Blog

  • Krishna Alangaram

    கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வீடுகளில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் தரித்து கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வீட்டில் அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்து, கிருஷ்ணன், ராதை போன்று வேடமணிந்து கோகுலாஷ்டமியை சிறப்பாக கொண்டாடினர். குட்டி கிருஷ்ணனாக சென்னை அயனம்பாக்கத்தை சேர்ந்த கௌதமும், ராதையாக சம்யுக்தாவும் கிருஷ்ணரின் பிறந்தநாளை கொண்டாடிய போது…

    உங்கள் வீட்டு கிருஷ்ண ஜெயந்தி சக்தி ஆன்லைன் வெப்சைட்டில் வர நீங்கள் செய்ய வேண்டியது இவ்வளவுதான்…. உங்கள் வீட்டு கிருஷ்ணருக்கு நீங்கள் செய்த அலங்காரம்… உங்கள் சுட்டீஸை கிருஷ்ணராக அலங்கரித்த வீடியோ காட்சியை எங்களுக்கு அனுப்புங்கள். அத்துடன் உங்க வீட்டு கிருஷ்ண ஜெயந்தியை பற்றி நான்கு வரி. உலகம் முழுவதும் உங்கள் சுட்டி கிருஷ்ணரின் வீடியோவை கண்டு ரசிக்கும். உங்கள் வீடியோவை +916380700085 என்ற வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்புங்க.

  • Thirupathiyil Uriyadi Urchavam

    கோகுலாஷ்டமியை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் சார்பில் காலிங்க நர்தன கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், உறியடிஉற்சவம் நடைபெற்றது.

    திருமலை திருப்பதி தேவஸ்தான  தோட்டத் துறையின் சார்பில் கோகர்ப்பம் அணையின் எதிரே உள்ள காளிங்க நர்த்தன கிருஷ்ணருக்கு தோட்டத்துறை இயக்குனர் சீனிவாசலு தலைமையில் பால், பஞ்சாமிர்தம், மஞ்சள் ,சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் சிறப்பு ஆரத்தி வழங்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. 

    இதைத்தொடர்ந்து உறியடி உற்சவம் நடைபெற்றது இதில் உள்ளூர் இளைஞர்களும் பக்தர்களும் திரளாக பங்கேற்றனர். நாளை கிருஷ்ணாஷ்டமி ஒட்டி ஏழுமலையான் கோவில் எதிரே வழுக்கு மரம் ஏறும் உற்சவம் நடைபெற்றது. 

    இதையொட்டி மதியம் கோவிலில் இருந்து மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் ஒரு பல்லக்கிலும்,  ஸ்ரீ கிருஷ்ணர் மற்றொரு பல்லக்கில் எழுந்தருளி பெரிய ஜீயர் மடம்,  ஹத்திராம் பாபா ஜீ மடம் சென்று நான்கு மாடவீதிகளில் வழியாக மீண்டும் மாலை கோவிலை வந்தடைந்தார். 

  • Chatru Samhara Poojai

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி வருகிற 25.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை சரபேஸ்வரர் யாகம், சத்ரு சம்ஹார பூஜை,  பக்தி பாரயணங்களும் நடைபெறுகிறது.

    சரப ஹோமம் :

    கலியுகத்தில் மிகவும் சக்தி வாய்ந்தது சரப ஹோமமாகும். பட்சிகளின் ராஜாவான சரபேஸ்வரர் ஆசிகளை இந்த ஹோமத்தின் மூலமாக பெறலாம். பக்தர்களை காக்கும் சரபேஸ்வரர் உக்ரமான தெய்வமாகும். பில்லி-சூன்யம் போன்றவற்றை நீக்குவதற்கும், நாரசிம்ஹ மந்திரத்தால் கட்டப்பட்ட பிரயோகங்களை நீக்குவதற்கும், எதிர்மறை ஆற்றல்களையும், உடல்நல பிரச்சினைகளையும், பக்தர்களின் வாழ்க்கையை பாதிக்கும்  செயல்களிலிருந்து நம்மை காக்க சரப ஹோமம் பேருதவி புரிகின்றது. 

