Author: cmsadmin

  • மேஷ ராசி பலன் ஜூன் 2026: தடைகளைத் தகர்த்து சரித்திரம் படைக்கப் போறீங்க!

    கிரகநிலை:
    ராசியில் செவ்வாய் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் – தைரிய வீரிய ஸ்தானத்தில்  புதன், சுக்ரன் – சுக ஸ்தானத்தில் குரு – பஞ்சம ஸ்தானத்தில் கேது – அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் – லாப ஸ்தானத்தில்  ராஹூ – அயன சயன போக ஸ்தானத்தில்  சனி என கிரக நிலைகள் உள்ளன.
    கிரகமாற்றங்கள்:

    09-06-2026  அன்று சுக்ர பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    14-06-2026 அன்று சூரிய பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    19-06-2026 அன்று செவ்வாய் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:
    வீரத்தின் விளைநிலமான தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் அவசிய செலவுகளை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். குடும்பத்திற்கு தளபதியாக விளங்குவீர்கள். நல்ல செயல்களைச் செய்து சிறப்படைவீர்கள். குடும்பத்திலும் சிறு சலசலப்புகள் ஏற்படும். வெளியில் கொடுத்திருந்த பணம் கைக்கு திரும்பி வரத் தாமதமாகும். இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்கு சிறிது கடன் வாங்க நேரிடலாம்.
            
    தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். நவீன பொருட்களை வாங்கி இல்லத்தை அலங்கரிப்பீர்கள். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்கும் உதவி செய்து பெருமையடைவீர்கள். மற்றபடி அலைச்சல் தரும் வேலைகளைக் குறைத்துக்கொள்ளவும். அனாவசியப் பயணங்களையும் தவிர்க்கவும்.

    உத்யோகஸ்தர்களுக்கு அலைச்சலும் வேலைப்பளுவும் அதிகரித்தாலும் உங்கள் வேலைகள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறும். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். 

    அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். இதனால் உங்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். எதிரிகளும் உங்களிடம் அடங்கியே நடப்பார்கள்.

    கலைத்துறையினரைத் தேடிப் புதிய  ஒப்பந்தங்கள் வரும்.ஆனாலும் ரசிகர்களின் ஆதரவு குறைந்தே காணப்படும். எனவே ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்து அவர்களை உற்சாகப்படுத்தவும். தொழிலில் கவனமும், செயல்பாட்டில் நிதானமும் தேவை.

    பெண்மணிகளுக்கு குழந்தைகளால் பெருமை உண்டாகும். அதேசமயம் கணவருடன் வாக்கு வாதங்கள் ஏற்படலாம். அதனால் பொறுப்புடனும், நிதானத்துடனும் நடந்துகொள்ளவும். மற்றபடி பொருளாதார நிலையில் எந்தக் குறைவும் ஏற்படாது. எனவே ஆடை , அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    மாணவமணிகள் படிப்பில் கவனத்துடன் ஈடுபடவும். சிலர் முதல் தரம் வாங்குவார்கள். விளையாட்டிலும் வெற்றி பெறுவார்கள்.

    அஸ்வினி:
    இந்த மாதம் காரியத்தடைகள் நீங்கி அனுகூலம் பிறக்கும். மதிப்பு மரியாதை சுமாராகவே இருக்கும். வீண் விவாதங்களைத்  தவிர்க்கவும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். 

    பரணி:
    இந்த மாதம் புதிய வீடு வாங்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே  அன்பு நீடிக்கும். என்றாலும் ஒருவருக்கொருவர் விட்டுக்  கொடுத்துப் போகவும். 

    கார்த்திகை:
    இந்த மாதம் உறவினர் வகையில் அதிக நெருக்கம் வேண்டாம். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய  நேரிடலாம். தூரத்தில் இருக்கும் உறவினரால் நன்மை ஏற்படும். 

