Blog

  • 24  தீபமும் குரு பகவான் வழிப்பாடும்” எதற்கு ? 

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி கிராமத்தில் நவகிரகஸ்தலங்களில் குருபகவானுக்கு பரிகாரஸ்தலமாக விளங்கும், பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஏலவார் குழலி சமேத அருள்மிகு ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில், சோழவள நாட்டில் உள்ள தேவார பாடல் பெற்ற 276 ஆலயங்களில்  காவிரிக்கு தென்கரையில் உள்ள 127 ஆலயங்களில 98 வது ஆலயமாக  விளங்குகிறது. காவிரி நதியின் கிளை நதியான வெட்டாறு கரையிலிருந்து 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்த பெருந்தகையால் எழிலார் இரும்பூளை என அருளப்பெற்றது. அப்பர் அடிகளால் திருவீழிமிழலைத் திருத்தாண்டகத்தில் சேர்த்துப் பாடல் பெற்ற சிறப்புடைய இதன் வரலாற்றை அறிந்து கொள்ளலாம் வாருங்கள். 
     

    புராண காலத்தில்  சுவாசனன் என்ற ஓர் அரசன். இருந்தான் கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்த அவன்  நாட்டு மக்களை கொடூரமாக துன்புரித்து வந்தான். அவனது அக்கிரமங்களை பொறுத்துக் கொள்ள முடியாத பிற நாட்டு அரசர்கள், ஒன்று சேர்ந்து தந்திரமாக அவனைக் கொன்றனர். அப்போது எம தூதர்கள் வந்து அவனை எமலோகம் கொண்டு சென்றனர். அங்கு எமதர்மன் முன் நிறுத்தப்பட்ட  அவன் செய்த பாவங்களை சித்திரகுப்தன். பட்டியலிட்டு கூறினான் அதைக் கேட்ட எமதர்மன்; இத்தகைய கொடியவனா இவன் அப்படி என்றால்" விதி பூலோகத்தில் இவன் பிசாசாக அலையட்டும் என தண்டனை விதித்தான் எமதர்மன்.

    அதன்படி பூலோகத்தில் கொடுங்கோலன் சுவாசனன் அலைந்து கொண்டிருந்தான். பிசாசாக அப்போது பூர்வ ஜென்ம புண்ணியத்தால், அகத்திய அகத்திய மாமுனிவரை எதிர்பாராத விதமாக சந்தித்தான். தனது நிலையை அவரிடம் எடுத்துச் சொல்லி துன்பத்திலிருந்து விடுபட வழி கேட்டான். அவனது நிலையை கண்டு வருந்திய அகத்திய மாமுனிவரின் அறிவுறுத்தலின்படி , காசி ஆரண்யம் என அழைக்கப்படும்.  ஆலங்குடித் திருக்கோவில்  வந்து புனித நீராடி, ஸ்ரீ ஆபத் சகாயேஸ்வரரை வணங்கி தனது பாவங்கள் அனைத்தும் நீங்க பெற்று, சுவாசனன், இழந்த ராஜ்யத்தை மீண்டும் அவனிடம் கொடுத்து அருள் புரிந்தாராம் சிவபெருமான்.

    மூலவர் ஆபத்சகாயேஸ்வரர், காசி ஆரண்யேஸ்வரர், தாயார்  ஏலவார் குழலி, உற்சவ மூர்த்தி  தட்சிணாமூர்த்தி, தல விருச்சம், பூளை எனும் செடி, புனித தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ஞான கூபம், அமிர்த புஷ்கரணி, புராண பெயர் திருவிரும்பூளை, இரும்பூளை,   இறைவனை வழிபடும் முறை' முதலில் 25 தீபங்கள் வாங்க வேண்டும். அதில், ஒரு தீபத்தை விநாயகர் சந்நிதியில் ஏற்றி வைத்து வணங்க வேண்டும். 

    ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர், ஸ்ரீஏலவார் குழலம்மை உட்பட அனைத்து தெய்வங்களையும் தரிசித்து விட்டு, அமைதியாக  பிரகார வலம் வந்து, கொடிமரம் முன் விழுந்து வணங்கி விட்டு, குரு பகவானுக்கு  நாம்  24 தீபங்களையும் பரிகாரமாக ஏற்றி வைக்க வேண்டும். பிரம்ம தேவனின் மூல மந்திரம் 24 என்பதால்,  இங்கே 24 தீபங்கள் ஏற்றப்படுவதாக ஐதீகம்.  இதனால் குருவினால் ஏற்பட்ட சகல தோஷங்களும் நீங்குகின்றன. தீபங்கள் ஏற்றி குரு பகவானை வணங்கிய பின்னர் மூன்று முறை கோவிலை வலம் வர வேண்டும். அப்படி ஒவ்வொரு முறையும் கொடி மரத்தின் கீழே விழுந்து வணங்க வேண்டும். 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • வேண்டுதலை நிறைவேற்றும் மயிலாடி கிருஷ்ணன் !

    ஈரோடு மாவட்டம்,மயிலாடி' யில், சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ண பெருமாள் திருக்கோவில் உள்ளது. இங்கு அருள்புரியும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அப்பகுதி விவசாயிகள் சிலர் குலம் வெட்டுவதற்காக பூமியை தோண்டிய போது சுயம்புவாக தோன்றியவர் ஆவார். இவருக்கு அவல், சர்க்கரைப் பொங்கல், பால், வெண்ணை ஆகியவை கொண்டு நிவேதனம் செய்து வழிபட்டால், திருமண வரம் கை கூடும், தொழில் விருத்தி லாபகரத்துடன் நடக்கும், ஸ்ரீவீர ஆஞ்சநேயர் சுவாமி எழுந்தருளி உள்ளார்.

    இவருக்கு புதன் மற்றும் சனி ஆகிய நாட்களில் வெற்றிலை மாலை தொடுத்து. அவரது திருமேனியில் அலங்கரித்து வழிபட்டால், மனவேதனையை நீங்கி எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும் என்பது இங்குள்ள பக்தர்களின் நம்பிக்கை, கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதேசி, புரட்டாசி வழிபாடு ஆகியவை இங்கு சிறப்புடன் நடைபெறுகிறது. வாழ்க்கையில் தள்ளாடி தவிப்புக்கு உள்ளான"அன்பர்கள் மயிலாடி ஸ்ரீ சென்று கிருஷ்ணா பெருமாளை வழிபட்டால், இன்னல் விலகி வாழ்வில் நிமிர்ந்து நிற்பது நிச்சயம்.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • திருப்பதி செல்லும் முன் குபேரனை வழிபட்டால் செல்வம் சேருமா ? 

