கண்ணகி கோவில்  யாருக்கு சொந்தம் ? 

Written by

in

மங்களதேவி கண்ணகி கோயில் என்பது தமிழகத்தின் தேனி மாவட்டம்,  மற்றும் கேரளத்தின் இடுக்கி மாவட்டம் ஆகியவற்றின் எல்லையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலானது, கடல் மட்டத்திலிருந்தது மேற்கு தொடர்ச்சி மலையில் 5,000 அடி உயரத்தில் உள்ளது. சிலப்பதிகாரத்தின் படி" அரசியின் கால் சிலம்பை" கோவலன் களவாடிவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் பாண்டிய மன்னன் அவனுக்கு மரண தண்டனை விதிதான் குற்றம் புரியாத தன் கணவன் கோவலன் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு அரண்மனைக்கு வந்த கண்ணகி ,  மதுரையை எரித்த பிறகு இந்த இடத்திற்கு வந்து 14 நாட்கள் தங்கியதாகவும், இக்கோவில்'  கி.பி 1/2 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.

சேர ஆட்சியின்போது செங்குட்டுவன் கி.பி.  சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு சங்ககாலத்தி லோ" அல்லது அதன் தொடக்க வரலாற்றுக்  காலத்திலோ" "வண்ணாதிபாரா"பகுதியில் கண்ணகி" "மங்கலதேவி கோவில் கட்டப்பட்டு இருக்கலாம் என இலக்கிய சான்றுகள் தெரிவிக்கின்றன.  இங்கு ஆண்டு தோறும்" "சித்ரா பௌர்ணமி நாளில்" மட்டுமே கோவில் திறந்திருக்கும். அன்றைய தினம் மட்டுமே" பக்தர்கள் மலையேறி கண்ணகியை வழிபட அனுமதிக்கப்படுகின்றனர். அன்றைய தினம் இரு மாநிலத்தின் மாவட்ட ஆட்சியர் இருவர், மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் வனத்துறை அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் சித்ரா பௌர்ணமி வழிபாடு விழா நடைபெறுகிறது.

1956 ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, கண்ணகி கோவில் ஆரம்பத்தில். தமிழகத்தின் தேனி மாவட்டத்துடன் இருந்ததாக தெரிகிறது, தற்போது கேரளத்துடன் இணைக்கப்பட்டு, முழுமையாக அம்மாநிலத்தின்  இடுக்கி மாவட்டத்திற்குள் வருகிறது , இருப்பினும் தமிழகத்தின் காவியமான சிலப்பதிகார நாயகி கண்ணகி கோவில் யாருக்கு ? சொந்தம் என்ற சர்ச்சை மட்டும் தொடர்கிறது.

பொன்.கோ.முத்து திருவள்ளூர்