    பரிகாரம்: செவ்வாய்கிழமைதோறூம் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வரவும். உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28
    அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21

  • தமிழ் கடவுள் முருகனின் 50 அழகிய பெயர்கள்

    தமிழ் கடவுள் முருகனின் 100 அழகிய பெயர்கள்

    முருகன் என்ற சொல்லுக்கு 'அழகு' என்று பொருள். அந்த அழகன் முருகனின் திருநாமங்களில் உங்கள் குழந்தைக்குப் பெயர் சூட்ட இதோ 50 சிறந்த பெயர்கள்:

           
    1 சக்திபாலன்    
    2 சரவணன்    
    3 சுப்ரமண்யன்    
    4 குருபரன்    
    5 கார்த்திகேயன்    
    6 சுவாமிநாதன்    
    7 தண்டபாணி    
    8 குக அமுதன்    
    9 பாலசுப்ரமணியம்    
    10 நிமலன்    
    11 கருணாகரன்    
    12 சேனாபதி    
    13 குகன்    
    14 சித்தன்    
    15 கதிர் வேலன்    
    16 கருணாலயன்    
    17 திருபுரபவன்    
    18 பேரழகன்    
    19 கந்தவேல்    
    20 முத்துக் குமரன்    
    21 உதயகுமாரன்    
    22 வெற்றிவேல்    
    23 ஆறுமுகம்    
    24 ஸ்கந்தகுரு    
    25 பாலமுருகன்    
       
    26 பரமகுரு
    27 உமையாலன்
    28 தமிழ்செல்வன்
    29 சுதாகரன்
    30 சத்குணசீலன்
    31 சந்திரமுகன்
    32 அமரரேசன்
    33 மயூரவாஹனன்
    34 செந்தில் குமார்
    35 சிவகுமார்
    36 ரத்னதீபன்
    37 லோகநாதன்
    38 தீனரீசன்
    39 சண்முகலிங்கம்
    40 குமரகுரு
    41 முத்துக்குமரன்
    42 அழகப்பன்
    43 தமிழ்வேல்
    44 மருதமலை
    45 வேலன்
    46 குகானந்தன்
    47 பழனிநாதன்
    48 தேவசேனாபதி
    49 தீஷிதன்
    50 கிருபாகரன்
  • கரூர் கோயில் நில விவகாரம் – ரூ.1,850 கோடி சொத்தை மீட்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    கோயில் நிலங்கள் வெறும் வணிகச் சொத்துக்கள் அல்ல; அவை தலைமுறைகளைத் தாண்டி வழிபாட்டு முறைகளைத் தொடர்வதற்கான புனிதமான அறக்கட்டளைச் சொத்துக்கள் எனத் தீர்ப்பில் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. 1986-ல் 5.25 லட்சம் ஏக்கராக இருந்த கோயில் நிலங்கள், 2008-ல் 4.78 லட்சம் ஏக்கராகக் குறைந்திருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், இது வெறும் எழுத்துப் பிழை அல்ல, மாறாக அமைப்பு ரீதியான அலட்சியம் என்று விமர்சித்துள்ளது.

    நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை அமல்படுத்தாமல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை மீதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 230 ஆக்கிரமிப்பாளர்களில், அரசு அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் பலரும் அடங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து, நீதிமன்றம் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது:

    உடனடி வெளியேற்றம்: சட்டப்பிரிவு 78-ன் கீழ் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

    சிவில் வழக்குகள்: தனிநபர் பட்டாக்கள் உள்ள நிலங்களுக்கு, கோயில் நிர்வாகம் 3 மாதங்களுக்குள் சிவில் வழக்குகளைத் தொடர வேண்டும்; அவை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்.

    ஆவணங்கள்: 1912-ஆம் ஆண்டு நில அளவை ஆவணங்களை 2 மாதங்களுக்குள் ஒப்படைக்க வேண்டும்.

    இந்த விவகாரத்தில் தாமதத்திற்குப் பொறுப்பேற்கச் செய்யும் வகையில், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் முன்னாள் கோயில் அதிகாரிகளை இவ்வழக்கில் நீதிமன்றம் இணைத்துள்ளது.

  • கரூர் கோயில் நில விவகாரம் – ரூ.1,850 கோடி சொத்தை மீட்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    கோயில் நிலங்கள் வெறும் வணிகச் சொத்துக்கள் அல்ல; அவை தலைமுறைகளைத் தாண்டி வழிபாட்டு முறைகளைத் தொடர்வதற்கான புனிதமான அறக்கட்டளைச் சொத்துக்கள் எனத் தீர்ப்பில் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. 1986-ல் 5.25 லட்சம் ஏக்கராக இருந்த கோயில் நிலங்கள், 2008-ல் 4.78 லட்சம் ஏக்கராகக் குறைந்திருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், இது வெறும் எழுத்துப் பிழை அல்ல, மாறாக அமைப்பு ரீதியான அலட்சியம் என்று விமர்சித்துள்ளது.

    நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை அமல்படுத்தாமல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை மீதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 230 ஆக்கிரமிப்பாளர்களில், அரசு அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் பலரும் அடங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து, நீதிமன்றம் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது:

    உடனடி வெளியேற்றம்: சட்டப்பிரிவு 78-ன் கீழ் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

    சிவில் வழக்குகள்: தனிநபர் பட்டாக்கள் உள்ள நிலங்களுக்கு, கோயில் நிர்வாகம் 3 மாதங்களுக்குள் சிவில் வழக்குகளைத் தொடர வேண்டும்; அவை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்.

    ஆவணங்கள்: 1912-ஆம் ஆண்டு நில அளவை ஆவணங்களை 2 மாதங்களுக்குள் ஒப்படைக்க வேண்டும்.

    இந்த விவகாரத்தில் தாமதத்திற்குப் பொறுப்பேற்கச் செய்யும் வகையில், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் முன்னாள் கோயில் அதிகாரிகளை இவ்வழக்கில் நீதிமன்றம் இணைத்துள்ளது.

  • மிதுனம் : மார்ச் மாதம் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்! அனைத்திலும் நல்லது நடக்கும்!

    மிதுனம்

     

     (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

     

    கிரகநிலை:

     

    ராசியில் குரு() – தைரிய வீரிய ஸ்தானத்தில் கேதுஅஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன்  – பாக்கிய ஸ்தானத்தில் புதன், சனி, ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.

     

    கிரகமாற்றம்:

     

    07.02.2026 அன்று சுக்கிரன் பகவான் அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    13.02.2026 அன்று சூரியன் பகவான் அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    21.02.2026 அன்று செவ்வாய் பகவான் அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    பலன்:

     

    இந்த காலகட்டத்தில் ராசிநாதன் புதனின் சஞ்சாரத்தால் ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும். பேச்சை கடுமை அதிகரிக்கலாம். மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப்பளு இருக்கும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. ராசிக்கு இரண்டில் செவ்வாய் சுக்கிரனுடன் சஞ்சாரம் செய்வதால் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மை தரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை. பெண்களுக்கு வீண் பேச்சை குறைப்பது நல்லது. கலைத்துறையினருக்கு பொருளாதார நிலை உயரும். அரசியல்துறையினருக்கு எடுக்கும் காரியங்களை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை. பாடங்களை படிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள்.

     

     

    பரிகாரம்: பெருமாளை வணங்கி வர முன்ஜென்ம பாவம் நீங்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: புதன்வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள்: பிப்ர 15, 16, 17

    அதிர்ஷ்ட தினங்கள்: பிப்ர 22, 23

     

  • ரிஷபம்: மார்ச் மாதம் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்! அனைத்திலும் நல்லது நடக்கும்!

    ரிஷபம்
     

    (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

     

    கிரகநிலை:

     

    தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  குரு (வ)  – தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் – சுக ஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன், புதன் (வ), சனி, ராஹூ, செவ்வாய் – என கிரக நிலைகள் உள்ளன.

     

    கிரகமாற்றங்கள்:

     

    03-03-2026  அன்று சுக்ர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    06-03-2026  அன்று சனி பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    13-03-2026 அன்று புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

    14-03-2026  அன்று சூர்ய பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    27-03-2026  அன்று சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    பலன்:

     

    தனது நேர்மையான உணர்வுகளால் வாழ்வில் வெற்றி பெறும் ரிஷப ராசிக்காரர்களே இந்த மாதம் பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை  வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

    தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி சொல்லிய ஒரு வேலையை முடிக்க அலைந்து திரிய வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.

    குடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே  பழைய விஷயம் ஒன்றால் வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும்.ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை.

    பெண்களுக்கு எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை  தவிர்ப்பதும் நல்லது.

    அரசியல்வாதிகள் வாக்கு வன்மை அதிகரிக்கும். பேசி சில காரியங்களைச் சாதிக்க முற்படுவீர்கள். சில முக்கிய முடிவுகளை எடுக்கும் சூழ்நிலை உருவாகும்.

    கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். செய்து கொண்டிருக்கும் வேலைகள் மிகச் சிறப்பாக நடந்து முடியும்.