    சென்னை வண்டலூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ லட்சுமி குபேரன் கோவில் பிரசித்தி பெற்றதாகும், இங்கு புன்னகை தவழும் முகத்துடனும், துணைவியார்  துணைவியார் சித்தரிணியுடன் காட்சி தருகிறார் குபேரன். மேலும் குபேர லிங்கம், லட்சுமி கணபதி,   முத்துக்குமரன், ஆஞ்சநேயர், தனித்தனி சன்னதியில் நவகிரகங்கள் உள்ளன.

    மகாலட்சுமி அம்சமண கோமாதாவிற்கு பராமரிப்பு கோ சாலையும் அமையப் பெற்றுள்ளது. பசுவிற்கு உணவளித்து குபேரனை வழிபட்டால் வீட்டில் லட்சுமி தாண்டவம் ஆடுவாள் என்பது ஐதீகம், செல்வத்திற்கு அதிபதி ஆகிய லட்சுமியும், அதனைக் காக்கும் குபேரணையும் தீப ஒளி திருநாளன்று வழிபடுவது சிறப்பாகும்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் முன் வண்டலூர் ரத்தினமங்கலத்தில் உள்ள' லட்சுமி குபேரனை வழிபட்டால் ஏழுமலையான் இடம் வைக்கப்படும் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை, அட்சய திருதி அன்று இங்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது அன்றைய தினம் குபேரனை தரிசித்து விட்டு தங்க ஆபரணங்கள் வாங்கினால் மேலும் மேலும் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • மடியிலிருந்து பால் சுரக்க சிவனை வழிபட்ட பசு

    காமதேனு வழிபட்ட ஆதி லிங்கம்" சரஸ்வதி தேவியை பிரம்மதேவன் திருமணம் செய்த திருக்கோவில்' பசுவின் பெயர் தாங்கி சிவபெருமான் அருள் புரியும் புண்ணிய பூமி செல்வம் வாருங்கள்.

    புராண காலத்தில்,பிரம்மதேவன் ஒருமுறை தான் படைப்பு தொழிலை நிறுத்திவிட்டால், காத்தல், அழித்தல் பணிகளை செய்பவர்களுக்கு வேலை பறிபோகிவிடும் என நினைத்து. ஆணவத்துடன் நடந்து கொண்டார்.  அவரது அறியாமையை அகற்ற நினைத்த ஈசன். படைப்புத் தொழிலை பிரம்மன் தொடங்கினார்.  ஆனால் எந்த ஒரு உயிரினமும் தோன்றவில்லை. அப்போது சிவபெருமானை  வணங்க கயிலைக்கு வந்த காமதேனுவிடம், 'நீ பூலோகம் சென்று, பிரம்மனுக்கு பதிலாக படைப்பு தொழில் புரிந்து வா'என அருளினார். அன்று முதல் பிரம்ம தேவனுக்கு பதிலாக  பதிலாக காமதேனு  படைப்புத் தொழிலை செய்யத் தொடங்கியது. இதனை அறிந்து  பிரம்மதேவன், தனது கர்வத்தை விட்டு கைலாயம் சென்று சிவபெருமானை வணங்கி தான் செய்த தவறுக்கு மனம் உருகி  வருந்தினார். அப்போது தனக்கு மீண்டும் படைப்புத் தொழில் செய்ய அனுமதி தர வேண்டும் என பக்தியுடன் வேண்டினார். 
    உடனே சிவபெருமான், 'நீ பூலோகம் சென்று" ஆம்பிரமா நதிக்கரையில்,  வஞ்சிவனம் என்னும் இடத்தில் என்னை நோக்கி தவம் இருந்து  வழிபடுவாயாக' என கட்டளையிட்டார். அதனை ஏற்று  பிரம்ம தேவன், ஆம்பிரமா நதிக்கரையில் ஈசனை வழிபட்டு கடும் தவம் புரிந்து வந்தான். அதன் பலனாக பிரம்ம தேவனுக்கு சிவபெருமான் காட்சி அளித்தார். அப்போது 'பிரம்ம தேவனே"   உன்னுடைய அனைத்து தீய வினைகளும் இன்றுடன் விலகியது. எனவே இவ்விடத்தில் நீ" வேத விற்பனர்களை அழைத்து. மகா  வேள்வி ஒன்றை நடத்தி, கலைகளின் அம்சமான கலை மகளை திருமணம் புரிந்து, படைப்பு தொழிலை, இங்கு இருந்தவாரே" தொடங்குமாறு அருளினார். அதன்படி பிரம்மதேவன்,  ஆம்பிரமா நதியின் வடபுறத்தில் புனித பிரம்ம தீர்த்தம் உருவாக்கி'  ஈசனை வழிபட்டு, வழிபட்டார். பின்னர் வெண்ணெய் மலையின் வடக்கே மகா வேள்விச் சாலை ஒன்றை ஏற்படுத்தி வேத விற்பனர்களை அழைத்து வேள்வி நடத்தினார். பின் கலைகளின் தலைவியான சரஸ்வதி தேவியை பிரம்மதேவன் திருமணம் புரிந்து. அப்பகுதியில் இறைவனுக்கு திருக்கோவில் ஒன்றையும் எழுப்பினான். இதனிடையே" பூலோகம் வந்த காமதேனு பல சிவத்தலங்களை தரிசித்து விட்டு வஞ்சிவனம் வந்தது. தவம் புரிந்தது.  ஒரு நாள் விண்ணில் இருந்து ஒரு அசரீரி கேட்டது.  'காமதேனுவே" வஞ்சி வனத்தில், ஒரு புற்றில், மகாலிங்கம் என்னும் ஆதிலிங்கம் உள்ளது. அதனை நீ" புனித பிரம்ம' தீர்த்தத்தில் நீராடி வழிபட்டு வா'  என அக்குரல் கூறிய வாரே"
    காமதேனுவும் சுயம்பு வடிவான ஆதி லிங்கத்தை கண்டு, தனது மடியில் இருந்து பாலை சுரக்க நாள்தோறும்   வழிபாடு வந்தபோது.  

