காளிகா புராணத்தில் ரதி தேவி மன்மதன் இருவரைப் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது. தக்ஷனின் மகளாக பிரம்ம லோகத்தில் பிறந்தவள்.ரதி தேவியின் பிறப்பு காம தேவனின் பிறப்புடன் இணைந்து நிகழ்ந்தது. தன் கணவன் உயிர் பெற்று மீண்டும் எழ, ரதி தேவி சிவபெருமானை நோக்கி தவம் செய்த இடமே பூவாளூர். மன்மதன் உயிர்பெற்று எழுந்தமையால், மன்மதபுரம் என்ற பெயரும் இதற்கு உண்டு.; ரதிதேவி இங்கு வழிபட்ட காரணத்தை அறிந்து கொள்வோம் வாருங்கள்.
தேவலோகத்தில் ஒருமுறை, பிரம்மதேவன் தன் 10 பிரதிநிதிகளை படைத்து. சந்தியா என்ற அழகிய பெண்ணை உருவாக்கினான். சந்தியா பிரம்மலோகத்தில் பிறந்ததும், அவள் அழகில் மயங்கி பிரம்ம தேவனும் அவனது பிரதிநிதிகளும் வியப்பில் அசந்து நின்றனர். அப்போது பிரம்ம தேவனின் உள்ளத்தில் இருந்து அழகிய ஆண் மகன் ஒருவன் தோன்றினான். அவனுக்கு பிரம்மன் காமன்' என பெயர் சூட்டினான். பின் பிரம்ம தேவனை வணங்கிய காமன், "தந்தையே, என்னை நீங்கள் உருவாக்கியதற்கான காரணத்தை அறிய விரும்புகிறேன். காமன் என பயிர் சூட்டினீர்கள்.
என் கடமை என்ன என் துணை யார்" ? என்பதையும் கூறுங்கள்" என காமன் கேட்டான். அதற்கு பிரம்மதேவன் "நீ என் காம விருப்பின் பரிபூரண வடிவாகத் தோன்றியவன். எனவே" நீ இனி காமத்தின் அதிபதியாக ஆட்சி புரிவாய். பூவுலகத்தில் உள்ள மானிடர்களின் பிறப்பென்னும் ஆடல்" உன் காமக் கணைகளால் நிகழ வேண்டும்." என்றான் அவை மட்டுமல்ல, "உன் காமக் கணைகளுக்கு ஈரேழு உலகத்தில் இருக்கும் எவராயினும் அதற்கு கட்டுப்பட்டவர்கள். மகாவிஷ்ணுவோ, சிவபெருமானோ, அல்லது நானாக இருந்தாலும், விதிவிலக்கு அல்ல, ஏழு லோகத்தில் உன்னை எதிர்க்கவோ" தடுக்கவோ" முடியாது" என்றார். அப்போது பிரம்ம தேவனின் படைப்பாற்றலை கண்டு, நெகிழ்ந்த பிரதிநிதிகள் அவரை வணங்கினர். பின் பிரம்ம தேவனின் மனதில் இருந்து தோன்றியதால், காமனுக்கு' 'மன்மதன்’ எனப் பெயரிட்டனர். காமனிடம், "ஆண்களில் அழகானவனே உனக்கு எங்களில் மூத்தவரான தக்ஷர் தன் மகளை உனக்கு துணைவியாக அளிப்பார்" என வாழ்த்தினர். அப்போது. மன்மதன் தன் காம மலர் கணைகளை சோதிக்க விரும்பி அதனை எதிரில் நின்ற' பிரம்மதேவன்.
அவனது பிரதிநிதிகளிடம் சோதிக்கலாம் என முடிவு செய்தான். அதன்படி தன் ஐந்து காம மலர்கணைகளை எடுத்து முதலில் பிரம்மதேவன் பின் மற்றவர்கள் மேல் தொடுத்தான். இதனால் அவர்கள் காமம் முற்று' அங்கிருந்த சந்தியா தேவியை நோக்கினர். மன்மதன் தன் காம அம்புகளை சந்தியாதேவியின் மேல் தொடுத்தான். அவளின் காம இச்சை தூண்டப்பட்டு அவளின் உடலில் இருந்து 64 கலைகள் பிறக்க' பிரம்மதேவன் உள்ளிட்ட அனைவரும். கூடி இன்புற்றனர். பிரம்ம தேவனின் லீலைகள் சந்தியாதேவியை மேலும் காமமுறச் செய்தன. சுயநிலை மறந்து அவளும் புணர்ந்தாள். பிரம்மதேவன் தன்னிலை மறந்து. காமத்தில் மிதப்பதை கைலாயத்தில் இருந்தபடி தன் ஞானத்தால் அறிந்த சிவபெருமான். பிரம்மலோகம் விரைந்தார். அங்கு பிரம்மதேவன் மற்றும் அவனது பிரதிநிதிகளை தன் தண்டத்தால் அடித்து விளக்கினார். அப்போது சிவபெருமான் முன் நிலைகுலைந்து பிரம்மதேவன் தலை குனிந்து நின்றான். ஈசன் பிரம்மதேவனிடம், "தன் மகளையே புணரும் ஈன காரியங்களை நீ எப்படி மனம் வந்து செய்யத் துணிந்தாய்" என கோபமாக கேட்டார். அதற்கு பிரம்மதேவன் நடந்துவற்றை விவரமாக எடுத்து சொன்னான். இதனிடையே"பிரம்மதேவன் சந்தியா தேவியுடன் இன்புற்றத்திற்கு, சாட்சியாக அவரின் உடலில் இருந்து சிந்திய வேர்வைத் துளியிலிருந்து.
