Blog

  • September 16 subamugurthanaal

    செப்டம்பர் 16 – சுபமுகூர்த்த நாள்
    விகாரி வருடம் – ஆவணி 30
     subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    16-செப்-2019 திங்கள்  
    சுபமுகூர்த்த நாள்(காலை 6.00 – 7.30)
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    அதிதி          
    திதி நேரம்    :    துவிதியை    ம    2.01
    நட்சத்திரம்    :    ரேவதி    அ.கா    4.25
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அஸ்தம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Siddanukaga vasaluke vandha Arangan

    சட்டைமுனி
    ஊர் ஊராய்
    உலா வந்த போது
    ஒரு நாள்…

    தூரத்தில்
    ஒரு கோபுரம்
    கண்ணில் பட்டது.

    அது 
    ஸ்ரீரங்கம்
    அரங்கநாதர் ஆலயம்
    என்பது
    சட்டைமுனியின்
    மனத்திற்குப் புரிந்தது.

    இரவுக்குள்
    சன்னதியை அடைந்து
    இறைவனின் 
    தாள் பணிந்திட
    வேண்டுமென
    வேகமாய்
    நடை போட்டார்.

    வயது 
    மிகுந்திருந்ததால்
    அவரது
    ஓட்டத்தை விட
    கால ஓட்டம்
    அதிகமானது.

    அதனால்
    சட்டைமுனி
    போய்ச்
    சேர்ந்த போது
    கோயில் நடையைச்
    சாத்தி விட்டார்கள்.

    சோர்வு  
    உடலில் தானே தவிர 
    மனதில் இல்லையே..!

    "அரங்கா…!
    அரங்கா…..!
    அரங்கா……!"

    கதறினார்
    சட்டைமுனி.

    அவர் குரல்
    அரங்கனை
    எட்ட…
    ஓர்
    அற்புதம் நிகழ்ந்தது.

    கோயிலின் 
    இசைக் கருவிகள் 
    தானாய்
    முழங்கின….

    மேள தாளங்கள்
    வரவேற்பு
    பாடின….

    கோயில் மணிகள்
    ஓங்கி ஒலித்தன….

    கதவுகள்
    ஓசைபட
    முழுதாய்த்
    திறந்தன.

    அரங்கன்
    புன்னகை தவழ
    வைர வைடூரிய
    ஆபரணங்கள்
    தகதகவென
    ஜொலிக்க
    பிரத்யேக
    அருட் காட்சி
    தந்தார்.

    "அரங்கா…
    அரங்கா…"
    எனக்
    கூவியவாறே
    அருகே ஓடி
    அரங்கன்
    திருவடி தேடினார்
    சட்டைமுனி சித்தர்.

    அச்சமயம்
    அவ்வழி 
    வந்தவர்க்கு
    திறந்திருந்த 
    கோயில் கதவுகள்
    பீதியைக் கிளப்ப
    திருடன் திருடன்
    எனத்
    திரண்டது
    கூட்டம்.

    உள்ளே
    வந்தவர்
    உதிரம்
    கொதித்தது….

    காரணம்.?

    இருந்தது..!

    அரங்க நாதரின்
    அத்தனை நகைகளும்
    சட்டை நாதரை
    அலங்கரித்துக்
    கொண்டிருந்தன.

    தெய்வீகக் கோலம்..!

    திரண்டிருந்தோர்
    பார்வையிலோ…

    'சகிக்க முடியாத
    அலங்கோலம்.'

    "ஆசையைப் பாரு…
    அரங்கன் நகைகள்
    அற்பனுக்கா…"

    கூட்டத்தின்
    ஒரு பாதி
    நகைகளைப்
    பறித்தது.

    சட்டைமுனியைச்
    சாபங்களால்
    அர்ச்சித்தபடியே
    நகைகளைச்
    சுத்தம் செய்து
    அப்போதே
    அரங்கனுக்குச்
    சாத்தியது
    இன்னொரு பாதி.