    ஒரு நாள் அதன் கால் குளம்பு, இறைவனின் திருமுடியின் இடது பாகத்தில் பட்டுவிட்டது. இதன் காரணமாக அதில் இருந்து ரத்தம் வழிந்தது. அதைக் கண்ட காமதேனு பதறியது. அப்போது சிவபெருமான்  தோன்றி, 'காமதேனுவே" கலங்க வேண்டாம். இது உன் தவறல்ல. நீ எம்மை நீ" வணங்கியதால், இனி' இந்த ஆதி லிங்கம் பசுபதிநாதர்  அன்றே" அழைக்கப்படும் என அருளினார்.  பிரம்மதேவன் மட்டுமல்ல' பசுவும் படைப்புத் தொழில் புரியும்  என்பதை பிரம்மனுக்கு உணர்த்துவதற்காகவே உன்னை பூலோகம் வந்து படைப்புத் தொழில் புரியசெய்யச் செய்தேன். நீ" பிரம்மதேவனிடம்  படைப்புத் தொழிலை கொடுத்துவிட்டு, தேவலோகம்  செல்லுமாறு அருளாசி வழங்கி விண்ணில் மறைந்தான் ஈசன்" என்பது. 

    ஆதி கருவூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி சமேத அருள்மிகு ஸ்ரீ பசுபதீஸ்வரர் திருக்கோவில் தல வரலாறு ஆகும். ஏழு நிலை ராஜகோபுரம் ஏழு ஆதி சிவலிங்கங்களை நோக்கி மேலோங்கி காட்சியளிக்கிறது. இதனைக் கடந்து உள்ளே சென்றால், ஐந்து பஞ்சபூதங்களை நினைவூட்டும். இதனினும் சிறிய  ஐந்து நிலைகளுடன் கோபுரம் உள்ளது. தெற்கு விநாயகர் பெருமானும், குடை விரித்த நாக பந்தல் நிழலின் கீழ்,  காமதேனு ஆதி லிங்கத்திற்கு, பால் பாலை சுரக்கும்  காட்சி, புராண காலத்தை கண்முன் காட்டுகிறது. கருவறையில்  வீற்றிருக்கும் ஆதி சிவலிங்கம். பசுபதிநாதர் என காமதேனு" என அழைக்கப்படும் பசு வழிபட்டதின் பொருள் பட அழைக்கப்படுகிறார். இவர் சற்று சாய்ந்த நிலையில் சூரிய கதிர்கள் தன்னை வணங்கும் பொருட்டு காட்சி அளிப்பதும், இவர் மீது பசுவின் கால் தடம் இருப்பதை காணலாம், கிழக்கு முகமாக லோகமாதா அருள்மிகு ஸ்ரீ  அலங்காரவல்லி அம்மையின் பொற்பாதத்தின் கீழ்  சக்ர பீடம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தெற்கு சவுந்திரநாயகி புன்னகையுடன் வீற்றிருக்கிறாள். கரூர் மாவட்டத்தின். தலைநகரான கரூர் நகரில் ஏழு சிவ ஆலயங்களின் ஒன்றான புராணத் தொடர்புடைய அருள்மிகு ஸ்ரீ  பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இறைவன் தோன்றிய  மலையில் தெற்கு திருப்பதி என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ராமன சுவாமி திருக்கோவில் மற்றும் வெண்ணமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியர் சுவாமி, கோவில்,  ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில் காவேரி கரையோரத்தில்  சிறு குன்றின் மீது அருள்மிகு ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், மேலும் நெரூர் அருள்மிகு ஸ்ரீ  சதாசிவமும் அருள் புரிகிறார். கரூர் சென்று" பசுபதீஸ்வரரை வணங்கினால் கர்ம வினை நீங்கும் என்பது திண்ணம். 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • நந்திக்கு வரம் அளித்த சிவபெருமான்

    நந்தியை வாகனம் ஆக்கி வாகனத்தை  மலையாக்கி அதன் மீது அமர்ந்து சிவபெருமான் அருள் பாவிக்கும் புண்ணிய பூமி" 
    ஆந்திர மாநிலம்  ஸ்ரீ சைலம். புராண காலத்தில் சிலாதர் என்ற மகரிஷி வாழ்ந்த இடமாகும்.  பிள்ளை வரம் வேண்டி சிவபெருமானை நோக்கி இவர் தவம் இருந்தமையால், இறைவனின் அருளால் நந்தி, பர்வதன் என்ற இரு ஆண் குழந்தைகள் பிறந்தன. இச்செய்தி அறிந்து குழந்தைகளை ஆசிர்வதிப்பதற்காக  பார்க்க சனகாதி மாமுனிவர்கள்  வந்தனர்.

    அவர்கள், நந்திதேவர் சில காலம் மட்டும் தான் பூமியில் வாழ்வார் என சிலாதர் மகரிஷியிடம் கூறினர். இதைக் கேட்டு, வருந்திய தந்தையிடம் நந்தி,”தந்தையே" வருந்தாதீர். நான் ஈசனை நோக்கி கடும் தவம் புரிந்து. சாகா வரம் பெறுவேன்” என்றார். அதன்படி அவரது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், நந்தியை தன் வாகனமாக இருக்குமாறு வரம் அளித்து. நந்தியின் அனுமதியின்றி தன்னை பார்க்க வர முடியாது என்று கட்டளையிட்டார். மேலும்  அவனது தம்பியாகிய பர்வதனும் தவம் புரிந்தான். அவன் தவம் இருந்த பர்வதன்கடும் தவம் செய்து ஈசனின் திரு  பாதம் எப்போதும் தன் மீது பட வேண்டும் என்பதற்காக வரம் பெற்றான். அதன் பயனாக பர்வதனை ஒரு மலையாக மாரி  ஸ்ரீ பர்வதம் என  பெயரிட்டு அம்மலையின் மீது சுயம்பு லிங்கமாக அமர்ந்து எழுந்தருளினார்.

