Blog

  • Kovai Akilandeswari siddhar peedam

    கோவையில் வரும் 21ம் தேதி கோயம்புத்தூரில் C21 / புது எண் 42, 43 சர்க்கரை செட்டியார் நகர், இஎஸ்ஐ (எதிரில்), உப்பிலிபாளையம் (போ) அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம் திறப்பு விழா நடக்கிறது. இதை ஒட்டி அன்று காலை 10 மணிமுதல் 10.30 மணி வரை குத்துவிளக்கு பூஜை நடக்கிறது. 

    சித்தர்கள் மலை என்று அழைக்கப்படும் சுருளி மலையில் தியானங்கள், யாகங்கள் நடத்தி சித்தர்களின் அருளாசி பெற்றவர் ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள். இவர் தான் பெற்ற அருளாசியை மக்களும் பெற்று சுபிட்சமாக வாழ வேண்டும் என்பதற்காக கோவையில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடத்தை நிறுவியுள்ளார். இந்த ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம் வரும் 21ம் தேதி புதன்கிழமை திறப்பு விழா செய்யப்படுகிறது. அன்று காலை 10 மணி முதல் 10.30 மணி முதல் குத்து விளக்கு பூஜை நடக்கிறது. இதில் பெண்கள் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர். குத்து விளக்கு பூஜைக்கு வருபவர்கள் விளக்கு மட்டும் கொண்டு வரவும். 

    இந்த திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அகில பாரத அனுமன் சேனா நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் இந்து நாயகன் திரு. ஸ்ரீதரன் ஜி அவர்கள் கலந்து கொள்கிறார். மேலும் மாநிலத் தலைவர் கோவிந்தராஜன் ஜி, மாநகரத் தலைவர் உன்னிக்கிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலாளர் எஜமான் மணி, இளைஞர் அணி மாநில பொதுச்செயலாளர் பொள்ளாச்சி சுரேஷ், இ.அ. மாநில துணைத்தலைவர் சுந்தராபுரம் ஜீவா, மாவட்ட பொதுச்செயலாளர் போத்தனூர் செல்வராஜ், மாநில துணைத்தலைவர் ஐயப்பன், மகளிரணி பொதுச்செயலாளர் மற்றும் தேசிய தொடர்பாளர் பத்மஜா முருகையன், மாவட்ட மகளிரணி தலைவர் குமாரி ஞானசம்பந்தம், சிங்காநல்லூர் பத்மாவதி உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடத்தில் பிரதி அமாவாசை மேரு பூஜை, பௌர்ணமி அன்று ராஜராஜேஸ்வரி பூஜையும் நடைபெறும், இங்கு வாசி யோக பயிற்சிகள், ஆழ்நிலை தியானங்கள் கற்றுத்தரப்படுகிறது. மேலும் திருமணத் தடைகள் நீங்கவும்,  தொழில் பிரச்னைகள் அகலவும், நல்ல தொழில் அமையவும் சுவாமிகள் அருள்வாக்கு வேல்கனி மூலம் சொல்கிறார்.

    சுவாமிகளை சந்திக்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.  
    தொடர்புக்கு: 63747 72550, 74490 12379.
     

  • Vinayakar Statue Video

    நாடு முழுவதும் செப்டம்பர் 2 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி அனைத்து பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் விற்பனை அதிகரித்துள்ளது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. பல இடங்களில் ஆர்டரின் பேரில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி முடிவடைந்து அவற்றை வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

     ஆர்டரின் பேரில் சிறிய மற்றும் பெரிய சிலைகள் தயார் செய்யப்பட்டு தற்போது, அந்த சிலைகள் வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறைந்தது 3 அடி முதல் அதிக பட்சமாக 12 அடி வரையிலான விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
     

  • Thiruchendur koidiyetram video

     உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித்திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடான திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்  நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் ஆவணித்திருவிழா முக்கியமானதாகும். இத்திருவிழா  கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

    ஆவணித்திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், நடைபெற்றது. இதனை தொடர்ந்து  காலை 5.20 மணியளவில் திருக்கோயிலில் உள்ள செப்புக் கொடிமரத்தில் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    பன்னிரண்டு நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக  ஆக. 26-ம் தேதியன்று ஏழாம் திருவிழா மாலை 4.30 மணிக்கு மூலவர்களில் ஒருவரான சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 

    இதனை த்தொடர்ந்து ஆக. 27-ம் தேதி எட்டாம் திருவிழாவில் பகல் 10.30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சைக் கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தி அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோவில் வந்து சேர்கிறார்.  திருவிழாவின் சிகர  நிகழ்ச்சியான தேரோட்டம் வருகின்ற ஆக. 29-ம் தேதி காலை நடைபெறும்.

