Blog

  • Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – அன்பு 
    ரிஷபம் – செலவு   
    மிதுனம் – புகழ் 
    கடனம் – ஈகை 
    சிம்மம் – முயற்சி
    கன்னி –  உதவி 
    துலாம் –  சுகம்  
    விருச்சிகம் – பரிவு
    தனுசு – பெருமை
    மகரம் –   சிக்கல்
    கும்பம் – சினம் 
    மீனம் – தனம்  
    சந்திராஷ்டமம்    – திருவாதிரை

  • August 13 Indraya Naal Eppadi

    ஆகஸ்ட் 13 – இன்றைய நாள் எப்படி?
    விகாரி வருடம் – ஆடி 28
    சங்கரன் கோவில் கோமதியம்மன் தபசு
    13-ஆக-2019 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    திரையோதசி          
    திதி நேரம்    :    திரையோதசி    ம    3.19
    நட்சத்திரம்    :    உத்திராடம்    முழுவதும்    0.00
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    திருவாதிரை
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Baratha Madha Homam

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற 15.08.2019 வியாழக்கிழமை காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரை சுதந்திர தின விழாவும் பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ பாரத மாதாவிற்கு சிறப்பு ஹோமத்துடன் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளது.

    ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தனது அன்னையின் வாக்கின்படி வேலூர் மாவட்டம், கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுராவில் நோய் தீர்க்கும் பீடமாக ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அமைத்து அங்கு பிரதான தெய்வமாக ஸ்ரீ தன்வந்திரி பகவானையும், பாரதமாதாவுடன் 77 பரிவார தெய்வங்களையும், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களையும் பிரதிஷ்டை செய்து தினசரி யாகங்கள் செய்து வருகிறார்.

    பாரத தேசத்தின் மீது அளவில்லாத பற்றுதலின் காரணமாகவும், பாரத மாதாவின் மீதுள்ள அளவுகடந்த பக்தியின் காரணமாகவும், இதுவரை எங்கும் பார்த்திராத வகையில் பீடத்தின் நுழைவு பகுதியிலேயே நம்மையெல்லாம் பாரமாக நினையாமல் பெற்ற குழந்தைகளாக பாதுகாத்திடும் பூமித்தாய் என்கிற அன்னை பாரதமாதாவையும் பிரதிஷ்டை செய்து தேச நலமே தேக நலம், தேக நலமே தேச நலம் என்ற தாரக மந்திரத்துடன் தினசரி பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது.

    வருகிற 15.8.2019 வியாழக்கிழமை 73 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று காலை 8.00 மணியளவில் டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் ஊர் பிரமுகர்களின் முன்னிலையில் சுதந்திர தினத் திருவிழா கொடியேற்றம் மற்றும் பாரத மாதாவிற்கு ஹோமம், அபிஷேகம் தேக நலன் மட்டும் இல்லாமல் தேச நலம் அவசியம் என்பதை உணர்த்தும் வகையில் நடைபெற உள்ளது.

    15 வது வருடமாக 2019 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி மற்றும் வியாழக்கிழமை சுதந்திர தினத்தன்று, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மேற்கண்ட ஹோம பூஜைகள் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.

    கோ பூஜை, யாகசாலை பூஜை, ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீதன்வந்த்ரி ஹோமம், ஸ்ரீ ம்ருத்யஞ்ஜ ஹோமம், ஸ்ரீ பாரத மாதா ஹோமங்கள் நடைபெற்று, பூர்ணாஹுதி நடைபெறும். ஹோமம் நிறைவு பெற்ற உடன் ஸ்ரீ பாரத மாதாவிற்கு மஹா அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்று பங்கேற்கும் பக்தர்களுக்கு இறை பிரசாதம் வழங்கப்பட உள்ளது.

    மேலும் பக்தர்கள் அனைவரும் இதில் பங்கேற்று பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு :
    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை, தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203

     

  • Thirumanam Kuritha Kavalaya

    உங்கள் மகன், மகள் திருமணம் தடைகளால் தாமதம் ஆகிறதா? கவலை வேண்டாம். கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சித்தர் பீடத்திற்கு வந்து  தடைகள் நீங்கி மகிழ்ச்சி அடையுங்கள்.

