ஆகஸ்ட் 19 – மகா சங்கடஹர சதுர்த்தி
விகாரி வருடம் – ஆவணி 2
சங்கடஹர சதுர்த்தி
19-ஆக-2019 திங்கள்
கரிநாள்
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : சதுர்த்தி
திதி நேரம் : சதுர்த்தி இ 1.44
நட்சத்திரம் : உத்திரட்டாதி இ 7.06
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : பூரம்,உத்திரம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
Blog
-
August 19 – maha sangadahara chadurthi
-
Avani Amavasai Nava Durga Homam
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி லோக க்ஷேமத்திற்காகவும், இயற்கை வளத்திற்காகவும், தன தானியங்கள் அபிவிருத்திக்காகவும், சகல விதமான திருஷ்டி தோஷங்கள் நிவாரணத்திற்காகவும், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் கிடைக்க வேண்டியும் ஆவணி மாதம் அமாவாசையை முன்னிட்டு வருகிற 28.08.2019 புதன்கிழமை முதல் 30.08.2019 வெள்ளிக்கிழமை வரை மூன்று நாட்கள் அஷ்ட பைரவர் யாகம், நவ துர்கா யாகம், நவ சண்டி யாகம் என முப்பெரும் யாகங்களுடன் விசேஷ பாராயணங்கள், ஜபங்கள், ஆராதனைகள் நடைபெற உள்ளது.
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தன்னுடைய பெற்றோருக்கு கொடுத்து வாக்குருதியை நிறைவேற்றும் விதமாக வேலூர் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேக தன்வந்திரி பகவான் மற்றும் 77 பரிவார மூர்த்திகளுக்கு சன்னதிகள் அமைத்து, உலக க்ஷேமத்திற்காகவும், இயற்கை வளத்திற்காகவும் அவ்வப்பொழுது பிரம்மாண்ட யாகங்கள் நடத்தி வருகிறார். அந்த வகையில் வருகிற 28.08.2019 முதல் 30.08.2019 வரை பல விதமான விசேஷ திரவியங்கள், 1600 கிலோ (1.5 லக்ஷம்) மஞ்சள் கிழங்குகள், பட்டு வஸ்திரங்கள் போன்ற பல்வேறு விசேஷ திரவியங்கள் கொண்டு பல்வேறு பூஜைகளுடன் யாகங்கள் நடைபெற உள்ளது.
அஷ்ட பைரவர் ஹோமம் :
சிவபெருமானின் அம்சமாக கருதப்படும் பைரவர், எல்லா கிரகங்களையும், நக்ஷத்திரங்களையும் கட்டுப்படுத்துபவர். கஷ்டமான நேரங்களில் நாம் மனதை ஒருமுகப்படுத்தி நினைத்தாலே போதும், பைரவர் ஓடோடி வந்து உதவுவார். திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீக்ஷண பைரவர், சம்ஹார பைரவர். இந்த அஷ்ட பைரவர்களை போற்றி வழிபடும் ஹோமமே அஷ்ட பைரவர் ஹோமம் ஆகும். இவர்களை வேண்டி நடைபெறும் ஹோம பூஜைகளில் பங்கேற்பதின் மூலம் அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெறலாம், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் அகலும், வெளிநாடு வேலைகள் கைக்கூடும், பிரம்மஹத்தி தோஷம் அகலும், மரண பயம் விலகும் போன்ற பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது.
நவதுர்கைகள் யார் யார் :
சமஸ்கிருதத்தில் 'நவ' என்றால் ஒன்பது என பொருள்படும். வேதங்கள் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றன. சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி என அன்னை ஒன்பது வடிவம் கொண்டிருக்கிறாள்.
நவ துர்கா ஹோமத்தின் பலன்கள் :
பில்லி, சூன்யம், செய்வினை, பொறாமை போன்றவற்றை அகற்றுவதற்கும், கோபத்தைக் குறைப்பதற்கும், ஜாதகரீதியிலான தோஷங்களைக் களைவதற்கும், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் தோஷங்களுக்குப் பரிகாரமாகவும், மாத்ரு – பித்ரு தோஷம் அகலுவதற்கும், துஷ்ட சக்திகள் நீங்குவதற்கும், விஷ ஜந்துக்கள் தாக்காமல் இருப்பதற்கும், திருஷ்டி தோஷத்தில் இருந்து மீள்வதற்கும் நவ துர்கைகளை வேண்டி நடைபெறும் ஹோமமே நவதுர்கா ஹோமம் ஆகும்.