    மேலும் எதிர்மறை சக்திகளின் தாக்கம் நீங்கும், முயற்சிகளில் வெற்றி கிடைக்கும், குடும்பத்தில் அமைதி,  மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கம் காண இயலும், குறிப்பாக, நிர்வாகிகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் போன்றவர்களுக்கு பெரும் நன்மை தரும், கண் திருஷ்டியிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும், நிம்மதியான வாழ்க்கையும், சரபேஸ்வரர் ஹோமத்தில் பங்கேற்ப்பதின் மூலம்  கிடைக்கும் என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

    சரபேஸ்வர் :

    சரபேஸ்வரர், பக்தர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்து பாதுகாப்பார். சரபேஸ்வர் அதாவது சரப – ஈஸ்வரர், சிவபெருமானின் அம்சங்களுள் ஒருவர். உக்ர வடிவாக விளங்கும் இவர், உலக உயிர்களின் பாதுகாவலராகவும் திகழ்கிறார். சிவபெருமானின் இந்த அபூர்வ அம்சத்தைப் போற்றி வணங்கும் வழிபாடே சரப ஹோம்மாகும். சக்தி வாய்ந்த சரபேஸ்வரர் அருள் வேண்டி செய்யப்படும் இந்த ஹோமத்தின் மூலம் தீமைகளை அழியும், தீவினைகள் நீங்கி, நோய்கள், அபிசார தோஷங்கள், பாபங்கள் நீங்கும்.

    சரப ஹோமத்திலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க தெய்வீக சக்தி பெற்றது. நம்மை சுற்றியுள்ள தீய சக்திகளை நீக்கி, சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தும். மேலும் எதிர்மறை ஆற்றலை நீக்கும் ஹோமமாகும். நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் அல்லல்கள், சாபங்கள், பாபங்கள் நீங்கி, ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை வாழ முடியும். 

    இந்த ஹோமம், கடவுளோடு நம்மை ஐக்கியப்படுத்தக் கூடியது, எனவே தனிச்சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இது, தீய சக்திகளை எதிர் கொள்ளும் மன தைரியத்தை அளிக்கக் கூடியது. அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியையும் தர வல்லது. இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்தி, சரப ஹோமத்தில் பங்கெடுத்து, இறைவனின் அருள் பெற்று, உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களை அனுபவித்து மகிழுங்கள்.

    சரபேஸ்வரர் வரலாறு :

    சரபரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபர். தங்க நிறப் பறவையின் உடலும், மேலே தூக்கிய 2 இறக்கைகளும், 4 கால்கள் மேலே தூக்கிய நிலையிலும், 4 கால்கள் கீழேயும், மேலே தூக்கிய ஒரு வாலும், தெய்வீகத் தன்மை கொண்ட மனிதத் தலையும், அதில் சிங்க முகமும் கொண்ட ஒரு விசித்திரப் பிறவியாக உருமாறினார். இந்த அபூர்வப் பிறவி தோன்றியதும் போட்ட சப்தத்தில் நரசிம்மர் அடங்கியதாய்ச் சொல்வார்கள். தோற்றத்தின் காரணம் தெரிந்து விட்டது. இனி உடலின் ஒவ்வொரு பாகமும் எந்த அமைப்பில் ஏற்பட்டது எனப் பார்ப்போம்.

    சந்திரன், சூரியன், அக்னி ஆகியவை மூன்று கண்களாகவும், கூர்மையான நகங்களோடும், நாலு புறமும் சுழலும் நாக்கோடும், காளி, துர்க்கா ஆகியோரைத் தன் இறக்கைகளாகவும் கொண்டு வேகமாய்ப் பறந்து, பகைவர்களை அழிக்கும் இந்த சரபேஸ்வரரைப் “பட்சிகளின் அரசன்” என்றும் “சாலுவேஸ்வரன்” என்ற திருநாமத்துடனும் குறிப்பிடுகின்றனர். இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள் ப்ரத்யங்கிரா, மற்றும் சூலினி. 