    மாணவர்களுக்கு வீண் அலைச்சலை தவிர்ப்பதும், பாடங்களில் சந்தேகம் நீங்கி படிப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும்.

     

     

    கார்த்திகை – 2, 3, 4:

    இந்த மாதம் உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது. பணம் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபடும் போது கவனத்துடன் இருப்பது நல்லது. வாழ்க்கை தரம் உயரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எல்லாவற்றிலும் மனகவலை ஏற்படும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை.

     

     

    ரோகினி:

    இந்த மாதம் தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம்.  திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எதிர்பாராத செலவு உண்டாகும். மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல்நலத்தில் கவனம் தேவை.

     

    மிருகசீரிஷம் – 1, 2:

    இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் கவனமாக இருப்பது  லாபம் அதிகரிக்க செய்யும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.

     

     

    பரிகாரம்: துர்க்கை அம்மனை வெள்ளிக்கிழமையில் அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும். காரிய தடை அகலும்.

    சந்திராஷ்டம தினங்கள்: 19, 20

    அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13

  • மேஷம் : மார்ச் மாதம் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்! அனைத்திலும் நல்லது நடக்கும்!

    மேஷம்

    கிரகநிலை:

    தைரிய வீரிய ஸ்தானத்தில்  குரு (வ)  – சுக ஸ்தானத்தில் சந்திரன் – பஞ்சம ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன், புதன் (வ), சனி, ராஹூ, செவ்வாய் – என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றங்கள்:

    03-03-2026  அன்று சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    06-03-2026  அன்று சனி பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    13-03-2026 அன்று புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

    14-03-2026  அன்று சூர்ய பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    27-03-2026  அன்று சுக்ர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

    பலன்:

    பிறர் குற்றங்களை எளிதில் மன்னிக்கும் குணமுடைய மேஷ ராசிக்காரர்களே இந்த மாதம் திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். மனதில் இருக்கும் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். முக்கியமான பணிகள் துரிதமாக நடக்கும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது.

    உடல் ஆரோக்கியம் அடையும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடின உழைப்புக்குபின் முனனேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஆர்டர் வந்து சேரும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள்.

    குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிøடேய நெருக்கம் உண்டாகும். சகோதரர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும்.

    பெண்களுக்கு:முக்கியமான  வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்சனைகளை கண்டால் ஒதுங்கி சென்று விடுவது நல்லது.

    அரசியல்வாதிகள் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக யோசித்து செயல்பட்டால் காரியங்களை சாதித்துக் கொள்ளலாம். உங்கள் கட்சி பிரச்சனைகள் குடும்ப சந்தோஷத்தை கெடுக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

    கலைத்துறையினர் வாக்கு சாதுர்யத்தால் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். பணம் எதிர்பார்த்த இடத்தில் இருந்து வந்து சேரும்.

    மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணகூடுதலாக உழைக்க  வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

     

    அசுபதி:

    இந்த மாதம் மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகலாம். எந்த காரியத்தையும் ஆலோசித்து செய்வது நல்லது. ஆன்மீக போக்கு மனதிற்கு நிம்மதியைத் தரும். மேலிடத்தில் கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள்.

    பரணி:

    இந்த மாதம் அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

    கார்த்திகை 1:

    இந்த மாதம் எதிர்காலத்திற்குத் தேவையான முறையான சேமிப்புகளுக்குண்டான ஏற்பாடுகளை செய்வீர்கள். எதிரிகளின் இன்னல்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். இருந்து வந்த நீண்ட நாள் வேலைகளை முழுமூச்சுடன் முடிப்பீர்கள்.

     

    பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வணங்குவதால்  வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.

    சந்திராஷ்டம தினங்கள்: 17, 18

    அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10, 11

     

  • பம்பையில் நீராடுவது முதல் ஐயப்பனைத் தரிசிப்பது வரை நீங்கள் செய்ய வேண்டியவை!

    சபரிமலை பயணம்: பம்பையில் நீராடுவது முதல் ஐயப்பனைத் தரிசிப்பது வரை நீங்கள் செய்ய வேண்டியவை!

