Blog

  • vinayakar chadurthi shakthi online

    விநாயகர் சதுர்த்திக்கு உங்கள் பகுதியில் வைத்து இருக்கும் பிரம்மாண்ட விநாயகருக்கு நீங்கள் செய்து இருக்கும் அலங்காரத்தை உலகம் முழுவதும் கண்டு ரசிக்க வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது  செய்ய வேண்டியது இவ்வளவுதான்….

    உங்கள் பகுதியில் வைக்கப்பட்டு இருக்கும் பிரம்மாண்ட விநாயகரின் வீடியோ அல்லது போட்டோவை எங்களுக்கு அனுப்புங்கள்.  அத்துடன் உங்கள் பெயர் மற்றும் ஏரியா ஆகிய தகவல்களை அனுப்ப வேண்டும். சக்தி ஆன்லைன் வெப்சைட்டில் வெளியாகும் உங்கள் பகுதியின் விநாயகர் சதுர்த்தி விழாவை உலகம் முழுவதும் கண்டு ரசிக்கும். உங்கள் வீடியோவை +91-6380700085 என்ற வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்புங்க.
     

  • Pillayarpatti Car Festival

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் தேரோட்டம்  வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளது பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் . இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாள் திருவிழாவாக வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வருகிறது. 

    இந்த ஆண்டு கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது ஒவ்வொரு நாளும் ரிசபம், சிம்மம், கமலம், உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஒன்பதாவது திருநாளான இன்று மாலை 4.30 மணி அளவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு  தேர் வடம் பிடித்து இழுத்தனர். 

    சதுர்த்தி விரதம் இருக்கும் பெண்கள் மட்டுமே இருக்கு சண்டிகேஸ்வரர் சிறிய தேரை ஏராளமான பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். 

    கோவிலைச் சுற்றி நான்கு வீதிகளில் வலம் வந்த திருத்தேர் மாலை 6.40 மணிக்கு நிலைக்கு வந்தது. மூலவர் சந்தனக் காப்பு அலங்காரம் வருடம் ஒரு முறை மட்டும் நடக்கும் என்பதால் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். விழா ஏற்பாடுகளை பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் நகர டிரஸ்டிகள் செய்துள்ளனர். நாளை 10 வது திருநாளான விநாயகர் சதுர்த்தி கோவில் தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். இரவு பஞ்சமூர்த்தி திருவீதி உலாவுடன் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு பெரும். 

  • Kaliman Pillayar Thathuvam

    விநாயகர் சதுர்த்தி அன்று விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டலாம். முடிந்தால், இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டி வைக்கலாம். பிறகு, பூஜையறையில் சுத்தம் செய்த ஒரு மணையை வைக்க வேண்டும்.

    அதன்மேல் ஒரு கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. இந்த இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.

    பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார். களிமண் மட்டும்தான் என்றில்லாமல், உலோகம், கற்சிலை விக்ரகங்களையும் வைக்கலாம்.

    பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என்று எத்தனை வகை பூக்களை வாங்க முடியுமோ, அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம்.

    அதேபோல முடிந்த அளவுக்கு சில வகை பழங்களையும் வாங்கிக் கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் விட, விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை செய்து கொள்ளலாம்.

    அதாவது கொழுக்கட்டை. தேங்காய் பூர்ணத்தை உள்ளே வைத்து செய்யப்படுவது. இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம்.

    உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம். அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்குக் கிடைக்கும்.

    பிள்ளையாருக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, பிறகு விநாயகர் பாடல்கள் எதை வேண்டுமானாலும் பாடலாம். அவ்வையார் தந்த விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத் தரும். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல், அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம்.

    பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம். நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள். ஆனால், எண்ணிக்கை முக்கியமில்லை; ஈடுபாடுதான் முக்கியம். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.

    இந்த விரதத்தை காலையிலிருந்தே உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். பூஜை நேரம் வரை பட்டினியாக இருப்பது சிறப்பு. சம்பிரதாயம் பார்க்கக் கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்குப் பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரிப்பார்கள். அப்படித் தொடர்ந்து, பௌர்ணமிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்வார்கள்.

    இத்தனை நாள் விரதத்துக்குப் பிறகுதான் பிள்ளையாரை கிணற்றிலோ அல்லது ஏதாவது நீர்நிலையிலோ கொண்டுபோய் போடுவது வழக்கம்.