    இதில் தேவி பிரத்யங்கிரா சரபரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதாகவும், இவள் உதவியுடன் தான் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாகவும் சில குறிப்புக்கள் கூறுகின்றன. காஞ்சி புராணத்தில் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கப் பரமசிவன் வீரபத்திரரை அனுப்பியதாகவும், நரசிம்மம் ஆனது வீரபத்திரரைக் கட்டிப் போட்டுவிட்டு வேடிக்கை பார்த்ததாகவும், அந்தச் சமயம் சிவன் ஒரு ஜோதி ரூபமாக வீரபத்திரர் உடலில் புகுந்ததாகவும், உடனே சரபராக வீரபத்திரர் உருமாறி நரசிம்மத்தை அடக்கியதாகவும் கூறுகிறது. லிங்க புராணக் குறிப்புக்களும் இவ்விதமே குறிப்பிடுகிறது.

    எப்படி இருந்தாலும் சரபேஸ்வரரின் சக்தி அளவிட முடியாதது. சத்ருக்களால் ஏற்படக் கூடிய பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றுக்கு மட்டுமில்லாமல் இவரைத் தரிசித்து முழு நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வந்தால் எல்லாவிதமான நோய்களையும் தீர்த்து வைப்பார் என்றும் கூறுகிறார்கள். இவரைக் “கலியுக வரதன்” என்றும் குறிப்பிடுகிறார்கள். “நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி” என்றும் குறிப்பிடுகின்றனர்.

    மேலும் இந்த ஹோமத்தில் சென்னை ராகவர்ஷினி குரூப் பக்தர்களின் சார்பாக கணேச ஸ்துதி, குருஸ்தோத்ரம், சிவானந்தலஹரி, சௌந்தர்யலஹரி, லலிதா சஹஸ்ரநாமம், முகுந்தமாலா, ஜெயதேவ அஷ்டபதி, ஆஞ்சநேயஸ்துதி போன்ற பாராயணங்கள் பக்தி சங்கீர்த்தனமாக நடைபெற உள்ளது.

    இந்த ஹோமத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் நெய், தேன், மூலிகைகள், சமித்துகள், ஆசாரிய வஸ்திரங்கள், புஷ்பங்கள், பழங்கள், மஞ்சள், குங்குமம், மளிகை பொருட்கள், போன்ற பொருட்களை அளித்து குடும்பத்தினருடன் இறை கைங்கர்யத்தில் ஈடுபட்டு இறையருளை பெறலாம். மேலும் பக்தி பாராயணத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்களையும் அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு :
    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், வாலாஜாபேட்டை – 632 513.
    தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203

     

  • August 23 Krishna Jayanthi

    ஆகஸ்ட் 23 கிருஷ்ண ஜெயந்தி
    விகாரி வருடம் – ஆவணி 6
    கிருஷ்ண ஜெயந்தி
    23-ஆக-2019 வெள்ளி  
    வாஸ்து நாள்(காலை 07.23 – 07.59)
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    அஷ்டமி          
    திதி நேரம்    :    அஷ்டமி    அ.கா    5.22
    நட்சத்திரம்    :    கார்த்திகை    இ    12.45
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    சுவாதி,விசாகம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – ஜெயம் 
    ரிஷபம் – பயம் 
    மிதுனம் – தெளிவு
    கடனம் – சாந்தம் 
    சிம்மம் – துன்பம் 
    கன்னி –  தனம் 
    துலாம் –  பெருமை
    விருச்சிகம் – முயற்சி
    தனுசு – உற்சாகம் 
    மகரம் –   தடங்கல்
    கும்பம் – வெற்றி
    மீனம் – சுகம்
    சந்திராஷ்டமம்    – சுவாதி, விசாகம்

  • Krishna Jayanthi Special Recipe

    முந்திரி கொத்து

    முந்திரி கொத்து, தமிழகத்தின் குமரி மாவட்டத்தில் காணப்படும் ஒரு சிறப்பு உணவுப்பண்டம். இதே மாதிரியான இனிப்பு வகையை சிறிய மாற்றங்களுடன் யாழ்ப்பாணத்திலும் செய்வார்கள். இதற்கு பெயர் பயற்றம் பணியாரம். மண்டை வெல்லத்திற்குப் பதிலாக வெல்லம், சீனி சேர்ப்பார்கள். வாசனைக்கு ஏலத்துடன் லேசாக வறுத்த சீரகம், மிளகு பொடி செய்து சேர்க்கப்படும். குமரி முனையும், அதன் அருகில் இருக்கும் யாழும் விரும்பிச் சமைக்கும் பதார்த்தம் இதோ கிருஷ்ண ஜெயந்தியில் உங்களுக்காக…

