Blog

  • Thiru Onam Viradham

    திருவோண விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் மனக்குறைகள் அகன்று சந்தோஷ வாழ்வு மலரும். பெண்கள் விரும்பியதை அடைவர். திருமணம் தாமதமாகி வந்தவர்களுக்கு விரைவில் வரன் அமையும். நீண்ட காலம் குழந்தை இல்லாதவர்கள் குறைகள் நீங்கி குழந்தைப்பேறு உண்டாகும். தமிழ் மாதமான ஆவணி, கேரளாவில் 'சிங்க மாதம்' என்று அழைக்கப்படுகிறது. சிங்க மாதத்தின் திருவோண நட்சத்திரத்தில் வளர்பிறையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மகாவிஷ்ணுவிற்கு உகந்த நட்சத்திரம் திருவோணம் ஆகும். மகாவிஷ்ணு மூன்றடி மண் கேட்பதற்காக வாமன அவதாரம் எடுத்தது திருவோணம் நட்சத்திரத்தில்தான் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

    27 நட்சத்திரங்களில் திருவாதிரை, திருவோணம் ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் சிறப்பு வாய்ந்தவையாக கொண்டாடப்படுகின்றன. திருவாதிரை சிவனுக்கு உரியது. திருவோண நட்சத்திரம் பெருமாளுக்குரியது. வாமன அவதாரம் எடுத்தபோது திருமால் திருவோண நட்சத்திரத்தில்தான் அவதரித்தார். மார்க்கண்டேய மகரிஷியின் மகளாக அவதரித்த பூமாதேவியை ஒப்பிலியப்பர் பெண் கேட்டு வந்தது பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தன்றுதான்.

    ஒப்பிலியப்பன் திருமணம் செய்து கொண்டது ஐப்பசி மாத திருவோண நட்சத்திர நாளில்தான்.திருவோணம் விரதம் விரதம் பெருமாளுக்கு உகந்தது. திருவோணத்தன்று பெருமாள் பக்தர்கள் விரதம் இருப்பார்கள். விரதம் இருக்கும் பக்தர்கள் திருவோணத்துக்கு முதல் நாள் இரவு உணவை தவிர்க்க வேண்டும். திருவோண நட்சத்திரமன்று திருவோண விரதம் இருந்தால் சந்திரதோஷம் விலகுவதுடன், சந்தோஷமான வாழ்வு அமையும். திருவோணம் விரதம் இருப்பவர்கள் மாலையில் சந்திர தரிசனம் காண வேண்டும்.

    திருவோண விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச்செழிப்பு ஏற்படும். மனக்குறைகள் அகன்று சந்தோஷ வாழ்வு மலரும். பெண்கள் விரும்பியதை அடைவர். திருமணம் தாமதமாகி வந்தவர்களுக்கு விரைவில் வரன் அமையும். நீண்ட காலம் குழந்தை இல்லாதவர்கள் குறைநீங்கி குழந்தைப்பேறு உண்டாகும். நீங்காத செல்வம் நிலைத்து நிற்கும் என்பது நம்பிக்கை.
     

  • Thozhil Menmai Adaya Yagam

    திரிம்பகேஸ்வரர் கோயில், திரிம்பாக் என்னும் நகரில் உள்ள தொன்மையான கோயில் ஆகும். இது மகாராஷ்டிராவில் நாசிக் மாவட்டத்தில் நாசிக் நகரில் இருந்து 28 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சிவனுக்காக அமைக்கப்பட்ட இக்கோயில் இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும். இங்கு மக்கள் குறைவற்ற செல்வத்துடனும், சிறப்பான வாழ்வும் வாழ சிறப்பு வேள்விகள் நடத்தி உள்ளார் வாசியோகி ஓம் பரமானந்த பாபா.

    இந்தியாவின் மிக நீளமான ஆறான கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் அமைந்துள்ளது திரிம்பகேஸ்வரர் கோயில். இங்குள்ள லிங்கம் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய கடவுளரின் முகங்களுடன் அமைந்திருப்பது ஒரு தனித்துவமான அம்சமாகும். பிற ஜோதிர்லிங்கங்கள் அனைத்தும் சிவனையே முக்கிய கடவுளாகக் கொண்டு அமைந்துள்ளன.

    சிறப்பு  மிக்க இத்தலத்தில் மும்மூர்த்திகள் உண்டாக்கிய குளத்தோடு கவுதம முனிவர் ஏற்படுத்திய கோதாவரி நதியும் திரியம்பகேஸ்வரம் திருக்கோவிலின் புனிதத் தீர்த்தம் ஆயிற்று. கவுதமர் செய்த கோடியர்ச்சனைக்கும், தவத்திற்கும் கருணை கூர்ந்து ஒரு நதியையே புதியதாகப் படைத்து அருளி கவுதம முனிவருக்கு அளவற்ற ஆனந்தம் அளித்த பராபரனுக்கு கவுதமேஸ்வரர் என்று திருப்பெயர் உண்டாயிற்று.