    பதினைந்து நாள் அனுசரித்தாலும் சரி, விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு ஒரே ஒருநாள் மட்டும் அனுசரித்தாலும் சரி, மேற்கொள்ளும் விரதத்தை உளப்பூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டியதுதான் முக்கியம்.

    இந்த விரதங்களால் உள்ளம் மேன்மைஅடையும்; உடல் ஆரோக்கியம் வளரும்; எல்லா வளங்களும் நிறையும். விரதம் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தினருக்கும், அவர்களை சார்ந்த அனைவருக்கும் விநாயகர் நல்லன எல்லாம் அருள்வார்.
     

  • Vinayakar chadurthi Festival

    விநாயகர் சதுர்த்தி நாள் விநாயகருக்கு மிகவும் விசேஷமான நாள்! இந்நாள் அன்று, பின்வருவதைக் கடைபிடிப்பது சிறப்பு…

    அதிகாலையில் குளித்து, வாசலில் மாவிலைத் தோரணத்தைக் கட்டி, வீட்டை மற்றும் பூஜை அறையைச் சுத்தம் செய்ய வேண்டும்.

    இந்த நாள் அன்று காலையில் இருந்து விரதம் மேற்கொள்வது சிறப்பு.

    பூஜை அறையில் ஒரு சிறிய கோலம் போட்டு, அதன் மேல் தலை வாழை இலையை வைத்து, இலையில் பச்சரிசியை பரப்பி வைக்க வேண்டும்.

    அந்த இலையில் களிமண்ணாலான விநாயகரை வைத்து, அவரைப் பலவகை புஷ்பங்கள் மற்றும் அறுகம்புல் மாலையினால் அலங்கரிக்க வேண்டும்.

    அதன் பிறகு, அவருக்குப் பழங்களைப் படைத்து, அதனுடன் அவர் விரும்பும் மோதகம், எள்ளுருண்டை, கொழுக்கட்டை, நெய்வேத்தியம், பாயாசம் போன்ற பலகாரங்களைச் செய்து படைக்க வேண்டும்.

    விநாயகரின் பாடல்களைப் பாடி வணங்கி, உங்களது விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.

    இறுதியாக, களிமண்ணால் செய்யப் பட்ட இந்த விநாயகரை ஏதாவது நீர்நிலையில் கொண்டுபோய் கரைப்பது வழக்கம்.
     

  • Vinayakar Chadurthi Special

    ஆவணி மாதம் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியை 'விநாயகர் சதுர்த்தி' என்று அழைக்கின்றோம். அன்றைய தினம் நாம் விரதமிருந்து முறையாக விநாயகரை வழிபட்டு அருகிலிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று அருகம்புல் மாலையிட்டு அவரைக் கொண்டாடினால், நமக்கு எல்லா விதமான நன்மைகளும் விளையும் என்பது ஐதீகம். 

    கணங்களுக்கு எல்லாம் அதிபதியாவதால் அவரை கணபதி என்று சொல்கின்றோம். எனவே, அனைவரும் வணங்க வேண்டிய தெய்வமாக விளங்குபவர் ஆனைமுகப் பெருமானாகும்.

    எந்தவொரு காரியத்தை தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத் தான் நாம் தொடங்குவது வழக்கம். 'பிள்ளையார் சுழி' போட்டு நாம் எழுதும் எழுத்துக்களுக்கு நல்ல பலன் கிடைக்கிறது. எனவேதான் 'மூல கணபதி' என்று அவரை நாம் வர்ணிக்கின்றோம்.

    அந்த ஆனைமுகனுக்கு உகந்த மாதம் தான் ஆவணி மாதம். அந்த திருநாள்ஆவணி மாதம் 20ம் தேதி திங்கள் கிழமை (05.09.2016) அன்று வருகிறது. அன்றைய தினம் பிள்ளையாரை வழிபட்டால் எல்லா பாக்கியங்களும் நமக்கு கிடைக்குமென்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.

    வீட்டிலும் சிலை வைத்து வழிபாடு செய்யலாம். விக்ரகம் வைத்திருக்கும் ஆலயத்திற்கும் சென்று வழிபாடு செய்யலாம். தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை முழு நம்பிக்கையோடு நாம் வழிபட்டால், இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்து சேரும்.
     

  • Vinayaka Peruman Patriya Arpudhangal

    விநாயகர் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துக்கள் உடையவர்.