    தேவையான பொருட்கள்

    பாசிப்பயிறு – 250 கிராம்
    வறுகடலை – 150 கிராம்
    பனங்கற்கண்டு – 200 கிராம்
    வறுத்த எள்ளு – 50 கிராம்
    தேங்காய் துருவல் – 1 மூடி
    மைதா மாவு – 250 கிராம்
    உப்பு – சுவைக்கேற்ப
    ஏலக்காய் பொடி – சிறிதளவு
    சுக்கு பொடி – சிறிதளவு

    செய்முறை

    பாசிப்பயிரை தோலுடன் லேசாக வறுத்து, அதை உடைத்து வைத்துக்கொள்ளவும். வறுகடலை மற்றும் உடைத்த பாசிப்பயிறு, பனங்கற்கண்டு ஆகியவற்றை தனித்தனியாக நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலை நெய்யில் நன்கு வறுத்து எடுத்துக்கொள்ளவும். 

    அனைத்தையும் ஒன்றாக சேர்த்து, அதில் வறுத்த எள்ளு, ஏலக்காய் பொடி, சுக்கு பொடி கலந்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து, அதை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ளவும். மைதா மாவில் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொண்டு அதில் இந்த உருண்டைகளை நனைத்து காய்ந்த எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும். சுவையான முந்திரி கொத்து ரெடி.

    ஆண்டாள் ரசித்து தன் மனமார படைத்த அக்கார வடிசல் …

    தேவையான பொருட்கள்

    பச்சரிசி – 1 கப்
    வெல்லம் – 2 கப்
    பால் – 5 கப்
    ஏலக்காய் பொடி – சிறிதளவு
    நெய் – 50 மிலி
    முந்திரி, திராட்சை – சிறிதளவு

    செய்முறை

    வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி பச்சரிசியை வறுக்கவும். அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் 4 விசில் விட்டு வேகவைக்கவும். பின்னர் அதை நன்கு மசித்து, அதில் 5 கப் காய்ச்சிய பாலை சேர்த்து வேகவிட வேண்டும். நன்கு குழைய வெந்தவுடன் அதில் வெல்லம், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து சேர்த்து கிளறி இறக்கவும். இது ஸ்ரீரங்கத்து ஸ்பெஷல் ரெசிபி.
     

  • Story about lord krishna

    கோலாகல_கோகுலாஷ்டமியன்று ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம் யோகி ஓம் பரமானந் சுவாமிகளின் பகவான் கிருஷ்ணரின் ஆன்மிக உரை.

    கோலாகல பகவான் மகா விஷ்ணு பூமி  நல்லவர்களைக் காப்பதற்காகவும் நம் மனநிலை சமதளத்தில் இயங்கி குழந்தை பேறு கிடைக்கவும், தொழில் வளர்ச்சி பெறவும், திருமண தடை விலக்கி காரியம் கை கூடவும், குபேர சம்பத்து கிடைக்கவும், ஆரோக்கியம் பெறவும் பகவான் கிருஷ்ணர் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்க பகவத் கீதை மூலமாய் சொல்லியிருக்கிறார். ஆவணி மாதத்தில் நடு இரவில் தேய்பிறை அஷ்டமி திதி உள்ள நாளில் ஸ்ரீகிருஷ்ணராக அவதாரம் எடுத்தார். இந்தியா முழுவதும் இந்த விழாவானது கோகுலாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி என்று பலவிதமான பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

    பூஜை செய்யும் முறை!
    கிருஷ்ணர் இரவில் பிறந்தார் என்பதால், முதிர் மாலை வேளையில் பூஜை செய்வது வழக்கம். 

     ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சித்தர் யோகி ஓம் பரமானந்த பாபுஜி  சொல்கின்ற படி "இரகசிய மானச பூஜை " செயதால் நிச்சயம் 48 நாட்களுக்குள் ஏதேனும் ஓர் கோரிக்கை நிறைவேறும். 

