Blog

  • Atthi Varadhar puspangi sevai

    காஞ்சிபுரம், ஸ்ரீ அத்தி வரதர் வைபவம் 46 ஆம் நாள், புஷ்பாங்கி சேவையில் காட்சியருளும் ஸ்ரீ அத்தி வரதரை நீண்ட வரிசையில் சென்று பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.

    108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் அருள்பாலித்து வருகிறார். முதல் 31 நாட்கள் சயனகோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ந்தேதி முதல் நின்றகோலத்தில் காட்சி தருகிறார்.

    நாளையுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவு பெறுவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்து வருகின்றனர். உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் காஞ்சீபுரத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர். தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    வருகிற 17-ந்தேதி மந்திரங்கள் ஓதப்பட்டு அத்திவரதர் சிலை கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் பத்திரமாக வைக்கப்படும். கோவில் குளத்தை சுத்தம் செய்யும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அத்திவரதரை எடுத்து செல்ல மூங்கில் பலகைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    இன்று ஆடி கருடசேவையையொட்டி நண்பகல் 12 மணிக்கு அத்திவரதர் தரிசனத்திற்கான கிழக்கு கோபுர வாயில் மூடப்படும். முக்கிய நபர்களுக்கான தரிசன வாயிலும் 12 மணிக்கு அடைக்கப்படும். உள்ளே சென்ற பக்தர்கள் மாலை 5 மணிக்குள் தரிசனத்தை முடித்துவிட்டு வெளியேற வேண்டும். மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரை கருடசேவை விழா நடைபெறும். இதனைத் தொடர்ந்து 8 மணிக்கு மேல் மீண்டும் தரிசனம் தொடர்ந்து நடைபெறும்.
     

  • Punnai Nallur Mariamman vilaku poojai

    வரலாற்று சிறப்புமிக்க தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயத்தில் உலக மக்கள் நலன் வேண்டியும், பருவமழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், இல்லங்களில் திருமண தடைகள் நீங்கவும், சுமங்கலி பெண்களின் தாலிபாக்கியம் நிலைக்கவும் 1008 பெண்கள்  குத்துவிளக்கேற்றி கூட்டு வழிபாடில் ஈடுபட்டனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் அம்பாளை வழிபட்டனர்.

  • Rasi palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – அச்சம் 
    ரிஷபம் – சோர்வு     
    மிதுனம் – பயம் 
    கடனம் – பக்தி
    சிம்மம் – களிப்பு 
    கன்னி –  சுகம் 
    துலாம் –  கவலை 
    விருச்சிகம் – வெற்றி
    தனுசு – நன்மை 
    மகரம் –   சாதனை
    கும்பம் – லாபம் 
    மீனம் – ஜெபம்
    சந்திராஷ்டமம்    – பூசம்
     

  • August 15 – Independence Day

    ஆகஸ்ட் 15 –  சுதந்திர தினம்
    விகாரி வருடம் – ஆடி 30
     பவுர்ணமி 
    ஆவணி அவிட்டம், 
    அரவிந்தர் பிறந்த நாள், 
    அழகர்கோவில் கள்ளழகர், 
    வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் தேர்
    15-ஆக-2019 வியாழன்  
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    பவுர்ணமி          
    திதி நேரம்    :    பவுர்ணமி    மா    6.16
    நட்சத்திரம்    :    திருவோணம்    கா    9.14
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூசம்
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – சிக்கல்
    ரிஷபம் – பக்தி    
    மிதுனம் – எதிர்ப்பு 
    கடனம் – வெற்றி
    சிம்மம் – விருப்பம் 
    கன்னி –  ஜெயம்
    துலாம் –  நட்பு
    விருச்சிகம் – தெளிவு
    தனுசு – மகிழ்ச்சி
    மகரம் –   தாமதம்
    கும்பம் – சுகம் 
    மீனம் – வரவு
    சந்திராஷ்டமம்    – புனர்பூசம்
     

  • August 14 Thiruvona Viradham

    ஆகஸ்ட் 14 – திருவோண விரதம்
    விகாரி வருடம் – ஆடி 29
    14-ஆக-2019 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    சதுர்த்தசி          
    திதி நேரம்    :    சதுர்த்தசி    மா    4.34
    நட்சத்திரம்    :    உத்திராடம்    கா    7.01
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    புனர்பூசம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Seenpakkam selva vinayakar

