வது நாளான  இன்று மாலை 5 மணியுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவு பெறுகிறது. 

    ஆகஸ்ட் 17-ம் தேதி அத்திவரதரை திருக்கோயில் அனந்தசரஸ் திருக்குளத்தில் ஆகம விதிகளின்படி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அன்று மாலை குளத்தில் வைக்கப்படுவார். 
     

  • August 16 Rasi palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – நலம் 
    ரிஷபம் – பயம்   
    மிதுனம் – ஆசை
    கடனம் – வாழ்வு
    சிம்மம் – பரிசு
    கன்னி –  செலவு
    துலாம் –  நன்மை 
    விருச்சிகம் – ஆர்வம் 
    தனுசு – தெளிவு
    மகரம் –   உறுதி 
    கும்பம் – முயற்சி
    மீனம் – பரிவு
    சந்திராஷ்டமம்    – பூசம், ஆயில்யம்
     

  • August 16 Gayathri Jabam

    ஆகஸ்ட் 16 – காயத்ரி ஜபம்
    விகாரி வருடம் – ஆடி 31
    காயத்ரி ஜபம்
    16-ஆக-2019 வெள்ளி  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    பிரதமை          
    திதி நேரம்    :    பிரதமை    இ    8.08
    நட்சத்திரம்    :    அவிட்டம்    கா    11.39
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூசம்,ஆயில்யம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Angaraga Gragha Homam

    வேலூர் மாவாட்டம்  வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும், பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், ஆசிகளுடன் வருகிற 20.08.2019 செவ்வாய்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை அங்காரக கிரக சாந்தி ஹோமமும், காலசக்ர பூஜையும் நடைபெறுகிறது.

    அங்காரக கிரக சாந்தி ஹோமம்:

    ஆரோக்கியத்தையும், அதிர்ஷ்டத்தையும், மகிழ்ச்சி போன்ற வசதிகளையும் மேம்படுத்தி புதிய வாய்ப்புகள் பெற்று உடன்பிறந்தோருடன் நல்லுறவு வளர்த்துக் கொண்டு தெளிவாக முடிவெடுக்க இயலும் இந்த அமைப்பை நமக்கு ஏற்ப்படுத்தி தருவது அங்காரகன் என்றழைக்கப்படும் செவ்வாய் கிரகமாகும். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் உச்சத்தில் இருந்தால், தைரியம், உடல் வலிமை போன்றவற்றை அளிப்பார். நீச்சமடைந்திருந்தாலும், சாதகமற்ற வீட்டில் இருந்தாலும் கடன்கள், நோய்கள், உறவுச் சிக்கல்கள் போன்றவற்றை ஏற்படுத்துவார்.

    செவ்வாய் மனித உணர்ச்சிகளைக் குறிக்கும் கிரகம் ஆகும். நமது மனோபலங்களை கட்டுப்படுத்தும் கிரகம் செவ்வாய் ஆகும். ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக இல்லையெனில், பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. செவ்வாய் ஹோமம், இந்த தோஷங்களை நீக்கி, வாழ்வில் முன்னேறுவதற்கான வாய்ப்பை அளிக்கக் கூடியது.

    அங்காரக ஹோமத்தின் சிறப்பம்சங்கள் :

    வலுவாக இருக்கும் செவ்வாய், தனிப்பட்ட ஆற்றலையும், பதட்டமான சூழ்நிலையை சிறப்பாகக் கையாளும் தைரியத்தையும் அளிக்கிறார். நிதிநிலையை மேம்படுத்துகிறார். இந்த ஹோமம் செய்வதன் மூலம் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும், உணர்ச்சிகள் கட்டுப்பாட்டில் இருக்கும், பண விஷயங்களை அமைதியாக கையாளும் திறன் ஏற்படும். இந்த கிரகத்தை சாந்தப்படுத்தும் அங்காரக கிரக சாந்தி ஹோமத்தில் பங்கு கொண்டு, செவ்வாய் கிரகத்தின் அனுக்கிரகத்தைப் பெற்று, அதனால் விளையும் தெய்வீக ஆற்றல்களை, உங்கள் வாழ்க்கை நலனுக்குப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

    பக்தர்கள் அனைவரும் இந்த யாக பூஜைகளில் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தன்.

