திருகார்த்திகயன்று நம் வீட்டிலோ அல்லது அருகில் உள்ள கோயில்களிலோ திருவிளக்கு பூஜை நடத்தினால், லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும். விளக்கின் ஒளி சுற்றுப்புற இருளை அகற்றுவதோடு, நம் மனதின் இருளையும் அகற்றுகிறது என்றால் அது மிகையில்லை . பூஜையறையில் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் வாசல் தெளித்து மாக்கோலம் இட்டு, விளக்கை ஏற்றிவைத்து,வழிப்பட்டால் மகாலட்சுமி நம் இல்லத்தில் வாசம் செய்வாள் என்பது ஐதீகம்.
Blog
-
திருவிளக்கின் மகிமைகள்
திருகார்த்திகயன்று நம் வீட்டிலோ அல்லது அருகில் உள்ள கோயில்களிலோ திருவிளக்கு பூஜை நடத்தினால், லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும். விளக்கின் ஒளி சுற்றுப்புற இருளை அகற்றுவதோடு, நம் மனதின் இருளையும் அகற்றுகிறது என்றால் அது மிகையில்லை . பூஜையறையில் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் வாசல் தெளித்து மாக்கோலம் இட்டு, விளக்கை ஏற்றிவைத்து,வழிப்பட்டால் மகாலட்சுமி நம் இல்லத்தில் வாசம் செய்வாள் என்பது ஐதீகம்.
தீபம் ஏற்றும் முறை
எத்தகைய மேன்மை பொருந்திய , திருமகளின் அம்சமான திரு விளக்கை ஏற்றுவதற்கு முன் நாம் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் இருகின்றன .விளக்கு ஏற்றும் முன் வீட்டின் முன்கதவைத் திறந்து வைத்து பின்புறக்கதவை சாத்தியபிறகே விளக்கேற்ற வேண்டும். பிரம்ம முகூர்தமான அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் விளக்கு ஏற்ற வேண்டும் . மாலை ஆறரை மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் எல்லா வளமும், நலனும் நமக்கு கிட்டும் . விளக்கை குளிர்விக்கும் போது, பூவால் குளிர்விக்கலாம் அல்லது தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம்.. விளக்கின் ஒளி நம் வீட்டினை எப்படி பிரகாசமாக மாற்றுகிறதோ அதன் பலன் நம் மன இருளையும் அகற்றி ஒளி பெறச் செய்யும் .
விளகேற்றுவதினால் ஏற்படும் பலன்கள்
ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும்
இரு முகம் ஏற்றினால் – குடும்பம் சிறக்கும்
மூன்று முகம் ஏற்றினால் – புத்திரதோஷம் நீங்கும்
நான்கு முகம் ஏற்றினால் – செல்வம் பெருகும்
ஐந்து முகம் ஏற்றினால் – சகலநன்மையும் உண்டாகும்விளக்கேற்றும் திசை
கிழக்கு திசை – துன்பங்கள் நீங்கும் , குடும்பம் அபிவிருத்தி அடையும்
மேற்கு திசை – கடன் மற்றும் , தோஷங்கள் நீங்கும்
வடக்கு திசை – திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி- எக்காரணம் கொண்டும் எத்திசையில் விளக்கேற்றக்கூடாது.
கோயிலில் நாம் ஏற்றும் தீபத்திற்கு நிறைய பலன்கள் உண்டு. நம்மை அறியாமல் செய்த பாவங்கள் கூட தீபத்தை தரிசிப்பதால் விலகிவிடும். -
பிள்ளையார் பெருமை
விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் அகவல், விநாயகர் கவசம், காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி அவரை வழிபடலாம். இதில் எடுத்த செயல் வெற்றி பெறச் செய்யும் தனிச்சிறப்புடைய காரிய சித்திமாலையின் விளக்கம் தரப்பட்டுள்ளது. கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இத்துதியை விநாயகர் முன் அமர்ந்து உள்ளம் ஒன்றிப் பாராயணம் செய்பவர்களின் மனவிருப்பங்கள் எளிதில் நிறைவேறும். சிறப்பு மிக்க இத்துதியை மூன்று வேளைகளிலும்(காலை, மதியம், மாலை) உரைப்பவர்கள் நினைத்த காரியங்கள் கைகூடும். அனைத்து வகைகளிலும் வெற்றி உண்டாகும். எட்டு நாட்கள் ஓதிவர மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சங்கடஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டுமுறை ஓதினால் அஷ்டமாசித்தி கைகூடும். தினமும் 21 முறை இப்பாடலைப் பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும் மேம் பட்டுத் திகழும் என்பது ஐதீகம்.
