செப்டம்பர் 9 – ஸ்மார்த்த ஏகாதசி
விகாரி வருடம் – ஆவணி 23
09-செப்-2019 திங்கள்
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : ஏகாதசி
திதி நேரம் : ஏகாதசி இ 3.24
நட்சத்திரம் : பூராடம் கா 10.16
யோகம் : சித்த-மரண யோகம்
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்,திருவாதிரை
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
Blog
-
September 9 Smartha Egadasi
-
Ungal Vetil Prachinaigal Neenga
அருட்திரு இராமலிங்க அடிகளார் தீபம் இல்லாத வீட்டில் இரவில் கூட தூங்கக்கூடாது என அருளியுள்ளார். வீட்டில் விடி விளக்கு எரியச்செய்து சுத்தமான நறுமணம் கமழும் பத்தியை எரிய விட்டபின்பே தூங்கச் செல்லவேண்டும்.
இல்லாவிட்டால் ஜேஷ்டாதேவி எனப்படும் மூதேவியின் தாக்குதல் இருக்கும். சில நிறுவனங்கள், கடைகள், வீடுகள் இவைகளில் மதியம் 12 மணிக்கு எல்லா விளக்குகளை ஏற்றிய பின்பும் கூட இருளடைந்திருக்கும். அங்கேல்லாம் மூதேவி வாசம் செய்கிறாள் என அர்த்தம்.
துர்வாடை, அழுக்குத்துணிகள், துன்பம், புலம்பல், அலங்கோலமாக ஆடுதல், எதிர்மறையான எண்ணங்கள் அடிக்கடி கொட்டாவி விடுதல், தீராத மனக்கஷ்டம், எப்போதும் அழுக்கு ஆடைகளை அணிதல், இவை அனைத்தும் மூதேவியின் அடையாளங்களாகும். இவற்றில் ஒன்று இருந்தாலே வரிசையாக எல்லாமே நம்மை வந்தடைந்துவிடும்.
மூதேவி வராமலிருக்க நாம் நமது வீட்டில்/அலுவலகத்தில்/கடைகளில் வைத்திருக்க வேண்டியவை :
தீபம், தூபம், உப்பு, மஞ்சள், கண்ணாடி, தேங்காய், பால், வெண்ணெய், மாவிலை, கோமியம் போன்றவற்றை வைக்க வேண்டும். -
Moolanadhar Koil Kumbabishegam
சிதம்பரம் அருகே சம்மந்தம் கிராமத்தில் உமையபார்வதி சமேத ஸ்ரீ மூலநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சிதம்பரம் அருகே உள்ள சம்மந்தம் கிராமத்தில் ஏராளமான பொருட்செலவில் ஸ்ரீ உமைய பார்வதி சமேத ஸ்ரீ மூலநாதர் கோயில் கட்டப்பட்டது. இதில் ஸ்ரீ உமையபார்வதி சமேத ஸ்ரீ மூலநாதர், ஸ்ரீ அகஸ்தியர் முதலான பதினெட்டு சித்தர்கள் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் ஆலயங்கள் எழுந்தருளியுள்ளது.
இக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடந்தது. இதையொட்டி கடந்த 5 ந் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடந்தது. தினமும் பல்வேறு பூஜைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 8 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
இதற்காக யாகசாலையில் இருந்து மேள வாத்தியங்கள் முழங்க கடம் ஊர்வலமாக புறப்பட்டு சென்றது. பின்னர் விமானத்தில் புனித கலச நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
-
Kulasekara pattinam Dasara
உலகப்பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா செப்டம்பர் -29 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் வரும் அக்டோபர் 8 அன்று நடைபெறவுள்ளது.
