Blog

  • கண்ணகி கோவில்  யாருக்கு சொந்தம் ? 

    மங்களதேவி கண்ணகி கோயில் என்பது தமிழகத்தின் தேனி மாவட்டம்,  மற்றும் கேரளத்தின் இடுக்கி மாவட்டம் ஆகியவற்றின் எல்லையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலானது, கடல் மட்டத்திலிருந்தது மேற்கு தொடர்ச்சி மலையில் 5,000 அடி உயரத்தில் உள்ளது. சிலப்பதிகாரத்தின் படி" அரசியின் கால் சிலம்பை" கோவலன் களவாடிவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் பாண்டிய மன்னன் அவனுக்கு மரண தண்டனை விதிதான் குற்றம் புரியாத தன் கணவன் கோவலன் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு அரண்மனைக்கு வந்த கண்ணகி ,  மதுரையை எரித்த பிறகு இந்த இடத்திற்கு வந்து 14 நாட்கள் தங்கியதாகவும், இக்கோவில்'  கி.பி 1/2 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.

    சேர ஆட்சியின்போது செங்குட்டுவன் கி.பி.  சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு சங்ககாலத்தி லோ" அல்லது அதன் தொடக்க வரலாற்றுக்  காலத்திலோ" "வண்ணாதிபாரா"பகுதியில் கண்ணகி" "மங்கலதேவி கோவில் கட்டப்பட்டு இருக்கலாம் என இலக்கிய சான்றுகள் தெரிவிக்கின்றன.  இங்கு ஆண்டு தோறும்" "சித்ரா பௌர்ணமி நாளில்" மட்டுமே கோவில் திறந்திருக்கும். அன்றைய தினம் மட்டுமே" பக்தர்கள் மலையேறி கண்ணகியை வழிபட அனுமதிக்கப்படுகின்றனர். அன்றைய தினம் இரு மாநிலத்தின் மாவட்ட ஆட்சியர் இருவர், மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் வனத்துறை அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் சித்ரா பௌர்ணமி வழிபாடு விழா நடைபெறுகிறது.

    1956 ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, கண்ணகி கோவில் ஆரம்பத்தில். தமிழகத்தின் தேனி மாவட்டத்துடன் இருந்ததாக தெரிகிறது, தற்போது கேரளத்துடன் இணைக்கப்பட்டு, முழுமையாக அம்மாநிலத்தின்  இடுக்கி மாவட்டத்திற்குள் வருகிறது , இருப்பினும் தமிழகத்தின் காவியமான சிலப்பதிகார நாயகி கண்ணகி கோவில் யாருக்கு ? சொந்தம் என்ற சர்ச்சை மட்டும் தொடர்கிறது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • அம்மனுக்கு அர்ச்சனை செய்யும் பூக்கள் வாடாமல் ஆண்டு முழுவதும் அப்படியே இருக்கும் அதிசயம்!

    சக்தியின் வடிவமான பார்வதி தேவி வெவ்வேறு வடிவங்களில் பல்வேறு பெயர்களில் உலகம் முழுவதும் கோவில் கொண்டு எழுந்தருளி வருகிறாள் அப்படி அம்பிகை எழுந்தருளி வரும் கோவில் ஒன்றில் அவளின் பார்வையால் கல்லாய் மாறிய மாமியார் மருமகள் சிறிது சிறிதாக நகர்ந்து அம்மணி விக்கிரகத்தை அடைந்துவிட்டால் பூலோகம் அழிந்துவிடும் என நம்பப்படும் அக்கோவிலுக்கு செல்வோம் வாருங்கள்.  

    கர்நாடக மாநிலம் ஹாசனில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஹாசனாம்பா தேவி கோவில் உள்ளது. இதன் பெயராலேயே இப்பகுதியானது ஹாசன் நகரம் என அழைக்கப்படுகிறது. இங்கு  ஆண்டுதோறும் 10 நாட்கள் மட்டுமே கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படுகின்றனர். அக்டோபர் 25-ஆம் தேதியிலிருந்து, நவம்பர் 4-ஆம் தேதிவரை பக்தர்கள் ஸ்ரீ ஹாசனாம்பா அம்மனை தரிசனம் செய்யலாம். எனினும்  24ஆம் தேதியே திறக்கப்பட்டாலும் 24 மற்றும் 5-ஆம் தேதிகளில் சடங்குகள் நடைபெறுவதால் அன்றைய தினங்களில் பக்தர்கள் கோவிலுக்குள் வர அனுமதி கிடையாது. இதேபோன்று தீபாவளி திருநாள் அன்றும் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. 