நவ சண்டி யாகம் :
சக்தியின் மிகச் சக்தி வாய்ந்த பெண் அம்சமே ஸ்ரீ சண்டிகா தேவி. தேவி மஹாத்மிய பாடல்களில் அசுரா்களை மிகப் பயங்கர உருவமெடுத்து சண்டிகை அழிப்பதைப் பாராட்டுகின்றது. சண்டி தேவி துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி என இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி சோ்ந்த உருவமாகும். மிகக் கோபத்துடனும், மிகப் பயங்கர உருவத்துடனும் தோற்றமளிக்கும் சண்டிகை கொடுமையை ஒழிப்பவளாகும். அக்னி கிரியை மூலம் துா்கா, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவிகளையும் சண்டிகை என்ற ஒரு உருவமாக வரும்படி வேண்டி நடத்தப்படுவதே நவ சண்டி யாகம் ஆகும். கொடுமையான ஆட்சியினால் ஏற்படும் தீய சக்தியையும், தடைகளையும் அகற்றுவதற்காக ஹோமத்தின் போது துர்கா சூக்தம், தேவி மாஹாத்மியம், நாராயணீயம், துர்கா கவசம், மஹிஷாசுர மர்த்தினி ஸ்லோகம் போன்ற பல்வேறு பாராயணங்கள் நடைபெறுகிறது.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த நவ சண்டி யாகத்தில் பங்கேற்பதின் மூலம் முன் ஜென்ம பாவ தோஷங்கள் நிவர்த்தி ஆகும், கல்வி மேன்மை, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், குடும்ப மகிழ்ச்சி, அரசு காரியங்களில் வெற்றி கிடைக்கும், மன நிம்மதி கிடைக்கும். மேலும் பக்தர்களின் அனைத்து நியாயமான வேண்டுதல்களும் நிறைவேறும், சத்ரு உபாதைகள் நீங்கும், கெட்ட சக்திகள் விலகும்.
நினைத்த காரியம் ஜெயமாக விளாம்பழமும், சகலகாரிய சித்திக்கு கொப்பரைத் தேங்காயும், சர்வ வஸ்யத்திற்கு இலுப்பைப்பூவும், ரோக நிவர்த்திக்கு பாக்குப்பழமும், வாக்குப் பலிதத்திற்கு மாதுளம்பழமும், திருஷ்டிதோஷ நிவர்த்திக்கு நாரத்தம்பழமும், சத்ருநாசத்திற்கு வெண்பூசணிக்காயும், நேத்ர ரோக நிவர்த்தி மற்றும் சகல காரிய வெற்றிகளுக்கும் கரும்புத் துண்டும், சகல சம்பத் விருத்திக்கு துரிஞ்சி நாரத்தையும், சோகநாசத்திற்கு எலுமிச்சம்பழமும், பயம் நீங்க நெல் பொரியும், ஞானம் பெற சந்தனமும், வசீகரணத்திற்கு மஞ்சளும், ஆயுள் விருத்திக்கு பசும்பாலும், புத்ர விருத்திக்கு பசுந்தயிரும், வித்தை மற்றும் சங்கீத விருத்திக்கு தேனும், தனலாபம் பெற நெய்யும், பதவி உயர்வு கிடைக்க தேங்காயும், மங்களப் பிராப்திக்கு பட்டு வஸ்திரமும், சஞ்சலமின்மைக்கு அன்னமும, சந்தோஷம் பெற பசஷணமும், அஷ்ட ஐஸ்வர்யம் பெறவும், தீர்க்க சுமங்கலி பிராப்தி பெறவும் சௌபாக்ய திரவியங்கள், பட்டுப்புடவை, பட்டுத் துண்டு, குங்குமச்சிமிழ், சீப்பு, மஞ்சள், புஷ்பம், எலுமிச்சம்பழம், வெற்றிலை பாக்கு, நெத்துக் காய், கிராம்பு, லவங்க சாமான்கள் யாகத்தில் சேர்க்கப்பட உள்ளது.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஹோம பூஜை வைபவங்களில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் மேற்கண்ட திரவியங்களுடன், புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு குடும்ப சுபிட்சம் ஏற்பட யாக பூஜைகளில் வைத்து பூஜித்த மஞ்சள் கிழங்கு பிரசாதமாக ஸ்வாமிகள் திருக்கரங்களால் வழங்கப்பட உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203
-
Atthi Varadhar Anathasaras kulam
48 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளித்த பின் காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் சயன கோலத்தில் வைக்கப்பட்டார்.
40 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் வசந்த மண்டபத்தில் அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஜூலை 31-ந்தேதி வரை சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர், பின்னர் கடந்த 1-ந்தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளித்தார்.தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், கேரளா, மராட்டியம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து அத்திவரதரை தரிசித்தனர்.
