Blog

  • Sri Bhramapuriswarar koil

    திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை யிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் திருப்பட்டூரில் உள்ள ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் உடனுறை ஸ்ரீ பிரம்ம சம்பத் கௌரி கிழக்கு பார்த்து அமைந்திருக்கும் திருக்கோவிலாகும்.

    இக்கோயில் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் மூலவராகவும் வலது புறத்தில் பிரம்மா,இடது புறத்தில்  ஸ்ரீ பிரம்ம சம்பத் கௌரி அம்மனாகவும் காட்சியளிக்கின்றனர். பிரம்மா பக்கத்தில் தட்சிணாமூர்த்தியும், தென் மூலையில் விநாயகரும், வட மூலையில் கஜலட்சுமியும் உள்ளது.மேலும் இக்கோயில் 12 சிவலிங்கமும் உள்ளது.

    காலபைரவர்
    தெற்கு நோக்கி உள்ள காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளது.

    சில குழந்தைகள் இரவு வேளையில் தூங்காமல், தொடர்ந்து அழுது கொண்டிருக்கும். இவ்வாறு குழந்தைகள் அழாமல் இருக்கவும், அவர்கள் நிம்மதியாக தூங்கவும் இங்குள்ள கால பைரவரை வழிபடுகின்றனர். அர்த்தஜாமத்தில் இவரது சன்னதியில் சாவி வைத்து பூஜை நடக்கும். இவ்வேளையில் தரப்படும் விபூதியைப் பெற்றுச்சென்று குழந்தைக்கு கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வதால் குழந்தைக்கு பைரவர் காவலாக இருப்பார் என்பது நம்பிக்கை.

    தூர்க்கையம்மன்

    வடக்கு நோக்கி உள்ள தூர்க்கையம்மன் இங்கு மேற்கு நோக்கி உள்ளது.  8 ம் நூற்றாண்டில் பல்லவர் காலத்திலிருந்து நாயக்கர் காலம் வரை பல மன்னர்களால் கட்டப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டது.

     தலவிருட்சமாக மகிழம்மரம் இருக்கிறது.

    வரலாறு

    புராணங்கள் கூற்றுப்படி கடவுள் பிரம்மா தான் இவ்வுலகை உருவாக்கியவர். முழுமுதல் கடவுளாகிய நான் தான் சிவனை விட பெரியவன் என்ற அகங்காரம் பிரம்மாவிடம் வந்தது. இதனால் கோபம் அடைந்த சிவன் பிரம்மாவின் ஐந்தாவது முகத்தை கொய்து அவரது படைத்தல் அதிகாரத்தை நீக்கி சாபம் இட்டார். இச்சாபத்தில் இருந்து விடுபட சிவனை வேண்டி பிரம்மா சிவாலயங்களுக்கு யாத்திரையை தொடங்கினார். 

    அப் புனித யாத்திரையின் போது இத்தலத்திற்கு வந்து 12 சிவ லிங்ககளை பிரதிஷ்டை செய்து பிரம்மபுரீசுரவரை வழிப்பட்டார். பிரம்மாவின் வழிபாட்டால் மகிழ்ந்த சிவன் பார்வதி தேவியின் வேண்டுகோளை ஏற்று மகிழ மரத்தின் கீழ் அவருக்கு தரிசனம் கொடுத்து சாப விமோசனம் கொடுத்தார். பிரம்மா அவரின் படைத்தல் அதிகாரத்தை திரும்பப் பெற்றார். சிவன் பிரம்மாவை வாழ்த்தி அவருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உருவாக்கி அருளினார். 

    மேலும் சிவன் இத்தலத்தில் பிரம்மாவின் தலையெழுத்து திரும்ப எழுதப்பட்டதால், பிரம்மாவை தரிசிக்கும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றும் படி பிரம்மாவிற்கு உபதேசம் செய்தார். இதனால் திருப்பட்டுர் பிரம்மாவை தரிசித்தால் திருப்பம் ஏற்படும் என்பது மக்களின் நம்பிக்கை.

