Blog

  • Suvayana vellai El Urundai

    தேவையான பொருட்கள்:
    வெள்ளை எள் – 2 கிண்ணம்
    வேர்க் கடலை – 2 கிண்ணம்
    வெல்லம் – 100 கிராம்
    ஏலக்காய் பொடி – 1 தேக்கரண்டி

    செய்முறை:   
    வாணலியில்,  எள் மற்றும் வேர்க்கடலையை தனித்தனியாக வறுத்து வைத்துக் கொள்ளவும். பின் வெல்லத்தை நன்கு தட்டிக் கொள்ளவும். பின்பு  வறுத்து வைத்துள்ள எள் மற்றும் வேர்க்கடலையை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.  

    பின்பு அதில் தட்டி வைத்துள்ள வெல்லத்தை போட்டு, அரைத்துக் கொள்ளவும்.  (வேண்டுமென்பவர்கள் எள்ளை அரைத்தும் செய்யலாம், அரைக்காமலும் செய்யலாம்.)  பின் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, ஏலக்காய் சேர்த்து, உருண்டைகளாகப் பிடித்து வைக்க வேண்டும்.  சுவையான எள்ளுருண்டை ரெடி
     

  • vinayakarukku piditha pooranam kozhukattai

    தேவையான பொருட்கள்: 
    பச்சரிசி மாவு – 2  கப் 
    வெல்லம் – 100 கிராம்
    எள் – 2 கிண்ணம் (வறுத்தது)
    வேர்க்கடலை – 2 கிண்ணம்
    பொட்டுக்கடலை – 2 கிண்ணம் 
    துருவிய தேங்காய் – 1/2 மூடி  
    ஏலக்காய் பொடி – 1  தேக்கரண்டி 
     உப்பு – சிறிது 

    செய்முறை :

    வெல்லத்தைப் பொடித்து, மிக்ஸியில் போட்டு ஒரு முறை அடித்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலை, பொட்டுக்கடலை, எள் ஆகியவற்றை வறுத்து, பொடியாக அரைத்துக் கொள்ளவும்.   துருவிய தேங்காயை எண்ணெய் விட்டு, பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த பொடி கலவை, வதக்கிய தேங்காய், ஏலக்காய் பொடி மற்றும்  வெல்லத்தை போட்டு நன்கு கலந்து கொள்ளவும். பூர்ணம் தயார்.

    கொழுக்கட்டை செய்ய:  

    ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவைப் போட்டு, அதில்  சிறிது  உப்பு சேர்த்த சுடு தண்ணீர் விட்டு, சற்று மென்மையாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.  பிறகு பிசைந்து வைத்துள்ள மாவில் சிறு உருண்டையை எடுத்து, உருட்டி, வாழை இலையின் மேல் சிறிது எண்ணெய் தடவி, அந்த உருண்டையை வைத்து தட்டையாக தட்டி, அதில் சிறிது பூர்ணத்தை வைத்து மடித்து, முனையை நன்கு மூடி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். 

    பின்னர் இட்லிப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இட்லித் தட்டில் அந்த பூர்ணம் வைத்து மடித்துள்ள மாவை வைத்து, மூடி, வேக வைத்து எடுக்கவும். இப்போது பூர்ணம் கொழுக்கட்டை ரெடி.
     

  • vinayaka chadurthi spl pongal

    விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கருப்பட்டி பொங்கல்
     

    தேவையான பொருட்கள்:
    பச்சரிசி –  1 கப்
    பாசிப் பருப்பு  – 50 கிராம்
    முந்திரிப் பருப்பு – 30 கிராம்
    காய்ந்த திராட்சை  – 30 கிராம்
    சுக்கு பொடி –  சிறிதளவு
    ஏலக்காய் –  6
    சிறிய தேங்காய் –  1
    நெய் –  200 கிராம்
    கருப்பட்டி  – 600 கிராம்
    தண்ணீர் – தேவைக்கேற்ப

    செய்முறை:   

    முதலில் கருப்பட்டியை நன்றாக தூளாக்கிக் கொள்ள வேண்டும்.  பின்னர் குக்கரில் ஒரு கிண்ணம் அரிசிக்கு 3 மூன்று பங்கு தண்ணீர் விட்டு பச்சரிசி, பாசிப்பருப்பு ஆகியவற்றை போட்டு சாதமாக குழையவிடவேண்டும்.  

    தொடர்ந்து குக்கரில் பிரஷர் போனதும் குக்கரை திறந்து அதில் தூளாக்கி வைத்துள்ள கருப்பட்டியை போட்டு கொதிக்கவிடவும். நன்கு கொதித்து ஒன்றாக திரண்டதும்,  வாணலியில் சிறிது நெய்யைவிட்டு  அதில் முந்திரிப் பருப்பு, திராட்சைப் பழம், துருவிய தேங்காயைப் போட்டு வறுக்க வேண்டும்.  

    தேங்காய் பொன்னிறமாக வதங்கிய பின் கலவையை குக்கரில் போட்டு ஏலக்காய் பொடி, சுக்குப் பொடி, மீதமுள்ள நெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி இறக்க வேண்டும். சுவையான சர்க்கரைப் பொங்கல் தயார். 
     