உயிர்களை இயல்பாகப் பற்றி இருக்கும் பந்த பாசங்களை நீக்கும் இயல்புடையவரும், அனைத்து உயிர்களையும் தம்மிடம் இருந்து தோற்றுவிப்பவரும், வேதங்களையும், ஆகமங்களையும் வெளிப்படுத்தி அருள் செய்தவருமாகிய விநாயகப்பெருமானின் திருவடிகளை அன்புடன் போற்றுகின்றோம். கண்களால் காணப்பெறும் உலகமுழுவதும் நீக்கமற நிறைந்துஇருப்பவரும், விருப்பு வெறுப்பு இல்லாதவரும், நாம் செய்கின்ற செயல்களின் பலனை நமக்குத் தருபவரும், களைபவருமான முழுமுதற்பொருளான கணபதியை உவந்து சரணடைந்து போற்றுகின்றோம். தீயில் விழுந்த பஞ்சுபோல இடர்களை முழுவதும் நீக்குபவரும்,தன்னை அன்புடன் தொடரும் உயிர்கள் அனைத்தையும் நற்கதிக்கு இட்டுச் செல்பவரும், எடுத்த செயல்களை எளிதாகவும், இனிதாகவும் நிறைவு செய்து அருள்பவரும் ஆன ஒற்றைக்கொம்பன் விநாயகரின் திருவடிகளைச் சரணமாகப் பற்றுகின்றோம்.திருத்தலங்கள் தோறும் கோயில் கொண்டிருப்பவரும், கங்கை முதலான தீர்த்தங்களாகத் திகழ்பவரும், உயிர்களின் அறியாமையை அறிவினைத் தருபவரும், கருணை நிறைந்த வருமாகிய கணபதியின் திறத்தினைப் புகழந்து பாடி திருவடிகளைச் சரண் அடைகிறோம். உயிர்கள் செய்யும் வினையின் முதலாகவும், செய்யப்படும் பொருளாகவும், செய்வினையின் பயனாகவும், அந்த பயன் விளைவிக்கும் விளைவைப் பயன்பெறச் செய்பவனும் திகழ்கின்ற மெய்ப்பொருளான கணபதியின் திருவடிகளைச் சரணம் என்று அடைக்கலம் புகுகின்றோம்.வேதங்களாலும் அறியமுடியாதவரும், வேதத்தின் முடிவாக விமலனாகத் திகழ்பவரும், எங்கும் பரந்து விளங்கும் பரமானந்த வடிவாக வீற்றிருப்பவரும்,எண்குணங்களை உடையவரும் ஆகிய கணபதியின் திருவடிகளைச் சரணம் என்று பற்றுகின்றோம்.நிலத்தில் ஐந்து குணங்களாகவும், நீரில் நான்கு குண்ங்களாகவும், தீயில் மூன்று குணங்களாகவும், காற்றில் இரண்டு தன்மையுடையவனாகவும், வானில் ஒன்றாகவும் திகழும் அண்ணல் கணபதியின் அன்புத்திருவடிகளை அடைக்கலமாகப்புகுகின்றோம்.’பாச அறிவினாலும், பசு அறிவினாலும் அறிந்து கொள்ளமுடியாத பரம்பொருளாகவும், பாச அறிவையும், பசு அறிவையும் அறியச் செய்யும் இறைவனாகவும், பாச, பசு அறிவினைப் போக்கி ஞானஅருள் வழங்கும் தலைவனாகவும் திகழும் கணபதியைச் சரண் அடைந்து போற்றுகின்றோம்.
-
காயத்ரி மந்திரத்துக்கு நிகரான மந்திரம் இல்லை…
காயத்ரி மந்திரத்துக்கு நிகரான மந்திரம் இல்லை…
தாய்க்கு சமமான தெய்வம் இல்லை
காசியை விட சிறந்த தீர்த்தம் இல்லை
ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லைஇது சான்றோர் வாக்கு.
ஏகாதசி என்றால் என்ன?
சமஸ்கிருதத்தில் ஏகாதசி என்பது தமிழில் பதினொன்று என்று பொருள்.ஏகாதசி என்பது ஒரு மாதத்தில் அமாவாசையிலிருந்து 11வது நாளையும்,பவுர்ணமியிலிருந்து 11வது நாளையும் குறிக்கும். இந்த இரண்டு நாள்களிலும்ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.
ஏகாதசி திதி அன்று விரதம் மேற்கொள்வதை நம் இந்து மத சாஸ்த்திரங்களும் வலியுறுத்துகின்றனர் “. மற்ற விரதங்களைவிட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது மிகவும் சிறப்பானதாகும்.
-
ஏகாதசிகளின் பெயர்கள் மற்றும் பலன்கள்
சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசியை “பாபமோஹினி’ என்றும்;தேய்பிறை ஏகாதசி “காமதா’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசிதினங்களில் விரதமிருப்பவர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கும் .