    ஆந்த ஸ்ரீ பர்வதமே தற்போது ஸ்ரீசைலம் என அழைக்கப்படுகிறது.  சைலம் என்றால் மலை எனப் பொருள்படும். நாகஸ்ரீ என்ற சிவபக்தை தவமிருந்து 
    இப்பகுதி தனது பெயரால் வழங்கப்பட வேண்டுமென  வரம் பெற்றாள். நகஸ்ரீ என்பது ஸ்ரீ நகம் என மாறி தற்போது ஸ்ரீசைலம் என மருவி வழங்குகிறது. சிலந்தர் மகரிஷி  தவம் செய்தமையால் இம்மலை சிலந்தர் மலை ஆனது.  மல்லிகாபுரி தேசத்தை ஆண்ட சந்திரகுப்தனின் மகள், சந்திரரேகா இங்கு கிடைத்த மல்லிகை மலர்களாலும், அர்ஜுனா பூக்களாலும் சிவனை பூஜித்து வந்தாள். இதனால் இங்குள்ள இறைவன் “மல்லிகார்ஜுனர்” என்றும் அழைக்கப்படுகிறார்.

    ஸ்ரீசைலம் சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு லிங்க வடிவான ஈசனுக்கு  நாமே அபிஷேக தீப ஆராதனை செய்து வழிபடும் ஐதீகம் உள்ளது. நந்தியை தனது வாகனம் ஆகியது இங்குதான்.    அதன் மீது சிவன் அமர்ந்து ஆட்சிபுரிகிறார். சக்தியின் திருப்பெயர்   அருள்மிகு ஸ்ரீபிரமராம்பாள், பருப்பநாயகி இறைவனின் திருப்பெயர் அருள்மிகு ஸ்ரீ மல்லிகார்ஜுனர்,ஸ்ரீசைலநாதர், ஸ்ரீபருப்பதநாதர்.  தல விருட்சம்  – மருதமரம், புண்ணிய தீர்த்தம் – பாலாநதி ஆலயம் கண்ட காலம், 1000 ஆண்டுகளுக்கு முன்பு. புராணப் பெயர்- திருப்பருப்பதம் கிராமம்- ஸ்ரீசைலம் மாவட்டம்,

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • சூரியனுக்கு குறி சொல்ல வந்த நாடோடி பெண் யார்?

    சக்தியின் வடிவமான அம்பிகை, ஈசனுக்கு நிகராக திருவிளையாடல் புரிபவள். அகில நாயகியான இவள் வெவ்வேறு திருப்பயிர்களில் ஆங்காங்கே அம்பிகை பல்வேறு வடிவங்களில் திருவிளையாடல் குறித்து கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாவித்து வருவதை நாம் அறிந்துள்ளோம், அதேபோன்று பார்வதி தேவி குறி சொல்லும் நாடோடி பெண்ணாக வந்தபோது அவளை அலட்சியப்படுத்திய  சூரிய பகவான் தனது பிரகாசத்தை இழந்து அவன் மங்கிய கதையே"அறிந்து கொள்வோம் வாருங்கள்.

     
    தேவலோகத்தில் ஒரு நாள், உமையவள்  குறி சொல்லும் நாடோடிப் பெண்ணின் வேடத்தில், குறி கேட்கிறாயோ" சாமி குறி கேக்குறியோ" கடந்த காலம்"நிகழ்காலம்"எதிர்காலம்" பற்றி புட்டு புட்டு வைக்கிறேன்" குறி கேட்கிறியோ"சாமி என கூறியவாறு  சென்றாள். அங்கு சூரியனிடம் சென்று, அவனின் எதிர்காலத்தை கணித்து, தருவதாக சொன்னால்,  ஆனால், வந்து தன் எதிரே நிற்பது, சக்தியின் வடிவமான  தேவி கருமாரி" என்பதை உணராத சூரியன், உமையவளை  உதாசீனப்படுத்தினான். இதனால்  கோபமடைந்த அம்பிகையின் சாபத்திற்கு ஆளான" சூரியன் தன் பிரகாசத்தை இழக்க தொடங்கினான்.

    இதனால், அவனின் புகழ் குன்றியது. பின்தனது தவறை உணர்ந்து வருந்திய சூரியன் உமையவளை மனம் உருக பிரார்த்தனை செய்து, தன்னை மன்னிக்கும் படி வேண்டினான். தேவி கருமாரி அம்மன்  சூரியனின் பிரார்த்தனையால், மனம் இறங்கி அவனை மன்னித்து அருளினால்' அப்போது சூரியன் கேட்ட வரத்தின் படி,  ஞாயிற்றுக் கிழமையை தனக்கு  உகந்த நாளாக ஏற்று" அன்னை அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் கொண்டு, அமர்ந்த  இடம்தான் திருவேற்காடு,
    திருமால் தனது தங்கையான, தேவி கருமாரி அம்மன் திருவேற்காட்டில் அருளாட்சி செய்வதை காண நேரடியாக வந்தார்.

    அண்ணனின்  வருகையால் மனமகிழ்ந்த உமையவள்,  அவரைத் தனது இருப்பிடத்திலேயே, தெற்குத் திசை நோக்கி நின்றபடியே,  ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக் கோலத்தில் பக்தர்களுக்கு அருள் புரியுமாறு வேண்டினால் பெருமாளும்,  தங்கைக்கு அளித்த வாக்கின்படி திருவேற்காட்டில், ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோலத்தில், தெற்குத் திசை நோக்கி நின்றபடியே, பக்தர்களுக்கு அருள் வழங்கி வருகிறார். 
     