    12 ஆம், நூற்றாண்டில். கிருஷ்ணப்பா நாயக்க பாளையக்காரரின் ஆட்சியின் போது கட்டப்பட்ட இக்கோவிலானது. இதன் வினோத வரலாற்றை பார்ப்போம், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருத்தி அன்னை ஸ்ரீ ஹாசனாம்பா தேவி மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தாள். இதன் காரணமாக நாள்தோறும் கோவிலுக்கு வந்து அம்மனை வணங்கி விட்டு செல்வது வழக்கம், ஒருநாள் கோவிலுக்கு வந்த அவள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அவளை தேடி கோவிலுக்கு வந்த  அவளின் மாமியார் ''வீட்டில் வேலை பார்க்காமல் எதற்கு இங்கு வந்தாய் எனக்கேட்டு ஆத்திரத்தில்  அப்பெண்ணை கையில் கொண்டு வந்த விளக்கு மாறையால்  அடித்திருக்கிறாள். அப்போது, அப்பெண் வலி தாங்காமல்   சத்தமிடவே ஸ்ரீ ஹானாம்பா தேவி  அவள் முன்பு தோன்றி அவளை கல்லாக மாற்றிவிட்டதாகவும்,  அந்த கல்தான் தற்போது கோவிலில் மாமியார்-மருமகள் கல் என்ற பெயரில் காணப்படுகிறது.  

    இந்த கல் ஒவ்வொரு ஆண்டும் கருவறையில் உள்ள அம்மன் சிலையை நோக்கி சிறிது சிறிதாக நகர்ந்து கொண்டிருப்பதாகவும்,  இது நகர்ந்து நகர்ந்து ஸ்ரீ ஹானாம்பா தேவி  விக்ரகத்தை அடைந்துவிட்டால், இந்த கலியுகம் அழிந்துவிடும் என இங்குள்ள பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.  ஆண்டுதோறும் கோவில் மூடப்படும் நாளான பலி பட்யாமி என்ற தினத்தன்று' கோயிலில் அணையா தீபம்  ஏற்றப்படுகிறது. இந்த தீபமானது அடுத்த ஆண்டு அஸ்வினி பூர்ணிமாவை தொடர்ந்து வரும் வியாக்கிழமை கோயில் திறக்கப்படும் நாள் வரை அணையாமல் அப்படியே எரிந்து கொண்டிருக்கும். இதேபோன்று அன்றைய தினம். தேவிக்கு  அர்ச்சனை செய்யப்படும் பூக்கள், சூட்டப்படும் மாலை ஆகியவற்றில் உள்ள மலர்கள் எல்லாம் அடுத்த ஆண்டு கோவில் திறக்கும் வரை. வாடாமல் நறுமணத்துடன் அப்படியே இருக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். எனவே இவை அனைத்தும்" இக்கோவிலின்' அதிசயமாகவே பார்க்கப்படுகிறது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • கனவில் தோன்றிய மாரியம்மன்

    கருவறையில் காட்சி தரும் அம்மனுக்கு முத்து முத்தாக  வியர்க்கும்  அதிசயமும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அபிஷேகம் நடைபெறும் திருக்கோவிலைப் பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள். 1682 ஆம் ஆண்டு கால கட்டத்தில் தஞ்சை ஆண்ட மராட்டிய மன்னன் ஒருவன் சமயபுரம் அம்மனை வழிபடுவதற்காக வந்தான். இரவு நேரம் என்பதால் கோவிலில் தங்கிய போது அவனது கனவில் மாரியம்மன் தோன்றி புன்னைநல்லூரில் தனக்கு கோவில் கட்டுமாறு கேட்டாள். இதனால் உடல் சிலிர்க்க கண் விழித்து பார்த்த அந்த மன்னன் புன்னைநல்லூர் வந்து அம்மன் குறிப்பிட்ட இடத்தை பார்த்தபோது வெறும் புற்று மட்டுமே" இருந்திருக்கிறது. உடனே அதனை சுற்றி கோவில் கட்டி வழிபட்டு வந்ததாகவும், பின்னாளில் அவனது வம்சத்தை சேர்ந்த  துலஜா என்ற  மன்னனின் பிள்ளைக்கு அம்மை விழுந்து கண் பார்வை பறிபோனது. இதனால் மன வேதனை அடைந்த மன்னன் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு வந்து தனது மகன் குணமாக வேண்டிக் கொண்டான்.

