செப்டம்பர் 7 – மதுரை சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்
விகாரி வருடம் – ஆவணி 21
07-செப்-2019 சனி
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : நவமி
திதி நேரம் : நவமி இ 2.14
நட்சத்திரம் : கேட்டை கா 10.48
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : கார்த்திகை,ரோகிணி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
Blog
-
September 7 Madurai sundareswarar pattabishegam
-
Pilli Sooniyam Patchi Rajan
கருட பகவானே ஆழ்வார்களில் பெரியாழ்வாராக அவதரித்தார். பாண்டியன் சபையில் பரதத்வ நிர்ணயம் செய்து பொற்கிழியைப் பெற்றபோது, மன்னன் பெரியாழ்வாரைப் பெருமைப்படுத்தி ராஜவீதிகளில் யானை மீதேற்றி பவனிவரச் செய்தான்.
அப்போது தன் பக்தனின் வைபவத்தைக் கண்டு மகிழ திருமால் கருடாரூடனாக வானில் காட்சி கொடுத்தான். ராமாயண காலத்தில் போர்க் களத்தில் ராம-லட்சுமணர்களை அசுரர்கள் நாகபாசத்தால் கட்டிப் போட, அவர்கள் மயங்கி விழுந்த போது கருட பகவான் வந்து தன் சிறகுகளால் வீசி அவர்களை மூர்ச்சையிலிருந்து தெளிய வைத்தார்.
கிருஷ்ணாவதாரத்திலும் சத்ய பாமாவுக்காக பாரிஜாத மரத்தைக் கொண்டு வந்தார். கருடாழ்வார்: தட்சணின் மகளான வினதா என்பவருக்கும், கச்யப முனிவருக்கும் பிறந்தவரே கருடன். அதனாலேயே அவருக்கு விநதேயன் என்ற பெயரும் உண்டு. காஷ்யப முனிவருக்கு காத்ரு, வினதா என்று இரண்டு மனைவிகள். காத்ருவும் ,வினதாவும் சகோதரிகள். ஒருமுறை வானில் பறந்து கொண்டிருந்த உக்கைஷ்ரவா என்ற தேவலோகக் குதிரையைக் கண்டனர்.
குதிரையின் வால் என்ன நிறம் என்பது பற்றி இருவருக்கும் வாக்குவாதம் மூண்டது. வினதா அதை வெள்ளை என்று சொல்ல காத்ரு வெள்ளைக் குதிரைக்கு கருப்பு வால்தான் இருக்க முடியும் என்று பந்தயம் வைத்தாள். யார் பந்தயத்தில் தோற்றுப் போகிறார்களோ அவர்கள் மற்றவரிடம் காலம் முழுவதும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று நிபந்தனை.மறுநாள் அந்த குதிரையின் வால் நிறத்தை மீண்டும் உறுதி செய்து கொள்வது என்று இருவரும் பேசிக்கொண்டனர்.
அன்று இரவே காத்ரு தன் குழந்தைகளான ஆயிரம் பாம்புகளிடம் குதிரையின் வால் போல் தோற்றமளித்து தான் பந்தயத்தில் ஜெயிக்க உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டாள். பாம்புகள் மறுநாள் அக்குதிரையின் வால் போல் காட்சி தந்து வினதாவை ஏமாற்றின. வினதாவும் அதை நிஜமென்று நம்பி காலம் முழுவதற்கும் தன் சகோதரிக்கு கட்டுப்பட்டு இருக்கத் தொடங்கினாள். இந்த வினதாவுக்கு மகனாகப் பிறந்தவனே கருடன்.
தன் தாயின் நிலை கண்டு வருந்திய கருடன் தன் பாம்பு சகோதரர்களிடம் தன் தாய்க்கு விடுதலை வாங்கித் தருமாறு வேண்டிக்கொண்டான். பாற்கடலை கடையும்போது கிடைக்கும் அமுதத்தை தமக்கு கொண்டு வந்து தந்தால் கருடனின் தாயை தங்கள் அன்னையிடம் இருந்து மீட்டுத் தருவதாக பாம்புகள் வாக்களித்தன. பலவகையான போராட்டங்களுக்கு பிறகு மிக பத்திரமாக பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்த அமிர்த கலசத்தை கருடன் தூக்கிச் செல்ல தன தாயின் மேல் அவன் வைத்திருந்த பிரியத்தை எண்ணி மனம் மகிழ்ந்த நாராயணன் அவனை தனது வாகனமாகிக் கொண்டார்.
