செப்டம்பர் 12 – சுபமுகூர்த்த நாள்
விகாரி வருடம் – ஆவணி 26
subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
12-செப்-2019 வியாழன்
வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
நல்ல நேரம் : 10.30 – 12.00
ராகு : 1.30 – 3.00
குளிகை : 9.00 – 10.30
எமகண்டம் : 6.00 – 7.30
திதி : சதுர்த்தசி
திதி நேரம் : திரையோதசி கா 6.24
நட்சத்திரம் : அவிட்டம் மா 6.44
யோகம் : சித்த-மரண யோகம்
சந்திராஷ்டமம் : பூசம், ஆயில்யம்
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
Blog
-
September 12 subamugurthanaal
-
pradhosha vagaigal
சிவ வழிபாட்டில் சோமவாரம் வழிபாடு மிக விசேஷம். அதுவும் அன்று பிரதோஷமாக இருந்தால் ,சிவன் கோவிலில் வழிபாடு செய்யும் போது கோடி புண்ணியத்தை பெறுவதற்கு சமம். ஆனால் பிரதோஷத்தில் 20 வகை இருக்கிறது என்பது பலரும் அறியாத செய்தி. 20 வகை பிரதோஷம் மற்றும் அதன் பலன்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
தினசரி பிரதோஷம் :
தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமே பிரதோஷ காலமாகும். ஐந்து வருடங்கள் முறையாகச் நித்தியப்பிரதோஷத்தை செய்வர்களுக்கு முக்தி நிச்சயம் என்கிறது நமது சாஸ்திரம்.
பட்சப் பிரதோஷம் :
அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத் திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு செய்வது உத்தமம் ஆகும்.
மாதப் பிரதோஷம் :
பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் பாணலிங்க வழிபாடு செய்வது உத்தம பலனைத் தரும்.
நட்சத்திரப் பிரதோஷம் :
பிரதோஷ திதியாகிய ‘திரயோதசி திதி’யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்
பூரண பிரதோஷம் :
திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது ‘சுயம்பு லிங்கத்தை’த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும்
திவ்யப் பிரதோஷம் :
பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது ‘திவ்யப் பிரதோஷம்’ ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.
தீபப் பிரதோஷம் :
பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது,மற்றும் ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும் என்பது நம்பிக்கை.
அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :
ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் ,திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவானாம்.
மகா பிரதோஷம் :
ஈசன் விஷம் உண்ட நாளான சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் ‘மகா பிரதோஷம்’ஆகும். இந்த மகா பிரதோஷ தினத்தில் , எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும்,’மகா பிரதோஷம்’எனப்படும்.
உத்தம மகா பிரதோஷம் :
சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.
ஏகாட்சர பிரதோஷம் :
வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுவதும் பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்குவதும் பல விதமான நன்மைகளைத் தரும்.
அர்த்தநாரி பிரதோஷம் :
வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அன்று சிவாலயம் சென்று வழிபட, தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.
திரிகரண பிரதோஷம் :
வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
பிரம்மப் பிரதோஷம் :
ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். முன்ஜென்மப் பாவம் மற்றும் தோஷங்களை நீக்க வல்லது இந்த பிரதோஷ வழிபாடு.
அட்சரப் பிரதோஷம் :
வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகளின் அகந்தையை நீக்கி ஈசனின் அருள் கிடைக்க செய்த பிரதோஷம் இது.
கந்தப் பிரதோஷம் :
சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்டதால், இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் பெறலாம்.
சட்ஜ பிரபா பிரதோஷம் :
ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம் என்கிறார்கள் சான்றோர்கள்.
அஷ்ட திக் பிரதோஷம் :
ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.
நவக்கிரகப் பிரதோஷம் :
மிகவும் அரிதாக ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.
துத்தப் பிரதோஷம் :
அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது தான் துத்தப் பிரதோஷம். அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.
ஓம் நம சிவாய…..
-
Pradhosha Kalangalil valam varuvadhu eppadi
பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள்.ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சவுகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது.
பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமைவிலகும்,நோய்கள் நீங்கும், சகலகாரியங்களில் வெற்றிகிடைக்கும், சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடியது பிரதோஷவிரதம்.
சிவாலயங்களை பிரதோஷ காலத்தில் பின்வருமாறுதான் வலம் வர வேண்டும். இந்த பிரதட்சணம் சோம சூக்த பிரதட்சணம் என்று வழங்கப்படுகிறது
நந்தி பெருமானிடம் இருந்து புறப்பட்டு இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை வணங்கி அங்கிருந்து திரும்பி நந்திபெருமானிடம் வணங்கி இரு கொம்புகளிடையே சிவதரிசனம் செய்து அங்கிருந்து வலப்புறமாக சென்று கோமுகி வரை சென்று கோமுகியை வணங்கி பின்னர் திரும்பி நந்தி தேவரிடம் வந்து வணங்கி சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும்.
பின்னர் அங்கிருந்து திரும்பி நந்திதேவரை வணங்கி கோமுகியை வணங்கவேண்டும். அங்கிருந்து வந்து சண்டிகேஸ்வரரை வணங்கிவிட்டு நந்தி தேவரிடம் பிரதட்சணத்தை முடிக்க வேண்டும். இது சோமசூக்த பிரதட்சணம் என்று வழங்கப்படுகிறது.
-
Pradhosha Neerathi Slogam
பிரதோஷ காலத்திலும், தினமும் இந்த ஸ்லோகத்தை 108 முறை சொல்லவேண்டும். இந்த ஸ்லோகத்தை தொடர்ந்து சொல்லி வந்தால் இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி.
பிரதோஷ நேரத்தில் கூற வேண்டிய ஸ்லோகம்
ஸித்தயோகீ மஹர்ஷிச்ச
ஸித்தார்த்தஹ் ஸித்த ஸாதக|
பிக்ஷூச்ச பிக்ஷூரூபச்ச விபனோம்ருது ரவ்யய:
இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி !
ஓம் நம சிவாய
-
Girivalam Sella Ugandha Neram
ஆவணி மாதத்தில் பௌர்ணமி 13.09.19 காலை 07. 35 am முதல் மறுநாள் 14.09 .19 (சனிக்கிழமை ) காலை 10.02am வரை வருகிறது . இந்த நல்ல நாளை நாம் திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்கு பயன்படுத்தி நம் வாழ்வில் பதினாறு பேறுகளையும் பெற்று சிறப்புடன் வாழ்வோமாக.
பௌர்ணமி நாளில் மகாலட்சுமி பூஜை செய்யவும், சத்யநாராயணா பூஜை செய்யவும் குருபூஜை செய்வதற்கும்மிகவும் நல்லது. இந்த பவுர்ணமி திதியில் நமது வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலில் இறைவழிபாடு செய்வது, அன்னதான குழு பங்கேற்பது மற்றும் பசு மடங்களில், பழம், கீரை அளிப்பது நமது வாழ்வில் செல்வத்தைச் சேர்க்கும் வெற்றியை அளிக்கும்.
அருகில் இருக்கும் திருக்கோவிலில் இரண்டு தீபங்கள் ஏற்றி இறைவழிபாடு செய்வது மென்மையை தரும். இந்த திருநாளை சிறப்பாக பயன்படுத்திஇறை அருளை பெறுவோமாக.
வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க.
ஜோதிடர் பிரேம்குமார் . M.G.online astrologer -
Suba horai details
தினம்தோறும் நாம் ஒரு செயலை ஆரம்பிக்கும் பொழுது எல்லாம் வல்ல கணநாதர், ஓம் ஸ்ரீ மகா கணபதியே தொழுது செயலை துவங்குகிறோம். நாம் செய்யும் செயல் இனிதே தடையின்றி செய்வதற்கு ஒரு நல்ல நேரத்தை தேர்ந்தெடுத்து நாம் துவங்குகிறோம்.