     தீர்த்தம்
     பிரம்ம தீர்த்தம்  அம்மனின் ஆலயத்தின் வடப்புறம் உள்ளது. நான்கு அழகிய படித்துறைகளயும்,வற்றாத நன்னிரையும் கொண்டது, இத்தீர்த்ததினால் பிரம்மன் அருள்மிகு ஈஸ்வரனை அர்ச்சித்ததால் பிரம்மதீர்த்தம் என அழைக்கப்படுகிறது.  ஆலயத்தின் வடக்குப்பக்கத்தில் சோலைகளுக்கு நடுவே நான்கு படித்துறைகளுடன் கூடிய குளம் ஆகும்.

    பதஞ்சலி முனிவர்

    ஜோதிடக்கலையின் தந்தையும், பாம்பு உடலைக் கொண்டவருமான பதஞ்சலி முனிவர் பத்து இடங்களில் ஜீவசமாதி அடைந்ததாக ஒரு தகவல் உண்டு.அவரே ஆதி சேஸன் அதில் இத்தலமும் ஒன்று. பதஞ்சலி முனிவரின் சமாதி இக்கோயிலுக்குள் இருக்கிறது. அவர் யோகசூத்ரம் என்ற நூலை எழுதியவர். முக்தியடைந்தாலும் கூட இன்றும் உயிருடன் இருந்து அவர் அருள்பாலிக்கிறார்.

     அதையடுத்து,  அங்கேயுள்ள பதஞ்சலி முனிவரின் திருச்சமாதிக்கு அருகிலும் கண் மூடி அமர்ந்து பிரார்த்தித்து, அங்கேயுள்ள அதிர்வை உணர்ந்து சிலிர்த்த 

    இந்தத் தலத்துக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. பிரம்மோபதேசம் என்றும் யக்ஞோப வீதம் என்றும் சொல்லப்படும் உபநயனம்… அதாவது பூணூல் கல்யாணம் எனும் சடங்கை, இந்தத் தலத்தில் செய்வது விசேஷம் என்கிறார்கள், ஆசார்யப் பெருமக்கள்!

    ஆகமச் செல்வர்கள் எனப்படும் அர்ச்சகர் களும் மற்ற அந்தணப் பெருமக்களும் அவர்கள் தம் குழந்தைகளுக்கு சிறுவயதில் உபநயனம் செய்து வைப்பார்கள். அந்த உபநயனத்தை, பிரம்மோபதேச வைபவத்தை ஸ்ரீபிரம்மதேவன் குடிகொண்டிருக்கும் இந்தத் திருவிடத்தில் நடத்தினால், அந்தக் குழந்தை பின்னாளில் கல்வியிலும் ஞானத்திலும் சிறந்து விளங்குவான் என்பது ஐதீகம்!

     கிரகிக்கும் திறனும் முகத்தில் தேஜஸும் கொண்டு, கல்வியில் சிறந்து விளங்கி, ஞானத்துடன் நம் பையன் திகழ வேண்டும் என்பதுதானே ஒவ்வொரு பெற்றோரின் நினைப்பும் கவலையும் திருப்பட்டூருக்கு வந்து, ஸ்ரீவியாக்ரபாதர் உருவாக் கிய திருக்குளத்து நீரைத் தெளித்துக்கொண்டு, இரண்டு ஆலயங்களையும் வழிபட்டுப் பிரார்த்தித்தாலே… பித்ருக்களாகிய முன்னோரின் ஆசியுடன் குருவருளும் திருவருளும் கிடைக் கப் பெற்று, நம் சந்ததி சிறக்கும் என்பது ஆசார்யர்களின் வாக்கு! அதன்படி, மாணவர்கள் இங்கு வந்து வழிபட்டாலே சர்வ நலனும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள். ஆசார்ய புருஷர்களும் அந்தணர் களும் அவர்களின் மகன்களுக்கு இங்கு வந்து உபநயனம் செய்து வைத்தால்… இன்னும் பொலிவோடும் வலுவோடும் திகழ்வார்கள் என்பது உறுதி!