47 நாட்களில் அத்திவரதரை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அடுத்த 40 ஆண்டுகளுக்கு சிலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சாம்பிராணி தைலம் உள்ளிட்ட மூலிகை திரவியங்கள் அத்திவரதர் சிலைக்கு பூசப்பட்டது.
நேற்று இரவு 12 மணிக்குள் அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்துக்குள் வைக்கப்பட்டது. குளத்தில் உள்ள அத்திவரதர் மண்டபத்தின் கீழ் உள்ள அறையில் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டது. அதன்பிறகு குளத்தில் வழக்கம்போல் நீர் நிரப்பப்பட்டது.
-
Rasi Palan
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – நட்பு
ரிஷபம் – ஆதரவு
மிதுனம் – ஆதாயம்
கடனம் – ஆர்வம்
சிம்மம் – தெளிவு
கன்னி – தேர்ச்சி
துலாம் – பணிவு
விருச்சிகம் – கவலை
தனுசு – நேர்மை
மகரம் – அலைச்சல்
கும்பம் – அனுகூலம்
மீனம் – குழப்பம்
சந்திராஷ்டமம் – மகம், பூரம்
-
August 18 Aavani 1
ஆகஸ்ட் 18 – ஆவணி 1
விகாரி வருடம் – ஆவணி 1
18-ஆக-2019 ஞாயிறு
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : சூன்ய
திதி நேரம் : திரிதியை இ 12.01
நட்சத்திரம் : பூரட்டாதி மா 4.44
யோகம் : சித்த-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : மகம்,பூரம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
-
Atthi Varadha 47 days 1 crore dharshan
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்தி வரதர் வைபவம் கடந்த மாதம் ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி நடைப்பெற்றது. ஆகஸ்ட் 17ம் தேதி வரை நடைப்பெற்ற அத்தி வரதர் வைபவத்தின் இறுதிநாளான இன்று, மீண்டும் அனந்த புஷ்கரணியில் மீண்டும் சயன நிலையில் வைக்கப்பட உள்ளார்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் என பல்வேறு அலங்காரத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சிஅளித்துள்ளார். முதல் நாளிலிருந்தே, அத்தி வரதரை தரிசனம் செய்ய லட்சக்கணக்கில் மக்கள் திரண்டனர். அத்திவரதர் புகழ் பரவப் பரவ, அத்தி வரதர் தரிசனத்துக்கு தமிழகம் முழுவதிலிருந்து மட்டுமல்ல, வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்தும் மக்கள் குவியத் தொடங்கினர்.
தினமும் லட்சக்கணக்கான பகதர்கள் தரிசனம் செய்த நிலையில் 47 நாட்களில் 1 கோடியே 7 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தில் உண்டியல் காணிக்கையாக ரூ 7 கோடி வசூலாகி உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
-
Atthi Varadhar
நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் அத்திவரதர் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் கையில் ‘மா.சு.ச’ என்ற 3 எழுத்துக்குப் பொறிக்கப்பட்ட கவசம் பொருத்தப்பட்டிருந்தது.
இதற்குப் பகவான் கிருஷ்ணரின் பகவத் கீதையில் 18-வது சுலோகத்தில் ‘சர்வதர்மா சரணம்பிரஜா அதந்யா சர்வமாதேக்யு மோட்சம் மா.சு.ச.’ என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

“தர்மத்தை காப்பவன் நான் ஒருவனே. என்னை நம்பி என்னுடைய திருவடியில் சரண் அடைந்தால் மோட்சம் உறுதி. எதற்கும் கவலைப்படாதே.
நான் பார்த்துக் கொள்கிறேன்” என்பதே இதற்கு அர்த்தம் ஆகும். பகவத் கீதையில் இடம் பெற்றுள்ள ‘மா.சு.ச’ என்ற எழுத்தை இதன் பொருள் எடுத்துக் கூறுகிறது. ஆகவே மா.சு.ச. என்றால் அருள் பாலிப்பது என்பது ஆகும்.
-
Who is Atthi Varadhar
இப்போதைய காஞ்சிபுரம். புராண காலத்தில் அத்திவனம் என்ற பெருங்காடாக இருந்ததாகவும், அத்திமரங்கள் அடர்ந்த காடு என்பதால் அத்திவனம் என்று அழைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
படைக்கும் கடவுளான பிரம்மர் அத்திவனத்தில், பகவான் விஷ்ணுவுக்காக யாகம் ஒன்றை ஏற்பாடு செய்ய…அந்த யாகத்திற்குத் தனது துணைவியாரான கல்வியின் மூல தேவி சரஸ்வதியைப் பிரம்மர் அழைக்க மறந்துவிட்டார் …துனைவி இல்லாமல் யாகத்தை பூர்த்தி செய்ய முடியாது என்பதால் காயத்திரி, சாவித்திரியை வைத்து யாகத்தை முடிக்க.