     

    கேரளாவின் புண்ணிய நதியான பம்பை, சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்கச் செல்லும் கோடிக்கணக்கான பக்தர்களின் பாவங்களைப் போக்கும் ஒரு புனிதத் தீர்த்தமாகும். "தட்சிண கங்கை" என்று போற்றப்படும் இந்த ஆற்றின் கரையில்தான், பந்தள இளவரசன் மணிகண்டன் மகிஷியை வதம் செய்துவிட்டு, தவம் புரிந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. எனவே, பம்பையில் நீராடுவது என்பது வெறும் உடல் தூய்மை மட்டுமல்ல, அது ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் ஒரு தெய்வீகச் சடங்காகும்.

    பம்பை நதி நீராடல் மற்றும் வழிபாட்டு முறைகள்:

    சபரிமலை யாத்திரையில் பம்பை நதிக்கு ஒரு தனித்துவமான இடம் உண்டு. மலை ஏறுவதற்கு முன்னதாக, பக்தர்கள் தங்களது இருமுடியைத் தலையில் சுமந்தபடி ஐயப்ப மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு ஆற்றில் இறங்க வேண்டும். ஆற்றில் மூன்று முறை முழ்கி எழுந்து, பின்னர் கரையில் நின்று சூரிய நமஸ்காரம் செய்வது மிக முக்கியமான சடங்காகும். அதன் பிறகு, ஈர ஆடையுடன் கரையில் அமர்ந்து தியானம் செய்வதும், விபூதி மற்றும் குங்குமம் அணிந்து 'சுவாமி சரணம்' என முழக்கமிடுவதும் பக்தர்களுக்கு மனவலிமையைத் தரும். மேலும், பம்பையின் காவல் தெய்வங்களுக்கு நைவேத்தியம் படைத்து, அர்ச்சனை செய்வது பாதுகாப்பான பயணத்திற்கு அடித்தளமிடும்.

    விரத முறைகளும் பயணத் தயாரிப்புகளும்:

    ஐயப்பனின் அருளைப் பெற 41 நாட்கள் கடும் விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த காலத்தில் கருப்பு அல்லது நீல நிற ஆடை அணிந்து, புலால் உணவைத் தவிர்த்து, மனக்கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம்.

    • இருமுடி கட்டு: குருசாமியின் முன்னிலையில் நெய் தேங்காய் மற்றும் பூஜை பொருட்களைக் கொண்டு இருமுடி கட்டைத் தயார் செய்ய வேண்டும்.

    • அத்தியாவசியப் பொருட்கள்: மாற்றுத் துணிகள், குளிருக்குத் தேவையான உடைகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளைத் தயாராக வைத்துக்கொள்வது நல்லது.

    நீலிமலை முதல் பதினெட்டாம் படி வரை:

    பம்பையில் இருந்து தொடங்கும் மலையேற்றம் என்பது ஒரு வாழ்வியல் பாடமாகும். கருப்பசாமி சன்னதி மற்றும் வாவர் சன்னதியில் தரிசனம் செய்த பிறகு, செங்குத்தான நீலிமலைப் பாதையில் ஏறும்போது உடல் சோர்வு ஏற்படலாம். அந்த தருணத்தில் "சுவாமி சரணம்" என்ற கோஷம் மட்டுமே பக்தர்களுக்கு ஊக்கமளிக்கும் மருந்தாகும். சரங்குத்தி பகுதியில் சரணக்கோல் நட்டு, பின்னர் புனிதமான பதினெட்டாம் படியை அடையலாம். ஒவ்வொரு படியிலும் விழுந்து வணங்கி, பதினெட்டாம் படியேறுவது ஒரு பக்தனின் பிறவிப் பயனை அடையச் செய்யும் உன்னத தருணமாகும்.

    சன்னிதான தரிசனமும் அதன் பலன்களும்:

    சன்னிதானத்தை அடைந்ததும், நெய் அபிஷேகம் செய்து மணிகண்டனைத் தரிசிப்பது பெரும் பாக்கியம். அங்கு வழங்கப்படும் அரவணப் பிரசாதம் மற்றும் விபூதி ஆகியவை புனிதமாகக் கருதப்படுகிறது. இந்த யாத்திரையை முடித்துத் திரும்பும்போதும் மீண்டும் பம்பையில் நீராடி இறைவனுக்கு நன்றி தெரிவிப்பது மரபு. இத்தகைய முறையான யாத்திரையை மேற்கொள்வதன் மூலம் ஒருவருக்கு மன அமைதி கிடைப்பதோடு, குடும்பத்தில் ஒற்றுமை பெருகி, தீராத நோய்கள் விலகும் என்பது ஐயப்ப பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

  • கண் திருஷ்டியால் கஷ்டப்படுகிறீர்களா? தீய சக்திகளை விரட்ட இதோ சிறந்த வழிமுறைகள்!

