திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி கிராமத்தில் நவகிரகஸ்தலங்களில் குருபகவானுக்கு பரிகாரஸ்தலமாக விளங்கும், பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஏலவார் குழலி சமேத அருள்மிகு ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில், சோழவள நாட்டில் உள்ள தேவார பாடல் பெற்ற 276 ஆலயங்களில் காவிரிக்கு தென்கரையில் உள்ள 127 ஆலயங்களில 98 வது ஆலயமாக விளங்குகிறது. காவிரி நதியின் கிளை நதியான வெட்டாறு கரையிலிருந்து 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்த பெருந்தகையால் எழிலார் இரும்பூளை என அருளப்பெற்றது. அப்பர் அடிகளால் திருவீழிமிழலைத் திருத்தாண்டகத்தில் சேர்த்துப் பாடல் பெற்ற சிறப்புடைய இதன் வரலாற்றை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
புராண காலத்தில் சுவாசனன் என்ற ஓர் அரசன். இருந்தான் கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்த அவன் நாட்டு மக்களை கொடூரமாக துன்புரித்து வந்தான். அவனது அக்கிரமங்களை பொறுத்துக் கொள்ள முடியாத பிற நாட்டு அரசர்கள், ஒன்று சேர்ந்து தந்திரமாக அவனைக் கொன்றனர். அப்போது எம தூதர்கள் வந்து அவனை எமலோகம் கொண்டு சென்றனர். அங்கு எமதர்மன் முன் நிறுத்தப்பட்ட அவன் செய்த பாவங்களை சித்திரகுப்தன். பட்டியலிட்டு கூறினான் அதைக் கேட்ட எமதர்மன்; இத்தகைய கொடியவனா இவன் அப்படி என்றால்" விதி பூலோகத்தில் இவன் பிசாசாக அலையட்டும் என தண்டனை விதித்தான் எமதர்மன்.
அதன்படி பூலோகத்தில் கொடுங்கோலன் சுவாசனன் அலைந்து கொண்டிருந்தான். பிசாசாக அப்போது பூர்வ ஜென்ம புண்ணியத்தால், அகத்திய அகத்திய மாமுனிவரை எதிர்பாராத விதமாக சந்தித்தான். தனது நிலையை அவரிடம் எடுத்துச் சொல்லி துன்பத்திலிருந்து விடுபட வழி கேட்டான். அவனது நிலையை கண்டு வருந்திய அகத்திய மாமுனிவரின் அறிவுறுத்தலின்படி , காசி ஆரண்யம் என அழைக்கப்படும். ஆலங்குடித் திருக்கோவில் வந்து புனித நீராடி, ஸ்ரீ ஆபத் சகாயேஸ்வரரை வணங்கி தனது பாவங்கள் அனைத்தும் நீங்க பெற்று, சுவாசனன், இழந்த ராஜ்யத்தை மீண்டும் அவனிடம் கொடுத்து அருள் புரிந்தாராம் சிவபெருமான்.
மூலவர் ஆபத்சகாயேஸ்வரர், காசி ஆரண்யேஸ்வரர், தாயார் ஏலவார் குழலி, உற்சவ மூர்த்தி தட்சிணாமூர்த்தி, தல விருச்சம், பூளை எனும் செடி, புனித தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ஞான கூபம், அமிர்த புஷ்கரணி, புராண பெயர் திருவிரும்பூளை, இரும்பூளை, இறைவனை வழிபடும் முறை' முதலில் 25 தீபங்கள் வாங்க வேண்டும். அதில், ஒரு தீபத்தை விநாயகர் சந்நிதியில் ஏற்றி வைத்து வணங்க வேண்டும்.
ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர், ஸ்ரீஏலவார் குழலம்மை உட்பட அனைத்து தெய்வங்களையும் தரிசித்து விட்டு, அமைதியாக பிரகார வலம் வந்து, கொடிமரம் முன் விழுந்து வணங்கி விட்டு, குரு பகவானுக்கு நாம் 24 தீபங்களையும் பரிகாரமாக ஏற்றி வைக்க வேண்டும். பிரம்ம தேவனின் மூல மந்திரம் 24 என்பதால், இங்கே 24 தீபங்கள் ஏற்றப்படுவதாக ஐதீகம். இதனால் குருவினால் ஏற்பட்ட சகல தோஷங்களும் நீங்குகின்றன. தீபங்கள் ஏற்றி குரு பகவானை வணங்கிய பின்னர் மூன்று முறை கோவிலை வலம் வர வேண்டும். அப்படி ஒவ்வொரு முறையும் கொடி மரத்தின் கீழே விழுந்து வணங்க வேண்டும்.
பொன்.கோ.முத்து திருவள்ளூர்