Blog

  • September 14 – Indraya Naal Eppadi

    செப்டம்பர் 14 – குச்சனூர் சனிபகவான் ஆராதனை
    விகாரி வருடம் – ஆவணி 28
    14-செப்-2019 சனி  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    பிரதமை          
    திதி நேரம்    :    பவுர்ணமி    கா    10.19
    நட்சத்திரம்    :    பூரட்டாதி    இ    11.49
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    மகம்,பூரம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Alagar koil Pavithdra Urchavam Video

    மதுரை அழகர் கோயிலில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் ஆவணி மாத அற்புத திருவிழாவான பவித்ர உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. 

    பிரதான தங்க குடத்திலும் 108 வெள்ளிக்கலசத்திலும், 108.வகையான திரவியங்கள் மற்றும் மூலிகைகள் கொண்டு இந்த பவித்திர உற்சவம் நடைபெற்றுள்ளது. 

    அழகர் கோயில் ஸ்தானிக பட்டர்  சுந்தர நாராயண பட்டாச்சார் அவர்கள் திருமஞ்சனம் நடத்திய போது எடுத்த வீடியோ காட்சி…

  • Vinayakar Laddu Elam Vedio

    ஐதராபாத்தில் உள்ள பாலாப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்டமான விநாயகர் சிலைக்கு  சமர்ப்பிக்கப்பட்டு படைக்கப்பட்ட 21 கிலோ எடையுள்ள லட்டுவை ராம் ரெட்டி என்பவர் 17 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு போட்டி போட்டு ஏலம் எடுத்தார்.

    தென்னிந்தியாவை பொறுத்தவரை ஹைதராபாத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது மிகவும் புகழ் பெற்ற திருவிழாவாகும். விநாயகர் சதுர்த்தி முதல் அடுத்த 11 நாட்கள் வரை ஒவ்வொரு மூலையிலும் பிரம்மாண்டமான விநாயகர் சிலைகளை தரிசனம்  செய்யலாம். இதில் குறிப்பிடத்தக்க தகவல்  ஐதராபாத்தில் தேசிய அளவில் மிகவும் உயரமான விநாயகர் சிலை ஒவ்வொரு ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கபடுவதே வழக்கம். 

    கடந்த 1954 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்ட தியாகி சங்கரையா கைரதாபாத்தில் ஒரு அடி உயரம் உள்ள விநாயகர் சிலையை நிறுவி முதன்முதலில் அந்தப் பகுதியில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை துவக்கி வைத்தார். அப்போது முதல் கைரதாபாத்தில் ஒவ்வொரு ஆண்டும் கடந்த ஆண்டை விட உயரமான சிலையை நிறுவ வேண்டும் என்ற எண்ணத்தில் விநாயகர் சதுர்த்தி உற்சவ குழுவினர் உயரமான சிலையை நிறுவி பூஜித்து வருகின்றனர். கடந்த ஆண்டு 60 அடி உயர விநாயகர் சிலை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கைரதாபாத்தில் நிறுவப்பட்டது.

    இந்த ஆண்டு அதை விட உயரமான  சிலையை நிறுவ வேண்டும் என்ற நோக்கத்தில் 61 அடி உயரத்துடன் 12 தலைகள், 24 கைகளுடன் கூடிய மிக பிரம்மாண்டமான விநாயகர் சிலை கைரதாபாத்தில் நிறுவப்பட்டது.விநாயகர் சதுர்த்தி துவங்கி கடந்த 10 நாட்களாக கைரதாபாத்தில் கணபதி என்று பெயர் பெற்ற விநாயகருக்கு பொதுமக்கள் நடத்தி வழிபாடு செய்து வந்தனர். 

    இந்நிலையில் செகந்திராபாத்தில் உள்ள உசேன் சாகர் ஏரியில் கரைப்பதற்காக கைரதாபாத் கணபதியை விநாயகர் சதுர்த்தி உற்சவ குழுவினர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஊர்வலமாக கொண்டு சென்றனர். 50 எடையுள்ள கைரதாபாத் கணபதியை போலீசார் 4 ராட்சச கிரேன்கள்  மூலம் லாரியில் ஏற்றி ஐதராபாத் முக்கிய நகரின் வழியாக சுமார் 7 மணி நேர ஊர்வலத்திற்கு பிறகு நெக்லஸ் ரோட்டில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு உசேன் சாக்ர் ஏரியில் கரைக்கப்பட்டது.

    இந்த நிலையில் மற்றொரு நிகழ்வாக ஐதராபாத்தில் உள்ள பாலாப்பூரில் விநாயகருக்கு 26 ஆண்டுகளாக லட்டு படைக்கப்பட்டு விநாயகர் விநாயகர் விஜர்சனம் அண்று விநாயகருக்கு படைக்கபட்ட லட்டு ஏலம் விடப்படுவது வழக்கம்.முதல் முறை நடைபெற்ற ஏல்த்தில் ரூ 450 க்கு விற்கப்பட்டு லட்டு இந்த ஆண்டு  ராம் ரெட்டி என்பவர் ஏலத்தில் 17 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு போட்டி போட்டு ஏலம் எடுத்தார். கடந்தாண்டு பாலப்பூர் கணபதி லட்டு 16 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் ஸ்ரீனிவாஸ் குப்தா என்பவர் எலத்தில் பெற்றார்.