    விவசாயம்

    அதேபோல், சுற்றுவட்டாரத் தில் இருந்தெல்லாம் விவசாயிகள், இங்கு வந்து அம்பாளின் திருவடியில் விதை நெல்லை வைத்து வணங்கி விட்டு, பிறகு அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று, தங்களின் வயல்களில், விதைப்பார்களாம்! அப்படி வழிபட்டு விதைத்தால், அந்த முறை போட்டதெல்லாம் முளைக்கும்; தானியங்கள் பெருகி லாபம் கொழிக்கும் என்கின்றனர் விவசாயிகள்.

     சித்திரை மற்றும் ஆடி மாதங்களில் செட்டி குளம், துறையூர், முசிறி, சிறுகனூர், பாடலூர் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்தும் விவசாயிகள் விதை நெல் அல்லது தானியப் பயறு வகைகளை அம்பாளின் திருவடியில் வைத்து பூஜித்து, ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர். கிட்டத் தட்ட, திருப்பட்டூர் கோயில்களின் விழாக்களில் ஒன்றாகவே இந்த வைபவம் நடைபெறுமாம்!

     விளை நிலங்கள் செழித்து வளர்ந்தால்தான் உலகில் தானியங்கள் பெருகும். குழந்தைகள், அறிவுடனும் செறிவுடனும் வளர்ந்தால்தான் அகிலத்தில் ஒவ்வொரு குடும்ப மும் உன்னதமான நிலைக்கு உயரும். இந்த இரண்டையும் தந்தருளக்கூடிய, காத்தருளக் கூடிய தலம்தான் திருப்பட்டூர்!

     எத்தனையோ மகரிஷிகளின் பாதம் பட்ட பூமி இது. மன்னர்கள் பலரும் திருப்பணிகள் செய்து, நிவந்தங்கள் அளித்து ஆராதித்த ஸ்தலம் இது! 'தில்லை மூவாயிரம் திருப்பிடவூர் மூவாயிரத்து ஒன்று’ என்கிற சொலவடைக்கு ஏற்ப, இங்கே ஒருகாலத்தில் வேத கோஷங்கள் எப்போதும் ஓங்கி ஒலித்து,  அதிர்வலைகளைப் பரப்பிய இடம்… என்று பெருமைகள் பல கொண்ட திருப்பட்டூர்… இன்றைக்கு மெள்ள மெள்ள வளர்ந்து கொண்டிருக்கிறது. தென் மாவட்டங்கள், சென்னை, வேலூர் ஆகிய ஊர்களிலிருந்து மட்டுமின்றி, வெளி மாநிலங் களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்களின் வருகை தினமும் அதிகரித்தபடியே உள்ளது.
     

  • Thirchendur Koil Sivappu shanthi kolam

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித்திருவிழா 7 ஆம் திருநாளன்று சுவாமி சண்முகர்,  வள்ளி, தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில்  சிவப்பு சாத்தி கோலத்தில்  எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களின் ஒன்றான ஆவணித்திருவிழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் சிவப்பு சாத்தி தங்க சப்பரத்தில்   எழுந்தருளி  வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    இதனையொட்டி பிள்ளையன் கட்டளை மண்டபத்தில்  சுவாமி  சண்முகர், வள்ளி, தெய்வானை அம்பாளுக்கு  சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து  அலங்கார தீபாராதனை நடந்தது. இதனையடுத்து சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.  

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து  பக்தர்கள் சிகப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டனர். ஆவணித்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம்  29 ஆம் தேதி நடைபெறும்.