    'சாமி குத்தம்'
    என ஓலமிட்டது
    கோயிலைச் சேர்ந்த
    வேதியர் கூட்டம்.

    பிடித்து இழுத்து
    நையப் புடைத்து
    அரசன் முன் 
    நிறுத்தியது
    இன்னொரு
    முரட்டுக் கூட்டம்.

    "என்ன நடந்தது.?"

    அரண்மனை
    அதிரக் கேட்டான் 
    அரசாளும் மன்னன்.
    அக்குரல்
    அந்தப்புரம் வரை
    கேட்டது.

    "எனக்கெதுவும்
    தெரியாது….மன்னா..
    இது
    மாயவனின்
    திருவிளையாட்டு…"
    மென்மையாய்
    சொன்னார்
    மெய்ஞானி.

    "திருட்டு விளையாட்டை
    துணிந்து
    செய்துவிட்டு
    திருவிளையாடல்
    என்று
    திருமால் மீதே
    சாட்டுகிறாயே..

    "என்ன கதையா…
    நடந்தது என்ன..?"

    மீண்டும் கேட்டான்
    மீளா சினத்துடன்

    நடந்தது அனைத்தையும்
    மெலிதாய் சொன்னார்
    மெய்ஞான சித்தர்.

    .'உண்மையாய்
    இருக்குமோ'

    மன்னன் மனத்தில்
    மின்னலொன்று
    அடித்தது.

    'பார்த்து விடலாம்..'

    மனது 
    கட்டளை இட்டது.
    மன்னன்
    வழிமொழிந்தான்
    அரச கட்டளையாக..!

    "கோயிலுக்கு
    கூட்டிச் செல்லுங்கள்….

    இவர்
    அழைத்தால்
    நம் பெருமான்
    வருவாரா
    எனப் பார்த்து
    விடலாம்.."

    ஓங்கி
    உலகளக்கும்
    உத்தமன்
    கோயில் சாத்தப்பட்டது.

    வாசலுக்கு வெளியே
    மீண்டும்
    சித்த பெருமான்.

    இம்முறையும்
    சட்டை முனிவரின்
    குரல்
    விண்ணைப்
    பிளந்தது…
    மூன்று முறை.

    "அரங்கா…!
    அரங்கா….!!
    அரங்கா…!!!."

    அரசனும்
    மக்களும்
    ஒருகால்
    அரங்கன் வந்தால்
    இந்த சாமியாரின்
    தயவால்
    அவனை
    தரிசித்து
    'வைகுண்ட
    பாக்கியம்'
    அடையலாமே
    எனக்
    கணக்குப்
    போட்டபடி
     காத்திருந்தனர்.

    என்னே அதிசயம்..?!

    அரங்கன் வந்தான்…..!

    முன்பு போலவே
    மேளங்கள்
    மணிகள்
    முரசுகள்
    முழங்க….

    'தட் ….தடார்…'
    என
    ஆனை போல்
    பிளிறி
    இரு கதவுகளும்
    மெல்லத் திறந்தன…

    விண்ணுக்கும்
    மண்ணுக்குமாய்
    வேங்கடன்
    வெளிப்பட்டான்.

    அட…

    அரங்கன்
    அணிந்திருந்த 
    ஆபரணங்கள்
    அவன்
    திருமேனியிலிருந்து
    தாமாகக் கழன்று
    சட்டை முனியின்
    மேனியில்…
    சிரசில்…..
    கரங்களில்….
    சூடிக் கொண்டு
    பேரொளி பரப்பின.

    அரங்கனைப்
    போலவே
    சட்டைமுனியும்
    ஜொலித்தார்.

    அரசனும்
    அருகிருந்தோரும்
    அதிர்ந்து நின்றனர்.
    கொஞ்சம்
    பயந்து நெளிந்து
    வணங்கினர்.

    அரங்கனும்
    அவனது
    அன்பனும்
    ஒன்றே என
    இறைவன்
    உலகுக்கு
    உணர்த்திய
    நிகழ்வே
    இதுவென
    அனைவரும்
    போற்றித் தொழுதனர்.