  • Madurai Meenatchi Amman Koil Laddu Prasadam

    மதுரை மீனாட்சி கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு வரும் தீபாவளி முதல் தினந்தோறும் லட்டு இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. 

    தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று மதுரை மீனாட்சியம்மன் கோயில்.  ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமையான மீனாட்சி அம்மன் கோயிலுக்கு,  உலகம் முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். 

    அவ்வாறு மீனாட்சி அம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவருக்கும், தலா ஒரு லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் தீபாவளி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் தெரிவித்துள்ளார். 

    திருப்பதி ஏழுமலையான் கோயில் போன்று வரலாற்று சிறப்புமிக்க மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும் லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. 

    இதற்காக ரூ.5 லட்சம் செலவில் லட்டு தயாரிக்கும் இயந்திரத்தை வாங்கி இருப்பதாகவும், இதன் மூலம் ஒரு மணி நேரத்துக்கு 500 லட்டுகள் தயாரிக்கப்படும், என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    மதுரையில் மிகப் பழமை வாய்ந்த கோயில்களில் ஒன்றான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்,  அண்மையில் தூய்மைக்கான இந்திய அரசின் விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

  • Thirupathi Ezhumalayan Ariya Thagavalgal

    தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் திருப்பதி ஏழுமலையான சிலையில் காணமுடியாது. சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட தங்கம் போல பளபளப்பாக மின்னும்.

    இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.

    திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹுட் வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே! ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.

    பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

    ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.

    உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.

    பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.

    ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.

    ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.

    பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

    மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.

    அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்.

    மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை. 

    அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.

    திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்.

    சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.

    திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.

    ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

    1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன.

  • September 13 Indraya Rasi Palangal

    செப்டம்பர் 13… இன்றைய ராசி பலன்கள்
    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – ஜெயம் 
    ரிஷபம் – நட்பு
    மிதுனம் – புகழ்
    கடனம் – ஓய்வு 
    சிம்மம் – ஆதரவு  
    கன்னி –  பாசம் 
    துலாம் –  முயற்சி
    விருச்சிகம் – விவேகம்  
    தனுசு –     ஏமாற்றம் 
    மகரம் –   பொறுமை 
    கும்பம் – ஆக்கம் 
    மீனம் – பெருமை 
    சந்திராஷ்டமம்    – ஆயில்யம், மகம்
     

  • September 13 Full Moon Day

    செப்டம்பர் 13 – பவுர்ணமி
    விகாரி வருடம் – ஆவணி 27
     பவுர்ணமி 
    13-செப்-2019 வெள்ளி 
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    பவுர்ணமி          
    திதி நேரம்    :    சதுர்த்தசி    கா    8.18
    நட்சத்திரம்    :    சதயம்    இ    9.14
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    ஆயில்யம்,மகம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்

  • Vinayakar koil Kumbabishegam

    வேத விற்பன்னர்கள் வேத மந்திரம் முழங்க கோபுர கும்பத்தின் மீது புனித நீர்  ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆன்மிகப் பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  • Mariamman koil Car festival

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சின்னகிருஷ்ணாபுரம் ஸ்ரீ மகாமாரியம்மன், ஸ்ரீ புதுபட்டி மாரியம்மன் திருத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 


    23 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற இந்த தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். 

    மகாமாரியம்மன் கோவிலிருந்து இருந்து வழக்கம் போல அருமிகு பாலதண்டாயுதபாணி சுப்பிரமணியர் ஆலயம் அருகில் மாலை 7 மணியளவில் நிறுத்தப்பட்டது, பின்னர், மறுநாள் மாலை சுமார் 5 மணியளவில் பக்தர்கள் திரண்டு தேரை வடம்பிடித்து இழுத்து நடு வீதி, வடக்கு வீதி மூலமாக மாரியம்மன்கோவில் திடலில் நிலைநிறுத்தப்பட்டது. 

    இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் இந்த விழாவின் முன்னதாக 50 திற்கும் மேற்பட்டோர் அழகு குத்தல், 20 திற்கும் மேற்பட்டோர் கரகம் எடுத்தல் , திருநங்கைகள் நடனம், தீவளையத்தில் தீ மிதித்து நடனம், உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் நடைபெற்றது.  
     

  • September 12 Rasi palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – ஆதாயம் 
    ரிஷபம் – ஆக்கம் 
    மிதுனம் – அமைதி
    கடனம் – போட்டி 
    சிம்மம் – நன்மை  
    கன்னி –  வெற்றி
    துலாம் –  புகழ் 
    விருச்சிகம் – சினம் 
    தனுசு –     தொல்லை 
    மகரம் –   சாந்தம் 
    கும்பம் – மேன்மை 
    மீனம் – ஊக்கம் 
    சந்திராஷ்டமம்    – பூசம், ஆயில்யம்