  • Adhitya Homam

    தன்வந்திரி பீடத்தில் வருகிற 01.09.2019 ஆவணி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி அளவில் சூரிய ஹோமம் நடைபெற உள்ளது. ஆவணி ஞாயிற்றுக்கிழமையில் சூரிய பகவானை வேண்டி நடைபெறும் ஹோமங்களிலும், பூஜைகளிலும் பங்கேற்று சூரியனை வணங்குவோருக்கு கண் நோய்கள், இருதய நோய்கள், மஞ்சள் காமாலை, தோல் நோய்கள் நீங்கும், ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி பாதிப்பு நீங்கும், சூரிய திசை, சூரிய புத்தியால் ஏற்படும் தோஷங்கள் நிவர்த்தியாகும், நவக்கிரக தோஷங்கள் உடையோரும் சூரிய பகவானை வழிபட்டால் புகழ் கூடும் என்பது பக்தர்களில் நம்பிக்கையாகும்.

    ஒவ்வொருவரும் வாழ்நாளில் தேவையறிந்து செய்யும் பரிகாரம் தான் ஹோமம் ஆகும். இந்த ஹோமங்கள் குறுப்பிட்ட இலக்குகளை சென்றடையக் கூடியதாக இருக்க வேண்டும் என்றால் நவக்கிரகங்களின் பரிபூரண அனுக்கிறகம் வேண்டும். அவற்றின் மூலம் வாழ்க்கையில் நடைபெறும் நல்லது கெட்டது அனைத்திற்கும் நவக்கிரகங்களின் பங்கு முக்கியமாகும்.

    ஜோதிட சாஸ்திர ரீதியாக சூரியன் என்பவர் பிதுர்காரகன் அதாவது ஒருவருக்கு அமைந்த தந்தை பற்றி குறிப்பிடக் கூடியவர். ஒருவரது சுயநிலை, சுய உணர்வு, செல்வாக்கு, கௌரவம், அந்தஸ்து, வீரம், பராக்கிரமம், நன்னடத்தை ஆகியவற்றையும், கண்கள், பார்வை, உடல் உஷ்ணம், அரசாங்க தொடர்பு ஆகியவை பற்றியும் சூரியன் குறிப்பிடுவார். ஒருவரது ஜாதக ரீதியாக சூரியனது நிலை கோச்சாரம் அல்லது திசாபுத்திகள் பாதகமாக இருந்தால் சூரிய பிரீதி ஹோமம் செய்து கொள்ளவேண்டும்.

    சூரிய ஹோமத்தின் மூலம் சூரிய பகவான் அனுக்கிரகத்துடன் வளமும் நலமும் பெற்று, நீடித்த ஆயுள், இளமை, உயர்ந்த அறிவு, நிறைந்த செல்வம், சிறந்த ஆரோக்கியம் மற்றும் சிறப்பான வாழ்வை பெறலாம்.

    மேற்கண்ட ஹோமத்தை பாஸ்கர ஹோமம் என்றும் ஆதித்ய ஹோமம் என்றும் பானு ஹோமம் என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கபட்டு வருகிறது. இந்த ஹோமத்தில் பங்கு பெறுவதன் மூலம் சூரிய பகவானின் அருள் பெற்று கீழ் கண்ட பலன்கள் பெறுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளது:

    அரசாங்க வேலையில் ஏற்படும் தடைகள் விலகி பதவி உயர்வு பெறலாம்,  பாவங்கள் கரையும், கவலை, துக்கம், வேதனை ஆகியவை நீங்கும், நோய்கள் அகலும் அதிலும் குறிப்பாக இதயம், கண் தொடர்பான நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும், தீய சக்திகள் விலகும், கிரஹ தோஷங்கள் அகலும், ஏழரை சனியின் தாக்கம் குறையும், தசா புக்தி தோஷங்கள் விலகும், அனைத்து செயல்களிலும் வெற்றி பெறலாம், இருள் நீங்கும். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சூரிய பகவானை வேண்டி நடைபெறும் சூரிய ஹோமத்தில் பங்குபெற்று நலம் பெற அனைவரையும் பங்கு கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். இந்த தகவலை தன்வந்திர் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு :
    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், வாலாஜாபேட்டை – 632 513. செல் – 9443330203