    அன்று இரவு அவனது கனவில் தோன்றிய மாரியம்மன உன் மனக்குறை நீங்கியது மகன் நலம் பெறுவான் என அருளாசி வழங்கினாள். அதன்படி மன்னனின் பிள்ளைக்கு கண் பார்வை மீண்டும் கிடைத்தது. இதனால் உள்ளம் மகிழ்ந்த மராட்டிய மன்னன் துலஜா ராஜ கோபுரத்துடன் அதே இடத்தில் அன்னை ஸ்ரீ மாரியம்மன் க்கு திருக்கோவில் கட்டி குடமுழுக்கு நடத்தியதாக வரலாறு. இங்கு கருவறையில் அருள் புரியும் ஸ்ரீ கருமாரி அம்மனுக்கு முத்து முத்தாக வியர்க்கும் அதிசயம்  நடைபெறுகிறது. இதன் காரணமாக முத்து மாரியம்மன் என்ற திருப்பயரும் அம்மைக்கு உண்டு. என்பதால் உடலில் முத்து முத்தாக போட்ட அம்மைகளும் இவளை வழிபட்டால்  குணமாகும் என்பது நம்பிக்கை,  ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே  நடைபெறும் தைலக் காப்பின்போது, அம்பிகைக்கு  வெப்பம் அதிகரிக்கும். என்பதால்  தயிர்சாதம், இளநீர் போன்றவை நிவேதனமாகப் படைக்கப்பட்டு அம்பிகையின் வெப்பம் தணிக்கப்படுகிறது. ஜவ்வாது, சாம்பிராணி, புனுகு  ஆகியவை போட்டு அம்மனின் திருமேனியை மேலும்  குளுமைப் படுத்துவார்கள்.

    இங்குள்ள அன்னை ஸ்ரீ மாரியம்மன் க்கு  அபிஷேகம் கிடையாது. அன்னையின் திருமேனி புற்று  மண்ணால் ஆனதால் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை  48 நாட்கள் தைலத்தால் அபிஷேகம் நடைபெறுகிறது. இன்றளவும் பக்தியுடன் தன்னை தேடி வந்து வணங்கும் பக்தர்களின் கனவில் தோன்றி அன்னை அவர்களது வேண்டுதல்களை நொடிப் பொழுதில் நிறைவேற்றி வருகிறாள். புன்னைநல்லூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் தஞ்சையில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • உலகில் தோன்றிய முதல் கல்கி அவதார கோவில்

    உத்திரபிரதேச மாநிலம் ஜெய்ப்பூரில் உலகின் முதல் கல்கி கோவில் உள்ளது. மகாவிஷ்ணுவின் 10 வது அவதாரமாக கருதப்படும் கல்கி அவதாரம் தோன்றுவதற்கு முன்பாக ' மகாராஜா சவாய் ஜெய் சிங் என்பவரால் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. அவர்களால் தேவதத் குதிரைக் கோயிலுடன் கட்டப்பட்டது.

    இந்து மத வைணவ வேதங்களின்படி மகாவிஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரம் அதர்மத்தை அழிப்பதற்காக திருமால் எடுக்கும் கடைசி அவதாரமாகும், இந்த கல்கி அவதாரமானது. கிருஷ்ணா அவதாரம் முடிந்தபின்  கலியுகம் தொடங்கி 5126 ஆண்டுகள் கடந்து 4 லட்சத்தி 32 ஆயிரம் ஆண்டுகள் இருக்கும் என நம்பப்படுகிறது. உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில், இறைபக்தி உள தம்பதியரின் வயிற்றில் கல்கி பிறப்பார் எனவும் கூறப்படுகிறது. 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • செம்பு திருமேனியில் காட்சி தரும் முருகப்பெருமான்

    பெரும்பாலும் தமிழ் கடவுள் ஆன' நாம் முருக பெருமான் குன்றின் மீது எழுந்தருளி கோவில் கொண்டுள்ளதை நாம் அறிவோம். இதேபோன்று விநாயகப் பெருமான் மலை உச்சியில் எழுந்தருளியதால் உச்சி பிள்ளையாராகவும், பாதாளத்தில் கோவில் கொண்டு உள்ளதால் பாதாள கணபதி அழைக்கப்படுகிறார். ஆனால் முருகப்பெருமான் பாதாளத்தில் செப்பு திருமேனியாக எழுந்தருளி அருள் பாவிக்கும் பாதாள முருகன் கோவில் எங்கு உள்ளது தெரியுமா" ? வாருங்கள் அந்த அதிசய கோவிலில் அருள் புரியும் கந்தனை வணங்கலாம்.

    திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட  இராமலிங்கம் பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது.  அருள்மிகு ஸ்ரீ பாதாள செம்பு முருகன் 16 அடி ஆழத்தில் வலது கரத்தை தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள் பாவிக்கும் விதமாக அழகென்ற சொல்லுக்கு முருகா என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் சித்திரை நிலவு போன்று பிரகாசிக்கும் முகத்துடன் புன்னகையோடு, இடது கையில் வெற்றி வேலுடன் நின்ற கோளத்தில் அருள் பாவிக்கிறார். வசீகரத் தோற்றத்துடன் காணப்படும் முருகனின் அழகு திருமேனியை காண கண் கோடி வேண்டும். 

    காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரைமாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை. செம்பு முருகனை வழிபடலாம். செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு வழிபாடும் இங்கு நடைபெறுகிறது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்ட பின் சிறிது நேரம் அமர்ந்தால்” நம்மிடம் உள்ள மகாலட்சுமி அங்கேயே”தங்கி விடுவாளா ” ?

    இறைவனை வணங்குவதற்காக கோவிலுக்கு செல்லும் நம்மில் சிலர் கருவறை நோக்கி சென்றதும் உள்ளிருக்கும் இறைவனுக்கு நடக்கும் வழிபாடுகளை கண் குளிர பார்க்காமல், கண்களை மூடிக்கொண்டு இரு கரம் கூப்பி வணங்குவது முறையல்ல" நம் வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அதனை இறைவனை உற்று நோக்கி வணங்கியவரே" மனதுக்குள் வேண்டியவாறு முன் வைக்க வேண்டும், அதன் மற்ற பரிவார தெய்வங்களை வணங்கி விட்டு சிறிது நேரம் கோவிலுக்குள் அமைதியாக கண்களை மூடி தியானிக்க வேண்டும், இப்படி செய்தால் நம்மிடம் உள்ள மகாலட்சுமி அங்கேயே" தங்கி விடுவாள் என்ற தவறான எண்ணத்தின் காரணமாக வழிபாடு முடிந்த உடன் கோவிலை விட்டு வெளியேறுவது மிக மிக தவறு" பெருமாள் கோவிலாக இருந்தால் திவ்ய பிரபந்தம், அல்லது நாராயண நாமத்தை துதிக்க வேண்டும், சிவபெருமான் கோவிலாக இருந்தால் தேவாரம், திருவாசகம் அல்லது ஓம் நமச்சிவாய" ஓம் நமச்சிவாய"‌ என்ற மந்திரத்தை மனதுக்குள் உச்சரிக்க வேண்டும், இதன் மூலம், அங்கு நிலவும் அமைதியான சூழல் நம் மனதை  ஒருமைப் படுத்தி துன்பங்களை மறக்க செய்து மனம் அமைதி அடைகிறது. அங்கு ஒலிக்கும் மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் நமது மனதை தெளிவுபடுத்துவதுடன், மன அழுத்தத்தையும் குறைக்கின்றது. இதன் மூலம் தெளிவான வாழ்க்கை பாதை நமக்கு கிடைக்கும் என்பது திண்ணம்.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • அன்பிற்கு உண்டோ” அடைக்கும் தாழ்”

    நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்
    நாகத் தணையரங்கம் பேர் அன்பில்"
    நாகத் தணைப் பாற்கடல் கிடக்கு மாதி நெடுமால்
    அணைப் பார் கருத்தனாவான்." 
    என்று திருமழிசை ஆழ்வாரால்"  மங்களாசாசனம் பெற்ற
    அன்பில் அருள்மிகு ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள். 

    விஷ்ணு புராணமும் ஐந்தாவது திவ்ய தேசத்தின் பெருமையும் அறிவோம் வாருங்கள்.

    சுதபா மாமுனிவர் நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய தவ வலிமை பெற்றவர். மகாவிஷ்ணு மீது அதீத பக்தி கொண்ட இவர், ஒருமுறை பாற்கடலில் நீருக்கடியில் இறைவனை நோக்கி  தவம் புரிந்து கொண்டிருந்தார்.  அப்போது அவரைப் பார்க்க துர்வாசர் வந்தார். நீருக்குள் இருந்தமையால்,  சுதபா முனிவர், துர்வாசர் தன்னை தேடி வந்ததை அறியவில்லை.  இதனால் தான் அவமதிக்கப்பட்டதாக கருதிய துருவாசர்  கோபத்தில் அவரை நீருக்கடியில் வாழும் தவளையாக ஆகும்படி  சபித்துவிடுகிறார். அப்போது துர்வாசரிடமே சாப விமோசனம் குறித்து கேட்டார் சுதபா முனிவர். முற்பிறவியில் செய்த தீவினையின் காரணமாகவே"  இச்சாபம் கிடைத்தது எனவும்,  தகுந்த நேரத்தில் மகாவிஷ்ணுவின்  தரிசனம் கிடைக்க பெற்று சாப விமோசனம் ஏற்படும் என சுதபா  முனிவரிடம் துர்வாசர் கூறினார்.