     தொடர்ந்து
    'அரங்கா…
    அரங்கா…
    அரங்கா….."
    என
    சட்டைமுனி
    உருகிக் குரலிட…

    அத்தனை பேரும்
    யாருக்கும் கிட்டாத
    பிறவிப் பயன்'
    என
    வைணவம் மெச்சும்
     விஸ்வரூப தரிசனம்
    கண்ட  பரவசத்தில்
    'அரங்கா.. அரங்கா..'
    என
    மெய் சிலிர்த்தனர்.

    அப்போது
    அங்கோர்
    அற்புதம்…
    இனிது
    நிகழ்ந்தது.

    அகிலம் வணங்கும்
    அரங்கனின்
    திரு உருவோடு…

    திருவோடோடு
    வாழ்க்கையைத்
    துவக்கி
    அன்று
    அரங்கனின்
    ஆபரணங்களோடு
    ஒளிர்ந்து கொண்டிருந்த
    சட்டை முனி சித்தர்
    ஒளியாய் எழும்பி
    பேரொளி வீசிய
    பெருமானோடு
    இரண்டறக் கலந்தார்.

    கண்ணுற்ற
    மக்கள்
    இறைமுழக்கம்
    செய்யச்…செய்ய
    இறைவனும்
    சித்தனும்
    மறைந்து போயினர்.

    மெய்சிலிர்க்கும்
    இப்புராண வரலாறு
    'சட்டைமுனி
    வைணவர்'
    என்போரின்
    வரலாற்றுப்
    பதிவாய் உள்ளது.

    அதற்கு
    சாட்சியாக
    ஸ்ரீரங்கத்தில்
    சட்டைமுனியின்
    ஜீவ சமாதி
    உள்ளது.

    – 'மாரி மைந்தன்' சிவராமன்
     

  • 108 Kilo Kunguma abishegam

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வருகிற 16.09.2019 திங்கள்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை சூலினி துர்கா ஹோமத்துடன் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு 108 கிலோ குங்குமத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.

    மஹிஷாசுர மர்த்தினி சிறப்பு :

    மஹிஷாசுரமர்த்தினிக்கு நடைபெறும் ஹோமம், அபிஷேகம், மற்றும் பூஜைகளில் பங்கேற்று வழிபடுவதால் அசுர குணம் அழியும், தடைகள் நீங்கும், வியாதிகள் குணமாகும், பாவங்கள் விலகும், பயம் அகலும், சர்வ துக்கங்களும் விலகும். துர்க்காதேவியானவள் அவளது உபாஸகர்களால் சூலினி துர்க்கா, வன துர்க்கா, சாந்தி துர்க்கா, ஜாதவேதோ துர்க்கா, தீப துர்க்கா, ஜ்வாலா துர்க்கா, ஆசுரீ துர்க்கா என்று வெவ்வேறு வடிவங்களில் விதவிதமான பெயர்களால் போற்றப்படுகிறாள். ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 18 திருக்கரங்களுடன், சிரித்த முகத்துடன், மஹிஷனை வதம் செய்யும் கோலத்தில், 9 அடி உயரத்தில், 1008 பெண்கள் மஞ்சள் நீரினால் மஹா அபிஷேகம் செய்து, பல கோடி தன்வந்திரி மந்திரங்களை கொண்டு ஸ்ரீ மஹிஷாசுரமர்த்தினி பிரதிஷ்டை செய்யப்பட்டு, அவ்வப்பொழுது சூலினி துர்கா ஹோமம், மஞ்சள் குங்கும அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் வருகிற 16.09.2019 திங்கள்கிழமை காலை 10.00 மணிக்கு சூலினி துர்கா ஹோமத்துடன் 108 கிலோ குங்குமத்தினால் சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.