    ஆண்டுதோறும்  புரட்டாசி மற்றும் பங்குனி மாதத்தில் சூரிய உதயத்தின் போது, சூரியனின் பொன்னிறக் கதிர்கள் அன்னையின்  தலையின் மீது பிரகாசிப்பதை
    இங்கு காணலாம்,  இதன் காரணமாகவே" ஞாயிற்றுக்கிழமை அம்பிகைக்கு  உகந்த நாளாக, ஆனதின்  காரணம்'.இங்கு தேவி கருமாரியம்மன் கருவறையில் சுயம்புவாக காட்சி தருகிறாள். அம்பிகைக்கு உகந்த நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள், விளக்கு பூஜை நடைபெறுகின்றன. இங்கு தேவி கருமாரியம்மன் புற்றுக்குள் சுயம்புவாக எழுந்து அருளியதால், மிகப்பெரிய புற்று ஒன்று உள்ளது. இங்கு மற்றொரு சிறப்பாக' மரச்சிலை அம்மன்” சன்னதி உள்ளது. தல விருச்சகம் வெள்வேலம், புனித தீர்த்தம் புஷ்கரணி, ஊர் முன்பு வேலங்காடு, திருவிழாக்கள், ஆடிப் பெருந்திருவிழா, தை மாதம் பிரம்மோற்சவம், மாசி மகம், நவராத்திரி, பௌர்ணமி, செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அம்பிகை அருளும் இடம், அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு, பூந்தமல்லி வட்டம், திருவள்ளூர் மாவட்டம்

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • திருக்கண்டியூர் தரிசனம் பூர்வ ஜென்ம புண்ணியம்!

    படைப்பின் கடவுளான பிரம்ம தேவனுக்கு கோவில்கள் ஒரு சில இடங்களில் மட்டுமே உள்ளது, அதிலும் சரஸ்வதியும் பிரம்மதேவன் ஒரே இடத்தில் அருள் பாவிக்கும் அற்புத திருக்கோவிலானது. வ்தஞ்சை மாவட்டம்,திருவையாறு செல்லும் வழித்தடத்தில்  திருக்கண்டியூர் என்ற இடத்தில் உள்ளது, இங்கு சிவபெருமான் அருள்மிகு ஸ்ரீ பிரம்ம சிரகண்டீஸ்வரர். என்ற திருப்பெயரில் அழைக்கப்படுகிறார்.

    தனக்கென உள்ள கோவில்களில் தனியாக காட்சி தரும் பிரம்மதேவன், மிக அரிதாக அன்னை ஸ்ரீ சரஸ்வதி தேவியுடன்  தம்பதி சமேதராக பிரம்மதேவன் கலைமகளின் வெண்தாமரை போன்று மலர்ந்த முகத்துடன் காட்சி அளிக்கிறார். கலையின் வடிவமான சரஸ்வதி தேவியும் படைப்பின் அம்சமான பிரம்ம தேவனையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்யும் பாக்கியம் பூர்வ ஜென்ம  புண்ணியமாகும், புராணத்துடன் தொடர்புடைய இவ்விடம் தோன்றியதின் காரணம், பிரம்ம தேவனின் தலையை சிவபெருமான்  கொய்தார். இதன் காரணமாக ஈசனுக்கு  பிரம்ம சிரகண்டீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது.

    நான்கு முகத்துடன் புன்னகை புரிந்தவாறு'தனது துணைவியார் சரஸ்வதி தேவியுடன். இருவரையும் கலைநயத்துடன் வேறொரு பிரம்மா படைத்திருப்பாரா" ? என" எண்ண தோண்டும், வகையில், சிந்தனையை தூண்டுகிறது. இதன் அருகே மற்றொரு திருக்கோவிலும் உள்ளது, அங்கு திருமால், சாப விமோசனப் பெருமாள். என்ற திருநாமத்துடன் அருள் பாவிக்கிறார். கல்வி, தொழில் வளர்ச்சி, கலைத்துறை, ஆகியவற்றில் சாதிக்க விரும்பும் அன்பர்கள் அன்னை ஸ்ரீ சரஸ்வதி தேவியுடன் அருள் பாவிக்கும் பிரம்ம தேவனின்' திருக்கண்டியூர் வந்து தரிசனம் செய்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது திண்ணம். 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • “ஜக்கம்மா” ஊர் ஜமீன்தாருக்கு  சாபம் கொடுத்தது ஏன் ?

    இஸ்லாமிய அரசன்  ஒருவன் கம்பளத்து சமுதாயப் பெண் ஒருத்தியை மனம் முடிக்க விரும்பி பெண் கேட்டான்.  தங்கள் சமுதாயப்  பெண்ணின் பாதுகாப்பிற்காக அவளது உறவினர்கள். தெற்கு நோக்கி வந்தபோது.  துங்கபத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, இதனால் ஆற்றின் கரையை கடக்க முடியாமல் நின்றனர். அப்போது  கம்பளத்தார் கூட்டம் வடகரையில் தங்களது குல தெய்வமான எல்லம்மா தேவியை வணங்கினர்.

    திடீரென அங்கு வந்த குழந்தை ஒன்று   நீங்கள் ஆற்றின் கரையைக் கடக்க   மரங்கள் உங்களுக்கு பாலமாக அமையும், ஆற்று நீர் அதற்கு வழி விடும், நீங்கள்  தெற்கு சீமைக்கு சென்று சிறப்போடு ஆட்சி செய்து. வாழுங்கள், உங்களுடன் இருந்து  காப்பேன்" என  மறைந்தது. அதன்படி நீர் விலகி, மரங்கள் பாலமாக அமைந்து இஸ்லாமிய அரசன். தெற்கு கம்பள நாட்டுக்கு வந்து அந்தக் குழந்தை கூறியபடியே நல்லாட்சி செய்தான்.

    குழந்தை வடிவமாக வந்து இஸ்லாமிய அரசனுக்கு உதவியது யார்" தெரியுமா ?  வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வமான ஜக்கம்மா தான் 
    யார் ? இந்த ஜக்கம்மா"  இவளைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதற்கு முன்பாக வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றை அறிந்து கொள்வோம் வாருங்கள்.
      ஆங்கிலேயர்களுக்கு எதிராக கப்பம் கட்ட மறுத்து வீர போர் புரிந்து தாய் திருநாட்டிற்காக தூக்கு மேடை ஏறிய வீரபாண்டிய கட்டபொம்மன். பாஞ்சாலங்குறிச்சியில், ஜெகவீர கட்டபொம்மன்- ஆறு முகத்தம்மாள் தம்பதியருக்கு 1760 ஆம் ஆண்டு, ஜனவரி 3, ஆம் தேதி அன்று பிறந்தார்.  வீரபாண்டிய கட்டபொம்மன்.