அதனால் சினம் கொண்ட சரஸ்வதி தேவியார்… பிரம்மனின் யாகத்தை அழிக்க, வேகவதி என்ற ஆறாக உருவெடுத்து வெள்ளமாக மாறி அத்திவனம் நோக்கி ஆவேசமாக விரய….அத்திவன விலங்குகள், மக்கள் யாவும் வெள்ளத்தில் அடித்து மூழ்க இருந்த நிலையில் இதனைத் தடுக்க நினைத்த பிரம்ம தேவர்…காக்கும் கடவுளான திருமாலிடம் வேண்டியுள்ளார்.
இந்நிலையில், வேள்வியின் அக்கினியிலிருந்து நெருப்பே உருவான அத்தி வரதராய் சயனம் கொண்ட பெருமாள், நதியைத் தடுத்து நிறுத்த அத்தி வரதரின் வெப்பம் தாளாமல் தன் திசையை மாற்றி கடல் சேர்ந்தாள் வேகவதியாய் வந்த தேவி சரஸ்வதி….
பிறகு பிரம்மரிடம் சென்ற திருமால் “அத்தி வரதனாய் இவ்வூரை நான் காத்து நிற்க எனதுருவை நீர் செய்து வெம்மை காக்கக் குளிர்விப்பீர் திருகுளத்து நீரால்..” என அருளியுள்ளார்…
சித்திரை மாதம், திருவோண நட்சத்திரத்தில், பிரம்மன், தேவர்களுக்கு புண்ணியகோடி கோலத்தில் அதாவது சங்கு, சக்கரம், கதை(gathai) தாங்கிய கோலத்தில் பெருமாள் காட்சியளிக்க அப்படி புண்ணியகோடி கோலத்தில் காட்சி அளித்த வரதராஜ பெருமாளைப் பிரம்ம தேவர் அத்தி மரத்தில் வடித்து வழிபட, அத்தி மரத்தால் ஆனதாலே அத்தி எனவும்..யாகத்தைக் காப்பாற்றிய திருமாளிடம் தேவர்கள் உள்ளிட்டோர் வரங்கள் கேட்க…அவர்கள் கேட்ட வரத்தை எல்லாம் வாரி வழங்கியதால் இங்குள்ள பெருமாளுக்கு வரதர் என்று பெயரும் வந்தாக சொல்லப்படுகிறது….
அதன் படி பிரமன் அத்தி மரத்தால், அத்திவரதருக்கு சிலை செய்து அதைக் கோயிலிலுள்ள நூறுகால்மண்டபத்திற்கு வடக்கில் உள்ள இரண்டு திருக்குளங்களின், தென் திசையில் உள்ள நீராழிமண்டபத்திற்குக் கீழே உள்ள மற்றொரு மண்டபத்தில் வெள்ளி பேழையில் துயில் கொள்ளச் செய்ததாய்,இப்படி தான் அத்திவரதர் மண்ணுலகிற்கு எழுந்ததாயுள்ளதாகப் புராணத்தில் சொல்லப்படுகிறது…
இந்நிலையில் எதற்காக அத்திவரதரை அனந்த புஷ்கரணியில் நீருக்கு அடியில் வைக்கப்பட்டிருக்கிறார் என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்க ?…..பிரமன் நடத்திய யாகத்தின் வெப்பத்தால் அத்திவரதருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கத் திருக்குளத்தில் வைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
-
August 17 Rasi Palan
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – நட்பு
ரிஷபம் – பணிவு
மிதுனம் – ஆசை
கடனம் – பரிசு
சிம்மம் – செலவு
கன்னி – மேன்மை
துலாம் – ஆர்வம்
விருச்சிகம் – முயற்சி
தனுசு – உதவி
மகரம் – பக்தி
கும்பம் – தடை
மீனம் – போட்டி
சந்திராஷ்டமம் – ஆயில்யம், மகம் -
August 17 Indraya Naal Eppadi
ஆகஸ்ட் 17 – இன்றைய நாள் எப்படி?
விகாரி வருடம் – ஆடி 32
17-ஆக-2019 சனி
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : துவிதியை
திதி நேரம் : துவிதியை இ 10.06
நட்சத்திரம் : சதயம் ம 2.12
யோகம் : அமிர்த-மரண யோகம்
சந்திராஷ்டமம் : ஆயில்யம்,மகம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்