    குங்குமாபிஷேகத்தின் சிறப்பு :

    குங்குமம் ஆரோக்கியமான அனைத்து செயல்களையும் தோற்றுவிக்கும் அற்புத பொருள் ஆகும். குங்குமம் அனைவரையும் வசீகரிக்க செய்து, தெய்வீகத்தன்மையுடன் சுபதன்மை ஏற்படுத்தும். மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் கொண்டு  அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் பூஜை செய்வதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும். தீய சக்திகள் விலகும், ரத்த சம்பந்தமான உள்ள நோய்கள் விலகும். கிருமி நாசினியான குங்குமம் உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் வெப்பத்தை தடுத்து மன அமைதி, மங்களகரமான தோற்றம், உடல் நலத்தையும் தருகிறது.

    நெற்றியில் குங்குமம் வைப்பதால் நரம்புகளின் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும். குங்குமத்தின் மீது சூரிய ஒளிபடுவதால், அதிலுள்ள மூலிகை சக்திகளுடன் வைட்டமின் டி சக்திமிக்க அல்ட்ரோஸம் உடலுக்குள் சென்று நன்மை உண்டாக்கும். இது பெண்களுக்கு நல்லது. புருவத்தின் மத்தி, சக்தி குவியும் இடம். சுழுமுனை, ஞானக்கண் என அழைக்கப்படுகிறது. இது அறிவுக்கு அப்பாற்பட்டு இன்னொரு நுண்ணறிவை எட்ட வைக்கும். உடல் ஆற்றலை வெளிப்படுத்தும் ஏழு சக்கரங்களில் ஒன்றான ஆக்ஞை நெற்றிப் பொட்டில் தான் உள்ளது. ஒருவரின் ஞானம், பேரறிவு வெளிப்பட காரணமாக அமைவதும் இந்த ஆக்ஞை சக்கரம் தான். இதை தூண்டிவிடும் பணியை குங்குமம் செய்யும். இத்தகைய சிறப்பு வாய்ந்த குங்குமத்தை கொண்டு ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.

    ஹோமம், அபிஷேகத்தின் பலன் :

    இப்பூஜையின் மூலம் கடன், சோகம், பிசாசு ஆகியவற்றால் பீடை உண்டாகாது என்றும், துர்க்கையின் பெயரை உச்சரிப்பதனாலேயே மனிதன் வம்ச விருத்தியையும், தன விருத்தியையும், சுபிக்ஷத்தையும் பெற்று மிகுந்த பாக்கியசாலி ஆகிறான் என்றும், ஸர்ப்பங்கள், ராக்ஷஸர்கள், பூதங்கள், சத்ருக்கள், ரோகங்கள் இவை யாவும் துர்க்கையின் பக்தனைப் பார்த்த மாத்திரத்திலேயே திசைதோறும் ஓடுகின்றன என்றும் தேவி பாகவதத்தில் வியாஸ பகவான் கூறுவதே இதற்கான ஆதாரம்.

    சத்ரு, ரோகம், கடன் ஆகியவற்றால் உண்டாகும் பிரச்னைகள், ஆவி, பில்லி, சூனியம், ஏவல் முதலான அமானுஷ்ய சக்திகளால் உண்டாகும் தொல்லைகள், சித்த பிரமை, பரம்பரையில் ஏற்பட்ட சாபங்கள், நாக தோஷம், புத்திர தோஷம் விலகும்.

    மேலும் பக்தர்கள் அனைவரும் இவ்வைபவங்களில் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு :

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், வாலாஜாபேட்டை – 632 513.

    வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203
     

  • Chakrathazvar Gayathri mandiaram

    ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபட்டால் நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும்.

    சக்கரத்தாழ்வார் காயத்ரி மந்திரம்
    ஸ்ரீசக்கரத்தாழ்வாரை தரிசித்தால், சகல தோஷங்களும் விலகும். அவரின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று நிம்மதியும், சந்தோஷமும் பொங்க வாழலாம் என்பது ஐதீகம்.

    ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட பக்தர்கள் ஓரடி எடுத்து வைத்தால், அவர் உடனே இரண்டடி முன்வைத்து பிரச்சினைகளையும், துன்பங்களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்பது விதியாகும்.

    ஓம் சுதர்ஸனாய வித்மஹே
    ஜ்வாலா சக்ராய தீமஹி
    தன்னோ: சக்ர ப்ரசோதயாத்
     

  • September 15 Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – அமைதி
    ரிஷபம் – பொறுமை 
    மிதுனம் – பயம் 
    கடனம் – தொல்லை
    சிம்மம் – துன்பம் 
    கன்னி –  நஷ்டம் 
    துலாம் –  விவேகம் 
    விருச்சிகம் – போட்டி 
    தனுசு –     புகழ்
    மகரம் –   செலவு 
    கும்பம் – வரவு 
    மீனம் – லாபம் 
    சந்திராஷ்டமம்    – உத்திரம்
     

  • September 15 Indraya Naal Eppadi

    செப்டம்பர் 15 – மகாளயபட்சம் ஆரம்பம்
    விகாரி வருடம் – ஆவணி 29
    15-செப்-2019 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    துவிதியை          
    திதி நேரம்    :    பிரதமை    ம    12.16
    நட்சத்திரம்    :    உத்திரட்டாதி    இ    2.13
    யோகம்    :    அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திரம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Thanga Garuda vaganathi Thirupathy Ezhumalayan

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமியை ஒட்டி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார் மலையப்ப சுவாமி. 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமியையொட்டி இன்று தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி 4 மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி வீதி உலாவின் பொழுது நான்கு மாட வீதியின் இருபுறமும் காத்திருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து மனம் உருகி கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் வழிபட்டனர். 

    வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் முப்பதாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அக்டோபர் 8ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி உடன் நிறைவு பெற உள்ளது. இந்த பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவையாக  ஐந்தாவது நாள் நான்காம் தேதி இரவு தங்க கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. 

    இதனை காண்பதற்காக 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்பதால் பிரம்மோற்சவத்தின் கருட சேவையாக இன்று நடைபெற்ற பௌர்ணமி கருட சேவை நடத்தப்பட்டது. இதையொட்டி நான்கு மாடவீதிகளில் பிரம்மோற்சவத்தின் போது நடைபெறக்கூடிய கருட சேவையில் எவ்வாறு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வெளியேற்றப்படுவார்களோ அதுபோன்று இன்று நடைபெற்ற கருட சேவையின் போது பக்தர்கள் நான்கு மாடவீதியில் அனுமதிக்கப்பட்டனர். 

    போலீசார் பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகள் குறித்தும் எந்தெந்த இடங்களில் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது என்பதை அறிந்து அதற்கு ஏற்ப மாற்றங்கள் செய்வது குறித்து அதிகாரிகள் மாதிரி கருட சேவையாக இன்று நடத்தினர். இதில் சிறப்பு அதிகாரி தர்மா ரெட்டி,  எஸ்பி அன்புராஜன், முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் கோபிநாத் ஜெட்டி, கூடுதல் முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் சிவகுமார் ரெட்டி, உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

  • Sri Lakshmi Narayan Homam

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் மஹாளய பக்ஷத்தை முன்னிட்டு உலக மக்கள் நலன் கருதியும், சகலவித தோஷங்கள் அகலவும் வருகிற 15.09.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஹோமமும், விசேஷ பூஜைகளும் நடைபெற உள்ளது.

    ஸ்ரீலக்ஷ்மி நாராயண பெருமாள் செல்வத்தை பாதுக்காப்பராகவும் செல்வ செழிப்பை தரும் கடவுளாக விளங்குபவர். இத்தம்பதிகளை யாகம், திருமஞ்சனம், அர்ச்சனை, பாராயணம் போன்ற பல்வேறு வழிகளில் வேண்டுவது மிகவும் சிறந்த பலன் தரக்கூடிய செயலாகும். மேலும் யாகங்கள் செய்வதும், யாகங்களில் பங்கேற்பதும் மிகவும் சிறப்பு வாய்ந்தது மட்டுமல்ல, அது கடவுளின் அனுக்கிரகத்தையும் செல்வ செழிப்பையும் பல மடங்கு பெருக்கி நமக்கு வரத்தை அளிக்கக் கூடியது.

