Blog

  • vinayakar chadurthi vizha

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரி  மணக்குள விநாயகர் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மணக்குள விநாயகர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

     

    திருச்சி மலைக்கோட்டையில் உள்ள உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோ எடையுள்ள கொழுக்கட்டையுடன் படையல் வைக்கப்பட்டுள்ளது. திருச்சி மலைக்கோட்டையில் தாயுமான சுவாமி கோவில் உச்சியில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. மேலே அமைந்துள்ளது உச்சிப்பிள்ளையார் கோவில் என்றும், கீழே அமைந்துள்ளது மாணிக்க விநாயகர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் அமாவாசை முடிந்து 4-வது நாள் வரும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கியது. தொடர்ந்து விழா வருகிற 15-ந்தேதி வரை 14 நாட்கள் நடக்கிறது.

    முதல் நாளில் 150 கிலோ எடை கொண்ட மெகா கொழுக்கட்டையைக் கொண்டு மாணிக்கு விநாயகருக்கும், உச்சிப்பிள்ளையாருக்கும் தலா 75 கிலோ படையல் இட்டு நெய்வேத்தியம் செய்யப்பட்டது. பின்னர் அந்த கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    சக்தி தலங்களில் முதன்மையாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகில் அமைந்துள்ளது  ஏலேல சிங்க விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது.  விநாயகருக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு  14 வது ஆண்டாக  சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான 10, 20, 50, 100, 500, 2000 உள்ளிட்ட புதிய ரூபாய் நோட்டுகளால்  சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சேலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் டிஜிட்டல் விநாயகர் வடிவமைக்கப்பட்டது. யானைமுகம் தோன்றிய புராண  நிகழ்வுகளை உணர்த்தும் தத்ரூப காட்சிகளை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர். 
    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு  18படி அரிசி,25 கிலோ வெல்லத்தில் செய்யப்பட்ட கொழுக்கட்டை படைக்கப்பட்டது.

    பெரம்பலூர் அருகேயுள்ள வெங்கனூர் கிராமத்திலுள்ள விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் அமைல் து அருள்பாலித்து வருவது ஆழத்து பிள்ளையார். இந்த ஆலயத்தில் தனி சந்நிதியாக உள்ள பாதாள விநாயகருக்கு இன்று சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன..

    திரு காலஸ்த்தி நகர், விருத்தாசலத்திற்கு அடுத்து பாதாளத்தில் விநாயகர் அமைந்திருப்பது இந்த வெங்கனூர் கிராமத்தில் மட்டுமே, இந்த விநாயகரை வழிபட்டால் பூர்வ ஜென்ம பாவங்கள் தீரும் என்பது நம்பிக்கை 
     

  • Pillayarpatti vinayakar chadurthi vizha

    சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் இருக்கும்  கற்பக விநாயகர் கோயிலில் ஆண்டு தோறும் ஆவணித்திங்களில் வரும் விநாயக சதுர்த்தி முக்கிய திருநாள் ஆகும். இந்த கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா பத்து நாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். 

    விநாயகர் சதுர்த்திக்கு ஒன்பது நாள் முன்னதாகவே காப்புக்கட்டி கொடியேற்றம் செய்து திருநாள் தொடங்கப்பெறும், இரண்டாம் திருநாளில் இருந்து எட்டாம் திருநாளில் வரை காலை விழாவில் விநாயகர் வேள்ளி கேடகத்தில் உலா வருவார். 

    அதன்படி கடந்த 24ம் தேதி காலை 10.40 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. முன்னதாக விநாயகருக்கும், அங்குசத்தேவருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடந்தன. விழாவையொட்டி உற்சவ விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். 

    தொடர்ந்து தினமும் விநாயகர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின்ன நிறைவு நாளான நேற்று காலை விநாயகருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று இரவு பஞ்சமூர்த்திகள் வீதி உலாவுடன் பிள்ளையார்பட்டி விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு பெற்றது.
     