நல்ல நேரம் என்பது ஒரு நாளில், சுப கோள்கள் ஆளுமை செய்யும் நேரம் ஆகும். ஒரு வாரத்தில் உள்ள ஏழு நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகம் ஆளுமை செய்கிறது. ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்ற குறிப்பிட்ட அமைப்பில் இந்த நாட்கள் வருகின்றன இன்றைய காலகட்டத்தில் நாம் அனைத்து செயல்களுக்கும் இந்த ஏழு நாட்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்துகின்றோம் .
இந்த நாட்களை… கிழமைகளை எவ்வாறு வகுத்துள்ளனர் ?
இன்று ஞாயிற்றுக்கிழமை என்றால் இன்றைய தினம் முழுவதும் சூரிய பகவானின் ஆளுமைக்கு உட்பட்டு இருக்கின்றது. ஆகவே இன்றைய நாள் ஞாயிற்றுக்கிழமை என்கிறோம். அதேபோல திங்கட்கிழமை என்றால் அன்றைய தினம் சந்திர பகவானின் ஆதிக்கம் முழுமையாக உள்ள நாளாகும்.இவ்வாறு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்தின் ஆளுமைக்குள் கொண்டு நமது வாழ்க்கையில் அனைத்து செயல்களும் நடைபெற்று வருகிறது. ஒரு வாரத்திற்கு ஏழு நாட்கள் என்பது எவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டது என்றால் நாம் சிவன் கோவிலில் பார்க்கும் நவகிரகம் ஒன்பது கிரகங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

சூரியன், சந்திரன் ,செவ்வாய் ,புதன் ,குரு ,சுக்கிரன், சனி பகவான் ,ராகு பகவான், கேது பகவான் ஆகிய ஒன்பது கோள்களும் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி அமைக்கப் பட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம் . இந்த ஒன்பது கிரகங்களில் ராகு கேது கிரகங்கள் நிழல் கிரகங்கள் என்று கூறப்படுகிறது .
மற்ற 7 கிரகங்கள் வானமண்டலத்தில் வலமாகவும் இந்த இரண்டு நிழல் கிரகங்கள் வான மண்டலத்தில் இடமாகும் தனது சஞ்சாரத்தை செய்துகொண்டு இருக்கின்றன. இந்த ஒன்பது கிரகங்களில் ராகு கேது கிரகங்களுக்கு தனியாக ராசி கொடுக்கப்படவில்லை. ராசி மண்டலத்தில் உள்ள பன்னிரண்டு ராசிகளில் மீதமுள்ள ஏழு கிரகங்கள் தனது சொந்த வீடுகளாக கொண்டுள்ளன .இங்கு கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் கிரகங்கள் தங்களுடைய வீட்டின் அதிபதியாக உள்ளனர்.
ஒரு நாளில் 24 மணி நேரம் உள்ளது. ஒரு நாளில் ஒவ்வொரு மணி நேரமும் ஒரு கிரகத்தின் ஆளுமையில் இயங்குகிறது.நல்ல நேரம் என்பது சுபஹோரை என்று அழைக்கப்படுகிறது.
சுப ஹோரை என்றால் என்ன?
ஒரு HORA என்பது ஒரு HOUR ஆகும். ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தை ஒவ்வொரு மணி நேரமும் நவகிரகங்களில் ராகு கேது தவிர வேறு கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட அமைப்பில் அந்த நேரத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்த சுப ஹோரை என்பது குறிப்பிட்ட வரிசையில் அமைக்கப்பட்டுள்ளது.அதாவது ஞாயிற்றுக்கிழமை உள்ள 24 மணி நேரமும் இந்த வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது அதாவது முதலாவது காலை 6 மணி முதல் 7 மணி வரை சூரிய ஹோரை. பின்னர் ஒரு மணி நேரத்திற்கு சுக்கிர ஹோரை என்று வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது .
ஞாயிற்றுக்கிழமை வரும் வரிசை :
சூரியன், சுக்கிரன் ,புதன் ,சந்திரன் ,சனி பகவான், குரு பகவான் ,செவ்வாய் இவை ஏழு ஹோரைகள் .ஞாயிற்றுக்கிழமை அன்று முதல் ஏழு மணிநேரம் இந்த வரிசையில் ஹோரை வரும். அதற்குப் பின்னர் இதே வரிசையில் அடுத்து 7 மணி நேரம் அதாவது மதியம் ஒரு மணி முதல் 8 மணி வரை சுப ஹோரை வரும் .பின்னர் இரவு 8 மணி முதல் அடுத்த நாள் காலை 3 மணி வரை இந்த வரிசை தொடரும். பின்னர் சூரியன் ,சுக்கிரன் ,புதன் ஓரைகள் காலை 3 மணி முதல் அதிகாலை 6 மணி வரை மூன்று சுப ஹோரைகள் முடிந்து திங்கட்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரை சந்திர ஹோரை ஆரம்பமாகும் .இதுதான் ஒருநாளில் உள்ள ஹோரையின் அமைப்பு ஆகும் இவ்வாறு ஏழு நாட்களும் சுபஹோரை கணிக்கப்படுகிறது.
காலையில் 6 மணி முதல் 7 மணி வரை எந்த சுப ஹோரை ஆரம்பம் ஆகிறதோ அந்த நாளின் பெயர் கொண்டு கிழமை அமைகிறது. இவ்வாறுதான் ஒரு வாரத்தில் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி என்ற கிழமைஅமைப்பு நமது முன்னோர்களால் கொடுக்கப்பட்டுள்ளது .
சூரிய உதயம் ஒரு இடத்தில் காலை 6 மணி என்ற முறையில் சுபஹோரை கணிக்கப்பட்டுள்ளது ஒரு இடத்தின் சூரிய உதயத்தை கொண்டு இந்த முறையின் கால அளவு சிறிது மாறுபடும். சந்திரன் ,புதன் ,குரு, சுக்கிரன் ஆகிய சுப ஹோரைகள் ….நல்ல செயல்களை செய்வதற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். மீதமுள்ள மூன்று ஹோரைகள் சூரியன் ,செவ்வாய், சனி ஆகிய கிரகங்களின் ஹோரைகளை நல்ல செயல்கள் செய்வதற்கு தவிர்க்க வேண்டும்.


ஞாயிற்றுக்கிழமை உள்ள சுப ஓரையில் மருந்து உண்ண , பெரியோரை பேட்டி காண ,பிரயாணம் செய்ய ஆகிய சுப செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் . திங்கட்கிழமை அன்று உள்ள சுப ஹோரையில் புது நகை வாங்கவும் புதிய ஆடை உடுத்தவும், புதிய கடை திறக்கவும் பயன்படுத்திக்கொள்ளலாம் .
செவ்வாய்க்கிழமை அன்று உள்ள சுப ஓரையில் ஆப்பரேஷன் சிகிச்சை செய்ய ,ஆயுதம் செய்ய ,இயந்திரம் தயாரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.
புதன் கிழமையில் வரும் சுப ஓரையில் கலை பயில, கணித ஆரம்பம் செய்ய ,பொன் உருக்க ,,வித்தியாரம்பம் செய்ய, நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வியாழக்கிழமை வரும் சுப ஓரையில் பெரியோரை காண்பதற்கும், வாங்கிய கடன் தீர்ப்பதற்கும் ,புதிய வஸ்திரம் வாங்குவதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
வெள்ளிக்கிழமையில் வரும் சுப ஓரையில் புதிய தொழில் செய்வதற்கும், சுபமான செயல்களை பேசுவதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
சனிக்கிழமை வரும் சுப ஓரையில்ஆயுதம் பழகுவதற்கும், யாத்திரை செல்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள சுபஹோரை.. நல்ல நேரம் சென்னையில் வசிக்கும் அன்பர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.சரியான ராகு காலம் ,எமகண்டம் (பகல் காலத்தில், இரவு காலத்தில் )போன்ற நேரங்கள் சென்னைக்கு கணித்துக் கொடுக்கப்பட்டுள்ளது .