    மகாகணபதி எழுந்தருளியிருக்கும் கோயில்களில் ஒன்று, சேண்பாக்கம்.  ஒரே கருவறையில் பதினோரு சுயம்பு லிங்கங்களாக விநாயகப்பெருமான் திருவருள்புரியும் இத்திருத்தலம் வேலூர் மாவட்டத்தில் உள்ள சேண்பாக்கத்தில் உள்ளது. பிரதான விநாயகராக செல்வ விநாயகர் அருள்கிறார். தலமரமாக வன்னிமரம் போற்றப்படுகிறது. இது மிகவும் தொன்மையான தலம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மராட்டிய அமைச்சரான துக்காஜி தனது தேரில் இவ்வழியாக சென்று கொண்டிருந்தார். 

    ஓரிடத்தில் சக்கரத்தின் அச்சு முறியவே கீழே இறங்கி பார்த்தார். சக்கரத்தின் கீழிருந்து ரத்தம் கொப்பளித்தது. பயந்து போனார் துக்காஜி. அப்போது விநாயகர் அசரீரியாக ‘இவ்விடத்தில் ஏகாதச வடிவில் நான் இருக்கிறேன். என்னை வெளிக்கொண்டு வந்து ஆலயம் எழுப்பு,’ என்று ஆணையிட்டார். அதன்படி இவ்விடத்தில் லிங்க வடிவில் இருந்த 11 விநாயகர்களையும் எடுத்து பிரதிஷ்டை செய்தார் துக்காஜி. மூலவரான செல்வ விநாயகரின் முதுகின் வலது பக்கத்தில் தேர் சக்கரம் ஏறிய வடு இன்னமும் உள்ளது.

    ஆதிசங்கரருக்கு சுயம்பு மூர்த்தங்களை தரிசனம் செய்வதில் மிகவும் விருப்பம். சேண்பாக்கத்தில் 11 சுயம்பு மூர்த்திகள் இருப்பதை அறிந்து அவர் இத்தலத்திற்கு வந்தார். 11 சுயம்பு மூர்த்திகளும் லிங்க வடிவிலேயே இருப்பதைக் கண்டார். பின் தன் ஞானதிருஷ்டியால் அனைத்து லிங்கங்களும் விநாயகரே என்பதை அறிந்தார். சுயம்பு மூர்த்திகளுக்கு எதிரில் ஈசான்ய மூலையில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்தார். இவ்வாறு ஆதிசங்கரரின் இக்கோயிலை வழிபட்டிருக்கிறார் என்பதிலிருந்தே இந்தக் கோயிலின் பழமையும் சிறப்பும் விளங்கும்.  

    இந்த யந்திரத்தின் அருகே நவகிரக மேடை அமைத்துள்ளனர். இதிலிருக்கும் சனிபகவான் தனக்கு அதிபதியான விநாயகரை பார்த்திருப்பது தனி சிறப்பு. திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை இல்லாதவர்கள் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதமிருந்து தீபம் ஏற்றி விநாயகரை வழிபாடு செய்தபின், ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரம் அமைத்துள்ள இடத்திலுள்ள நவகிரகத்தை வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் பாலவிநாயகருக்கு பால் அபிஷேகம் செய்கிறார்கள்.  விநாயகருக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
     

  • Thiruvona viradham

    திருவோண நட்சத்திம்…. மகாவிஷ்ணுவுக்கு உகந்த உன்னதமான நாள். மாதாமாதம் வரும் திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விரதம் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்த நாளில் விரதம் இருந்தால் நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும்.

    அதிகாலையில் நீராடி, கடவுளைத் துதித்து, அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று துளசிமாலை அணிவிக்கலாம். கோயிலுக்குப் போக நேரமில்லாதவர்கள் வீட்டில் உள்ள பெருமாளின் படத்திற்கு துளசி மாலையையோ அல்லது வேறு உகந்த புஷ்பத்தையோ அணிவித்து, மனதார பிராத்திக்கலாம். 