    பல ஆண்டுகளாக ஏற்பட்டு வந்த திருமணத் தடை, வேலை வாய்ப்பில் தடை, தொழில் முன்னேற்றம் இல்லாத நிலை ஆகியவற்றுக்கு உடனடியாக தீர்வை ஏற்படுத்தி தருகிறார் அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம் நிறுவனர் ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள்.

    மகன், மகளுக்கு திருமணம் நடக்காமல் அவதிப்பட்டு வந்த ஏராளமான பெற்றோர்  அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடத்திற்கு வருகை தந்து சித்தர்கள் அருளால் தடைகள் நீங்கி தங்கள் குழந்தைகளின் திருமணம் நடந்து வாழ்வு செழித்து இருப்பதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இங்கு வந்து திருமணத் தடைகள் நீங்கி ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்கள் திருமணம் நடந்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    இதேபோல் தொழில் முன்னேற்றம் இல்லாமல் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தடை. வேலை வாய்ப்பில் ஏற்பட்டு வரும் தடை ஆகியவையும் முழுமையாக சரியாகிறது. பரிகாரம் செய்ய வேண்டி இருந்தால் மட்டுமே ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள் செய்ய சொல்கிறார். இங்கு வந்து பயன் பெற்றவர்கள் ஏராளம்… ஏராளம் பேர். மனதை வருத்திய கடன் தீர்ந்து நிம்மதியுடன் வாழ்கின்றனர். 

    திருமணத்தடைகள் நீங்க இங்கு வந்து பரிகார பூஜைகள் செய்தவர்கள் மனம் போல் மாங்கல்யம் உடனே அமைந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. சுருளி மலையில் உலக மக்களின் நன்மைக்காக 10008க்கும் அதிகமான யாகம் செய்துள்ளார். இந்த யாகம், சித்தர்கள் மற்றும் பல தெய்வங்களை வேண்டி மக்கள் நன்மைக்காக செய்துள்ளார் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

    நவக்கிரக தோஷம், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க, குழந்தைகளின் கல்வி, முன்னோர்கள் சாபம், திருமணத்தடை என்று அனைத்து பிரச்னைகளுக்கும் பரிகார நிவர்த்தி பூஜைகளை சித்தர்கள் அருளாசியுடன் சிறப்பாக செய்து தேடி வந்தவர்களின் குறைகளை தீர்த்து வைத்து வருகிறார் அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம் ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள். சுவாமிகளை சந்திக்க முன் அனுமதி பெற்று வரவும். மேலும் ஆதியோகவாசி பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.

    ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம், C21 / புது எண் 42, 43 சர்க்கரை செட்டியார் நகர், இஎஸ்ஐ (எதிரில்), உப்பிலிபாளையம் (போ), கோயமுத்தூரில் அமைந்துள்ளது. இங்கு சித்தர்கள் அருளால் பல பிரச்னைகள், மன வேதனைகளுடன் வருபவர்கள் நிம்மதி போன்றவை கிடைக்கிறது.
    தொடர்புக்கு: 63747 72550, 74490 12379.

  • Drowpathy amman koil kumbabishegam

    அரக்கோணம் அருகே பரமேஸ்வரமங்கலம் ஸ்ரீ கிருஷ்ண சகாய பாண்டவ சமேத அருள்மிகு ஸ்ரீ திரெளபதியம்மன் ஆலய புணருத்தாரண மஹா கும்பாபிஷேகம் வெகு விமற்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்துக்கொண்டனர். 

    வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த பரமேஸ்வரமங்கலம் பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கிருஷ்ண சகாய பாண்டவ சமேத அருள்மிகு திரெளபதி அம்மன் ஆலயம் புணருத்தாரண செய்யப்பட்டு மகா கும்பாபிஷேக விழா ஆலய நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. 

    கடந்த 9 ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு கோபூஜை, கணபதி ஹோமம் போன்ற பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கும்பாபிஷேக விழா இன்று காலை யாகசாலை பூஜைகள், தத்துவார்ச்சனை, அவ்வப்பிரதயாகம் போன்ற பூஜைகளுக்கு பின்னர் புனித நீரை ஊர்வலமாக ஆலயம் சுற்றி வந்து வேத பண்டிதர்கள் மந்திரங்கள் முழுங்க புனித நீர் கோபுர கலங்களின் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

    இதில் கலந்துக்கொண்ட மக்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டபடி சாமி தரிசனம் செய்துக்கொண்டனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு அம்மன் அருளாசி பெற்றனர்.