    உலகம் தோன்றிய காலத்திலிருந்து கோடிக்கணக்கான ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்புரியும் அருமை பெருமை மிக்க திரியம்பகம் திருத்தலத்தை சென்று தரிசனம் செய்து வழிபடுகின்றவர்களுக்கு அவர்கள் புரியும் தொழில் சிறப்புடன் விளங்குகின்றது. வாழ்க்கையில் தண்ணீர் பஞ்சம் உண்டாவது இல்லை. வாழ்வில் அளவில்லாத ஆனந்தம் உண்டாகும். இத்தகைய சிறப்பு பெற்ற இத்தலத்தில் மக்களின் வாழ்வில் அளவில்லாத ஆனந்தம் உண்டாக பல யாகங்களை சித்தர்கள் அருளாசியுடன் செய்துள்ளார் வாசியோகி ஓம் பரமானந்த பாபா.

    இத்தலத்திற்கு நேரில் செல்ல முடியாதவர்களும் பயன்பெற வேண்டும் என்பதற்காக திரிம்பகேஸ்வரர் கோயிலில் செய்யப்பட்ட  யாகங்கள் அனைத்தும் மக்களுக்கு முழுமையாக கிடைக்கும் வகையில் கோயம்புத்தூரில் C21 / புது எண் 42, 43 சர்க்கரை செட்டியார் நகர், இஎஸ்ஐ (எதிரில்), உப்பிலிபாளையம் (போ) உள்ளது ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சித்தர் பீடத்திலும் நடத்தி உள்ளார்.

    இதனால் இங்கு வருபவர்களுக்கு தொழில் சிறப்படைகிறது. வாழ்வில் ஆனந்தம் கிடைக்கிறது. மேலும் திருமணத்தடை, பொருளாதாரம் முன்னேற்றம் இல்லாத நிலை, குழந்தையின்மை பிரச்னை, குடும்பத்தில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளும் நீங்கி வாழ்வில் உயர்வு கிடைக்கிறது.

    யாகங்களின் பலன்கள் முழுமையாக மக்களுக்கு கிடைக்கிறது. அனைத்து செல்வங்களும் கிடைக்கிறது. இங்கு மக்கள் நலன் வேண்டியும், சித்தர்கள் அருள் பரிபூரணமாக மக்களுக்கு கிடைக்க வேண்டியும் பிரதி அமாவாசை மேரு பூஜை, பௌர்ணமி அன்று ராஜராஜேஸ்வரி பூஜை நடக்கிறது. மேலும் ஆண்கள், பெண்களுக்கு வாசி யோக பயிற்சிகள், ஆழ்நிலை தியானங்கள் கற்றுத்தரப்படுகிறது. ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள். சித்தர்கள் வாக்கின் பிரகாரம் பரிகாரங்கள் செய்து வைக்கிறார். 

    சுவாமிகளை சந்திக்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.

    தொடர்புக்கு: 63747 72550, 74490 12379.

  • Thiru Onam Pandigai kondattam

    கேரளாவில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பெறும் இவ்வோணம் பண்டிகை, ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் ஹஸ்த நட்சத்திரத்திலிருந்து திருவோண நட்சத்திரம் வரை பத்து நாள்களும் நடைபெறுகிறது. கேரளாவில் கொண்டாடப் பெறும் திருவோணம் பண்டிகை மகாபலி சக்கரவர்தியின் நினைவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

    கேரளாவில் உள்ள ஒவ்வொரு வீட்டின் வாயிற் படியிலும் மகாபலி மன்னனை வரவேற்கும் முகமாக பல வண்ண மலர்களால் ஆன கோலங்களைப் பெண்கள் வரைகின்றனர். கோலத்தின் நடுவில் குத்துவிளக்கேற்றி வைத்து, அதனைச் சுற்றிப் பல வகையான காய், கனிகளையும் அழகுற அடுக்கி வைக்கின்றனர். 