     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – வெற்றி
    ரிஷபம் – வரவு 
    மிதுனம் – கவலை
    கடனம் – கவனம்
    சிம்மம் – நலம்
    கன்னி –  விவேகம்   
    துலாம் –  திறமை 
    விருச்சிகம் – ஜெயம் 
    தனுசு – பயம் 
    மகரம் –   மேன்மை 
    கும்பம் – மகிழ்ச்சி
    மீனம் – நஷ்டம் 
    சந்திராஷ்டமம்    – மூலம், பூராடம்
     

  • August 27 Indraya Naal Eppadi

    ஆகஸ்ட் 27 – இன்றைய நாள் எப்படி?
    விகாரி வருடம் – ஆவணி 10
    27-ஆக-2019 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    துவாதசி          
    திதி நேரம்    :    துவாதசி    இ    11.27
    நட்சத்திரம்    :    புனர்பூசம்    இ    10.58
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    மூலம்,பூராடம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • 2019 September month predictions – Meenam

    (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
    உண்மையாகவும், நேர்மையாகவும் நடக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக உடைய மீன ராசி அன்பர்களே இந்த மாதம் வீண் மனகுழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கி கொள்ளலாம்.

    கவனமாக இருப்பது நல்லது. திடீர் கோபம் ஏற்படும். தேவையற்ற வீண் செலவுகளும் உண்டாகும்.  ஆன்மிக எண்ணம் ஏற்படும். விருப்பமான நபரை  சந்திப்பதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம். ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் பல காரிய தடைகளை சந்திப்பீர்கள். கவனம் தேவை. வீண் வாக்குவாதங்கள், அதன்மூலம் பிறரிடத்தில் பகை போன்றவை உண்டாகலாம். 

    தொழில் வியாபாரம் தொடர்பான  காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். திட்டமிட்டு  செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில்  கூடுதல் லாபம் பெற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும். கவனமாக  வேலைகளை செய்யாவிட்டால்  மேல் அதிகாரிகளின்  அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். லாபம்  கிடைப்பது குறையலாம். சரக்குகளை விற்பதில்  மிகவும் வேகம் காட்டுவீர்கள்.

     தொழில், வியாபாரம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி வரலாம். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும்.

    குடும்பத்தில் இருப்பவர்களுடன்  சில்லறை சண்டைகள் உண்டாகலாம் கவனம் தேவை.  கணவன், மனைவிக் கிடையே  மனவருத்தம் ஏற்படும் நிலை உருவாகலாம். பின் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன்  பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சுப காரியம் நடக்கும்.  உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும்.  

    பெண்களுக்கு மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் சந்திப்பு உண்டாகும். வீண் செலவும் ஏற்படலாம். கோபத்தை குறைப்பது நல்லது. நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. 

    கலைத்துறையினருக்கு வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின் போதும் கூடுதல் கவனம் தேவை. நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும்.  உங்களுக்கு இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். 

    அரசியலில் உள்ளவர்களுக்கு எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். பணவரத்து மனமகிழ்ச்சியை தரும். எதிர்பார்த்த இடங்களில் வெற்றியை அடைய முடியும். எடுத்தகாரியத்தை எளிதில் முடிக்கக் கூடிய சந்தர்ப்பம் வாய்க்கும்.

    மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம்  உண்டாகும். அதே நேரத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சக மாணவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். 

    பரிகாரம்: தினம்தோறூம் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வருவது.
    சந்திராஷ்டம தினங்கள்: 3, 4
    அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13, 14

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile : +91 7845119542

  • 2019 September month predictions – Kumbam

    (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)
    எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு காரியங்களை செய்யும் குணமுடைய கும்ப ராசி அன்பர்களே இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவும் கூடும்.  எதிர்பார்த்த உதவிகள்  கிடைக்கும்.

     துணிச்சல் உண்டாகும்.  அதனால்  எதை பற்றியும்  முன்பின் யோசிக்காமல் செயல்களில் இறங்கி விடுவீர்கள். தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். தன்னைத்தானே உயர்த்தி கொள்வதுடன் பிறரும் உயர பாடுபடுவீர்கள்.

    மனோதைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். 
    தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு  இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம்  கிடைக்க பெறுவீர்கள்.

