Blog

  • August 25 Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – பொறுமை 
    ரிஷபம் – தோல்வி 
    மிதுனம் – பரிசு
    கடனம் – சுபம் 
    சிம்மம் – வெற்றி 
    கன்னி –  நன்மை 
    துலாம் –  களிப்பு
    விருச்சிகம் – உற்சாகம் 
    தனுசு – சாந்தம் 
    மகரம் –   ஜெயம்
    கும்பம் – பீடை
    மீனம் – பயம்  
    சந்திராஷ்டமம்    – அனுஷம், கேட்டை
     

  • August 25 subamugurthanaal

    ஆகஸ்ட் 25 – சுபமுகூர்த்த நாள்
    விகாரி வருடம் – ஆவணி 8
     subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    25-ஆக-2019 ஞாயிறு  துல்ஹஜ்23
    சுபமுகூர்த்த நாள்(காலை 7.30 – 9.00)
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    தசமி          
    திதி நேரம்    :    தசமி    இ    2.43
    நட்சத்திரம்    :    மிருகசீரிடம்    இ    12.39
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    : அனுஷம், கேட்டை
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Thirupathiyil Krishna Jayanthi

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி வழுக்கு மரம் ஏறும்  உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. 


    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி மதியம் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி ஒரு பல்லக்கில், ஸ்ரீகிருஷ்ணர்  மற்றொரு பல்லக்கில் எழுந்தருளி பெரிய ஜீயர் மடத்திற்கு வந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து ஹதிராம் பாபாஜி மடத்திற்கு சென்று அங்கு தேவஸ்தானம் சார்பில்   மரியாதை செய்யப்பட்டது.

     

    பின்னர்  ஏழுமலையான் கோவில் எதிரில் உள்ள இடத்தில் வழுக்கு மரம் ஏறும் உற்சவம் நடைபெற்றது. இதில் உள்ளூர் இளைஞர்களும், பக்தர்களும் திரளாக பங்கேற்று வழுக்கு மரத்தில் ஏறி பரிசுப் பொருளை எடுத்தனர்.

    பின்னர் ஹதிராம்பாபஜீ மடத்தின் சார்பில் சிறப்பு ஆரத்தி வழங்கப்பட்டு மீண்டும் நான்கு மாட வீதிகளின் வழியாக ஊர்வலமாக பக்தர்களுக்கு அருள் பாலீத்தப்படி கோவிலை வந்தடைந்தார். இதில் சிறப்பு அதிகாரி தர்மா ரெட்டி,  துணை செயல் அலுவலர்  ஹரிந்திரநாத் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
     

  • Shakthi On line Krishnajayanthi

    கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும்  வழிபாடுகள், கொண்டாட்டங்கள் நடைபெற்றன. கிருஷ்ணர் கோயிலில் மேளதாளங்களுடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடினர். வீடுகளில் குழந்தைகளுக்கு தத்ரூபமாக கிருஷ்ணர் வேடம் தரித்து கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வீட்டில் அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணர் சிலைக்கு சிறப்பு பூஜைகள்  செய்து, கிருஷ்ணன், ராதை போன்று வேடமணிந்த குழந்தைகளுடன்  கோகுலாஷ்டமியை சிறப்பாக கொண்டாடினர். 

    கிருஷ்ண ஜெயந்தியை சிறப்பாக கொண்டாடிய சக்தி ஆன்லைன் வாசகர்கள் பலர் தங்கள் வீட்டு கிருஷ்ண ஜெயந்தி விழா புகைப்படங்களை அனுப்பி இருந்தாலும், தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் மட்டும் இங்கே பகிர்ந்துள்ளோம்…. 
     

    சுகன் கார்த்திக்

    ஸ்ரீ  திவ்யா

    நவ்யா

    பெர்டின்-டி-சில்வா

    கவுதம் 

  • Pillayar patti kodiyetram

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். 

    சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கற்பகவிநாயர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    10 நாட்கள் நடைபெறும் விழாவில் 9 வது நாள் தேரோட்டமும் 10வது நாளான விநாயகர் சதுர்த்தியன்று காலை தீர்த்தவாரியும் முக்குறுனி கொழுக்கட்டை படையலும் நடைபெறும்.

    இன்று முதல் மாலை சிம்மம், குதிரை, க கமலம்,யாளன, உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலாவும் வரும் வியாழக்கிழமை மாலை சூரசம்ஹாரம்மும் நடைபெற உள்ளது.

    நாளை முதல்  தினமும் காலை வெள்ளி கேடகத்தில் சுவாமி உலா நடைபெறும் விழா ஏற்பாடுகளை பிள்ளையார்பட்டி நகர டிரஸ்டிகள் கவனித்து வருகின்றனர். 

  • Danvanthri peedam krishna jayanthi vizha

    தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

    ஸ்ரீகிருஷ்ணரின் சிறப்பு :

    பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த தினத்தை ஸ்ரீ ஜெயந்தி என்றும், கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் தனக்காக இல்லாமல் பிறருக்காக வாழ்ந்தவர். அதனால்தான் இவரை “கண்ணா'' ''முகுந்தா'' என்று பல பெயர்களில் அழைக்கிறோம். கண்ணைப் போல காப்பவன் என்றும், முகுந்தா என்றால் வாழ்வதற்கு இடம் அளித்து, முக்தி அளிப்பவன் என்றும் நம்புகிறோம். கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் பகவான் கிருஷ்ணர் நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமியின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது

    தன்வந்திரி பீடத்தில் நவநீத கிருஷ்ணர் :

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் பெருமுயற்சியுடன் நோய் தீர்க்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கும், இதர 77 பரிவார தெய்வங்களுக்கும் திருச்சன்னதிகள் அமைத்து உலக மக்கள் நலன் கருதி அவ்வஒப்பொழுது சிறப்பு யாகங்கள், பூஜைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று ஜென்மாஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நவீனமுறையில், கல் ஊஞ்சலில், ஒரடி உயரத்தில் தவழ்ந்த கோலத்தில், நவநீத கிருஷணர் பிரதிஷ்டை செய்துள்ளார்.