64 ஆயிரம் அக்னிஸ்தவர்களும், நாற்பத்திஎட்டாயிரம் பிரதிநிதிகளும், மற்றும் பிரதிநிதியின் உடலில் இருந்து தேவர்கள் தோன்றினார். பின் சிவபெருமானின் அறிவுரைகளை கேட்ட பிரம்மதேவன் மன்மதன் மேல்" கோபமுற்று' "என்னை ஈசன் முன் தலை குனிய செய்துவிட்டாய்" நீ இதனால்" ஈசனின் நெற்றிக்கண்ணால் எரிக்கப்படுவாய்" என சாபமிட்டார். பின் ஆத்திரத்தில் தன் நாவில் இருந்து உதித்த சொல்லின் "தீமையை எண்ணியவாறு வருந்திய பிரம்மதேவன் பிரதிநிதிகளின் மூத்தவரான தக்ஷரை அழைத்து. அவர் உடலில் இருந்து தோன்றிய ரதியை பெண் கேட்டார் அதன்படி, தக்ஷன் காமனுக்கு ரதி தேவியை திருமணம் செய்து கொடுத்தார். அப்போது பிரம்மதேவன். காமனிடம், பூலோகத்தில் இருவரும் " இன்பமும், காதலும் செழிக்கும் படி அழிவின்றி வாழ்வீர்கள். என்னால் ஏற்பட்ட சாபத்திற்கு ரதியால் விமோட்சனம் கிடைக்கும்." என இருவரையும் வாழ்த்தினார். வாழ்த்தைப் பெற்ற ரதியும், மன்மதனும் பூலோகம் சென்றனர். ஏற்கனவே" பிரம்மதேவன் கொடுத்த சாபத்தின் காரணமாக சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணால், காமனை எரித்தார்.
இதனால்" கணவனை இழந்த ரதிதேவி கண்ணீர்விட்டு கதறி அழுதாள். கதறினாள். மன்மதன் உயிரை மீட்க சிவபெருமானை நோக்கி கடும் தவம் மேற்கொண்டாள். பிரம்ம தேவனும் ஆத்திரத்தில் தான் சாபம் இட்டதை நினைத்து தவித்தார். தனது மானசீக புதல்வனை இழந்த மகாவிஷ்ணு ஆகியோரும். சிவபெருமானிடம் சென்று ரதியின் நிலை குறித்து முறையிட்டனர். இதனால் மனம் இறங்கிய சிவபெருமான் ரதிதேவியின் முன் தோன்றினார். ‘ அப்போது உன் கணவன் உன் கண்களுக்கு மட்டுமே தென்படுவான். மற்றவர் கண்களுக்கு அரூபமாகத் தோன்றுவான்' என ரதிதேவியிடம் கூறிய சிவபெருமான் மன் மதனை உயிர் பெற்று எழுச் செய்தார் என்கிறது திருமூலநாதர் திருக்கோவில் வரலாறு, பிரம்ம புராணத்திலும், இது குறிப்பிடப்பட்டுள்ளது பூவாளியூர்’ என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி ‘பூவாளூர்’ என்றானது. இங்குள்ள ரதிதேவி வழிபட்ட சுயம்புலிங்கமானது. அருள்மிகு ஸ்ரீ ‘திருமூலநாத சுவாமி’. எனவும், இறைவி பெயர் அருள்மிகு ஸ்ரீ குங்கும சவுந்தரி அம்பாள். என்றும் அழைக்கப்படுகின்றனர். இருப்பிடம்' திருச்சி மாவட்டம், லால்குடி நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் பூவாளூர் என்ற அமைந்துள்ளது இடத்தில் உள்ளது.
பொன்.கோ.முத்து திருவள்ளூர்