விஷ்ணுவை தன் மீது அமர்த்திக் கொண்டு வெகு வேகமாக கருடன் பறந்த போது இந்திரன் தன் வஜ்ராயுதத்தை ஏவி அவனைத் தடுக்கப் பார்த்தான். ஆனால் வஜ்ராயுதம் கருடனுக்கு எந்த தீங்கும் இழைக்கவில்லை. கருடனின் சக்தி அறிந்த இந்திரன் அமிர்தத்தை வேறு எவருக்கும் தரக்கூடாது என்று கட்டளை இட்டான். அதற்கு கருடன் "என் தாய் விடுதலை ஆனதும் தாங்களே வந்து அமிர்த கலசத்தை மீட்டுக் கொள்ளுங்கள். பதிலுக்கு பாம்புகள் எனக்கு உணவாகும் வரத்தை நீங்கள் அருள வேண்டும்" என்று கோரிக்கை வைத்தது.
இந்திரனும் கருடனின் சொல்லால் மனம் நெகிழ பாம்புகள் இருக்கும் இடத்தில் அமிர்த கலசத்தை ஒரு புல் தரையின் மீது கருடன் வைத்தான். ஆகம முறைப்படி சுத்த பத்தமாக ஸ்நானம் செய்த பிறகே அமிர்தத்தை பருக வேண்டும். அதற்கு முன்பு தன் தாயை விடுவிக்க வேண்டும் என்று கருடன் சொல்ல வினதாவும் விடுதலை ஆனாள். பாம்புகளும் ஸ்நானம் செய்யச் சென்றன. அந்நேரம் இந்திரன் வந்து அமிர்த கலசத்தை மீண்டும் எடுத்துச் சென்றான். அமிர்த கலசத்தை காணாத பாம்புகள் ஏமாற்றத்தில் திகைத்தன.
அதுமுதல் கருடன் பாம்புகளை உணவாக்கிக்கொள்ள ஆரம்பித்தது. பெருமாள் கருடனை `வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்' என்று வரமளித்து வாகனமாக ஏற்றுக்கொண்டுள்ளார். இவனது வலிமை கண்டு திருமால் கேட்டுக்கொள்ள, வாகனமும் கொடியும் ஆனவன்' என்று அபிதான சிந்தாமணி கருடனைப் பற்றிச் சொல்கிறது. இவர் பெருமாளின் கொடியாகவும் விளங்குகிற காரணத்தால் பெருமாள் கோயில்களில் கொடி மரமானது துவஜ ஸ்தம்பம் என்றும் கருட ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆதிமூலமே என்று கஜேந்திரன் கதறிய போது கருட வாகனத்தில் பறந்து வந்து காத்தவர் பெருமான். ஜோதிடத்தில் கருடன்: ஜோதிடத்தில் பறவைகளுக்கு காரகர் புதபகவானாவார்.
புதனின் அதிதேவதை ஸ்ரீ மஹாவிஷ்னுவாகும். நான் பறவைகளில் பட்சி ராஜனாக கருடனாயிருக்கிறேன் என கீதையில் கூறியுள்ளான் கண்ணன். எனவே கருடாழ்வார் புதனின் அம்சம் பெற்றவர் ஆகும். ஓட்டுனர்களுக்கும் பெரிய வாகனங்களுக்கும் புதனே காரகர் என்கிறது பாரம்பரிய நூல்கள். புதனின் அதிதேவதையான ஸ்ரீ மகாவிஷ்னுவிற்க்கு வாகனம் மற்றும் வாகன ஓட்டுனராகவும் புதன் ஆதிக்கம் பெற்ற கருடபகவான் விளங்கியது குறிப்பிடத்தக்கது. கருடாழ்வார் ஸ்வாதி நக்ஷத்திரத்தில் பிறந்தவர் என்பதால் ராகுவின் தன்மையும் பெற்றிருக்கிறார். ஸ்வாதி நக்ஷத்திரம் சுக்கிரனின் வீடாகிய துலாராசியில் அமைந்திருப்பதால் சுக்கிரனின் அதிதேவதையாகிய ஸ்ரீ மஹாலக்ஷமியின் அம்சமாகவும் விளங்குகிறார். சுக்கிர ஸ்தலமாகிய ஸ்ரீ ரங்கத்தில் பெரிய திருவடியாகி பெரிய கருடனாகவும் அமிர்த கலச கருடனாகவும் அருள்புரிவது குறிப்பிடத்தக்கது.
-
Shakthi Vaindha Mandhiram
தினமும் காலையில் இந்த மந்திரத்தை 27 முதல் 108 முறை வரை ஜெபிப்பதால் உங்களுக்கு உருவாகியிருக்கும் எத்தகைய நேரடி மற்றும் மறைமுக எதிரிகளையும் வெற்றி கொள்ள முடியும்.