    விநாயகர் பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அக்திணையாய் எல்லாமாய் விளங்குகிறார்.

    யானையை அடக்கும் கருவிகள் பாசமும் அங்குசமும், விநாயகர் தன் கையில் பாசாங்குசத்தை ஏந்தி இருக்கின்றார். தன்னை அடக்குவார் ஒருவரும் இலர் என்ற குறிப்பை இதன் மூலம் உணர்த்துகிறார்.

    அகில உலகங்களும் விநாயகருடைய மணி வயிற்றில் அடங்கிக் கிடப்ப என்ற குறிப்பை அவருடைய மத்தள வயிறு புலப்படுத்துகின்றது.

    விநாயகர் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மும்மதங்களைப் பொழிகின்றார்.

    கும்பம் ஏந்திய கை படைக்கும் தொழிலையும், மோதகம் ஏந்தியகை காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தொழிலையும் புரிகின்றன. எனவே விநாயகர், சிருஷ்டி, திதி, சங்காரம், திரௌபவம், அனுக்கிரகம் என்ற ஐம்பெருந் தொழில்களை ஐந்து கரங்களால் புரிந்து ஆன்மாக்களுக்கும் அருள் புரிகின்றார்.

    விநாயகர் தாய் தந்தையரை அன்புடன் வழிபட்டதால் பிள்ளை என்ற பெயருடன் ஆர் என்ற பன்மை விகுதி பெற்றுப் பிள்ளையார் என்று பேர் பெற்றார்.

    முருகர், அம்பிக்கை ராமர், கிருஷ்ணர் முதலிய உருவங்கள் சிற்ப முறைப்படி செய்து வழிபட வேண்டியவை. அவை சிற்ப லட்சணத்திற்கு மாறுபட்டிருந்தால் வழிபாடு செய்பவருக்கு நன்மை கிடைக்காது. ஆனால் பிள்ளையார் உருவம் அப்படி அல்ல. மஞ்சளை அரைத்து ஒரு சிறு குழந்தை கூட பிடித்து வைத்தால் போதும் பிள்ளையார் தயார். பிள்ளையார் அவ்வடிவில் எழுந்தருளி அருள்புரிவார்.

    சந்தனம், களிமண், மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்க கூடிய பொருளில் விநாயகரை செய்து வழிபடு வார்கள்.

    விநாயகருக்கு எளிதாக கிடைக்கக் கூடிய அருகம்புல் மிக விருப்பம். அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும்.

    விநாயகருக்கு கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.

    விநாயக சதுர்த்தி அன்று நாம் பூஜை செய்யும் விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நம் கட்டை விரல் அளவைப் போல பன்னிரண்டு மடங்கு அளவில் இருக்க வேண்டும்.

    புரட்டாசி மாத சதுர்த்தி வரை நம் இல்லத்துப் பூஜையில் இருக்க வேண்டும். இந்த 30 நாட்கள் தினந்தோறும் பூஜைகளை முறையாகச் செய்து வருவதுடன் நைவேத்தியங்களும் செய்ய வேண்டும். புரட்டாசி சதுர்த்திக்கு மறுநாள் பூஜை முடிந்து சிலையை நதியிலோ, குளத்திலோ, கடலிலோ அல்லது ஏதாவது நீர்நிலைகளிலோ சேர்த்து விட வேண்டும்.

    சாணம், புற்றுமண், மஞ்சள், வெல்லம், எருக்கம் வேர், சந்தனம் ஆகியவற்றில் பிள்ளையார் உருவம் செய்து வழிபட்டால் அனைத்துவிதமான நலன்களும் பெற்று மோட்சம் அடைவர் என்று விநாயக புராணம் கூறுகின்றது.

    தும்மைப்பூ, செம்பருத்தி மலர், சங்கு புஷ்பம், எருக்கம்பூ, மா விலை, அருகம்புல், வில்வ இலை ஆகியவை விநாயகரை அர்ச்சனை செய்யவும் மாலையாக அணிவிக்கவும் மிகவும் உகந்தவையாக கருதப்படுகிறது.

    விநாயகர் பக்தர்களில் தலைசிறந்தவர் புருசுண்டி முனிவர். விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்தவர்.

     தேவேந்திரனுடைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனாலேயே மீண்டும் விண்ணில் பறக்க ஆரம்பித்தது.

    கிருதவீர்யன் இந்த விரதத்தின் பலனால் உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான்.