  • September 3 Rasi palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – துன்பம் 
    ரிஷபம் – செலவு
    மிதுனம் – வரவு
    கடனம் – ஆதரவு
    சிம்மம் – பெருமை  
    கன்னி –  பகை
    துலாம் –  பொறுமை 
    விருச்சிகம் – தாமதம் 
    தனுசு –     அமைதி
    மகரம் –   கவலை
    கும்பம் – உயர்வு
    மீனம் – வெற்றி
    சந்திராஷ்டமம்    – உத்திரட்டாதி, ரேவதி
     

  • September 3 Indraya Naal Eppadi

    செப்டம்பர் 3 – இன்றைய நாள் எப்படி?
    விகாரி வருடம் – ஆவணி 17
    03-செப்-2019 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    பஞ்சமி          
    திதி நேரம்    :    சதுர்த்தி    கா    7.36
    நட்சத்திரம்    :    சித்திரை    ம    12.35
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திரட்டாதி,ரேவதி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Elela singa vinayakar

    சக்தி தலங்களில் முதன்மையாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகில் அமைந்துள்ளது  ஏலேல சிங்க விநாயகர் திருக்கோவில். இத்திருக்கோவில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி விநாயகர் சதுர்த்தி தினமான இன்று ஏலேல சிங்க விநாயகருக்கு அதிகாலையிலேயே அபிஷேக ஆராதனைகள்  நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து விநாயகருக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு  14 வது ஆண்டாக  சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான 10, 20, 50, 100, 500, 2000 உள்ளிட்ட புதிய ரூபாய் நோட்டுகளால்  சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    ரூபாய் நோட்டுக்களை கொண்டு  அலங்காரம் செய்யப்பட்டு காட்சியளித்த ஏலேல சிங்க விநாயகரை அதிகாலையில் இருந்தே பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.
     

  • Pillayarpatti vinayakar veedhi ulla

    சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அதிகாலை முதலே கற்பக விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. கற்பக விநாயகர் தங்க மூஷிக வாகனத்தில் திருவீதி உலா வந்த அற்புதமான வீடியோ காட்சி. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி வழிபாடு செய்தனர்.

     

  • Pillayarpatti Karpaga vinayagar koil theerthavari

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளது பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் . இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாள் திருவிழாவாக வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வருகிறது.

    பத்து நாள் திருவிழாவில் இறுதி நாளான இன்று கற்பக விநாயகர் வெள்ளிகேடகத்தில் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி பூஜைகள் நடைபெற்றது.

    அங்கு  அங்குசதேவருக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட அபிசேகங்கள் நடைபெற்றது. பின்னா பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. 

  • September 2 Rasi palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – செலவு
    ரிஷபம் – வெற்றி
    மிதுனம் – நோய்
    கடனம் – சிக்கல்
    சிம்மம் – நன்மை 
    கன்னி –  கவலை
    துலாம் –  துன்பம்  
    விருச்சிகம் – சுகம் 
    தனுசு –     மகிழ்ச்சி
    மகரம் –   புகழ்
    கும்பம் – ஆதரவு
    மீனம் – பயம்
    சந்திராஷ்டமம்    – பூரட்டாதி, உத்திரட்டாதி
     

  • September 2 Vinayakar Chadurthi

    செப்டம்பர் 2 – விநாயகர் சதுர்த்தி
    விகாரி வருடம் – ஆவணி 16
     subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    விநாயகர் சதுர்த்தி
    02-செப்-2019 திங்கள்  
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 6.00 – 7.30)
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    சதுர்த்தி          
    திதி நேரம்    :    திரிதியை    கா    9.41
    நட்சத்திரம்    :    அஸ்தம்    ம    1.53
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    : பூரட்டாதி,உத்திரட்டாதி
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Vinayakar chadurthi homam

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி விநாயக சதுர்த்தியை முன்னிட்டு வருகிற 02.09.2019 திங்கள்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணிக்குள்ளாக 108 கணபதிகளை வழிபடும் விதமாக 108 கணபதி ஹோமமும் ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு தன்வந்திரி ஹோமத்துடன் சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது.

    ஸ்ரீ தன்வந்திரி விநாயகர் :

    உலகில் வேறெங்கும் இல்லாதவாறு மக்கள் அதிசயிக்கும் வகையில் கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் முகப்பை நோக்கி நடந்து வந்தால், பீடத்தின் முன் நமக்கு காட்சி தருவது ஒரே கல்லால் செய்யப்பட்ட வினை தீர்க்கும் விநாயகரும், பிணி தீர்க்கும் தன்வந்திரி பகவானும். இருவரும் ஏக தரிசனத்தில் சிம்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி கொடுக்கின்றனர்.