எதிரிகளையும் ஒழிக்கும் சக்தி வாய்ந்த மந்திரம்
சத்ரு ஜெய மந்திரம்
ஸுலபஸ் ஸுவ்ரதஸ் ஸித்தஸ் ஸத்ருஜிச்சத்ருதாபாந
ந்யக்ரோதோ தும்பரோ ஸவத்தஸ் சாணுராந்த்ர நிஷூதன
ஜெபிப்பவர்களுக்கு நிச்சயமான பலன் தரும் சக்தி வாய்ந்த சத்ரு ஜெய மந்திரம் இது. தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்ததும் கிழக்குத் திசையை பார்த்தவாறு இந்த மந்திரத்தை 27 முதல் 108 முறை வரை ஜெபிப்பதால் உங்களுக்கு உருவாகியிருக்கும் எத்தகைய நேரடி மற்றும் மறைமுக எதிரிகளையும் வெற்றி கொள்ள முடியும். உங்களுக்கு எதிரான அவர்களின் சதிச் செயல்கள் எடுபடாமல் போகும். மேலும் நமது மனதிற்குள் எழும் பேராசை, அதிக கோபம், மிகுந்த காமம் போன்ற நமக்குள்ளாக இருக்கும் எதிரிகளையும் இந்த மந்திர ஒரு ஜபம் நீக்க, நமக்கு நன்மைகளை உண்டாக்கும்.
-
Thirupathyil Adhar Dharshan cancel
திருப்பதியில் ஆதார் அட்டை மூலம் வழங்கப்பட்ட சர்வ தரிசன டிக்கெட்கள் வழங்கும் திட்டம் நிறுத்தப்படுவதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்வதை தவிர்க்க, ‘சர்வ தரிசனம் டிக்கெட்’ என்ற பெயரில் ஆதார் அட்டை மூலம் நேரம் ஒதுக்கீடு செய்து டிக்கெட் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு மே மாதம் தேவஸ்தானம் தொடங்கியது.
முதலில் 20 ஆயிரம் டிக்கெட்டுகளை தினமும் வழங்கும் திட்டம் தொடங்கியது. இந்த டிக்கெட்கள் திருப்பதி பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம் எதிரில் உள்ள விஷ்ணு நிவாசம், அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டன. திருமலையில் 8 கவுன்ட்டர்கள் அமைத்து டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் இந்த டிக்கெட்டுக்கு பக்தர்களிடம் இருந்து படிப்படியாக ஆதரவு குறைவதாக கூறி டிக்கெட் எண்ணிக்கையை தேவஸ்தானம் குறைத்தது. இருப்பினும், இந்த டிக்கெட்களை பெற மக்கள் போதிய ஆர்வம் காட்டவில்லை எனக்கூறி, திருமலையில் வழங்கப்பட்டு வந்த சர்வ தரிசன டிக்கெட்டுகள் வழங்குவது முதல் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
September 6 Rasi Palan
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – தனம்
ரிஷபம் – மேன்மை
மிதுனம் – பெருமை
கடனம் – நிறைவு
சிம்மம் – செலவு
கன்னி – பயம்
துலாம் – புகழ்
விருச்சிகம் – ஆதாயம்
தனுசு – மகிழ்ச்சி
மகரம் – அமைதி
கும்பம் – லாபம்
மீனம் – உயர்வு
சந்திராஷ்டமம் – பரணி, கார்த்திகை
-
September 6 Indraya Naal
செப்டம்பர் 6 – இன்றைய நாள் எப்படி?
விகாரி வருடம் – ஆவணி 20
06-செப்-2019 வெள்ளி
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : அஷ்டமி
திதி நேரம் : அஷ்டமி இ 1.53
நட்சத்திரம் : அனுஷம் கா 10.30
யோகம் : சித்த-மரண யோகம்
சந்திராஷ்டமம் : பரணி,கார்த்திகை
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம் -
Guru Peyarchi Alangudi
குரு பெயர்ச்சியை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் குரு பரிகார கோயிலில் வரும் அக்டோபர் 24-ஆம் தேதி முதல் லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு குரு பகவான் அக்டோபர் 29-இல் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பிரவேசம் செய்கிறார். இதை முன்னிட்டு அன்றைய தினம் ஆலங்குடியில் குரு பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு குரு பகவானுக்கு லட்சார்ச்சனை விழா அக்டோபர் 24-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி வரை முதல்கட்டமாகவும், குரு பெயர்ச்சிக்குப் பின் அக்டோபர் 31-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7-ஆம் தேதி வரை இரண்டாவது கட்டமாகவும் நடைபெறவுள்ளது.
ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் மற்றும் இதர ராசிக்காரர்களும் லட்சார்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்து கொள்ளலாம். லட்சார்ச்சனையில் பங்கேற்க ரூ.400 செலுத்த வேண்டும். குரு பகவான் உருவம் பொறித்த வெள்ளியால் செய்த 2 கிராம் டாலர் பிரசாதமாக வழங்கப்படும். லட்சார்ச்சனை காலை 9 முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 முதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெறும்.