  • August 20 Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – சாந்தம் 
    ரிஷபம் – தனம் 
    மிதுனம் – எதிர்ப்பு
    கடனம் – லாபம் 
    சிம்மம் – ஜெயம்
    கன்னி –  சோர்வு
    துலாம் –  போட்டி
    விருச்சிகம் – வரவு
    தனுசு – ஓய்வு
    மகரம் –   உயர்வு
    கும்பம் – பிரிதி
    மீனம் – உழைப்பு
    சந்திராஷ்டமம்    – உத்திரம், அஸ்தம்
     

  • August 20 Indraya Naal Eppadi

    ஆகஸ்ட் 20 – இன்றைய நாள் எப்படி?
    விகாரி வருடம் – ஆவணி 3
    20-ஆக-2019 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    பஞ்சமி          
    திதி நேரம்    :    பஞ்சமி    இ    3.07
    நட்சத்திரம்    :    ரேவதி    இ    9.11
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திரம்,அஸ்தம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Pillayarpatti Chadurthi Vizha

    பிரசித்திப் பெற்ற பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்டு  24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இதையொட்டி இந்தாண்டிற்கான விழா வருகிற 24-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் விமர்சையாக நடைபெற உள்ளது. 

    விழாவையொட்டி தினந்தோறும் சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், ரிஷிப வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனம், பஞ்ச மூர்த்தி அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நிகழ்ச்சி, 9-ம் திருநாளான வருகிற செப்டம்பர் மாதம் 1-ந்தேதி மாலை நடைபெறுகிறது. இதையொட்டி அன்று மாலை 4.30 மணியில் இருந்து இரவு 10 மணி வரை கோவிலில் உள்ள மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் தான் மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெறும். 
     
    2-ந்தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று காலையில் கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சியும், மதியம் மூலவருக்கு திருமுக்கூறுணி மோதக கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதி உலா நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. 

  • Angaraga shanthi homam

    வேலூர் மாவாட்டம்  வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும், பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், ஆசிகளுடன் வருகிற 20.08.2019 செவ்வாய்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை அங்காரக கிரக சாந்தி ஹோமமும், காலசக்ர பூஜையும் நடைபெறுகிறது.

    அங்காரக கிரக சாந்தி ஹோமம்:

    ஆரோக்கியத்தையும், அதிர்ஷ்டத்தையும், மகிழ்ச்சி போன்ற வசதிகளையும் மேம்படுத்தி புதிய வாய்ப்புகள் பெற்று உடன்பிறந்தோருடன் நல்லுறவு வளர்த்துக் கொண்டு தெளிவாக முடிவெடுக்க இயலும் இந்த அமைப்பை நமக்கு ஏற்ப்படுத்தி தருவது அங்காரகன் என்றழைக்கப்படும் செவ்வாய் கிரகமாகும். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் உச்சத்தில் இருந்தால், தைரியம், உடல் வலிமை போன்றவற்றை அளிப்பார். நீச்சமடைந்திருந்தாலும், சாதகமற்ற வீட்டில் இருந்தாலும் கடன்கள், நோய்கள், உறவுச் சிக்கல்கள் போன்றவற்றை ஏற்படுத்துவார்.

    செவ்வாய் மனித உணர்ச்சிகளைக் குறிக்கும் கிரகம் ஆகும். நமது மனோபலங்களை கட்டுப்படுத்தும் கிரகம் செவ்வாய் ஆகும். ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக இல்லையெனில், பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. செவ்வாய் ஹோமம், இந்த தோஷங்களை நீக்கி, வாழ்வில் முன்னேறுவதற்கான வாய்ப்பை அளிக்கக் கூடியது.

    அங்காரக ஹோமத்தின் சிறப்பம்சங்கள் :

    வலுவாக இருக்கும் செவ்வாய், தனிப்பட்ட ஆற்றலையும், பதட்டமான சூழ்நிலையை சிறப்பாகக் கையாளும் தைரியத்தையும் அளிக்கிறார். நிதிநிலையை மேம்படுத்துகிறார். இந்த ஹோமம் செய்வதன் மூலம் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும், உணர்ச்சிகள் கட்டுப்பாட்டில் இருக்கும், பண விஷயங்களை அமைதியாக கையாளும் திறன் ஏற்படும். இந்த கிரகத்தை சாந்தப்படுத்தும் அங்காரக கிரக சாந்தி ஹோமத்தில் பங்கு கொண்டு, செவ்வாய் கிரகத்தின் அனுக்கிரகத்தைப் பெற்று, அதனால் விளையும் தெய்வீக ஆற்றல்களை, உங்கள் வாழ்க்கை நலனுக்குப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

    பக்தர்கள் அனைவரும் இந்த யாக பூஜைகளில் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தன்.