    தனது  30,வது வயதில் 1790 ஆம், ஆண்டு,பிப்ரவரி 2 ஆம், தேதி அன்று" 47 வது பாளையக்காரராக பதவி ஏற்று கொண்டார்.  வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கு சங்கம்மாள் என்ற மனைவியும், ஊமைத்துரை, துரைச்சிங்கம் ஆகிய இரண்டு சகோதரர்களும்,  ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். கட்டபொம்மன் 9 ஆண்டுகளுக்கு மேல் அரசு பதவி வகித்து வந்தார். அப்போது கர்நாடக பிரதேசத்தை ஆண்ட, ஆற்காடு நவாப்புகள் பாளையக்காரர்களிடம், கப்பம்  வசூலிக்கும் அதிகாரத்தை கும்பினியாரிடம் வழங்கினர். அதன்படி நெல்லை சீமையில் கப்பம் வரிவசூலிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த ஆங்கிலேய படை தளபதி மாக்ஸ்வெல் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தாரர் வீரபாண்டிய கட்டபொம்மனிடம், கப்பம் வரிவசூலிக்க முடியாமல் திணறினான்.

    இதன் காரணமாக'  கி.பி. 1797 ஆம், ஆண்டு முதன் முதலாக ஆங்கிலேய தளபதி ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு தனது   படையுடன் போரிட வந்தான். 1797 முதல் – 1798 வரை நடந்த இந்த போரில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை கைப்பற்ற முடியாமல், வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோல்வி அடைந்து புற முதுகு காட்டி ஓடினான் அதன் பின்னர். நெல்லை மாவட்ட ஆட்சியர் ஜாக்சன் துரை வீரபாண்டிய கட்டபொம்மனை நெருங்க முடியாமல், இறுதியில்' 1798 ஆம், ஆண்டு செப்டம்பர் 10‌ ஆம், தேதி தந்திரமாக பேச்சு வார்த்தைக்கு, அழைத்து கட்டபொம்மனை  இராமநாதபுரத்தில் சந்தித்தான்.

    அப்போது வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய ஆங்கிலேயர்கள் முயன்றனர். அதை முறியடித்து வீரபாண்டிய கட்டபொம்மன் மீண்டும் பாஞ்சாலங்குறிச்சி திரும்பினார். பின்  1799 ஆம், ஆண்டு செப்டம்பர் 5 ஆம், தேதி  இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதி தலைமையில் நடந்த கடும் போரில் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை முற்றுகையிடப்பட்டது. இரு தரப்பிலும் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டது.

    இருப்பினும்  வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். பின் 1799 ஆம், ஆண்டு' செப்டம்பர் 9 ஆம் தேதி ஆங்கிலேயர்கள். பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை கைப்பற்றினார். 1799 ஆம், ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி, புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால், வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம்  ஒப்படைக்கப்பட்டார். 1799 ஆம், ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி' ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் உத்தரவுப்படி, பாரத தாய் திருநாட்டை காக்க போராடிய மாவீரன்" வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டு, வீர மரணம் அடைந்தார். 

    தனது குலதெய்வமான ஜக்கம்மா மீது அதிக பக்தி கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் எந்த காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும், முதலில் குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று ஜக்கம்மாவை வழிபட்ட பின்னரே" காரியத்தில் இறங்குவதை தனது வாழ்நாளில் கடைப்பிடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வமான ஜக்கம்மா மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட  எருமார்பட்டி ஊராட்சி. முன்பு வையாபுரிகிராமம் என்று அழைக்கப்பட்டது. இங்குதான் ஜக்கம்மாளின் குடும்பம் வசித்து வந்தது, இந்த வையாபுரி பகுதியிலிருந்து தான். ஜோதி நாயக்கனூர் ஜமீன்தாரின்  குதிரைகளுக்கு கொள்ளு, மற்றும் தீவனங்கள் அனுப்பப்படுவது வழக்கம்.

    ஒருமுறை ஜமீன்தார் இங்குள்ள தனது விலை நிலங்களை பார்வையிடுவதற்காக' குதிரையில் வலம் வந்தபோது, தன் வீட்டின் முன்பாக கோலம் இட்டுக் கொண்டிருந்த பதினாறு வயது சிறுமியான  ஜக்கம்மாளை கண்டார். அவளது அழகில் மயங்கிய ஜமீன்தார். ஊர் முக்கியஸ்தர், மூலம்  ஜக்கம்மாவின் குடும்ப விபரம் குறித்து தெரிந்து கொண்டு,  உடனே ஜமீன்தார் ஊர் முக்கியஸ்தரை அழைத்துக் கொண்டு. ஜக்கம்மா  வீட்டுக்கு சென்று அவளது பெற்றோரிடம் பெண் கேட்டார். அதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை, இதனால் ஆத்திரம் அடைந்த ஜமீன்தார் வரும் பௌர்ணமி தினத்தில் ஜக்கம்மாவை எனக்கு திருமணம் செய்து தராவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா ? என மிரட்டியதால், ஜக்கம்மாவின் அண்ணன் யோசித்து முடிவு எடுப்பதாக தெரிவித்தான். 
     

    உடனே" ஜமீன்தார். “என்ன யோசனை வேண்டி கிடக்கு, வருகிற பௌர்ணமி அன்று"  சொன்னது நடக்கணும்" என்றபடி ஊர் முக்கியஸ்தருடன்  கோவமாக ஜமீன்தார், சென்ற பின் ஜக்கம்மா, தனது தாயிடம் எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் அம்மா" என்றுகூறி கண்ணீர் விட்டு அழுதாள். பௌர்ணமிக்கு ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் ஜமீன்தார் ஆட்களும், ஊர்முக்கியஸ்தர்களும்  ஜக்கம்மாவின், குடும்பத்தினரிடம் திருமணத்திற்கு தயாராக இருக்கும்படி எச்சரிக்க விடுத்தனர். 
    இதனால் ஜமீன்தாரை பகைத்துக்கொண்டு ஊரில் வாழ முடியாது என்பதால்,  ஊரைவிட்டு போக முடிவு செய்து. அன்றிரவு உடைமைகளை எடுத்துக்கொண்டு ஜக்கம்மாளுடன் அவளது.  குடும்பத்தினர் மேற்குத்தொடர்ச்சி மலை வழியாக' லிங்கநாயக்கன்பட்டி' மலைப்பகுதிக்கு சென்றபோது. கடும் மழை பொய்தது இதனால் ஒதுங்க இடமின்றி அனைவரும் தவித்தனர், அப்போது ஜக்கம்மாளின் அண்ணன் மனைவி, ‘‘நல்லா வாழ்ந்த குடும்பம் இன்னைக்கு இவளால் தான் நடு காட்டுல நாதியத்து நிக்குது என புலம்பினாள். இதைக்கேட்டு மன வேதனை அடைந்த  ஜக்கம்மா,  திடீரென வேகமாக சென்று யாரிடமும் சொல்லாமல், மலை உச்சியில் அமர்ந்து ஓ, வென கதறி அழுதாள் தனது குடும்பம்  கெட்டதற்கு ஜமீன்தார்தான் காரணம். குதிரை இருப்பதனால்தானே, குதிரையில் வந்து என்னைப்பார்த்து எனது குடும்பத்தையே" அழித்து விட்டான் பாவி என கோபம் அடைந்து, இந்த பகுதியில் இனி எள்ளு – கொள்ளு விளையக்கூடாது, குதிரைக்கு பட்டம் சூட்ட ராஜா நிம்மதியா வாழக்கூடாது.