    இக்கோலத்தை "அத்தப்பூக் கோலம்" என்று அழைக்கின்றனர். அன்று மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து பலவிதமான காய், கனிகளையும் உணவு வகைகளையும் விருந்தினர்களுக்கு வழங்கித் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். திருமால் உறையும் திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

     விருந்துக்கு பிறகு ஆண்களும், பெண்களும் இணைந்து பல்வேறு நடனங்களை ஆடி மகிழ்வார்கள். ஓணப்பட்டுடுத்திய பெண்கள் அத்தப்பூ கோலத்தில் மீது குத்துவிளக்கு ஏற்றி வைத்து அதனை சுற்றி நடனமாடுவார்கள். மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடி உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வர். ஆண்கள் புலிக்களி நடனம், களரி, கயிறு இழுத்தல், கடுவா ஆட்டம், எறி பந்து, கிளியாந்தட்டு, ஓண ஊஞ்சல் என நடக்கும் விளையாட்டுகள் மனதிற்கும், உடலுக்கும் உரம் சேர்க்கும் வகையில் இருக்கும்.
     

  • September 10 Rasi Palangal

    செப்டம்பர் 10… இன்று இந்த ராசிக்கு லாபம் ….. 
    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – பெருமை 
    ரிஷபம் – போட்டி 
    மிதுனம் – உழைப்பு 
    கடனம் – முயற்சி
    சிம்மம் – லாபம் 
    கன்னி –  ஆக்கம் 
    துலாம் –  பாராட்டு 
    விருச்சிகம் – பேராசை 
    தனுசு –     அன்பு
    மகரம் –   சினம்  
    கும்பம் – புகழ் 
    மீனம் – வெற்றி 
    சந்திராஷ்டமம்    – திருவாதிரை, புனர்பூசம்
     

  • September 10 Vaishnava egadasi

    செப்டம்பர் 10 – வைஷ்ணவ ஏகாதரி
    விகாரி வருடம் – ஆவணி 24
    விருதுநகர் சிவன் தேர்
    10-செப்-2019 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    துவாதசி          
    திதி நேரம்    :    துவாதசி    அ.கா    4.42
    நட்சத்திரம்    :    உத்திராடம்    ம    2.20
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    திருவாதிரை,புனர்பூசம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • angara graga preetha homam

    வேலூர் மாவாட்டம்  வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், அருளானைப்படி வருகிற 10.09.2019 செவ்வாய்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை உலக மக்கள் நலன் கருதி அங்காரக ப்ரீதி ஹோமம் எனும் செவ்வாய் கிரக சாந்தி ஹோமமும் காலசக்ர பூஜையும் நடைபெற உள்ளது.

    அங்காரக கிரக சாந்தி ஹோமம்:
    ஆரோக்கியத்தையும், அதிர்ஷ்டத்தையும், மகிழ்ச்சி போன்ற வசதிகளையும் மேம்படுத்தி புதிய வாய்ப்புகள் பெற்று உடன்பிறந்தோருடன் நல்லுறவு வளர்த்துக் கொண்டு தெளிவாக முடிவெடுக்க இயலும் இந்த அமைப்பை நமக்கு ஏற்ப்படுத்தி தருவது அங்காரகன் என்றழைக்கப்படும் செவ்வாய் கிரகமாகும். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் உச்சத்தில் இருந்தால், தைரியம், உடல் வலிமை போன்றவற்றை அளிப்பார். நீச்சமடைந்திருந்தாலும், சாதகமற்ற வீட்டில் இருந்தாலும் கடன்கள், நோய்கள், உறவுச் சிக்கல்கள் போன்றவற்றை ஏற்படுத்துவார்.

    செவ்வாய் மனித உணர்ச்சிகளைக் குறிக்கும் கிரகம் ஆகும். நமது மனோபலங்களை கட்டுப்படுத்தும் கிரகம் செவ்வாய் ஆகும். ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக இல்லையெனில், பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. செவ்வாய் ஹோமம், இந்த தோஷங்களை நீக்கி, வாழ்வில் முன்னேறுவதற்கான வாய்ப்பை அளிக்கக் கூடியது.

    அங்காரக ஹோமத்தின் சிறப்பம்சங்கள் :
    வலுவாக இருக்கும் செவ்வாய், தனிப்பட்ட ஆற்றலையும், பதட்டமான சூழ்நிலையை சிறப்பாகக் கையாளும் தைரியத்தையும் அளிக்கிறார். நிதிநிலையை மேம்படுத்துகிறார். இந்த ஹோமம் செய்வதன் மூலம் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும், உணர்ச்சிகள் கட்டுப்பாட்டில் இருக்கும், பண விஷயங்களை அமைதியாக கையாளும் திறன் ஏற்படும். இந்த கிரகத்தை சாந்தப்படுத்தும் அங்காரக கிரக சாந்தி ஹோமத்தில் பங்கு கொண்டு, செவ்வாய் கிரகத்தின் அனுக்கிரகத்தைப் பெற்று, அதனால் விளையும் தெய்வீக ஆற்றல்களை, உங்கள் வாழ்க்கை நலனுக்குப் பயன் படுத்திக் கொள்ளுங்கள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தன்.