தொகுத்தவர் : ஜோதிடர் பிரேம்குமார் . M.G.online astrologer. -
September 11 Onam Festival
செப்டம்பர் 11 ஓணம் பண்டிகை
விகாரி வருடம் – ஆவணி 25
பிரதோஷம்
subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
ஓணம், பாரதியார் நினைவு நாள்
11-செப்-2019 புதன்
வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : திரையோதசி
திதி நேரம் : திரையோதசி முழுவதும் 0.00
நட்சத்திரம் : திருவோணம் மா 4.22
யோகம் : சித்த-மரண யோகம்
சந்திராஷ்டமம் : புனர்பூசம்,பூசம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
September 11 Rasi Palan
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – நற்செயல்
ரிஷபம் – சுகம்
மிதுனம் – பக்தி
கடனம் – புகழ்
சிம்மம் – உழைப்பு
கன்னி – இரக்கம்
துலாம் – பொறுமை
விருச்சிகம் – போட்டி
தனுசு – மேன்மை
மகரம் – ஜெயம்
கும்பம் – நலம்
மீனம் – தொல்லை
சந்திராஷ்டமம் – புனர்பூசம், பூசம்
-
Thiru Onam History
முன்னொரு காலத்தில், சிவாலயத்துள் எரிந்து கொண்டிருந்த விளக்கின் திரியைத் தூண்டி, பிரகாசமாக எரிய உபகாரம் செய்தது ஒரு எலி. எனவே அவ்வெலிக்கு மூன்று லோகத்தையும் ஆட்சி செய்யும் அதிகாரத்தை வழங்கினார் சிவபெருமான். அந்த எலியானது மறு பிறப்பில் மகாபலி என்ற என்ற பெயருடன் மன்னனாக பிறந்து, சக்ரவர்த்தியாகி மூவுலகையும் சிறப்பாக ஆட்சி புரிந்தது.
மகாபலி என்னும் மன்னன் கேரள நாட்டைச் சிறப்பாக ஆண்டுவந்தான். அவன் பெற்ற தவவலிமையால் மூவுலகையும் ஆளும் மன்னனாகத் திகழ்ந்தான். இதனைப் பொறுக்காத தேவர்கள் அசுர வலிமை கொண்ட மகாபலியை அடக்கித் தங்களின் வலிமைக்குக் கொண்டுவரத் திருமாலின் உதவியை நாடிச் சென்றனர்.
திருமாலும் வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் மூன்றடி மண்ணைத் தானமாகக் கேட்டார். திருமாலின் சூட்சமத்தை அறிந்த அசுர குருவான சுக்ராச்சாயான் அறிவுரையைக் கேளாத மகாபலியும் மூன்றடி மண் கொடுக்க சம்மதித்தார். திருமால் விசுவரூபம் எடுத்து வானத்தை ஒரு அடியாகவும், பூமியை மற்றொரு அடியாகவும் வைத்து அளந்து மூன்றாவது அடியை மகாபலியின் தலைமீது வைத்தார். வாமன மூர்த்தியால் மகாபலிச் சக்கரவர்த்தி பாதாளத்துள் வீழ்த்தப்பட்டபோது, தான் ஆட்சி செலுத்திய நாட்டை ஆண்டுக்கொரு முறை வந்து கண்ணுற்று மகிழத் திருமாலிடம் வரம் வேண்டினார்.
பிறகு திருமாலும் மகாபலியை ஆட்கொண்டு வரம் நல்கினார். இவ்வாறு மகாபலிச் சக்கரவர்தியின் நினைவு நாளாகவும், மகாபலி மன்னன் இந்த திருவோண நன்னாளில் தான் ஆண்ட நாட்டிற்கு வருவதாகவும், அவனை வரவேற்கும் முகமாகவும் இவ்வோணம் பண்டிகை கொண்டாடப் பெறுவதாகக் கூறப்படுகிறது.