திருச்செந்தூர் அருகிலுள்ள குலசேகரன்பட்டிணம் ஞானமூர்த்தீசுவரர் சமேத முத்தாரம்மன் கோவிலில் உலகப்புகழ் பெற்ற தசரா திருவிழா ஆண்டுதோறும் கோலாகலாமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தசரா திருவிழாவிற்கு புகழ்பெற்றழ்பெற்ற கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் கோலாகமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி தினத்தை முன்னிட்டு கொண்டாடப்படும் தசரா திருவிழா வரும் செப்டம்பர் -29 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் வரும் அக்டோபர் 8 அன்று நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருச்செந்தூர் அடுத்துள்ள குலசேகரன்பட்டினத்தில் வைத்து திருச்செந்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பக்தர்கள் , தசரா குழு நிர்வாகிகள் கோவில் செயல் அலுவலர் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருச்செந்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பரத் கூறியதாவது, தசரா திருவிழாவில் சுமார் 15 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் குழந்தைகளுக்கு அவர்களின் பெயர் மற்றும் முகவரி கொண்ட அடையாள அட்டை காவல்துறை சார்பில் வழங்கப்படும்.இதன்மூலம் காணமல் போன குழந்தைகளை அடையாளம் காண்பது எளிதாகும் என்றார்.
வாகனங்கள் வந்து செல்ல ஒருவழிபாதை ஏற்படுத்தப்பட உள்ளதாகவும், முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமரா மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 3 புறக்காவல் நிலையம் அமைக்கபடுவதோடு காவல் உதவி மையம் மக்கள் கூடும் இடங்களில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் வேடம் அணியும் பக்தர்கள் இரும்பு போன்ற உலோகங்களினாலான ஆயுதங்கள் எடுத்து வர அனுமதியில்லை மற்றும் சாதி மற்றும் கட்சி கொடிகள் கொண்டு வரவும் தடை விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
-
Jeshtadeviku Ugandha naal
முதல் தேவியாகிய ஞானத்தையும், முக்தியையும் தரவல்ல ஜேஷ்டா தேவிக்கு நாளை மிகவும் உகந்த நாள். இந்த நாளில் லட்சுமி தேவியை வணங்கி நலம் பெறுங்கள். அருகில் உள்ள மகாலட்சுமி கோயில்களுக்கு சென்று வழிபடுங்கள். அல்லது உங்கள் வீட்டிலேயே லட்சுமி தேவியை வணங்கினால் அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்று வாசியோகி ஓம் பரமானந்த பாபா தெரிவித்துள்ளார்.
ஜேஷ்டா என்றால் சேட்டை என்று பொருள். தேவர்களுக்காக பார்க்கடல் கடையும் சமயத்தில் முதல் முதலில் வெளிவந்ததால் மூத்ததேவி அல்லது முதல் தேவி என்று அழைக்கப்படுகிறாள். ஆதிகாலத்தில் பக்தர்களால் துதிக்கப்பட்டவர்கள் 2 பேர். ஒன்று கொற்றவை என்று அழைக்கப்படும் கருணையின் வடிவான காளி தேவி. மற்றொருவள் தத்திரத்தை விளக்கவல்ல, வெற்றிகளை வாரி வழங்கவல்ல, ஞானத்தையும் முக்தியையும் தரவல்ல தவ்வை என்று அழைக்கப்பட்ட ஜேஷ்டாதேவி.
கால சக்கரத்தின்மேல் அமர்ந்து மக்களின் கருமவினைகளை தீர்த்து தரவல்ல தசமகா வித்தையில் 7வது தேவியாய் வீற்றிருக்கக்கூடிய புகை வடிவமான அம்பிகையே தூமாவதி. ஒவ்வொரு வீட்டிலும் இறை வழிபாட்டின்போது திருவிளக்கு ஏற்றியபிறகு தூபதீபம் காட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளோம். அந்த புகை ஒவ்வொரு வீட்டிலுல்ல தத்துரங்களையும் பிரச்சனைகளையும் போக்கித்தருகிறாள்.