    கிருஷ்ணரின் பிறந்தநாள் என்பதால், அவர்படத்திற்கு முன் கேரட் கரும்பு சர்க்கரை கலந்த நிவேதனம், திராட்சை முந்திரி கலந்த பருப்புக்கள், கோதுமை பாயாசம் வைத்து ஓர் சுத்தமான மஞ்சள் துணியில் குங்குமம் சந்தனம் துளசி மூன்றையும் வைத்து முடிச்சிட்டு மணிக்கட்டில் கட்டி கொள்ள வேண்டும். துணி மிக சன்னமாக வளையல் அகலம் இருந்தால் போதுமானது. இந்த "இரகசிய பூஜை" முறை முற்றிலும் புதுமையானது. உடனடி பலன் தருவது. 

    முன்னதாக கிருஷ்ணர் அலங்கரித்து வைத்துள்ள கிருஷ்ணர் படத்திற்கு அவரது பல நாமங்களை கூறிப் பூக்களாலும், அட்சதைகளாலும் அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் அவரவர் வேண்டுதல்களை மனதில் நினைத்து மேற்கண்ட முறையை செய்து வழிபட வேண்டும். பூஜை முடிவில்  உலகத்தில் உள்ள அனைவரும் சுகமாக வாழட்டும் (சர்வே ஜனா சுகினோ பவந்து) என்று வேண்டிப் பூஜையை நிறைவு செய்வது நன்று!  கண்ணனை வேண்டிக்கொண்டால் அவன் நம் கவலைகள் யாவையும் தீர்ப்பான் என்பது ஐதீகம்.

    துவாதச மந்திரமான ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்னும் மந்திரத்தை நூற்றியெட்டு முறை ஜெபித்து, மலர்களையும் பழங்களை இனிப்பு வகைகளையும் அவருக்கு படைத்து தூப தீபம் (மணமிக்க ஊதுபத்தி, கற்பூரம் ஆரத்தி) காட்ட வேண்டும்.

    வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்தபிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி, அங்கு நடத்தும் உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் ஆகியவற்றைக் கண்டு மகிழ்வது சிறப்பு.

    ஓம் நமோ நாராயணாய !

  • Kuzhandai bakiyam arulum Navaneeth Krishnan

    குழந்தை இல்லாதவருக்கு இரண்டு வகையான தோஷம் இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது. அவை சயன தோஷம், புத்திர தோஷம் என்பனவாகும். இந்த தோஷங்கள் இருப்பவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் உடனடியாக கிடைப்பதில்லை. கரு உருவாதல், உருவான கரு நிலையாக இல்லாமல் போவது போன்ற பல பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க நேரிடும். 

    இப்படிப்பட்ட சகல தோஷங்களுக்கும் சிறப்புமிகு பரிகார தலமாக இருப்பது தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் திருக்கோவில். இக்கோவில் பெங்களூருவில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் 58 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

    ஆலயத்தின் தென்மேற்கில் தனிச் சன்னிதியில் கிழக்குப் பார்த்த வண்ணம் அரவிந்தவல்லித் தாயார் அருள்பாலிக் கிறார். ஆலயத்தின் வடமேற்கில் உள்ள விஷ்ணு தீர்த்தத்குளத்தில் சுயம்புவாய் தோன்றியவர் இத்தல தாயார் என்கிறார்கள். இவரை வெள்ளிக் கிழமை தோறும் செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வந்தால் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. 

    நவராத்திரி, வரலட்சுமி விரதம் முதலிய நாட்களில் தாயாருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளையில் அரவிந்தவல்லித் தாயாரை வில்வார்ச்சனை செய்து தொடர்ந்து வழிபட்டு வந்தால் தரித்திரம், பீடை, வறுமை அகலும்.

    அடுத்து பிரகார வலம் வருகையில் வடமேற்கில் கிழக்குப் பார்த்தவண்ணம் கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு குழந்தை கிருஷ்ணன் தலையை திருப்பி, தவழும் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். சுருட்டைத் தலை முடி, கழுத்தில் முத்துமாலை, அதில் புலிநகம், மாங்காய் கம்மல், வளையல், மோதிரம், இடுப்பில் அரைஞாண் கயிறு, கால்களில் கொலுசு அணிந்து, திருப்பாதங்களில் சங்கு, சக்கர ரேகைகளுடன் கருடபீடத்தில் இந்த நவநீத கிருஷ்ணன் அருள்கிறார்.