    தொடர்புக்கு :
    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.
    தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203

  • Perumal Oonjal Urchavam

    காரைக்காலம்மையார் கோயில் குளக்கரையில் நடைபெற்ற திருமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்துள்ளனர். 

     ஸ்ரீ பகவான் பக்த ஜன சபா மற்றும் நாட்டியாலயா அகாடமி இணைந்து ஆண்டுதோறும் திருமலா திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஊஞ்சல் உற்சவத்தை காரைக்காலில் நடத்தி வருகிறது.  இந்த ஆண்டு  ஸ்ரீதேவி ,பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் உற்சவம் சந்திர புஷ்கரணி என்றழைக்கப்படும்  காரைக்காலம்மையார் கோயில் குளக்கரையில் இன்று மாலை நடைபெற்றது . 

    முன்னதாக சுப்ரபாத சேவை உடன் நிகழ்ச்சி தொடங்கியது.  தொடர்ந்து திருமஞ்சன சேவை தோமாலை சேவை உள்ளிட்டவை நடைபெற்றன. மாலை 5 மணிக்கு நாதஸ்வர கச்சேரி மற்றும் விஷ்ணு சகஸ்ரநாமம் ,வேத பாராயணம் நடைபெற்றது.  இதைத்தொடர்ந்து மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஸ்ரீ வெங்கடேச பெருமாளின் ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.  

    இதில் காரைக்கால் மட்டுமின்றி திருநள்ளாறு, கோட்டுச்சேரி ,அம்பகரத்தூர், திருப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த  ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளக்கரையை சுற்றிலும் நீண்ட வரிசையில் நின்று பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர் . பரதநாட்டிய மாணவிகளின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது.  இறுதியாக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டு திருப்பதியிலிருந்து வரவழைக்கப்பட்ட லட்டுகள் பக்தர்களுக்கு  பிரசாதமாக வழங்கப்பட்டது.

  • Vinayakar silai oorvalam

    கடந்த இரண்டாம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி தினத்தை அடுத்து ஏழு நாட்கள் கழித்து விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. சென்னையில் வைக்கப்பட்ட சிலைகள் திருவொற்றியூர் எண்ணூர் காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடல்பகுதியில் விநாயகர் சிலைகள்  கரைக்கப்பட்டன. 

    7 நாட்கள் வழிபட்ட விநாயகரை மேளதாளங்களுடன் ஆடல் பாடல்களுடன் வாகனங்களில் வைத்து ஊர்வலமாக அழைத்துவந்து கடலில் கரைத்தனர் புதுவண்ணாரப்பேட்டை தண்டையார்பேட்டை ராயபுரம் புளியந்தோப்பு பூக்கடை உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 256 பிள்ளையார் சிலைகளை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே ராட்சத கிரேன் மூலம் கொண்டு சென்று கரைத்தனர். 

    இதேபோன்று மணலி மாதவரம் பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை எண்ணூர் ராமகிருஷ்ணா கடல் பகுதியிலும் திருவற்றியூர் பாப்புலர் எடைமேடை அருகிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த படகுகளில் கொண்டுசென்று நடுக்கடலில் கரைத்தனர் கடைசி நாளான இன்று எண்ணூர் திருவொற்றியூர் காசிமேடு மூன்று இடங்களிலும் 356 சிலைகள் கரைக்கப்பட்டன. 
     

  • September 9 Rasi palangal

    செப்டம்பர் 9… 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் ….. 
    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – நம்பிக்கை 
    ரிஷபம் – உதவி 
    மிதுனம் – கவனம் 
    கடனம் – நட்பு
    சிம்மம் – தனம் 
    கன்னி –  வெற்றி
    துலாம் –  மேன்மை  
    விருச்சிகம் – பாராட்டு 
    தனுசு –     ஆதரவு
    மகரம் –   லாபம் 
    கும்பம் – ஊக்கம் 
    மீனம் – நன்மை 
    சந்திராஷ்டமம்    – மிருகசீரிடம், திருவாதிரை
     

  • September 9 Smartha Egadasi

    செப்டம்பர் 9 – ஸ்மார்த்த ஏகாதசி
    விகாரி வருடம் – ஆவணி 23
    09-செப்-2019 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    ஏகாதசி          
    திதி நேரம்    :    ஏகாதசி    இ    3.24
    நட்சத்திரம்    :    பூராடம்    கா    10.16
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    மிருகசீரிடம்,திருவாதிரை
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்