அம்பாளின் திருக்கோலம் தேரில் வலது காலை மடக்கி இடது காலை சக்கரத்தின்மேல் வைத்து 4 திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். முதல் கரத்தில் துடப்பத்தையும் மற்றொரு கரத்தில் நெருப்பில் இருந்து வெளி வரக்கூடிய புகையையும் மூன்றாவது கரத்தில் அபயம் மற்றும் நான்காம் கரத்தில் அட்சய பாத்திரம் வைத்துக்கொண்டு அருள் பாலிக்கிறாள். நாளை ஜேஷ்டாதேவிக்கு உகந்த நாள். அருகில் உள்ள அம்மன் கோயில்களில் என்று வழிபடுங்கள். அல்லது உங்கள் வீடுகளில் மகாலட்சுமி படத்தை வைத்து வழிபட்டால் அனைத்து செல்வங்களும் கிட்டும். இன்றும் பழமைவாய்ந்த சிவன் கோயில்களில் அம்மன் சன்னதிக்கு பின்புறம் ஜேஷ்டா தேவி அமர்ந்த நிலையில் அருள்பாலிப்பதை காணலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
லட்சுமியின் அருள் மக்களுக்கு கிடைக்க முப்பெரும் தேவிகளுக்கும் சித்தர்கள் அருளாசியின் படி யாகங்கள் செய்தவர்தான் வாசியோகி ஓம் பரமானந்த பாபா. இந்த யாகங்களின் பலன்கள் மக்களுக்கு கிடைக்க கோயம்புத்தூரில் C21 / புது எண் 42, 43 சர்க்கரை செட்டியார் நகர், இஎஸ்ஐ (எதிரில்), உப்பிலிபாளையம் (போ) உள்ளது ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சித்தர் பீடத்திலும் இதுபோன்ற வேள்விகளை நடத்தி உள்ளார்.
இங்கு வருபவர்களுக்கு கடன்கள் நீங்குகிறது. திருமணத் தடை, வேலை வாய்ப்பில் தடை, தொழில் முன்னேற்றம் இல்லாத நிலை, பொருளாதாரம் முன்னேற்றம் இல்லாத நிலை என அனைத்தும் நீங்கி வாழ்வில் உயர்வு கிடைக்கிறது. முக்கியமாக குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கிறது. யாகங்களின் பலன்கள் முழுமையாக மக்களுக்கு கிடைக்கிறது. அனைத்து செல்வங்களும் கிட்டுகிறது.
இங்கு மக்கள் நலன் வேண்டியும், சித்தர்கள் அருள் பரிபூரணமாக மக்களுக்கு கிடைக்க வேண்டியும் பிரதி அமாவாசை மேரு பூஜை, பௌர்ணமி அன்று ராஜராஜேஸ்வரி பூஜை நடக்கிறது. மேலும் ஆண்கள், பெண்களுக்கு வாசி யோக பயிற்சிகள், ஆழ்நிலை தியானங்கள் கற்றுத்தரப்படுகிறது. ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள். சித்தர்கள் வாக்கின் பிரகாரம் பரிகாரங்கள் செய்து வைக்கிறார்.
சுவாமிகளை சந்திக்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.
தொடர்புக்கு: 63747 72550, 74490 12379.
-
September 8 – subamugurthanaal
செப்டம்பர் 8 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
விகாரி வருடம் – ஆவணி 22
subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
எழுத்தறிவு தினம், தேவமாதா பிறந்த நாள்
08-செப்-2019 ஞாயிறு
வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 7.30 – 9.00)
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : தசமி
திதி நேரம் : தசமி இ 2.34
நட்சத்திரம் : மூலம் கா 11.29
யோகம் : அமிர்த-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : ரோகிணி,மிருகசீரிடம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
-
September 8 Rasi Palan
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – நன்மை
ரிஷபம் – போட்டி
மிதுனம் – ஆக்கம்
கடனம் – பேராசை
சிம்மம் – பாராட்டு
கன்னி – மகிழ்ச்சி
துலாம் – ஊக்கம்
விருச்சிகம் – புகழ்
தனுசு – நம்பிக்கை
மகரம் – நட்பு
கும்பம் – பாசம்
மீனம் – அமைதி
சந்திராஷ்டமம் – ரோகிணி, மிருகசீரிடம்
-
Gayathri Mandiram vazhi muraigal
வேதத்தினுடைய சாரம் காயத்ரியில் அடங்கியிருக்கிறது. மானுட வாழ்க்கையின் இலட்சியத்தை அது விளக்குகிறது. காயத்ரி மந்திரம் பிரார்த்தனையாகவும், தியான சுலோகமாகவும், அமைந்திருக்கிறது. பரபிரம்மத்தின் அம்சங்களாகிய பல தெய்வங்களுக்கு பல காயத்ரி மந்திரங்கள் அமைந்திருக்கின்றன. அவைகளை தேவி காயத்ரி, ருத்ர காயத்ரி, விஷ்ணு காயத்ரி, சுப்ரமணிய காயத்ரி, கணேச காயத்ரி என பாகுபடுத்தலாம்.