    சூரசேனன் என்னும் மன்னன் விநாயகர் விரதத்தைத் தான் கடைப்பிடித்ததோடு தன் நாட்டு மக்கள் அனைவரும் இதைக் கடைப்பிடிக்கும்படி செய்து சகல செல்வங் களையும் பெற்றான்.

     திண்டிவனம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் 12 கி.மீ. மேற்கே அமைந்துள்ள கிராமம் தீவனூர். அந்த கிராமத்தில் உள்ள பொய்யாமொழிப் பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.
     

  • September 1 Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – வரவு 
    ரிஷபம் – கவலை
    மிதுனம் – பயம் 
    கடனம் – நட்பு
    சிம்மம் – தடங்கல்
    கன்னி –  களிப்பு
    துலாம் –  தாமதம் 
    விருச்சிகம் – சுகம் 
    தனுசு –     மகிழ்ச்சி
    மகரம் –   சிக்கல்
    கும்பம் – லாபம் 
    மீனம் – நன்மை 
    சந்திராஷ்டமம்    – சதயம், பூரட்டாதி
     

  • September 1 subamugurthanaal

    செப்டம்பர் 1 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
    உப்பூர் விநாயகர் தேர்
    விகாரி வருடம் – ஆவணி15
     subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    01-செப்-2019 ஞாயிறு  
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 7.30 – 9.00)
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    திரிதியை          
    திதி நேரம்    :    துவிதியை    கா    11.57
    நட்சத்திரம்    :    உத்திரம்    ம    3.22
    யோகம்    :    அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சதயம்,பூரட்டாதி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Pillayarpatti vinakar festival

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் சதுர்த்தி பெருவிழா பத்து நாட்கள் நடைபெற்று வருகிறது.

    பிள்ளையார்பட்டியில் நிகழும் திருவிழாக்களில் ஆண்டு தோறும் ஆவணித்திங்களில் வரும் விநாயக சதுர்த்தியே பெருந்திருநாள் ஆகும்.

    கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கிய விழாவில் இரண்டாம் திருநாளில் இருந்து எட்டாம் திருநாளில் வரை காலை விழாவில் விநாயகர் வெள்ளி கேடகத்தில் உலா வருவார். 

    பல்வேறு வெள்ளி கேடகத்தில் விநாயக பெருமான் உலா வந்த படக்காட்சிகள்…..

     ஏழாம் திருநாள் – வெள்ளி மயில் வாகனம்.

    10 நாட்கள் நடைபெறும் விழாவில் 9 வது நாள் தேரோட்டமும் 10வது நாளான விநாயகர் சதுர்த்தியன்று காலை தீர்த்தவாரியும் முக்குறுனி கொழுக்கட்டை படையலும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை பிள்ளையார்பட்டி நகர டிரஸ்டிகள் கவனித்து வருகின்றனர். 

  • Vinayakar Chidurthi poritha modhagam

    தேவையான பொருட்கள்:
    கோதுமை மாவு – 2 கிண்ணம்
    மைதா மாவு – 1/2 கிண்ணம்
    நாட்டுச்சர்க்கரை – 1 கிண்ணம்
    தேங்காய் – 1 கிண்ணம் (துருவியது)
    ஏலக்காய்ப் பொடி – 1 தேக்கரண்டி

    நெய் – தேவையான அளவு

    எண்ணெய் – தேவையான அளவு (பொரிப்பதற்கு)

    செய்முறை:  

    முதலில் கோதுமை மாவு மற்றும் மைதா மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, வெதுவெதுப்பான நீர் மற்றும் நெய் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து. 15-20 நிமிடம் ஊற விடவும்.

    பின்னர்,  வாணலியில் சிறிது நெய்விட்டு காய்ந்ததும்,  தேங்காயைப் போட்டு பொன்னிறமாக வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.  பின்பு ஒரு கிண்ணத்தில் நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய்  மற்றும் வதக்கி வைத்துள்ள தேங்காயைப் போட்டு, கிளறி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.  அடுத்த படியாகப் பிசைந்து வைத்துள்ள மாவைச் சிறு சிறு உருண்டைகளாக்கி, கையால் தட்டையாக தட்டி,  அதன் நடுவே தேங்காய் கலவையை சிறிது வைத்து  உருட்டி மேலே குமிழ்ப் போன்று வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.

    பிறகு,  வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.  சுவையான பொரித்த  மோதகம் தயார்.