    ராஜா பட்டம் சூட்டிய குதிரையும் இருக்கக்கூடாது. என தனது குலதெய்வத்தை வேண்டி சாபமிட்டபடியே"  மலை உச்சியிலிருந்து கீழே குதித்து" ஜக்கம்மா உயிர் விட்டால்,  உடலை எரியூட்டுவதற்காக குடும்பத்தினரும், உறவினர்களும் தூக்கிக்கொண்டு வந்து, இப்போதுள்ள ஜக்கம்மாள் கோயில் இருக்கும் இடத்தில் எரியூட்டினார்கள். அப்போது, மன வேதனையால், உயிர்விட்ட  ஜக்கம்மாளின் சேலை மட்டும் தீயில் கருகாமல் அப்படியே இருந்தது, இதனால் அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் சேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்.
     

    அப்போது வையாபுரி கிராமத்தில் உள்ள சிறுமி ஒருத்திக்கு, அருள் வந்து ஆடினாள். ‘‘நான், ஜக்கம்மா வந்திருக்கேன். எனக்கு இங்கேயே" கோவில் கட்டி வணங்கினா குலதெய்வமாயிருந்து. இந்த ஊர் மக்களை காப்பாற்றுவேன்" உங்க நாக்கில் இருந்து ஊருக்கு ஏற்படும் நல்லது கெட்டது முன்கூட்டியே சொல்லுவேன்" என்றால் அதன்படி கட்டப்பட்டது தான் வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய ஜக்கம்மா கோவில், இப்போதும் அப்பகுதியில் கொள்ளு, எள்ளு முளைப்பதில்லை அதனை ஜக்கம்மாளின் பூர்வீக விவசாயிகள் யாரும் விளைவிப்பதும் கிடையாது இன்று வரை ஜக்கம்மாவை தங்களது குலதெய்வமாகவே"அவர்கள் கொண்டாடி, வணங்கி வருகின்றனர்.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • சிவனின் கோபத்திற்கு ஆளான மகாவிஷ்ணு! நடந்தது என்ன ?

    வழக்கமாக பெண்கள் திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு சென்றவுடன்"தனது தாய் வீட்டில் இருந்து பெற்றவர்களோ"அல்லது உடன் பிறந்தவர்களோ" தன்னைக் காண வந்துவிட்டால், அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. அப்படி ஒரு முறை தனது சகோதரியான பார்வதி தேவியை பார்ப்பதற்காக அவரது புகுந்து வீட்டிற்கு மகாவிஷ்ணு'சென்றபோது தனது மைத்துனன் சிவபெருமானின் கோபத்திற்கு ஆளான" கதை என்ன தெரியுமா ? அடுத்தவர் வீட்டு கதை என்றாலே"நமக்கெல்லாம் அல்வா சாப்பிடுவது போன்று" அதுவும் சிவபெருமான் விட்டு கதை என்றால் கேட்க சொல்லவா வேண்டும்" வாருங்கள் என்ன நடந்தது என தெரிந்து கொள்ளலாம்,
    திருக்கைலாயத்திற்கு ஒருமுறை தனது சகோதரி பார்வதி தேவியை பார்ப்பதற்காக மகாவிஷ்ணு சென்றார், அப்போது அவரை சிவபெருமானும் பார்வதி தேவியும் வரவேற்று தடபுடலான விருந்திருக்கு ஏற்பாடு செய்து உபசரித்தனர்.

    பின் விருந்து முடிந்ததும் மகாவிஷ்ணு, சிவபெருமான், இருவரும் பார்வதி தேவியை நடுவராக கொண்டு, சொக்கட்டான் ஆடிய போது, காய் உருண்டோடியது நடுவரான பார்வதி தேவி தனது சகோதரனான மகாவிஷ்ணுவுக்கு சாதகமாக ஒரு தலை பட்சமாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த  சிவபெருமான் பார்வதி தேவியைப் பசுவாக மாறும்படி சாபம் இட்டார்.

    அப்போது பார்வதி தேவிக்கு துணையாக லட்சுமி தேவியும், தகவல் அறிந்து, பிரம்மலோகத்தில் இருந்து சரஸ்வதியும் புறப்பட்டு பார்வதி தேவியுடன் பசுவாக மாறி பூலோகம் வந்தடைந்தனர், சகோதரியை காண வந்த இடத்தில் தனது விளையாட்டால் மைத்துனன் சிவபெருமானின் கோபத்திற்கு ஆளானதை, எண்ணி வருத்தம் அடைந்த மகாவிஷ்ணு" மருவியப்பன் எனும் பெயர் கொண்டு மாடு மேய்ப்பானாக' பூலோகம் வந்த இடம்தான். திருவழுந்தூர் என்ற தேரழுந்தூர் அருள்மிகு ஸ்ரீ சவுந்தராம்பிகை உடனுறை அருள்மிகு ஸ்ரீ வேதபுரீஸ்வரர் திருக்கோவில் ஆகும், தல விருச்சகம், வில்வம், சந்தனம், புனித திருத்தம், வேதாமிர்த  தீர்த்தம், திருஞானசம்பந்தர் பதிகம் பாடி வணங்கிய இறைவனின் இருப்பிடம் தேரழுந்தூர், நாகப்பட்டினம் மாவட்டம்,

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

     

  • பிரளயத்தில், இருந்து சிவபெருமான் மதுரை மாநகரை காப்பாற்றியது எப்படி ?  

    சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரை தலைநகராகக் கொண்டு, பாண்டிய மன்னர்கள் அரசாட்சி புரிந்து வந்தனர், முடி சார்ந்த மன்னரும்" முடிவில் பிடி சாம்பல் ஆவான்" என்ற பட்டினத்து அடிகளின் தத்துவத்தின் அடிப்படையில் அம்மண்ணை ஆண்ட மன்னர்கள் அனைவரையும் தன் ஆளுமையால் மண் ஆண்டு முடிவுரை எழுதிய மதுரை மாநகரில்' சக்தியின் வடிவமான மீனாட்சி இன்றும் அரசாட்சி புரிந்து வருகிறாள். முடிவில்லா" இவளது ஆட்சியிலும் ஒரு முறை மதுரை மாநகரில் பிரளயம் ஏற்பட்டபோது. சிவபெருமான் எப்படி நகரை காப்பாற்றினார் தெரியுமா ? வாருங்கள் அறிந்து கொள்ளலாம் அந்த சொக்கநாதனின் திருவிளையாடலை"     
    புராண களத்தில் ஒருமுறை மதுரை மாநகரில் பிரளயம் ஏற்பட்டு, பூமி இரண்டாக பிளந்தது.  

    இதனால் நகரின் நான்கு புறமும் பெரும் வெள்ளம் சூழ்ந்ததால், கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகி பூமிக்குள் புதைந்தது, அனைத்து கால்நடைகளும் உயிரினங்களும் ஏராளமான மக்களும் பெரும் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டனர். அப்போது மதுரையின் அரசியான மீனாட்சி மதுரை மாநகரை காக்க வேண்டி, சிவபெருமானை நோக்கி தவம் தவம் புரிந்தால்' அப்போது மீனாட்சியின் வேண்டுதலை ஏற்று"சிவபெருமான் பாம்பு உருவெடுத்து மதுரை மாநகரின் நான்கு புறத்தையும்    தனது. உடலால் வளைத்து'. பாம்பாக இருந்தமையால்'  அப்போது ஆக்ரோஷமாக படம் எடுத்து தன் வாளால் வெள்ளப்பெருக்கை தடுத்து. மதுரை மாநகரை காப்பாற்றி அருளினார். இதன் காரணமாகவே பாம்பின் படம் எடுத்த தலையும், அதன் வாலும் ஒன்றாக நின்ற இடமே" படப்புரம் என அழைக்கப்பட்டது. இது மருவி தற்போது மடப்புரமாக ஆனது.

    இங்கு ஒருமுறை சிவபெருமான் உமையவளை அழைத்துக்கொண்டு வேட்டையாடுவதற்காக,  வந்தபோது, அடர்ந்து விரிந்த வனப்பகுதியான. இந்த இடத்தில் உன்னால்' இதற்கு மேல் ஒரு அடி கூட நடந்து வரமுடியாது தேவி எனவே" நீ சற்று நேரம். இங்கேயே இரு. நான் மட்டும் வேட்டையாட சென்று வருகிறேன். என உமையவளிடம் கூறினார். அப்போது இந்த  காட்டில், நான் மட்டும் எப்படி?" தனித்து இருப்பது சுவாமி" என உமையவள் கேட்டாள். உடனே" சிவபெருமான் காவல் தெய்வமான அய்யனாரை வரவழைத்து, உமையவளுக்கு தீங்கு ஏதும் நேராதவாறு" பாதுகாப்பாக இருக்குமாறு உத்தரவு இட்டு வேட்டைக்கு  சிவபெருமான் புறப்பட்டார். அப்போது ஊமைவள், இந்த இடத்திற்கு நான் வந்ததால், இவ்விடம் சிறப்படையுமாறு அருள் புரிய வேண்டும் என கேட்டாள், அவ்வாறே" இறைவன் வைகையில் புனித நீராடி நம்மை" வணங்கி வழிபடும் அடியார்களுக்கு , காசிக்குச் சென்று கங்கை நதியில் புனித நீராடிய பலன் கிடைக்கும், என தேவிக்கு சிவபெருமான் வரம் கொடுத்தார்.

    அதன்படி,  மடப்புரத்தில் அன்னை பார்வதி, காளி தேவி வடிவில் தங்கினாள். அப்போது சக்திக்கு காவலாக நின்ற  அய்யனார், அடைக்கலம் காத்த அய்யனார் என அழைக்கப்பட்டாலும், சக்தியின் வடிவமாக இங்கு காட்சியளிக்கும்"அன்னை ஸ்ரீ பத்ரகாளி தான் வழிபாட்டிற்குரிய தெய்வமாக வணங்கப்படுகிறாள். ஈசன் அளித்த வரத்தின்படி மடப்புரத்தின் சற்று தொலைவில், வைகையில் புனித நீராடி அம்மை அப்பரை வணங்கும், பக்தர்களுக்கு இன்றளவும் காசி கங்கை நதியில் நீராடிய புண்ணியம் கிடைப்பதாக நம்பிக்கை, ஆலயத்தில் கூரையின்றி வெட்ட வெளியில் வானத்தை பந்தலாகவும்' மேகத்தை தோரணமாகவும்" கொண்டு, அதர்மத்தை அழிக்க புறப்படுவது போன்று"  ஆக்ரோஷமாக  நாக்கைத் துருத்தியபடி நின்றகோலத்தில் காட்சி அளிக்கிறாள் அன்னை ஸ்ரீ பத்ரகாளி. சக்தியின் இருபுறமும் இரண்டு பூதகணங்கள். 13 அடி உயரத்தில் அன்னையின் தலைக்கு மேல் குதிரை ஒன்று தாவி நிற்கிறது. சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகில் உள்ள மடப்புரம் சென்றாள் அன்னை ஸ்ரீ பத்ரகாளியின் இந்த அருள் வடிவை கண்டு வணங்கலாம்.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்