    அதன்படி சுதபா முனிவர், மேலன் பில் உள்ள மண்டுக தீர்த்தம் (தவளை திருத்தத்தில்) புனித நீராடி" மகாவிஷ்ணுவை நோக்கி கடும் தவம் புரிந்தார். அவரது தவத்தின் வலிமையை கண்டு மனம் உருகிய திருமால் அன்பின் மிகுதியால் அவருக்கு சுந்தரராஜராக காட்சியளித்து அருளினார். இதனால் சுதபா முனிவர் சாப விமோசனம் பெற்றார்.

    என்பதும் மேலும் மற்றொரு திருமால் பெருமையாக'  இங்கு  ஒரு முறை பிரம்ம தேவனுக்கு உலகில் தான் மட்டுமே" மிக உயர்ந்தவன்.தன்னால்தான் அழகுடன் உயிரினங்கள் பிறக்கின்றன என்றஎண்ணம் மேலிட்டது. மேலும்  தன்னை யாரும் வணங்குவதில்லை என்ற தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டது. பிரம்மதேவனின்' இந்த மன  ஓட்டத்தை அறிந்த மகாவிஷ்ணு, பிரம்மனை எச்சரித்தார். அதன் பின்னும் தனது போக்கை மாற்றிக் கொள்ளாமல் செயல்பட்ட பிரம்மனுக்கு பாடம் புகட்ட  எண்ணி'   பூலோகத்தில் ஒரு சாதாரண மானிடன்னாக  பிறவி எடுக்குமாறு சபித்துவிட்டார்.  அப்போது மகாவிஷ்ணுவும் பேரழகு மானிடனாக பிரம்மன் முன் தோன்றினார். இதனால் வியந்து போன பிரம்மன் நம் படைப்பில் இது போன்ற ஒரு மானிடனை இதுவரை படைக்கவில்லையே"என நினைத்தவாறு"அந்தப் பேரழகனிடம் கேட்டபோது, பிரம்மனிடம் அழகு நிலையற்றது. ஆணவம் ஒருவரை அழிக்கக்கூடியது.

    இவை இரண்டையும் கொண்டிருக்கும் எவராலும் மேன்மையான வாழ்க்கையை வாழ முடியாது. என்று அறிவுரை செய்தார். இறைவனின் இந்த அறிவுரையை ஏற்று பிரம்ம தேவனும் தன் தவறை உணர்ந்து வழிபட்டான். அப்போது பள்ளி கொண்ட திருக்கோளத்தில் எம் பெருமான்" அன்பின் வடிவமாக எழுந்து அருளினார். 
    சுதபா மாமுனிவர், பிரம்மதேவன் ஆகியோரிடம் மிகுந்த அன்பு கொண்டு' திருமால் எழுந்தருளிய இடம்  என்பதால் ‘அன்பில்’என்ற பெயருடன் இத்திருக்கோயில் அழைக்கப்படுகிறது. 

    கருவறையில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி நாபியில் நான்கு முக பிரம்மா உடன் அன்பின் வடிவமாக கருணை புரியும் முகத்தோடு அருள் பாவிக்கிறார் அருள்மிகு ஸ்ரீ  சுந்தர்ராஜ பெருமாள். ஆண்டாள் தெற்கு அருள் புரிகிறாள்.மூலவர், அருள்மிகு ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள், உற்சவர், அருள்மிகு ஸ்ரீ வடிவழகிய நம்பி, தாயார், அருள்மிகு ஸ்ரீ அழகியவல்லி, தலவிருட்சம், தாழம்பூ, தீர்த்தம், மண்டுக தீர்த்தம் (தவளை) 108 திவ்விய தேச தலங்களில் 5 ஆம் திவ்ய தேசமான அன்பில்" திருச்சிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் இலால்குடியிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில்  மேலன்பில் என்ற இடத்தில் உள்ளது. திருமழிசை ஆழ்வாரால்" பாடப்பட்ட பெருமைக்குரிய இடமாகும்.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • கம்பன் கவி பாட அருள் புரிந்த அன்னை ஸ்ரீ காளி

    ஸ்ரீ ராமனின் காவியமான இராமாயணத்தை எழுதியவர் கம்பர். ராமாயண காவியத்தை இவர் உருவாக்க காரணமாக இருந்தவர் சடையப்ப வள்ளல், பிழைப்பு தேடி வந்த கம்பரையும், அவரது தாயாரையும் வீட்டிற்குள் அழைத்துச் சென்று உணவளித்து ஆதரவுகரம் நீட்டியவர். சடையப்ப வள்ளல் நாள்தோறும் தனது வயல்வெளிக்குச் சென்று விவசாய பணிகளை மேற்கொள்வார். அப்போது ஏரியின் வடமேற்கில் உள்ள வடமேற்கில் அருள் பாவிக்கும் அன்னை ஸ்ரீ காளிகாம்பாளை வணங்கி வழிபடுவார், கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்" என்பார்கள்.