     சரக்குகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்கள்  எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள். சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் இருந்த மெத்தன போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன் தரும். திட்டமிட்டபடி  பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது.

    குடும்பத்திற்கு தேவையான  பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை இருக்கும் அதே நேரத்தில் அவர்களுடன் வாக்குவாதம் செய்வதை  தவிர்ப்பது நல்லது.  கணவன், மனைவிக்கிடையே  மனம்விட்டு பேசுவதன் மூலம்  கருத்து வேற்றுமை வருவதை தவிர்க்கலாம். பிள்ளைகளிம் அனுசரணையாக நடந்து கொள்வது நன்மைதரும். குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். 

    பெண்கள் துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மைதரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

    கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் நீங்கும். பணவரத்து மனமகிழ்ச்சியை தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும். நீங்கள் திட்டமிட்டபடி உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். 

    அரசியலில் உள்ளவர்களுக்கு எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு  ஏற்படும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும்.

    மாணவர்கள் மிகவும் கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. கல்வியை பற்றிய கவலை நீங்கும். திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண்  பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்தரும்.

    பரிகாரம்: முருகனை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.
    சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 29, 30    
    அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11,    

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile : +91 7845119542

     

  • 2019 September month predictions – Maharam

    (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
    எந்த காரியத்தையும் தீர ஆலோசித்து செய்யும் அதே நேரத்தில் அதில் உள்ள லாப நஷ்டங்களையும் அறிந்து அதற்கேற்றவாறு செயல்படும் மகர ராசி அன்பர்களே இந்த மாதம் மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். ஆனால் மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். மற்றவர்களின் நலனுக்காக தன் நலனை பாராமல் உழைப்பீர்கள். எதிர்பார்த்த படி காரியங்கள் நடந்து முடியாமல் காரிய தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும்.  எனினும் நன்மைகள் உண்டாகும்.  பணவரத்து இருக்கும். வாகன யோகம் உண்டு. பெரியோர்களின் உதவி கிடைக்கும்.  மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ, பயமோ ஏற்படாது.

    தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.  வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை  கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள்.  செயல் திறமை அதிகரிக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன்தரும். புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்கப்பெறுவார்கள். அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

    குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு  அதிகப்படியான வருமானமும் கிடைக்கும். மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக  இருந்த குடும்பம் தொடர்பான  பிரச்சனைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிடையே  சகஜ நிலை காணப்படும். கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும்.  குழந்தைகள்  திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள். உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும் போதும்  நிதானமாக பேசுவது நன்மை தரும்.

    பெண்கள் எதிலும் மிகவும் கவனமாக  ஈடுபடுவது நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும். பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள்.

    கலைத்துறையினருக்கு செலவுகள் ஏற்படும். பயண சுகம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைப்பது தாமதப்படும். வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கவனம் தேவை. கிடைக்கும் வாய்ப்புகளுக்காக அயராது உழைத்தால் வெற்றி நிச்சயம்.

    அரசியலில் உள்ளவர்களுக்கு தேவையான பணஉதவி கிடைக்கலாம். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம்.  மேலிடத்தில் வரும் உத்தரவுகளை தாமதிக்காமல் செய்து முடிப்பது உங்களுக்கு நன்மை தரும்.

    மாணவர்கள் உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வீர்கள்.  கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.

    பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். உடல் ஆரோக்யம் உண்டாகும்.
    சந்திராஷ்டம தினங்கள்: 26, 27, 28
    அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9,    

     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile : +91 7845119542

  • 2019 September month predictions – Dhanusu

    (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
    தொலைநோக்கு சிந்தனை உடைய அதே நேரத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாமல்  செயலாற்றும் தனுசு ராசி அன்பர்களே இந்த மாதம் எதிர்ப்புகள் நீங்கும். பகைகள் விலகும். அடுத்தவர்களால்  இருந்த பிரச்சனைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லாவசதிகளும் கிடைக்கும். தர்மசிந்தனை அதிகரிக்கும்.

    நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். எங்கும் நல்லது நடக்க வேண்டும் என்ற குறிக்கோள் உடையவர்கள். நீங்கள் நன்மைக்காக போராட தயங்காதவர். மனகலக்கம் உண்டாகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டி வரும். எதிர்த்து  செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பணவரத்தும், எதிர்பார்த்த படி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். வீண்செலவு உடல்நல பாதிப்பு ஏற்படலாம். கவனம் தேவை.

    தொழில் வியாபாரம்  சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும்.

    உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம்  உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும்.  தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள்.

    குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள்  உங்களை அனுசரித்து செல்வார்கள்.  கணவன், மனைவிக் கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். அன்பு அதிகரிக்கும். மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக  செலவு செய்ய வேண்டி இருக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி  செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும்.

    பெண்களுக்கு எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். மனதில் வீண்குழப்பம் உண்டாகும்.  உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும். 

    கலைத்துறையினர் கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் கூடும். அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. 

    அரசியலில் உள்ளவர்களுக்கு வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடும். தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும். தொண்டர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வது நன்மை தரும். எதிர்காலம் பற்றிய சிந்தனை எழும். உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். பொறுப்புகள் அதிகரிக்கும். 

    மாணவர்களுக்கு கல்வியில் உயர்வு உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும்.  கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். சக மாணவர்களின் நட்பும் கிடைக்கும். 

    பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.
    சந்திராஷ்டம தினங்கள்: 24, 25
    அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6, 7    

     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile : +91 7845119542

  • 2019 September month predictions – Viruchigam

    (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
    வார்த்தைகளை அளந்து பேசுவது போல செலவு செய்வதிலும் சிக்கனத்தை கடைபிடிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே இந்த மாதம் மனோதைரியம் அதிகரிக்கும். எல்லா காரியங்களும் சாதகமாக நடந்து  முடியும். எல்லா இடங்களிலும் மரியாதையும், கவுரவமும் அதிகரிக்கும். எல்லாதரப்பினரிடம் இருந்தும்  ஆதரவு கிடைக்கும்.

     நன்மை தீமைகளை பற்றி கவலைப் படாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். எப்போதும் பரபரப்பாக காணப்படுவீர்கள். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். காரிய தடை, வீண் அலைச்சல் ஏற்படலாம். கெட்ட கனவுகள் வரலாம். திடீர் கோபம் ஏற்படும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாக பழகுவது அவசியம்.

    தொழில் வியாபாரம் முன்னேற்றமடையும். போட்டிகள் குறையும்.  தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கப்பெறுவீர்கள்.  கடன் பிரச்சனை தீரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள்  நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். அலைச்சல் அதிகரிக்கும். கூடுதல் பணிசுமையால் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நிலுவையில் உள்ள தொகைகள் வந்து சேரலாம்.

    குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும்.  திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை சாதகமான பலன் தரும்.  கணவன், மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும்.  பிள்ளைகளுக்காக  செய்யும் பணிகள் திருப்தி தரும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும்.  பிள்ளைகளின்  செயல்பாடுகள் ஆறுதலை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். 

    பெண்களுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். 
    கலைத்துறையினர்  எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும்.

    மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன்  பகை ஏற்படலாம். பண வரத்து அதிகரிக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். 

    அரசியலில் உள்ளவர்களுக்கு சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வரும். உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். நிலுவையில் உள்ள பணம் வரும். 

    மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். திறமை வெளிப்படும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். கவனத்தை சிதற விடாமல் வகுப்பை கவனிப்பது அவசியம். கூடுதலாக பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். 

    பரிகாரம்: முருகனுக்கு பரிகார பூஜை செய்வதும் சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்.
    சந்திராஷ்டம தினங்கள்: 22, 23,
    அதிர்ஷ்ட தினங்கள்: 3, 4

     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile : +91 7845119542