    வினை தீர்க்கும் விநாயகர் சங்கு சக்கரத்துடன் தும்பிக்கையில் அம்ருத கலசத்துடன் வைஷ்ணவ சம்பிரதாயப்படி திருமண் முத்திரை தரித்து சிரித்த முகத்துடன் அருள்பாலிக்கின்றார். வினைகளுக்கு ராஜாவான விநாயகரும் பிணிகளுக்கு ராஜாவான தன்வந்திரி பகவானும் ராஜ அம்சமாக சிம்மாசனத்தில் வீற்றிருந்து அண்டி வருவோரின் தீவினைகளையும் பிணியையும் தீர்த்து அருள்பாலிக்கின்றனர்.

    இந்தச் சந்நிதியில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிர்வாதத்துடன் திருவோணம் மற்றும் பக்தர்களின் ஜென்ம நக்ஷத்திர நாட்களில் கர்ம வினைகள் நீங்க பக்தர்கள் தங்கள் கைகளாலேயே தைலக்காப்பு திருமஞ்சனம் செய்து வழிபடுகின்றனர். உடலில் ஏற்படும் சொறி, சிரங்கு ஆகிய தோல் வியாதிகளுக்கும், சர்க்கரை நோய், புற்று நோய் போன்ற கொடிய ஆட்கொல்லி நோய்களுக்கும், இதர வியாதிகளுக்கும் இந்தத் தைலம் விசேஷப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    மேலும் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவராக இங்கு வீற்றிருக்கிறார். இங்கு வாஞ்சா கல்பலதா கணபதி ஹோமம், மகா கணபதி ஹோமம், தன்வந்திரி கணபதி போன்ற ஹோமங்கள் சிறப்பாக நடத்தபடுக்கின்றன. இவர் கர்ம வினை நோய் தீர்க்கும் மருத்துவராகவும், கர்ம பிணி தீர்க்கும் மருத்துவராகவும் திகழ்கிறார். இவரை விநாயகர் சதுர்த்தி நாளில் வழிபட்டு, கர்ம வினை நீங்கி, உடல் பிணி தீர்ந்து மனநலம் பெற்று வாழலாம்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த சன்னதியில் தன்வந்திரி ஹோமத்துடன் 108 கணபதி ஹோமம் விநாயக சதுர்த்தி நாளில் நடைபெற உள்ளது.

    விநாயக சதுர்த்தி :

    ஆவ‌ணி மா‌த‌ம் சு‌க்ல ப‌ட்ச சது‌‌ர்‌த்‌தி ‌தின‌த்‌தி‌ல் வரும் நாளே விநாயக சதுர்த்தியாகும். விநாயக பெருமானுக்கு பிள்ளையார், விக்னேசுவரர், கணேசர், கணபதி, கணாதிபர், ஐங்கரன், ஏரம்பன், இலம்போதரர், குகாக்கிரசர், கந்தபூர்வசர், மூத்தோன், ஒற்றைமருப்பினன்,  மூஷிகவாகனன், வேழமுகன், கயமுகன், ஓங்காரன், பிரணவன் போன்ற இன்னும் பல நாமங்கள் விநாயகருக்கு உள்ளது. இவற்றுள் 'விநாயகர்' என்பது  'மேலான தலைவர்' என அர்த்தப்படும்.

    108 கணபதி ஹோமம் :