    பின்னர், இந்த நாளில் உண்ணப்போகும் உணவுப் பொருள் எதுவாக இருப்பினும், அதில் எந்த ஒரு ரூபத்திலும் துளியளவு கூட உப்பு சேர்க்காமல், உண்ண வேண்டும். ஒரு வேளை அரிசி உணவும், மற்ற வேளைக்கு, சிற்றுண்டி, பால், பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

    திருவோண விரதத்தை  என்றும் அழைக்கப்படுகிறது. மிகுந்த பக்தியுடன் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் தடைப்பட்ட காரியங்களை நல்ல முறையில் விரைவில் நடத்தித் தருவார் நாராயணன். வேண்டியது நிறைவேறும் என்பது திண்ணம். 
     

  • Atthi Varadhar Dharisanam

    காஞ்சிபுரம் அத்தி வரதரை இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே தரிசிக்க முடியும். அத்திவரதரை 43 நாட்களில் இதுவரை 85 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். 

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் எழுந்தருளும் அத்தி வரதர் வைபவம் கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கியது. முதல் நாளிலிருந்தே, அத்தி வரதரை தரிசனம் செய்ய லட்சக்கணக்கில் மக்கள் திரண்டனர்.

    அத்திவரதர் புகழ் பரவப் பரவ, அத்தி வரதர் தரிசனத்துக்கு தமிழகம் முழுவதிலிருந்து மட்டுமல்ல, வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்தும் மக்கள் குவியத் தொடங்கினர்.  அத்தி வரதர் தரிசனம் தொடங்கி 42 நாட்கள் முடிந்துவிட்டன. இன்னும் 4 நாட்களே அத்தி வரதர் தரிசனம் கிடைக்கும் என்பதாலும், தொடர்ந்து விடுமுறை தினங்கள் வருவதாலும் அத்தி வரதரைக் காண முன்பை விட இரு மடங்கு பக்தர்கள் குவிகிறார்கள். இதுவரை 85 லட்சம் பேர் அத்தி வரதரை தரிசித்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதனிடையே அத்தி வரதர் வைபவம் 108 நாட்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால், திட்டமிட்டபடி அத்தி வரதரை வரும் ஆகஸ்ட் 17ம் தேதி மீண்டும் குளத்தில் வைக்கப்படுவார் என காஞ்சிபுரம் ஆட்சியர் தெரிவ்த்துள்ளார்.
     

  • Lakshmi Thayarudan Arul Palikkum Lakshmi Narasimmar

    விழுப்புரம் மாவட்டம் பரிக்கல் பகுதியில் அமைந்துள்ளது லட்சுமி நரசிம்மர் திருக்கோயில். பொதுவாக நரசிம்மர் கோயிலில் உக்கிர மூர்த்தியான நரசிம்மர் தன் மடியிலுள்ள மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்திருப்பார். ஆனால் இந்தியாவிலேயே இக்கோவிலில் மட்டும் தான் நரசிம்மரை லட்சுமி தாயார் தன் வலக்கையாலும், லட்சுமி தாயாரை நரசிம்மரும் ஆலிங்கனம் செய்தபடி அருள்பாலிக்கிறார். 

    இத்திருக்கோயிலில் தினசரி ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. காலை 9 மணி முதல் 10.30 மணி வரை திருமஞ்சனம் நடைபெறும். பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு இந்த திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.

    ஒரே வரிசையில் உள்ள மூன்று லட்சுமி நரசிம்மர் ஆலயங்களில் தினமும் திருமஞ்சனம் நடத்தப்படுவது பரிக்கல்லில் மட்டும் தான். இந்த திருமஞ்சனத்தை நேரில் பார்ப்பது மிகவும் நன்மை தரக்கூடியதாக கருதப்படுகிறது.இந்த திருமஞ்சனத்துக்கு பக்தர்கள் பொருட்கள் வாங்கி கொடுக்கலாம். பால், தயிர், வாசன திரவியங்கள் போன்றவற்றை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வாங்கிக்கொடுக்கலாம்.

    இந்த திருமஞ்சனத்தை பார்ப்பதற்காகவே சில பக்தர்கள் காலை நேரத்தில் பரிக்கல் ஆலயத்துக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். சென்னை மற்றும் தொலைதூரங்களில் இருந்து மூன்று லட்சுமி நரசிம்மர் ஆலயங்களையும் தரிசிக்க வருபவர்கள் இந்த திருமஞ்சனத்தை பார்க்கவேண்டும் என்பதற்காகவே பரிக்கல் ஆலயத்தை முதல் ஆலயமாக தேர்ந்தெடுத்து வழிபட்டு வருகிறார்கள்.