    தொடர்புக்கு : ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

    அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.

    வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203
     

  • Kalazhagar Koil Car fest

    மதுரை அருகே பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோயில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    மதுரை அருகே, அழகர்கோவிலில் அழகுற அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவிலில், வருடந்தோறும் ஆடிப்  பெருந்திருவிழா, வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். அந்த வகையில் கடந்த 7-ஆம் தேதி ஆடிப் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி – பூதேவியருடன், சிம்மம், அன்னம், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

    இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடி பிரமோற்சவ திருவிழாவான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. காலை 5.15 மணிக்கு மேல் 6 மணிக்குள் திருதேருக்கு சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தயார்களுடன் எழுந்தருளினார். 

    தொடர்ந்து காலை 7.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. தேரோட்ட திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, "கோவிந்தா கோவிந்தா" என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, "கோவிந்தா" கோஷம் எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
     

  • Temple for men’s

     சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரம் ஊராட்சிக்குட்பட்ட வனப்பகுதி சூழ்ந்த 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆண்கள் மட்டுமே பிரத்யேகமாக வழிபடக்கூடியதும், ஆண்கள்  வைக்கப்படும் பிராத்தனையை உடனே நிறை வேற்றும் சக்தி வாய்ந்தது.

     ஸ்ரீ அஞ்சலாங்குட்டை முனியப்பன், ஸ்ரீ வளர்ந்த சடாமுனி, ஸ்ரீ செம்முனி, ஸ்ரீவாமுனி கோயிலில், சுவாமியே யாக பூஜை நடத்த அருள் கூறியதால்  வாழப்பாடி, சிங்கிபுரம், முத்தம்பட்டி, செல்லப்பநகர், புதுப்பாளையம், பழனியாபுரம், காலணி, சேசன்சாவடி உள்ளிட்ட சுற்று பகுதியிலுள்ள விவசாயிகள், பொதுமக்கள், கிராமமக்கள் 500க்கும் மேற்ப்பட்ட ஆண்கள் திரண்டு மழை வேண்டி வருண சிறப்புயாகபூஜை நடத்தினர்.

    சேலத்தை அடுத்த தாரமங்களத்தில் இருந்து உமா சிவாச்சாரியார் என்பவர் தலைமையில் இந்த வருண யாக பூஜை நடைபெற்றது. முதலில் வாஸ்து சாந்தி விக்னேஸ்வரர் பூஜையோட துவங்கி பல மணி நேரம் நடத்தப்பட்டது, இன்று காலை 7 மணி அளவில் துவங்கி  இந்த சிறப்பு வருண யாக  பூஜையில், கணபதி ஹோமம், மிருத்திங்க ஹோமம்,   காயத்ரி ஹோமம், சன்னாதி ஹோமம், நவக்கிரக ஹோமம் செய்து 210 சித்தர்கள் வர கைக்கான தமிழ் முறையில நாம சப வேல்வி என்ற பூஜை செய்து மகா அபிஷேகம் மதியம் 12 மணியளவில் முடிக்கப்பட்டது.
     

  • Ulaga Nanmai vendi 1008 vilakku poojai

    சிவகங்கை அருகே உள்ள சிரமம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீகொங்கோஷ்வரர் சுவாமி திருக்கோவிலில் உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நலம் வேண்டியும் 1008திருவிளக்கு பூஜை வழிபாடு  விமரிசையாக நடைபெற்றது.

     ஏழுமுக காளியம்மனுக்கு சிறப்பு திருமஞ்சனத்துடன் துவங்கியது  தொடர்ந்து திருவிளக்கு பூஜை வழிபாடு சிவாச்சாரியார்கள் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வரிசையாக அமர்ந்து கணபதி பூஜையுடன் விளக்கு பூஜையை நடத்தினர்.

     பூஜையில் 1008 சகசரநாம அர்ச்சனை 108 மகாலட்சுமி மற்றும் காயத்திரி மந்திரங்கள் ஜெபித்து குங்குமம் மற்றும் உதிரி பூக்களால் விளக்குக்கு அர்ச்சனை செய்தனர். இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.