    தொடர்புக்கு :
    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், வாலாஜாபேட்டை – 632 513.
    தொலைபேசி : 04172 – 230033

  • lizard falling

    நம் உடலில் பல்லி எங்கு விழுந்தால் என்ன பலன் என்று தெரியுமா? இதோ தெரிந்து கொள்ளுங்கள்…

    தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம்
    தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம்
    நெற்றியின் இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தி
    நெற்றியின் வலது பக்கம் பல்லிவிழுந்தால் லக்ஷ்மிகரம்
    வயிற்றின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி
    வயிற்றின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம்
    முதுகு இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை
    முதுகு வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்
    கண் இடது பக்கம் பல்லிவிழுந்தால் பயம்
    கண் வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்
    தோள் இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி
    தோள் வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி
    பிருஷ்டம் இடது பக்கம் பல்லிவிழுந்தால் செல்வம்
    பிருஷ்டம் வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்
    கபாலம் இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு
    கபாலம் வலது பக்கம் பல்லி விழுந்தால் வரவு
    கணுக்கால் இடது பக்கம் பல்லி விழுந்தால் பயணம்
    கணுக்கால் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு
    மூக்கு இடது பக்கம் பல்லி-விழுந்தால் கவலை
    மூக்கு வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாதி
    மணிக்கட்டு இடது பக்கம் பல்லி-விழுந்தால் கீர்த்தி
    மணிக்கட்டு வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடை
    தொடை இடது பக்கம் பல்லி விழுந்தால் சஞ்சலம்
    நகம் இடது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்
    நகம் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு
    காது இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்
    காது வலது பக்கம் பல்லி விழுந்தால் ஆயுள்
    மார்பு இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம்
    மார்பு வலது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்
    கழுத்து இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி
    கழுத்து வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை

  • Manam pol mangalyam amaya

    உங்கள் மகன், மகள் திருமணம் தொடர்ந்து தடைகளால் தாமதம் ஆகிறதா? கவலை வேண்டாம். கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சித்தர் பீடத்திற்கு வாங்க  தடைகள் நீங்கி மகிழ்ச்சி அடையுங்கள்.

    ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம், C21 / புது எண் 42, 43 சர்க்கரை செட்டியார் நகர், இஎஸ்ஐ (எதிரில்), உப்பிலிபாளையம் (போ), கோயமுத்தூரில் அமைந்துள்ளது. இங்கு சித்தர்கள் அருளால் பல பிரச்னைகள், மன வேதனைகளுடன் வருபவர்கள் நிம்மதி போன்றவை கிடைக்கிறது.

    தமிழகத்தின் சித்தர்கள் மலை என்று பெருமை வாய்ந்த சுருளிமலையில் யாகங்கள், தியானங்கள் செய்து சித்தர்கள் அருள் பெற்றவர்தான் அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம் நிறுவனர் ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள். சக்தி வாய்ந்த சுருளி மலையில் உலக மக்களின் நன்மைக்காகவும், உலக நலன் வேண்டியும் 10008க்கும் அதிகமான யாகங்கள் நடத்தி உள்ளார். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல்வேறு புகழ் பெற்ற கோயில்களுக்கு யாத்திரை சென்று அங்கு வேள்விகள் நடத்தியவர்தான் அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம் நிறுவனர் ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள். 

    ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள் மக்களின் பிரச்னைகள் அகலவும், வாழ்க்கையில் முன்னேற்றம் அடையவும் நல்வழிகள் ஏற்படுத்தி தந்து வருகிறார். தொழில் முன்னேற்றம் இல்லாமல் வேதனை அடைபவர்களுக்கு தீர்வு கிடைக்க செய்கிறார். இவரிடம் வந்து சென்றவர்கள் தங்களின் துன்பம் கதிரவனை கண்ட பனித்துளி போல விலகி வாழ்வில் சுபிட்சம் அடைந்துள்ளனர். முக்கியமான தடைகளால் தவித்து வந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்கள் அந்த தடைகள் நீங்கி மனம் போல் மாங்கல்யம் அமைந்து சிறப்பான வாழ்வு அமைந்து நிம்மதியாக உள்ளனர்.

    தொழில் முன்னேற்றம் இல்லாமல் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தடை. வேலை வாய்ப்பில் ஏற்பட்டு வரும் தடை ஆகியவையும் முழுமையாக சரியாகிறது. நவக்கிரக தோஷம், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க, குழந்தைகளின் கல்வி, முன்னோர்கள் சாபம், திருமணத்தடை என்று அனைத்து பிரச்னைகளுக்கும் பரிகார நிவர்த்தி பூஜைகளை சித்தர்கள் அருளாசியுடன் சிறப்பாக செய்து தேடி வந்தவர்களின் குறைகளை தீர்த்து வைத்து வருகிறார் அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம் ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள். 

    சுவாமிகளை சந்திக்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.  
    தொடர்புக்கு: 63747 72550, 74490 12379.
     

  • August 19 Rasi palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – நன்மை 
    ரிஷபம் – தெளிவு
    மிதுனம் – விருத்தி
    கடனம் – இன்பம் 
    சிம்மம் – சிக்கல்
    கன்னி –  சிந்தனை
    துலாம் –  சினம் 
    விருச்சிகம் – பொறுமை 
    தனுசு – போட்டி
    மகரம் –   முயற்சி
    கும்பம் – விருப்பம் 
    மீனம் – மேன்மை 
    சந்திராஷ்டமம்    – பூரம், உத்திரம்