தபால் மூலம் லட்சார்ச்சனை பிரசாதம் பெற விரும்புவோர் தங்களுடைய பெயர், நட்சத்திரம், ராசி, கோத்திரம், லக்னம் ஆகிய விவரங்களுடன் தொகையை பணவிடை, வரவோலை எடுத்து உதவி ஆணையர், செயல் அலுவலர் என்ற பெயருக்கு கும்பகோணத்தில் மாற்றத்தக்க வகையிலோ அல்லது சிட்டி யூனியன் வங்கி ஆலங்குடி -612801 என்ற கிளையில் மாற்றத்தக்க வகையிலோ எடுத்து அனுப்பலாம்.
-
Vinayakar silaigal Neernilayil Karaippu
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டுள்ளன.
வினாயகர் சதூர்த்தி விழா கடந்த 2 ந் தேதி கொண்டாடப்பட்டது. இந்த சிலைகளை மூன்றாம் நாளான இன்று கடலில் கரைக்கும் நிகழ்சி நடந்தது. திண்டிவனம், மைலம், ஒலக்கூர், கூட்டேரிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வினாயகர் சிலைகளை ஊர் வலமாக எடுத்துவரப்பட்டு மரக்காணம் அருகே கடலில் கரைக்கப்பட்டது.
தாரை, தப்பட்டை முழங்க ஆடல் பாடலுடம் ஊர் வலமாக எடுத்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகளை மரக்காணம் பகுதியில் உள்ள கைப்பாணிகுப்பம், எக்கியர்குப்பம் ஆகிய இடங்களுக்கு எடுத்துசென்றனர். இவற்றை அப்பகுதியில் இருந்த மீனவர் பஞ்சாயத்தார்கள், இளைஞர்கள் பைபர் படகுகளில் எடுத்துசென்று ஆழ்கடலில் கரைத்தனர்.
கோவை கவுண்டம்பாளையம், துடியலூர், கோவில்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது. இதில் டிரம்ஸ், வயலின், கீ போர்டு வாசிக்கும் விநாயகர் சிலைகள் மக்களை பெரிதும் கவர்ந்தன. தொடர்ந்து இப்பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட சிலைகள் துடியலூரை அடுத்து உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் மாநகராட்சி சார்பாக அமைக்கப்பட்ட குட்டையில் கரைக்கப்பட்டன.
மதுரை மாவட்டம் மேலூரில் கோலாகலமாகத் தொடங்கிய விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இந்து முன்னணியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. மேலூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணியின் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டன.
புதுக்கோட்டையில் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் பொதுக்குளத்தில் கரைக்கப்பட்டன. செண்டை வாத்தியம் முழங்க இளைஞர்கள் நடனமாடியபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக விநாயகர் சிலைகள் எடுத்து வரப்பட்டன. விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
-
Mumbayil Thirupathy
மும்பையில் ஏழுமலையான் கோவில் அமைப்பதற்கு மகாராஷ்டிரா மாநில அரசு திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்து இருக்கிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நாடு முழுவதும் ஏழுமலையான் கோவில் கட்டுவதற்காக திட்டமிட்டுள்ளது. இதையொட்டி மும்பையில் நிலம் சேகரிக்கும் போனில் தேவஸ்தானம் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் கேட்டுக் கொண்டதற்கிணங்க மும்பையில் முக்கிய சந்திப்பு கிழக்கு பந்தர் சாலையில் மகாராஷ்டிர மாநில அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.
இதற்கான உத்தரவை மும்பை புறநகர் மாவட்ட கலெக்டர் மிலிண்ட் போரிக்கர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு மும்பையில் ஏழுமலையான் கோவில் அமைப்பதற்காக மகாராஷ்டிர மாநில அரசு 6,975 சதுர அடி பரப்புள்ள 16 சென்ட் இடத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான உத்தரவு ஆணையை மகாராஷ்டிர மாநில முதல்வர் ஸ்ரீ தேவேந்திர பட்னாவிஸ் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் தேவஸ்தான இணை செயல் அலுவலர் பசந்த்குமாரிடம் வழங்கினார்.
இதனை பெற்று கொண்ட தேவஸ்தான இணை செயல் அலுவலர் பசந்தகுமார் இந்த இடத்தில் தேவஸ்தான ஏழுமலையான் கோவில் மற்றும் தகவல் மையம் கட்ட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா மாநில நிதியமைச்சர் சுதீர் முன்ங்தீவார், தேவஸ்தான எஸ்டேட் அதிகாரிகள் விஜயசாரதி, துணை செயலாளர் விஸ்வநாத், உள்ளூர் வளர்ச்சிக்குழு உறுப்பினர் ரங்கநாதன், கீதா கஸ்தூரி ,சமத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.