    ஆனால்" அந்த கம்பன் கவி பாட அருள் புரிந்தவள் அன்னை ஸ்ரீ காளி. கம்பன் எழுதிய ராமாயண காவியம் உருவாக கருணை புரிந்தவள் இந்த ஸ்ரீ காளி தான். இவளது சன்னதியில் கம்பர் வால்மீகி ராமாயணத்தை மொழிபெயர்க்க வேண்டும், என விரும்பியவர். சடையப்பர் அதன்படி  இந்த இடத்தில் தான் வால்மீகி ராமாயணம் மொழிபெயர்க்கப்பட்டு, கம்பராமாயணம் உருவானது. கம்பர் வணங்கிய அன்னை ஸ்ரீ காளி கோவிலானது.  திருவெண்ணெய் நல்லூர் அருகே சின்ன சேவலை என்ற கிராமத்தில் உள்ளது, இங்கு விநாயகப் பெருமான், முருகன் ஆகியோர் இருபுறமும் வீற்றிருக்க' வெட்ட வெளியில் தனக்கான மேடை மீது அன்னை ஸ்ரீ காளி கிழக்கு நோக்கி காட்சி தருகிறாள்.  நான்கு அடி உயரத்தில் எட்டு கரங்களுடன் அன்னை ஸ்ரீ காளியின் திருமேனியானது ஞானத்தை ஊட்டும் அருள் வடிவாகும். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

    ஒன்பது நாட்கள் அன்னை ஸ்ரீ காளி கம்பளை பக்தியுடன் வழிபட்டு நெய் தீபம் ஏற்றி வந்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை, சோழ நாட்டு திருவெண்ணை நல்லூர் சடையப்ப வள்ளல் கம்பரை ஆதரித்தார். அப்போது முதலாம். குலோத்துங்க சோழன் கி.பி. 12ம் நூற்றாண்டில் கம்பரை ராமாயணம் எழுத வேண்டினான். அதற்காக, வடமொழி வான்மீகி ராமாயணத்தைக் கேட்டு, அதைக் தமிழில் மொழிபெயர்த்து எழுத சோழ நாட்டிலிருந்து, தொண்டை நாட்டிலுள்ள திருவொற்றியூர் வந்தார். அப்போது வடமொழி வான்மீகி ராமாயணத்தை கேட்டு அதைத் தமிழில் மொழிபெயர்த்து ஸ்ரீரங்கத்தில் கம்பன் அரங்கேற்றினார். என்ற மற்றொரு வரலாறும் கம்பராமாயணத்திற்கு உள்ளது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • சிங்கப்பூர் அரசின் தேசிய நினைவுச் சின்னமாக “தமிழ் கடவுள் முருகன் ” !

    சிங்கப்பூரில் அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் உள்ளது. தமிழகத்திலிருந்து 1823 ஆம், ஆண்டு சென்று' சிங்கப்பூரில் குடியேறிய நகரத்தார் குடும்பத்தினர். சிலர் ஒன்று சேர்ந்து.1860 ஆம் ஆண்டு முருகப்பெருமானுக்கு, அரசமரத்தடியில் குளக்கரையின் ஓரத்தில், வேல் ஒன்றை வைத்து வழிபட்டு வந்தனர்.

    அதன் பின் முருகனுக்கு சிறு சன்னதி அமைக்கப்பட்டு 1878 ஆம் ஆண்டு, விரிவாக்க பணிகள் தொடங்கப்பட்டன. படிப்படியாக அங்கு  ஜம்பு விநாயகர், மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், இடும்பன், தட்சிணா மூர்த்தி, பைரவர், மகா விஷ்ணு துர்க்கை,  மற்றும் நவக்கிரக சன்னிதிகளும் அமைக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக' ஐந்து கலசங்களுடன் 75 அடி உயர ராஜகோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

    அதனைக் கடந்து உள்ளே சென்றாள்.  மகா மண்டபமும் அதன் நேர் எதிரில் கருவறையில் மூலமூர்த்தியான முருகப்பெருமான் கருணையே வடிவாக  ‘தண்டாயுதபாணி’ என்ற திருநாமத்துடன் அருள் பாவிக்கிறார். தன்னை வேண்டி வரும், பக்தர்களின் வேதனைகளைப் போக்கி வேண்டுதலை நிறைவேற்றி அவர்களின் வாழ்க்கைத் தரும் உயர்ந்திட நல்லாசி புரிகிறார். தமிழ் கடவுள் ஆன" முருகப்பெருமானின் இந்த திருக்கோவிலானது, சிங்கப்பூர் அரசின் தேசிய நினைவுச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டு இருப்பது. இந்திய திருநாட்டிற்கு கிடைத்த பெரும் கௌரவமாகவே கருதப்படுகிறது. 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • காமத்தால் தலை குனிந்த பிரம்மதேவன்!