    கண் திருஷ்டியால் கஷ்டப்படுகிறீர்களா? தீய சக்திகளை விரட்ட இதோ சிறந்த வழிமுறைகள்!

    கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது" என்பது பழமொழி. ஒருவருடைய தீய எண்ணம் கலந்த பார்வையோ அல்லது அதீத பொறாமையோ மற்றவர் மீது படும்போது, அது அந்த நபரின் உடல்நலம், செல்வம் மற்றும் நிம்மதியைப் பாதிக்கும் என்பதே 'கண் திருஷ்டி'  எனப்படும் நம்பிக்கை. நவீன காலத்தில் இது 'எதிர்மறை ஆற்றல்' என்று அழைக்கப்படுகிறது.

    கண் திருஷ்டியின் அறிகுறிகள்

    உங்கள் வாழ்க்கையில் திடீரென பின்வரும் மாற்றங்கள் ஏற்பட்டால், அது திருஷ்டியின் தாக்கமாக இருக்கலாம்:

    • காரணமே இல்லாமல் உடல் சோர்வு மற்றும் தலைவலி ஏற்படுவது.

    • சுறுசுறுப்பாக இயங்கிய தொழிலில் திடீர் நஷ்டம் அல்லது முடக்கம்.

    • குடும்ப உறுப்பினர்களுக்குள் தேவையற்ற வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகள்.

    • குழந்தைகளுக்குத் தொடர் அழுகை அல்லது பால் குடிக்க மறுப்பது.

    திருஷ்டியை முறியடிக்கும் ஆன்மீக மற்றும் பாரம்பரிய பரிகாரங்கள்

    1. கல் உப்பு மற்றும் நீர் பரிகாரம் உப்புக்கு தீய சக்திகளை ஈர்க்கும் குணம் உண்டு. பாதிக்கப்பட்ட நபரை கிழக்கு நோக்கி அமர வைத்து, ஒரு கைப்பிடி கல் உப்பை எடுத்து தலையை மூன்று முறை வலப்புறமாகவும், மூன்று முறை இடப்புறமாகவும் சுற்றி, அதை ஓடும் நீரில் கரைக்க வேண்டும். இது உடலில் தேங்கியுள்ள எதிர்மறை ஆற்றலை நீக்கும்.

    2. மஞ்சள் மற்றும் துளசியின் மகிமை மஞ்சள் ஒரு சிறந்த கிருமிநாசினி மட்டுமல்ல, அது மங்களத்தின் அடையாளம். வீட்டின் நிலவாசல் படியில் மஞ்சள் பூசி வைப்பதன் மூலம் தீய சக்திகள் உள்ளே நுழைவதைத் தடுக்கலாம். அதேபோல், வீட்டில் துளசிச் செடி வளர்ப்பது காற்றைத் தூய்மைப்படுத்துவதுடன், திருஷ்டிப் பார்வையைத் திசைதிருப்பும்.

    3. எலுமிச்சை மற்றும் மிளகாய் காப்பு கடைகள் மற்றும் வீட்டின் நுழைவாயிலில் ஏழு பச்சை மிளகாய், ஒரு எலுமிச்சை மற்றும் ஒரு சிறு கரிக்கட்டை ஆகியவற்றை ஒன்றாகக் கோர்த்துத் தொங்கவிடுவது வழக்கம். இது மற்றவர்களின் கூர்மையான பார்வையை ஈர்த்து, அதன் தீய வீரியத்தை நீர்த்துப்போகச் செய்யும்.

    4. குங்குமம் மற்றும் காப்பு அணிதல் திருஷ்டி விலக நெற்றியில் திலகம் (இட்டுக் கொள்ளுதல்) இடுவது ஒரு பாதுகாப்பு வளையமாகச் செயல்படும். குறிப்பாக குழந்தைகளுக்கு கருப்புப் பொட்டு வைப்பதும், பெரியவர்கள் கையில் கருப்பு கயிறு அல்லது காப்பு அணிவதும் தீய பார்வையில் இருந்து காக்கும் ஒரு கவசமாகும்.