    மஹா கணபதி, மஹா கர்ண கணபதி, மஹா சக்தி கணபதி, சர்வ சக்தி கணபதி, நித்ய கணபதி, நிமல கணபதி, நித்யானந்த கணபதி, நாத கணபதி, நாகேஸ்வர கணபதி, நவ நதிய கணபதி, சித்து கணபதி, ஷ்யாமள கணபதி, சிங்கார கணபதி, சிவசக்தி சந்தான கணபதி, வினோத கணபதி, விஷேட கணபதி, சாத்வீக கணபதி, சதானந்த கணபதி, சுமூக கணபதி, சுத்த ஷ்யாமள கணபதி, சுத்த சிவமய கணபதி, சுந்தர கணபதி, மஹா காவ்ய கணபதி, ஜ்வாலா கணபதி, ஜோதி கணபதி, ஜோதி ஆனந்த கணபதி, சங்கர கணபதி, ஆனந்த கணப்தி, ஆரோக்ய கணபதி, முத்து கணபதி, முக்தி கணபதி, முக்தி யோக கணபதி, இச்சா கணபதி, இமாச்சல கணபதி, இந்திர கணபதி, வித்யா கணபதி, விமல கணபதி, உச்ச கணப்தி, உச்சிஷ்ட கணபதி, உகார கணபதி, ஈசான கணபதி, ஈசானந்த கணபதி, ஊர்மிள கணபதி, யந்திர கணபதி, ஏகானந்த கணபதி, ஐக்கிய கணபதி, ஐஸ்வர்ய கணபதி, ஹோம கணபதி, ஓங்கார கணபதி, ஔஷத கணபதி, கர்ண கணபதி, கந்பக கணபதி, ஞான கணபதி, ஞான சக்தி கணபதி, சதாசிவ கணபதி, சங்கல்ப கணபதி, கன்ன கர்ண கணபதி, டம்ப கணபதி, நாத கணபதி, நவ நதிய கணபதி, தபோநந்த கணபதி, தபசு கணபதி, தர்க்க ஜெய கணபதி, பவித்ர பத்ம கணபதி, மகார கணபதி, யாக கணபதி, யாக சக்தி கணபதி, ரத கணபதி, ராக கணபதி, லலிதா கணபதி, லவண கணபதி, வஜ்ர கணபதி, வசீகர கணபதி, நாத கணபதி, நாதாம்ச கணபதி, யோக கணபதி, யோக மஹா சக்தி கணபதி, ஞான நித்ய கணபதி, கமல கணபதி, ஷ்ராவண கணபதி, சித்த கணபதி, சித்து புத்தி கணபதி, கல்ப கணபதி, வித்தக கணபதி, லக்ஷ்மி கணபதி, சிந்து கணபதி, முக்தி கணபதி, சகஸ்ரார கணபதி, வினோத கணபதி, வில்லங்க நிவாரண கணபதி, அஷ்ட சித்து கணபதி, அஷ்ட ஐஸ்வர்ய கணபதி, அட்ஷய கணபதி, இடா கணபதி, இடா பிங்கள கணபதி, இடா பிங்கள சூட்ஷம கணபதி, ப்ரணவ கணபதி, ப்ரம்ம குண்டலினி கணபதி, விஷ்ணு கணபதி, சிவ கணபதி, ஆதி சக்தி கணபதி, ஆதார கணபதி, ப்ரணயாம சக்தி கணபதி, ப்ரகாச கணபதி, விக்னேஷ்வர கணபதி, வினோத கணபதி, சர்வ ஜெய கணபதி, சர்வ ஜெய விஜய கணபதி.

    மேற்கண்ட 108 கணபதியை வேண்டி 108 கணபதி ஹோமம் மாபெரும் ஹோமகுண்டத்தில் ஷண்மத ஆச்சாரியர்களை கொண்டு விநாயக சதுர்த்தியன்று நடைபெற உள்ளது. இந்த யாகத்தில் அஷ்ட திரவியங்கள், அறுகம்புல், தேன், நெய், விலை உயர்ந்த மூலிகைகள், பிணி தீர்க்கும் திரவியங்கள், பட்டு வஸ்திரங்கள், மோதகங்கள், பல வகையான புஷ்பங்கள், பழங்கள், நவதான்யங்கள், நவ சமித்துக்கள் சேர்க்கப்பட உள்ளன.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் 108 கணபதி ஹோமத்தில் சிரத்தையுடன் பங்கேற்பவர்களுக்கு மஹா கணபதியின் பேரருளால் கர்ம விநைகள் நீங்கி சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப் பேறும் துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள். சகல காரிய அனுகூலமும் உண்டாகும், இடையூறுகள் விலகும், பேரும் புகழும் கிடைக்கும், சகல நோய்களும் நீங்கி, சகல பாக்கியங்களுடன் வாழும் நிலையை பெறலாம். மேலும் பக்தர்களுக்கு பலவகை நர்பலன்கள் கிடைக்கும் என்கிறார் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு :

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், வாலாஜாபேட்டை – 632 513. செல் – 9443330203