ஸ்ரீ ராமனின் காவியமான இராமாயணத்தை எழுதியவர் கம்பர். ராமாயண காவியத்தை இவர் உருவாக்க காரணமாக இருந்தவர் சடையப்ப வள்ளல், பிழைப்பு தேடி வந்த கம்பரையும், அவரது தாயாரையும் வீட்டிற்குள் அழைத்துச் சென்று உணவளித்து ஆதரவுகரம் நீட்டியவர். சடையப்ப வள்ளல் நாள்தோறும் தனது வயல்வெளிக்குச் சென்று விவசாய பணிகளை மேற்கொள்வார். அப்போது ஏரியின் வடமேற்கில் உள்ள வடமேற்கில் அருள் பாவிக்கும் அன்னை ஸ்ரீ காளிகாம்பாளை வணங்கி வழிபடுவார், கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்" என்பார்கள்.
ஆனால்" அந்த கம்பன் கவி பாட அருள் புரிந்தவள் அன்னை ஸ்ரீ காளி. கம்பன் எழுதிய ராமாயண காவியம் உருவாக கருணை புரிந்தவள் இந்த ஸ்ரீ காளி தான். இவளது சன்னதியில் கம்பர் வால்மீகி ராமாயணத்தை மொழிபெயர்க்க வேண்டும், என விரும்பியவர். சடையப்பர் அதன்படி இந்த இடத்தில் தான் வால்மீகி ராமாயணம் மொழிபெயர்க்கப்பட்டு, கம்பராமாயணம் உருவானது. கம்பர் வணங்கிய அன்னை ஸ்ரீ காளி கோவிலானது. திருவெண்ணெய் நல்லூர் அருகே சின்ன சேவலை என்ற கிராமத்தில் உள்ளது, இங்கு விநாயகப் பெருமான், முருகன் ஆகியோர் இருபுறமும் வீற்றிருக்க' வெட்ட வெளியில் தனக்கான மேடை மீது அன்னை ஸ்ரீ காளி கிழக்கு நோக்கி காட்சி தருகிறாள். நான்கு அடி உயரத்தில் எட்டு கரங்களுடன் அன்னை ஸ்ரீ காளியின் திருமேனியானது ஞானத்தை ஊட்டும் அருள் வடிவாகும். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
ஒன்பது நாட்கள் அன்னை ஸ்ரீ காளி கம்பளை பக்தியுடன் வழிபட்டு நெய் தீபம் ஏற்றி வந்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை, சோழ நாட்டு திருவெண்ணை நல்லூர் சடையப்ப வள்ளல் கம்பரை ஆதரித்தார். அப்போது முதலாம். குலோத்துங்க சோழன் கி.பி. 12ம் நூற்றாண்டில் கம்பரை ராமாயணம் எழுத வேண்டினான். அதற்காக, வடமொழி வான்மீகி ராமாயணத்தைக் கேட்டு, அதைக் தமிழில் மொழிபெயர்த்து எழுத சோழ நாட்டிலிருந்து, தொண்டை நாட்டிலுள்ள திருவொற்றியூர் வந்தார். அப்போது வடமொழி வான்மீகி ராமாயணத்தை கேட்டு அதைத் தமிழில் மொழிபெயர்த்து ஸ்ரீரங்கத்தில் கம்பன் அரங்கேற்றினார். என்ற மற்றொரு வரலாறும் கம்பராமாயணத்திற்கு உள்ளது.
பொன்.கோ.முத்து திருவள்ளூர்