    மனரீதியான தீர்வுகள் மற்றும் வாழ்க்கை முறை

    ஆன்மீகப் பரிகாரங்களுடன் நாம் சில நடைமுறை மாற்றங்களையும் செய்வது நல்லது:

    • வெற்றியை ரகசியமாக வைத்திருங்கள்: ஒரு காரியம் முழுமையாக முடியும் வரை அதை வெளியில் பகிராமல் இருப்பது பொறாமைப் பார்வைகளைத் தவிர்க்கும்.

    • நேர்மறைச் சிந்தனை : தினமும் தியானம் செய்வது அல்லது இஷ்ட தெய்வத்தை வழிபடுவது உங்கள் 'ஆரா' (Aura) எனப்படும் ஒளிவட்டத்தைப் பலப்படுத்தும்.

    • எளிமை: அதீத ஆடம்பரத்தைக் குறைத்து எளிமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது மற்றவர்களின் கண்கள் உங்கள் மீது படுவதைக் குறைக்கும்.
       

  • குடும்ப அமைதி வேண்டுமா? இதோ சில எளிய வழிமுறைகள்!

    குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலைக்கச் செய்யும் எளிய ஆன்மீக ரகசியங்கள்!

    ஒரு மனிதனின் வாழ்நாள் சாதனைகள் அனைத்தும் அவனது இல்லத்தில் நிலவும் அமைதியைப் பொறுத்தே அமைகின்றன. குடும்பத்தில் சச்சரவுகள் இருந்தால், அது மன அழுத்தத்தை உருவாக்குவதோடு, தொழில் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சியையும் நேரடியாகப் பாதிக்கும். நம் முன்னோர்கள் வகுத்துத் தந்த எளிய வாஸ்து மற்றும் வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், வீட்டிலுள்ள எதிர்மறை ஆற்றல்களை நீக்கி, நேர்மறை அதிர்வுகளை அதிகரிக்க முடியும். குறிப்பாக, வீட்டின் ஈசான்ய மூலையான வடகிழக்குப் பகுதியைச் சுத்தமாக வைத்து அங்கே நீர் சம்பந்தப்பட்ட பொருட்களை வைப்பதும், கிழக்கு திசையில் தெய்வப் படங்களை வைத்து வணங்குவதும் குடும்பத்தில் பொருளாதார மேன்மையையும், மன நிம்மதியையும் கொண்டு வரும்.

    ஆன்மீக ரீதியாகப் பார்க்கும்போது, தினமும் காலையில் குலதெய்வத்தை மனதாரப் பிரார்த்தனை செய்வதும், மாலை வேளையில் வீட்டின் நிலைவாசலில் தீபமேற்றுவதும் மகாலட்சுமியின் அருளைப் பெற்றுத் தரும். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு எள் தீபமேற்றி, சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது குடும்பத்தில் நிலவும் தேவையற்ற பகை மற்றும் திருஷ்டிகளை நீக்கும். அதேபோல், சனிக்கிழமைகளில் நவக்கிரகங்களுக்கு நல்லெண்ணெய் தீபமும், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிறத் தீபமும் ஏற்றி வருவது கிரக தோஷங்களால் ஏற்படும் தடைகளைத் தகர்த்து, குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமையை பலப்படுத்தும்.

    வெறும் ஆன்மீகப் பரிகாரங்கள் மட்டுமின்றி, சில வாழ்வியல் மாற்றங்களும் குடும்ப அமைதிக்கு மிக அவசியம். வீட்டை எப்போதும் சுத்தமாகவும், காற்றோட்டமாகவும் வைத்திருப்பதுடன், தேவையற்ற உடைந்த பொருட்களைச் சேர்க்காமல் தவிர்ப்பது நேர்மறை ஆற்றலை ஈர்க்கும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்; இது அவர்களுக்குள் இருக்கும் மனக்கசப்புகளை நீக்கி அன்பைப் பெருக்கும். பேசுவதில் நிதானத்தையும், இன்சொற்களையும் கையாளுவதன் மூலம் வீட்டை ஒரு நந்தவனமாக மாற்ற முடியும். நம்பிக்கையுடன் இந்த எளிய மாற்றங்களைச் செய்து வந்தால், உங்கள் இல்லம் என்றும் மகிழ்ச்சிக் கடலில் திளைக்கும் என்பது உறுதி.