    காளிகா புராணத்தில் ரதி தேவி மன்மதன் இருவரைப் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது.  தக்ஷனின் மகளாக பிரம்ம லோகத்தில் பிறந்தவள்.ரதி தேவியின் பிறப்பு காம தேவனின்  பிறப்புடன் இணைந்து நிகழ்ந்தது. தன் கணவன் உயிர் பெற்று மீண்டும் எழ, ரதி தேவி சிவபெருமானை நோக்கி தவம் செய்த இடமே பூவாளூர். மன்மதன் உயிர்பெற்று எழுந்தமையால், மன்மதபுரம் என்ற பெயரும் இதற்கு  உண்டு.; ரதிதேவி இங்கு வழிபட்ட காரணத்தை அறிந்து கொள்வோம் வாருங்கள். 

    தேவலோகத்தில் ஒருமுறை, பிரம்மதேவன் தன் 10 பிரதிநிதிகளை படைத்து. சந்தியா என்ற அழகிய பெண்ணை உருவாக்கினான். சந்தியா பிரம்மலோகத்தில் பிறந்ததும், அவள் அழகில் மயங்கி பிரம்ம தேவனும் அவனது பிரதிநிதிகளும் வியப்பில் அசந்து நின்றனர். அப்போது பிரம்ம தேவனின் உள்ளத்தில் இருந்து  அழகிய ஆண் மகன் ஒருவன் தோன்றினான். அவனுக்கு பிரம்மன் காமன்' என பெயர் சூட்டினான். பின் பிரம்ம தேவனை வணங்கிய காமன்,  "தந்தையே, என்னை நீங்கள் உருவாக்கியதற்கான  காரணத்தை அறிய விரும்புகிறேன். காமன்  என பயிர் சூட்டினீர்கள்.

    என் கடமை என்ன என் துணை யார்" ? என்பதையும் கூறுங்கள்" என காமன் கேட்டான். அதற்கு பிரம்மதேவன்  "நீ என் காம விருப்பின் பரிபூரண வடிவாகத் தோன்றியவன். எனவே" நீ இனி காமத்தின் அதிபதியாக ஆட்சி புரிவாய்.  பூவுலகத்தில் உள்ள மானிடர்களின்  பிறப்பென்னும் ஆடல்" உன் காமக் கணைகளால் நிகழ வேண்டும்." என்றான் அவை மட்டுமல்ல,  "உன் காமக் கணைகளுக்கு ஈரேழு உலகத்தில் இருக்கும் எவராயினும் அதற்கு கட்டுப்பட்டவர்கள். மகாவிஷ்ணுவோ, சிவபெருமானோ, அல்லது நானாக இருந்தாலும், விதிவிலக்கு அல்ல, ஏழு லோகத்தில் உன்னை எதிர்க்கவோ" தடுக்கவோ" முடியாது" என்றார். அப்போது பிரம்ம தேவனின் படைப்பாற்றலை கண்டு, நெகிழ்ந்த பிரதிநிதிகள்  அவரை வணங்கினர். பின் பிரம்ம தேவனின் மனதில் இருந்து தோன்றியதால், காமனுக்கு'  'மன்மதன்’ எனப் பெயரிட்டனர். காமனிடம், "ஆண்களில் அழகானவனே உனக்கு எங்களில் மூத்தவரான தக்ஷர் தன் மகளை  உனக்கு துணைவியாக  அளிப்பார்" என வாழ்த்தினர். அப்போது. மன்மதன் தன் காம மலர் கணைகளை சோதிக்க விரும்பி  அதனை எதிரில் நின்ற' பிரம்மதேவன்.

    அவனது பிரதிநிதிகளிடம்  சோதிக்கலாம் என முடிவு செய்தான். அதன்படி தன் ஐந்து காம மலர்கணைகளை எடுத்து முதலில் பிரம்மதேவன் பின் மற்றவர்கள் மேல் தொடுத்தான். இதனால் அவர்கள்  காமம் முற்று' அங்கிருந்த சந்தியா தேவியை நோக்கினர். மன்மதன் தன் காம அம்புகளை சந்தியாதேவியின் மேல் தொடுத்தான்.  அவளின் காம இச்சை தூண்டப்பட்டு அவளின் உடலில் இருந்து 64 கலைகள் பிறக்க' பிரம்மதேவன் உள்ளிட்ட அனைவரும். கூடி இன்புற்றனர். பிரம்ம தேவனின் லீலைகள்  சந்தியாதேவியை மேலும் காமமுறச் செய்தன. சுயநிலை  மறந்து அவளும்  புணர்ந்தாள். பிரம்மதேவன் தன்னிலை மறந்து. காமத்தில் மிதப்பதை கைலாயத்தில் இருந்தபடி தன் ஞானத்தால் அறிந்த சிவபெருமான். பிரம்மலோகம் விரைந்தார். அங்கு பிரம்மதேவன்  மற்றும் அவனது பிரதிநிதிகளை தன் தண்டத்தால் அடித்து விளக்கினார். அப்போது சிவபெருமான் முன் நிலைகுலைந்து பிரம்மதேவன் தலை குனிந்து நின்றான். ஈசன் பிரம்மதேவனிடம்,  "தன் மகளையே புணரும் ஈன  காரியங்களை நீ எப்படி மனம் வந்து செய்யத் துணிந்தாய்" என கோபமாக கேட்டார். அதற்கு பிரம்மதேவன் நடந்துவற்றை விவரமாக எடுத்து சொன்னான். இதனிடையே"பிரம்மதேவன் சந்தியா தேவியுடன் இன்புற்றத்திற்கு, சாட்சியாக அவரின் உடலில் இருந்து சிந்திய  வேர்வைத் துளியிலிருந்து.