    சாளக்கிராமக் கல்லில் உருவான இத்தல நவநீத கிருஷ்ணனை, மகான் வியாசராஜர் பிரதிஷ்டை செய்துள்ளார். ராகவேந்திரர் இங்கு வந்து தங்கி வழிபாடுகள் செய்துள்ளாராம். மகான் புரந்தரதாசர் தொட்டமளூர் தவழும் குழந்தை கண்ணனை தரிசிக்க வந்தபோது, கோவில் மூடப்பட்டிருந்தது. 

    அதனால் அவர் வெளியில் இருந்தபடியே ‘ஜகத்தோதாரணா அடிசிதள யசோதா' என்னும் கீர்த்தனையைப் பாடினார். ஆச்சரியம்.. கோவில் கதவு திறந்து கொண்டது. அப்போது நவநீத கிருஷ்ணன் சன்னிதியில் உள்ள கண்ணன், உள்ளிருந்து தமது தலையை திருப்பி புரந்தரதாசரை எட்டிப்பார்த்தான். அதனால்தான் இன்றும் இத் திருத்தல தவழும் கண்ணன் சன்னிதியில் கண்ணன் தவழும் நிலையில் தலையை திருப்பி பார்த்தவண்ணம் உள்ளாராம்.

    நவநீத கிருஷ்ணன் சன்னிதி வாசல் அருகில் துலாபாரம் அமைக்கப்பட்டு உள்ளது. புத்திர பாக்கியத் தடை உள்ளவர்கள், இங்கு வந்து நவநீத கிருஷ்ணனுக்கு வெண்ணெய் நைவேத்தியம் செய்து வேண்டி வழிபடுகிறார்கள். புத்திர பாக்கியம் கிட்டியதும் மீண்டும் இங்கு வந்து குழந்தையின் எடைக்கு எடை வெல்லம் துலாபாரம் செலுத்தி வழிபடுகிறார்கள். தங்கம், வெள்ளி, மரத்தினால் ஆன தொட்டில்களையும் கண்ணன் சன்னிதியில் நன்றியுடன் சமர்ப்பித்து மகிழ்கிறார்கள்.

    இந்த ஆலயத்தில் கோகுலாஷ்டமி, ராம நவமி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசியில் விழாக்களும், ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், தீபாவளி, சங்கராந்தி, மாதாந்திர ரோகிணி நட்சத்திர நாட்களில் சிறப்பு பூஜைகளும், திருமஞ்சனமும் நடைபெறுகிறது. இன்றும் அர்த்தஜாமத்தில் இங்கு கபில மகரிஷியும், கண்வ மகரிஷியும் வழிபாடு நடத்துவதாக நம்பப்படுகிறது. 
     

  • Krishnan Slogam

    ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி வரும் திதியானது கோகுலாஷ்டமி என்று போற்றப்படுகிறது. அத்தகைய சிறப்புமிக்க இத்திருநாளில் கிருஷ்ணருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து கிருஷ்ண பரமாத்மாவை வழிபட்டால் சகல நன்மைகளும் கிடைக்கப்பெறும். 

    ஸமஸ்த கோபநதனம் ஹ்ருதம்புஜைகமோஹனம்
    நமாமி குஞ்ஜமத்யகம் ப்ரஸன்ன பானுசோபனம்
    நிகாமகாம தாயகம் த்ருகந்தசாருஸாயகம்
    ரஸாலவேணுகாயகம் நமாமி குஞ்ஜநாயகம்
    ஆதிசங்கரரின் க்ருஷ்ணாஷ்டகம்

    எல்லா மக்களுக்கும் ஆனந்தத்தை அளிப்பவரே, கிருஷ்ணா நமஸ்காரம். தாமரை போன்ற இதயத்தில் மோகத்தை உண்டாக்குப வரே, சூரியனைப் போல பிரகாசிப்பவரே, பக்தர்கள் விரும்பியதை உடனே அளிப்பவரே, கடைக்கண்ணால் எங்களைக் கடைத்தேற்று பவரே, இனிமை யாக வேணுகானம் செய்பவரே, கிருஷ்ணா நமஸ்காரம்.