    ஸ்ரீ லக்ஷ்மி மற்றும் ஸ்ரீமன் நாராயணனுக்காக நடத்தப்படும் ஹோம பூஜைகளில் பங்கேற்பதின் மூலம் இருவரின் அனுக்கிரகமும் கிடைக்கப் பெற்று சகலவித தோஷங்களும் நீங்கி, நீண்ட ஆயுளுடன் வாழ்க்கை நடத்தலாம். செல்வத்தின் அதிபதியான ஸ்ரீ லக்ஷ்மி தேவியின் கடாட்சத்தால் உங்கள் வாழ்வில் செழிப்பும், பொருட்செல்வமும், நல்ல அதிர்ஷ்டமும், நல்லிணக்கமும், ஆன்மீக ஞானமும் கிடைக்கப் பெறுவீர்கள். ஸ்ரீமன் நாராயணனின் கடாட்சத்தால் எதிர்பாராத நிதி நெருக்கடி சமயங்களில் உங்கள் ஆஸ்திகளுக்கான பாதுகாப்பும் கிடைக்கப் பெறுவீர்கள்.

    இந்த யாகத்திற்கு  இந்த யாகத்திற்கு தாமரை புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். பக்தர்கள் அனைவரும் இதில் பங்கேற்று இறையருள்டன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு :
    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், வாலாஜாபேட்டை – 632 513.
    வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203

  • Namakkal Anjaneyar alangaram

    1,00,008 வெற்றிலை  அலங்காரத்தில் நாமக்கல் விஷ்வரூப ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

    நாமக்கல் நகரில் நடுநாயகமாக வீற்றிருக்கும் 18 அடி உயர விஷ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு அனுமன் ஜெயந்தி விழா மட்டுமின்றி தமிழ்மாதம் முதல் ஞாயிற்று கிழமை யில் பால் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெறும்.பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்படும். கடந்த சில ஆண்டுகளாக அனுமன் ஜெயந்தி அன்று மட்டும் 1,00,008 வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று முதன் முதலாக 1,00,008 வெற்றிலை  அலங்காரத்தில் ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர் நீண்ட வரிசியில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  

    ராமணின் வெற்றி செய்தியை இலங்கையில் அசோக வனத்தில் ராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதாதேவி யிடம் முதன் முதலில் சொன்னவர் ஆஞ்சநேயர்.  அந்த வெற்றி செய்தியை கூறிய ஆஞ்சநேயர் க்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என என்னினால் சீதா தேவி. 

    பரிசு கொடுக்கதன்னிடம் எதுவும் இல்லாததால் அருகில் இருந்த வெற்றிலை கொடியில் இருந்த இலைகளை பறித்து மாலையாக தொடுத்து இதை போட்டுக் கொள்  என அனுமனிடம் கொடுத்தார் சீதா தேவி. இது புராண கால வரலாறு ஆகும். இதன் காரணமாகத் தான் ஆஞ்சநேயர் க்கு வெற்றிலை மாலை அணிவித்து  பெண்கள் வழிபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • September 14 Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – வெற்றி 
    ரிஷபம் – பாசம் 
    மிதுனம் – பரிசு
    கடனம் – தொல்லை
    சிம்மம் – நட்பு
    கன்னி –  நற்செயல்
    துலாம் –  பேராசை
    விருச்சிகம் – போட்டி  
    தனுசு –     கோபம் 
    மகரம் –   சினம் 
    கும்பம் – வரவு 
    மீனம் – சுபம்  
    சந்திராஷ்டமம்    – மகம், பூரம்