  • August 31 Rasi palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – திறமை 
    ரிஷபம் – இன்பம் 
    மிதுனம் – புகழ்
    கடனம் – அன்பு
    சிம்மம் – செலவு 
    கன்னி –  உறுதி 
    துலாம் –  வாழ்வு
    விருச்சிகம் – உயர்வு 
    தனுசு –     ஊக்கம் 
    மகரம் –   மறதி
    கும்பம் – போட்டி 
    மீனம் – தாமதம்  
    சந்திராஷ்டமம்    – அவிட்டம், சதயம் 

  • August 31 Indraya Naal Eppadi

    ஆகஸ்ட் 31 – இன்றைய நாள் எப்படி?
    விகாரி வருடம் – ஆவணி 14
    31-ஆக-2019 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    திதித்துவயம்          
    திதி நேரம்    :    பிரதமை    ம    2.22
    நட்சத்திரம்    :    பூரம்    மா    4.56
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    அவிட்டம்,சதயம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Pillayarpatti Soorasamharam Video

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்வை, ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் சதுர்த்தி பெருவிழா பத்து நாட்கள் நடைபெறுகிறது.

    விழாவின் ஆறாம் திருநாளான நேற்று வெள்ளி யானை வாகனத்தில் திருக்கோவில் மணிமண்டபத்தில் விநாயகர் எழுந்தருளினார்.

    இதன்பின், மேள வாத்தியங்கள் முழங்க திருக்கோவிலை சுற்றி வந்து கோவில் முன்பாக உள்ள குளத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் பிள்ளையார்.

    இங்கு தேவர்களை கொடுமைப்படுத்திய கஜமுக அசுரனை போரில் எதிர்கொண்ட நிகழ்வு நடைபெற்றது. தனது தந்தத்தால் அசுரனை விநாயகர் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான சூரசம்ஹார நிகழ்வினை கண்டுகளித்து தரிசனம் செய்தனர்.
     

  • August 30 Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – நன்மை 
    ரிஷபம் – சிரத்தை
    மிதுனம் – சோர்வு 
    கடனம் – கவனம் 
    சிம்மம் – சாந்தம் 
    கன்னி –  அமைதி
    துலாம் –  சுகம் 
    விருச்சிகம் – நலம் 
    தனுசு –     புகழ் 
    மகரம் –   பயம்  
    கும்பம் – பக்தி
    மீனம் – பொறுமை 
    சந்திராஷ்டமம்    – திருவோணம், அவிட்டம்
     

  • Augusy 30 Amavasai

    ஆகஸ்ட் 30 – அமாவாசை
    விகாரி வருடம் – ஆவணி 13
     அமாவாசை 
    பெருவயல் முருகன் தேர்
    30-ஆக-2019 வெள்ளி  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    அமாவாசை          
    திதி நேரம்    :    அமாவாசை    மா    4.48
    நட்சத்திரம்    :    மகம்    மா    6.36
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    திருவோணம்,அவிட்டம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Thiruchendur car festival

    திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றுள்ளது. பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். 

    முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாள்களில் காலை, மாலை இருவேளைகளிலும் சுவாமி மற்றும் அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியான நேற்று சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், வள்ளியம்மன் வெள்ளி கமல வாகனத்திலும் வீதி உலா வந்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தேரோட்டம் இன்று காலை 6:00 மணிக்கு தொடங்கியது.

    இதனையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, முதலில் விஸ்வரூப தரிசனமும், பின்னர் உதயமார்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன. சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி – தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட திருதேரில் எழுந்தருளினார். 

    தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
     

  • Nava Durga Yagam…

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி இன்று 29.08.2019 வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் நன்பகல் 1.00 மணி வரை நவதுர்கா யாகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நாளை ஆவணி அமாவாசையை முன்னிட்டு நவ சண்டி யாகம் நடைபெற உள்ளது.

    இந்த யாகம் கோபூஜை, புண்ணியகவாசனம், யாகசாலை பூஜை, வேத பாராயணம், மங்கள வாதியம், நவாவரண பூஜை, நவ துர்கா பூஜையுடன் நடைபெற்றது. இந்த யாகத்தில் விசேஷ மூலிகைகள், பழங்கள், பட்டி வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், சௌபாக்ய பொருட்கள், நவசமித்துகள், நிவேதன பொருட்கள் சமர்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. இதில் சென்னை திருமதி. சித்ரா தேவராஜ் குழுவினர்களின் ஸ்ரீ துர்கா கவசம், ஸ்ரீ துர்காஸூக்தம், ஸ்ரீ தேவிமஹாத்மியம், ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி ஸ்லோகம் பாராயணங்கள் நடைபெற்றது.

    மேலும் இதில் சென்னை திரு. பாஸ்கர் குடும்பத்தினர்கள், சென்னை திரு. பிரகாஷ் குடும்பத்தினர்கள், ஊட்டி திரு. ராஜசேகர், சென்னை டாக்டர். ரங்கராஜன், ஹைதெராபாத் திருமதி. ராதா, சென்னை திருமதி. இன்பவல்லி, சென்னை திருமதி. சுபத்ரா மற்றும் ஏராளமானவர் பங்கேற்றனர். பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதம் வழங்கினார். இதனை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.