சக்தியின் வடிவமான பார்வதி தேவி வெவ்வேறு வடிவங்களில் பல்வேறு பெயர்களில் உலகம் முழுவதும் கோவில் கொண்டு எழுந்தருளி வருகிறாள் அப்படி அம்பிகை எழுந்தருளி வரும் கோவில் ஒன்றில் அவளின் பார்வையால் கல்லாய் மாறிய மாமியார் மருமகள் சிறிது சிறிதாக நகர்ந்து அம்மணி விக்கிரகத்தை அடைந்துவிட்டால் பூலோகம் அழிந்துவிடும் என நம்பப்படும் அக்கோவிலுக்கு செல்வோம் வாருங்கள்.
கர்நாடக மாநிலம் ஹாசனில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஹாசனாம்பா தேவி கோவில் உள்ளது. இதன் பெயராலேயே இப்பகுதியானது ஹாசன் நகரம் என அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் மட்டுமே கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படுகின்றனர். அக்டோபர் 25-ஆம் தேதியிலிருந்து, நவம்பர் 4-ஆம் தேதிவரை பக்தர்கள் ஸ்ரீ ஹாசனாம்பா அம்மனை தரிசனம் செய்யலாம். எனினும் 24ஆம் தேதியே திறக்கப்பட்டாலும் 24 மற்றும் 5-ஆம் தேதிகளில் சடங்குகள் நடைபெறுவதால் அன்றைய தினங்களில் பக்தர்கள் கோவிலுக்குள் வர அனுமதி கிடையாது. இதேபோன்று தீபாவளி திருநாள் அன்றும் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
12 ஆம், நூற்றாண்டில். கிருஷ்ணப்பா நாயக்க பாளையக்காரரின் ஆட்சியின் போது கட்டப்பட்ட இக்கோவிலானது. இதன் வினோத வரலாற்றை பார்ப்போம், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருத்தி அன்னை ஸ்ரீ ஹாசனாம்பா தேவி மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தாள். இதன் காரணமாக நாள்தோறும் கோவிலுக்கு வந்து அம்மனை வணங்கி விட்டு செல்வது வழக்கம், ஒருநாள் கோவிலுக்கு வந்த அவள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அவளை தேடி கோவிலுக்கு வந்த அவளின் மாமியார் ''வீட்டில் வேலை பார்க்காமல் எதற்கு இங்கு வந்தாய் எனக்கேட்டு ஆத்திரத்தில் அப்பெண்ணை கையில் கொண்டு வந்த விளக்கு மாறையால் அடித்திருக்கிறாள். அப்போது, அப்பெண் வலி தாங்காமல் சத்தமிடவே ஸ்ரீ ஹானாம்பா தேவி அவள் முன்பு தோன்றி அவளை கல்லாக மாற்றிவிட்டதாகவும், அந்த கல்தான் தற்போது கோவிலில் மாமியார்-மருமகள் கல் என்ற பெயரில் காணப்படுகிறது.
இந்த கல் ஒவ்வொரு ஆண்டும் கருவறையில் உள்ள அம்மன் சிலையை நோக்கி சிறிது சிறிதாக நகர்ந்து கொண்டிருப்பதாகவும், இது நகர்ந்து நகர்ந்து ஸ்ரீ ஹானாம்பா தேவி விக்ரகத்தை அடைந்துவிட்டால், இந்த கலியுகம் அழிந்துவிடும் என இங்குள்ள பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆண்டுதோறும் கோவில் மூடப்படும் நாளான பலி பட்யாமி என்ற தினத்தன்று' கோயிலில் அணையா தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபமானது அடுத்த ஆண்டு அஸ்வினி பூர்ணிமாவை தொடர்ந்து வரும் வியாக்கிழமை கோயில் திறக்கப்படும் நாள் வரை அணையாமல் அப்படியே எரிந்து கொண்டிருக்கும். இதேபோன்று அன்றைய தினம். தேவிக்கு அர்ச்சனை செய்யப்படும் பூக்கள், சூட்டப்படும் மாலை ஆகியவற்றில் உள்ள மலர்கள் எல்லாம் அடுத்த ஆண்டு கோவில் திறக்கும் வரை. வாடாமல் நறுமணத்துடன் அப்படியே இருக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். எனவே இவை அனைத்தும்" இக்கோவிலின்' அதிசயமாகவே பார்க்கப்படுகிறது.
பொன்.கோ.முத்து திருவள்ளூர்