வைகாசி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி “வருதினி’ என்றும்; தேய்பிறைஏகாதசி “மோகினி’ என்றும் குறிப்பிடப்படுகிறது. இதில் விரதம் மேற்கொள்பவர்கள் , இமயமலையில் உள்ள பத்ரிநாத்தை தரிசித்த பலனைப்பெறுவார்கள் .
ஆனி மாதத்தில் வரும் “அபரா’, “நிர்ஜலா’ ஏகாதசிகளில் விரதம் இருந்துவழிபடுபவர்கள் சொர்க்கபிராப்தி அடைவர் நீர் கூட அருந்தாமல் உபவாசம் இருப்பதற்கு பெயர் நிர்ஜல ஏகாதசியாகும். .
ஆடி மாதத்தில் வரும் “யோகினி’, “சயன’ ஏகாதசி விரதம் அன்னதானம் செய்தபலனைப் கொடுக்கக்கூடியது. யோகிணி ஏகாதசி அன்று விரதமிருந்தால் நோய் தீரும் .
ஆவணி மாத வளர்பிறை ஏகாதசியான “காமிகை’யிலும் தேய்பிறைஏகாதசியான “புத்திரதா’விலும் விரதமிருப்பவர்களுக்கு குழந்தைப் பேரு கிடைக்கும் என்பது நம்பிக்கை
புரட்டாசி மாத ஏகாதசிகளாக “அஜா’, “பரிவர்த்தினி’ என்று அறியப்படுகின்றன. நிம்மதியான வாழ்வு.இதனுடைய பலன் என்பது ஆன்றோர்கள் வாக்கு .
ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி “இந்திரா’, தேய்பிறை ஏகாதசி “பராங்குசா’ எனஅழைக்கப்படுகின்றன. சகல வளங்களும் உண்டாகும்.
கார்த்திகை மாத ஏகாதசிகள் “ரமா‘, மற்றும் “பிரமோதினி’. மகிழ்ச்சியானவாழ்வு.
மார்கழி மாத ஏகாதசி
-
பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள்
1.நீ உன் சுவாசத்தை ஒரு முனைப்பாக கவனித்தால் ,அது தானாகவே கும்பத்தில் {நிறுத்தல் }உன்னை கொண்டு சேர்த்து விடும் .இது பிராணாயாமம்
2. நீ எவ்வளவுக்கு எவ்வளவு அடங்கி பணிவாக இருக்கிறாயோ அத்தனைக்கு அத்தனை எல்லாவிதத்திலும் உனக்கு நல்லது
3. மனதை உள்ளிழுத்துக் கொள்வதால் எங்கு வேண்டுமானாலும் எந்தச் சூழ்நிலையிலும் இருக்கலாம்
4. உலகை கனவாக மட்டுமே கருத வேண்டும்
5. மனதை நீ வெளி விஷயங்களிலும் ,எண்ணங்களாலும் திசைதிருப்ப விடக்கூடாது .
வாழ்வில் உனக்கு கடமையாக அமைந்த வேலைகளை நிறைவேற்றும் வேளை தவிர மீதமான நேரமெல்லாம் ஆன்ம நிஷ்டையில் செலவிட வேண்டும் .ஒரு கணமும் கவனக் குறைவிலோ ,சோம்பலிலோ வீணாக்காதே .
6. யாருக்கும் இம்மியும் தடையோ ,தொந்தரவோ விளைவிக்காதே .தவிர உன் வேலைகளை எல்லாம் நீயே செய்துகொள் .
7. விருப்பும்,வெறுப்பும் இரண்டும் தவிர்க்கத்தக்கவை
8. எண்ணங்கள் அனைத்தையும் குவித்து ஒரு முகப்படுத்தி தன்னுள் செலுத்தி தயங்காமல் :”நான் யார் ” என்று விசாரணை செய்ய வேண்டும்
ஒருமுனைப்பாக இதைச் செய்தால் சுவாசம் தானே அடங்கும்
இந்த மாதிரி கட்டுப்பாடாக சாதனை செய்யும் சமயம் ,மனம் திடீரென்று கிளம்பும் .அதனால் கவனமுடன் விசாரத்தை தொடர வேண்டும் .
“‘நான் யார் “”என்று எண்ணங்களின்றி இருத்தல் நிஷ்டை
“‘நான் யார் “”என்று எண்ணங்களின்றி இருத்தல் ஞானம்
“‘நான் யார் “”என்று எண்ணங்களின்றி இருத்தல் மோட்சம்
“‘நான் யார் “”என்று எண்ணங்களின்றி இருத்தல் சகஜம்
அதனால் எண்ணங்களின் நிழல் கூட இல்லாமல் இருத்தலே பரிபூரண நிலையாயாகும் இது நிஜம்