  • August 12 Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – நட்பு
    ரிஷபம் – உயர்வு  
    மிதுனம் – சிந்தனை 
    கடனம் – களிப்பு
    சிம்மம் – வரவு 
    கன்னி –  சுகம் 
    துலாம் –  சிக்கல் 
    விருச்சிகம் – பக்தி
    தனுசு – எதிர்ப்பு 
    மகரம் –   பயம்  
    கும்பம் – தடை  
    மீனம் – கவலை 
    சந்திராஷ்டமம்    – மிருகசீரிடம்

  • August 12 Pradhosham

    ஆகஸ்ட் 12 – பிரதோஷம்
    விகாரி வருடம் – ஆடி 27
     பிரதோஷம் 
    12-ஆக-2019 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    அதிதி          
    திதி நேரம்    :    துவாதசி    ம    2.28
    நட்சத்திரம்    :    பூராடம்    அ.கா    5.18
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    மிருகசீரிடம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Thirupathy pavitrochavam

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பூஜைகளில் ஏற்படும் தோஷங்களுக்கு பரிகாரமாக செய்யப்படும் பவித்திர உற்சவம் தொடங்கி உள்ளது. 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம்தோறும் நடைபெறக்கூடிய பூஜைகளில் ஏற்படும் தோஷங்களுக்கு பரிகாரமாக ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாட்களுக்கு பவித்திர உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அவ்வாறு  பவித்ரோற்சவம் இன்று துவங்கியது. 

    பவித்ர உற்சவத்தை முன்னிட்டு இன்று காலை உற்சவர்கள் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஏழுமலையான் கோவிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு உற்சவர்களுக்கு பால்,தேன், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து தீப, தூப, கற்பூர ஆரத்தி ஆகிய சமர்பணங்கள் உற்சவ மூர்த்திகளுக்கு நடைபெற்றன.

    தொடர்ந்து நெய்வேத்தியம் செலுத்தப்பட்டு  யாகசாலையில் பவித்திர மாலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில்   தேவஸ்தான இணை செயல் அலுவலர் தர்மா ரெட்டி, துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

    நாளை பவித்ரா உற்சவத்தின் இரண்டாவது  நாள் பவித்ர மாலைகள் மூலவருக்கும், உற்சவருக்கும், ஆனந்த நிலையம், கொடிமரம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நாளை மறுநாள் செவ்வாய்கிழமை யாகம் பூர்ணாவுதியுடன் நிறைவு பெறுகிறது.

  • Atthi Varadhar 42 nd day

    அத்திவரதர் வைபவம் 42 வது நாளான இன்று அத்திவரதர் ராஜ கிரீட அலங்காரத்தில் அத்தி வரதர் அற்புதமாக காட்சியளித்தார். 

    இன்று அத்தி வரதரை தரிசிக்க கடைசி வார விடுமுறை நாள் என்பதால் பல லட்சம் மக்கள் காஞ்சிபுரத்தில் குவிந்து இருந்தனர். ஒவ்வொரு நாளும் அத்தி வரதர் புதிய பட்டு வஸ்திரம் அணிந்து, புது அலங்காரத்தில் காட்சி அளிப்பது வழக்கம். அந்த வகையில் இன்று ராஜ கிரீடம் அணிந்து ராஜா போல காட்சி தருகின்றார். 

    வரும் ஆகஸ்ட் 16ம் தேதியோடு அத்தி வரதரின் தரிசனம் முடிக்கப்படுவதாகவும், 17ம் தேதி அவருக்கான ஆகம முறைப்படி பூஜைகள் செய்து மீண்டும் அவர் இருந்த அனந்த புஸ்கரனியில் வைக்கப்பட உள்ளார். 
     

  • Danvanthri homam

    வேலுர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி உலக மக்கள் நலன் கருதியும் இயற்கை வளம் வேண்டியும் 73வது சுதந்திர தினம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு வருகிற 15.08.2019 வியாழக்கிழமை காலை 7.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை பாரத மாதா ஹோமம், ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள், பௌர்ணமி யாகங்கள், ராகு கேது ப்ரீதி ஹோமமும், ஸ்ரீ ஏக ரூப ராகு கேதுவிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளது. தொடர்ந்து மாலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள காலபைரவருக்கும் காளிக்கும் குருதி பூஜை நடைபெற உள்ளது.