    64 ஆயிரம் அக்னிஸ்தவர்களும், நாற்பத்திஎட்டாயிரம் பிரதிநிதிகளும், மற்றும் பிரதிநிதியின்  உடலில் இருந்து தேவர்கள் தோன்றினார். பின் சிவபெருமானின் அறிவுரைகளை கேட்ட பிரம்மதேவன் மன்மதன் மேல்" கோபமுற்று' "என்னை ஈசன் முன் தலை குனிய செய்துவிட்டாய்" நீ இதனால்" ஈசனின்  நெற்றிக்கண்ணால் எரிக்கப்படுவாய்" என சாபமிட்டார். பின் ஆத்திரத்தில் தன் நாவில் இருந்து உதித்த சொல்லின் "தீமையை எண்ணியவாறு வருந்திய பிரம்மதேவன் பிரதிநிதிகளின் மூத்தவரான  தக்ஷரை அழைத்து. அவர் உடலில் இருந்து தோன்றிய ரதியை பெண் கேட்டார் அதன்படி, தக்ஷன் காமனுக்கு ரதி தேவியை திருமணம் செய்து கொடுத்தார். அப்போது பிரம்மதேவன். காமனிடம், பூலோகத்தில் இருவரும் " இன்பமும், காதலும் செழிக்கும் படி அழிவின்றி வாழ்வீர்கள். என்னால் ஏற்பட்ட சாபத்திற்கு ரதியால் விமோட்சனம் கிடைக்கும்." என இருவரையும் வாழ்த்தினார்.  வாழ்த்தைப் பெற்ற ரதியும், மன்மதனும் பூலோகம் சென்றனர்.  ஏற்கனவே" பிரம்மதேவன் கொடுத்த சாபத்தின் காரணமாக சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணால், காமனை எரித்தார்.

    இதனால்"   கணவனை இழந்த ரதிதேவி  கண்ணீர்விட்டு கதறி அழுதாள். கதறினாள். மன்மதன் உயிரை மீட்க சிவபெருமானை நோக்கி கடும் தவம் மேற்கொண்டாள். பிரம்ம தேவனும் ஆத்திரத்தில் தான் சாபம் இட்டதை நினைத்து தவித்தார். தனது மானசீக புதல்வனை இழந்த மகாவிஷ்ணு ஆகியோரும். சிவபெருமானிடம் சென்று ரதியின் நிலை குறித்து முறையிட்டனர்.  இதனால் மனம் இறங்கிய  சிவபெருமான் ரதிதேவியின் முன் தோன்றினார். ‘ அப்போது உன் கணவன் உன் கண்களுக்கு மட்டுமே தென்படுவான். மற்றவர் கண்களுக்கு அரூபமாகத் தோன்றுவான்' என ரதிதேவியிடம் கூறிய சிவபெருமான் மன் மதனை உயிர் பெற்று எழுச் செய்தார் என்கிறது திருமூலநாதர்  திருக்கோவில் வரலாறு, பிரம்ம புராணத்திலும், இது குறிப்பிடப்பட்டுள்ளது பூவாளியூர்’ என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி ‘பூவாளூர்’ என்றானது.  இங்குள்ள ரதிதேவி வழிபட்ட சுயம்புலிங்கமானது. அருள்மிகு ஸ்ரீ ‘திருமூலநாத சுவாமி’. எனவும், இறைவி பெயர் அருள்மிகு ஸ்ரீ குங்கும சவுந்தரி அம்பாள். என்றும் அழைக்கப்படுகின்றனர்.  இருப்பிடம்' திருச்சி மாவட்டம், லால்குடி நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில்  பூவாளூர் என்ற அமைந்துள்ளது இடத்தில் உள்ளது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்