    ஸ்ரீகிருஷ்ண ஹோமமும் ஜெயந்தி விழாவும் :

    நவநீத கிருஷ்ணருக்கு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை தம்பதியர் குழந்தை பாக்யம் வேண்டியும், குடும்ப ஒற்றுமை வேண்டியும், அகந்தை அகலவும், மூர்க்க குணம் குழந்தைக்கு ஏற்படாமல் இருக்கவும், தர்மசீலராக வாழவும், அரசியல் ஞானம் உண்டாகவும், நிர்வாக திறன் அதிகரிக்கவும், மாமனார் வழியில் சொத்துக்கள் கிடைக்கவும், திருமணத் தடைகள் அகலவும், செல்வம் பெருகவும், வயல்களில் விளைச்சல் அதிகரிக்கவும், ஆடு, மாடுகள் பெருகவும், கடன் தீரவும், பகைமை ஒழியவும், புகழ் கூடவும், அமைதி நிலவவும், ஆற்றல் பெருகவும், வறுமை இல்லா வாழ்வு அமையவும் ஸ்ரீகிருஷ்ண யாகமும், மஹா அபிஷேகமும் நடைபெற்று கூட்டுப் பிரார்த்தனையுடன் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவாக நடைபெற்றது.

    பல்வேறு பலகாரங்கள் நிவேதனம் :

    இதனை தொடர்ந்து கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணேய், சீடை, முருக்கு, தட்டை, அப்பம், லட்டு போன்ற பல்வேறு பலகாரங்கள், பழங்கள் வைத்து நிவேதனம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

  • Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – செலவு
    ரிஷபம் – ஆர்வம் 
    மிதுனம் – பொறுமை 
    கடனம் – நேர்மை 
    சிம்மம் – உற்சாகம்  
    கன்னி –  கவலை
    துலாம் –  சோர்வு
    விருச்சிகம் – நன்மை 
    தனுசு – புகழ்
    மகரம் –   நலம் 
    கும்பம் – உறுதி  
    மீனம் – ஆக்கம் 
    சந்திராஷ்டமம்    – விசாகம், அனுஷம்
     

  • August 24 Paanjarathira Jayanthi

    ஆகஸ்ட் 24 – பாஞ்சராத்திர ஜெயந்தி
    விகாரி வருடம் – ஆவணி 7
    24-ஆக-2019 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    நவமி          
    திதி நேரம்    :    நவமி    அ.கா    5.46
    நட்சத்திரம்    :    ரோகிணி    இ    12.55
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    விசாகம்,அனுஷம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Sri Saneeswara Maha Jayanthi

    நிகழும்  விகாரி வருடம், ஆவணி மாதம், (24 ஆகஸ்ட் 2019) சனிக்கிழமை, அதாவது நாளை ரோகிணி நட்சத்திரம், தேய்பிறை அஷ்டமி திதி கூடிய நாளில் சனீஸ்வர மகா ஜெயந்தி அமைகிறது.

    விகாரி வருடம், ஆவணி மாதம், ரோகினி நட்சத்திரம், தேய்பிறை அஷ்டமியன்று சனீஸ்வர பகவான் அவதரித்ததாக  கிருஷ்ண யஜுர் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதன்படி இந்த வருடம் அனைத்தும் ஒன்றாக இணைந்து வருவதால் இது  மஹா ஜெயந்தியாக அனுசரிக்கப்படுகிறது.

    உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயங்களில் உள்ள  ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு காலை 8 மணிக்குள்ளாக சனீஸ்வர பகவானுக்கு தீபம் ஏற்றி வைத்து புஷ்பம் சாத்தி கீழ்க்கண்ட ஸ்லோகத்தை முடிந்தவரை சொல்லி வணங்கிவர தொழில் மேன்மை உடல் ஆரோக்கியம் அனைத்தும் மேம்படும்.

     நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்.

    ஜோதிட ரீதியாக கால சக்கரத்திற்கு 9ஆம் இடத்தில் சனி கேது இணைந்து உள்ளதால் இந்த வழிபாடு உலக நன்மைக்கும் தொழில் மேன்மைக்கும் மிகுந்த நற்பலன் அளிக்கும்.

    மேலும் சனியின் காரகமான உடல் ஊனமுற்றோர் வறிய நிலையில் உள்ளோர், வயதானவர்களுக்கு முடிந்தவரை பொருளாகவோ, ஆடை, உணவு தானம் அளிப்பதால் சனீஸ்வர பகவானின் அருள் முழுமையாக கிடைக்கும்.

  • Krishna Jayanthi vizha Uriiyadi

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம்பேட்டை யாதவ மகாசபை சார்பில் 29 ஆம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் உறியடித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

    திரளான இளைஞர்கள் கலந்து கொண்டு உறியடித்தல் வழுக்குமரம் ஏறுதல் பானை உடைத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர் அதைத் தொடர்ந்து கிருஷ்ணர் வீதி உலா நடைபெற்றது .