  • Theeradha vilayattu pillai

    பகவான் விஷ்ணுவின் தசாவதாரம் நமக்கு பல செய்திகளை தாங்கியுள்ளது. பரசுராமர் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று வாழ்ந்து கட்டியவர்.நரசிம்மர் தன்னை நோக்கி கூப்பிடுபவர் யாராக இருந்தாலும்,எந்த நேரத்திலும்,எங்கிருந்தும் தோன்றக் கூடியவர் என்ற நம்பிக்கையை பக்தர்களின் மனதில் விதைத்தவர். 

    ராம அவதாரமோ ஒருவனுக்கு ஒருத்தி என்ற மிகப்பெரிய  வாழ்க்கை தத்துவத்தை உலகிற்கு உணர்த்தியது. இவை எல்லாவற்றையும் விட ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தை மனதில் நினைக்கும் போதே குதூகலமும், உற்சாகமும் நம்முள் கரைபுரளும். அந்த அளவிற்கு தனது சுட்டித்தனமான லீலைகளாலும், குறும்பான விளையாட்டுக்களாலும்  நம் மனதை கொள்ளைக்கொண்டவன் அந்த கோகுல கண்ணன்.

    அவதார நோக்கம் என்னவோ, கம்சன் என்ற அசுரனிடமிருந்து மக்களை காக்க  தான் எனினும் அந்த காலகட்டத்தில் எதைப் பற்றியும் கவலையில்லாமல் ஆடிப்பாடி தானும் மகிழ்ந்து இருந்து, தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் சந்தோஷமாக வைத்துக்கொண்டவன் அந்த கண்ணன்.  அந்த தீராத விளையாட்டுப் பிள்ளை அவதரித்த தினமே ஸ்ரீ  கிருஷ்ண ஜெயந்தி.

    ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் ,அஷ்டமி ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் இத்திருநாள் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணரின் படமோ அல்லது  சிலையோ  நன்றாக அலங்கரிக்கப்பட்டு . கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுப் பொருட்களான  வெண்ணெய், அவல் , பால் , திரட்டுப்பால் , பழங்கள், தயிர் , வெல்ல சீடை , கார சீடை, கார வகைகள் நைவேத்தியம் செய்யப்படுகிறது. குசேலர் அளித்த ஒரு பிடி அவலுக்கு பதிலாக,பகவான் கிருஷ்ணர் செல்வத்தை அள்ளி தந்ததால் இந்தக் கொண்டாட்டத்தில் அவல் முக்கிய இடம் பிடிக்கிறது.கிருஷ்ணரை தங்கள் இல்லங்களுக்கு வரவழைக்கும் விதமாக, பாலக் கண்ணனின் கால் பாதங்களை வரைவார்கள்.

    சந்தான கோபால கிருஷ்ணனாக ,யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம் பார்ப்பவர் மனதை கொள்ளைக்கொள்ளும். ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அன்று அந்த சந்தான கோபால கிருஷ்ணனை  வணங்குபவர்களுக்கு, அவனைப் போலவே அழகான  புத்திர பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. ஆலயங்களில்  மட்டுமின்றி பலரது வீட்டில் பூஜை அறையிலும்  காணப்படும் ,கிருஷ்ணனின் தவழும் கோலமான பாலகிருஷ்ணன் அவரின் அடுத்த கண்கொள்ளா காட்சியாகும்.  

    வளரும் பருவத்திலேயே காளிங்கன் என்ற நாகத்தின் கர்வத்தை அடக்கி,அதன் மீது நர்த்தனம் புரிந்தவன்  காளிய கிருஷ்ணன். வாலிப பருவத்தில் , கேளிக்கை விளையாட்டுக்கள் இருந்தாலும் ,தன் மக்களை இந்திரன் தண்டிக்க அனுப்பிய, அடாது மழையில் இருந்து அவர்களை காக்க கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கி ரட்சித்தான்.ராதா-கிருஷ்ணனாக தன் முன் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவன்.  ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராய் கிருஷ்ணன் நின்றிருக்கும் முரளீதர திருக்கோலம் தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது.

    அஷ்ட புஜங்களை காட்டி  குழலூதும் மதனகோபாலன் கன்னியரின் தூக்கத்தைக் களைத்தவன்.பார்த்தனுக்கு சாரதியான அந்த  பார்த்தசாரதி,அர்ஜுனனுக்கு கீதை உபதேசித்து பார்த்தனுக்கு தத்துவ ஞானியாய் காட்சியளித்தவன்.