இத்தனை வித காயத்ரிகளுள் நாடு முழுவதும் பல்லாண்டுகளாகப் பொதுவாக இருந்து வருகிற காயத்ரி ஒன்றேயாம். இது பிரம்ம காயத்ரி அல்லது சூரிய காயத்ரி என்று அழைக்கப்படுகிறது.
காயத்ரி மந்திரத்தை சொல்லும் வழிமுறைகள்….
* காலை 4 மணிக்கு எழுந்து நாலரை மணிக்குள் தயாராகுங்கள்.
* கிழக்கு முகமாக அமருங்கள்.
* ஞான முத்திரை பரிந்துரைக்கப்படுகின்றது.
* மந்திரத்தினை பொறுமையாய் 108 முறை சொல்லுங்கள்…காயத்ரியை வழிபடுபவன், காயத்ரி மந்திரத்தைச் சரியாக அறிந்து உபயோகப்படுத்துகிறவர்கள் எல்லோரும் துவிஜர்கள் ஆகின்றனர். துவிஜன் என்றால் இரு பிறப்பாளன். தாயின் வயிற்றிலிருந்து பிறந்து வருவது ஒரு பிறவி. தன்னுடைய வாழ்க்கையை மேலான வாழ்க்கையாகத்திருத்தி அமைக்க ஆரம்பிக்கும் பொழுது மனிதன் ஆன்மீகத்துறையில் இன்னொரு பிறப்பு எடுத்தவன் ஆகிறான். ஆகையினால், அவன் துவிஜன்- இரு பிறப்பாளன் என்று சொல்லப்படுகிறான். அதற்குத் தூண்டுதலாக வந்தமைந்ததிருப்பது காயத்ரி மந்திரம்.
-
Kerala Onam Pandigai
அசுரர்களிலேயே மக்கள் மிகவும் நேசிக்கக்கூடிய, வளமாக, திறமையாக ஆட்சி செய்து வந்த மகாபலி சக்கரவர்த்தி, ஒவ்வொரு ஆண்டும் மக்களை வந்து பார்த்து வளமோடு, செழிப்பாக வாழ்கிறார்களா என பார்த்து செல்வதாக கொண்டாடப்பட்டு வரும் நிகழ்வு தான் ஓணம் பண்டிகை.
மலையாள சிங்கம் மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்திலிருந்து திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் வரை கோலாகலமாக கொண்டாடடப்படும் பண்டிகை தான் ஓணம் பண்டிகை. கடைசி நாளான திருவோணம் நட்சத்திரத்தின் போது மகாபலி மக்களை காண வருவதாக கருதப்படுகின்றது.
கேரளாவின் பாரம்பரிய திருவிழாக்களில் முக்கியமான திருவிழா ஓணம். மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணம் பண்டிகையைாகவும், கேரள புத்தாண்டாகவும் அம்மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது.
பத்து நாட்கள் கொண்டாடப்படும் இந்த ஓணம் திருவிழா கேரளாவில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. கொச்சியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய உடையணிந்த பெண்கள், 10 வகையான பூக்களைக் கொண்டு பிரமாண்ட அத்திப்பூ கோலமிட்டும் கை கொட்டியும் நடனமாடி மகிழ்ந்தனர்.
ஓணத்தின் மற்றொரு அம்சமாக விளங்கும் களி ஆட்டத்தில் பல்வேறு கடவுளர்களின் வேடம் அணிந்த கலைஞர்கள் புலிக்களி, சுவடுக்களி நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், மகாபலி மன்னனை வரவேற்று பாடும் கைகொட்டுகளி நடனத்தின் பெண்கள் இணைந்து ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அத்துடன் பாரம்பரிய இசை நடனக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்துள்ளன.
-
September 7 Rasi Palan
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – பாராட்டு
ரிஷபம் – நன்மை
மிதுனம் – புகழ்
கடனம் – ஆரோக்யம்
சிம்மம் – முயற்சி
கன்னி – மகிழ்ச்சி
துலாம் – உழைப்பு
விருச்சிகம் – பெருமை
தனுசு – ஆக்கம்
மகரம் – லாபம்
கும்பம் – செலவு
மீனம் – நற்செயல்
சந்திராஷ்டமம் – கார்த்திகை,ரோகிணி