    பாரதமாதா ஹோமம் :
    தேச நலத்திற்காகவும், தேக நலத்திற்காகவும், தேச மக்கள் ஆரோக்யம், ஆனந்தம், ஐஸ்வர்யம் பெற்று மகிழ்ச்சியுடன் நல்வாழ்வு வாழவும் பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ பாரதமாதாவிற்கு சிறப்பு ஹோமத்துடன் அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற உள்ளது.

    ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள் :
    மானவ மானவிகள் கல்விதரம் உயர ஸ்ரீ ஹயக்ரீவர் ஹோமம், எதிரிகள் விலக மஹா சுதர்ஸன ஹோமம், ஆயுள் பயம் நீங்க ஆயுஷ்ய ஹோமம், ஆரோக்யத்துடன் நீண்ட ஆயுள் பெற மஹா தன்வந்திரி ஹோமம், வாழவில் வளம் பெற குபேர லக்ஷ்மி ஹோமம் ஆகிய ஐந்து ஹோமங்கள் ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்களாக நடைபெற உள்ளது.

    பௌர்ணமி யாகம் :
    ஆண்கள் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற கந்தர்வ ராஜ ஹோமம், பெணகள் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற சுயம்வர கலாபார்வதி யாகம், தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால யாகம் எனும் பௌர்ணமி யாகங்கள் நடைபெற உள்ளது.

    ராகு கேது ப்ரீதி ஹோமம் :
    வாழ்வில் ராகு கேதுவினால் ஏற்படும் தொல்லைகள் அகலவும், ஸ்ரீ ராகு கேதுவின் ஆசிகளை பெறவும் பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ ஏகரூப ராகு கேதுவிற்கு ராகு கேது ப்ரீதி ஹோமத்துடன் சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற உள்ளது.

    குருதி பூஜை :
    எதிரிகள் தொல்லை அகலவும், முயற்ச்சிகளில் வெற்றி பெறவும், யமபயம் அகலவும், ரத்த சம்பந்தமான நோய்கள் நிவர்த்தியாகவும், ஒளிமறை நோய்கள் விடுபடவும், சகல ஐஸ்வர்யங்களும் பெற்று நல்வாழ்வு கிடைக்கவும் கிரக தோஷங்கள் நீங்கவும், செல்வ சேர்க்கை உண்டாகவும், வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கவும், விபத்துகள், அகால மரணம் போன்ற துர்வினைகள் நீங்கவும், கொடிய நோய்கள் அகலவும், துஷ்ட சக்திகள் மற்றும் செய்வினை பாதிப்புகள் ஒழியவும் காலபைரவருக்கும் காளிக்கும் குருதி பூஜை நடைபெறுகிறது. இந்த பூஜையானது கேரளா மாநிலம் பட்டாம்பியில் இருந்து ஐந்துக்கும் மேற்பட்ட தாந்திரிகர்கள் பங்கேற்று நடைபெற உள்ளது.

    மேலும் இவ்வைபவங்களில் விசேஷ மூலிகைகள், பட்டு வஸ்திரங்கள், சிகப்பு நிற வஸ்திரங்கள், ஏராளமான சௌபாக்ய பொருட்கள், நவ ரத்தினங்கள், சிகப்பு நிற புஷ்பங்கள், விசேஷ புஷ்பங்கள், சிகப்பு நிற பழங்கள், விசேஷ பழங்கள், நெய், விசேஷ சமித்துக்கள், மஞ்சள், சிகப்பு நிற குங்குமம், பால், விசேஷ நிவேதனங்கள் போன்ற பல்வேறு விசேஷ பொருட்கள் சேர்க்கப்பட உள்ளது. இதில் பக்தர்கள் அனைவரும் இவ்வைபவங்களில் பங்குபெற்று இறையருளுடன் குருவருள் பெற்று மகிழ்சியுடன் நல்வாழ்வு வாழ அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு :
    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், வாலாஜாபேட்டை வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203