Blog

  • தன் கண்ணை பிடுங்கி மகாவிஷ்ணு சிவபெருமானுக்கு பூஜை செய்தது ஏன் ? 

    ஒருமுறை நாரத முனிவருக்கு பக்தி என்பதற்கு பொருள் குழப்பம் ஏற்பட்டது, இது குறித்து அறிந்து கொள்வதற்காக மகாவிஷ்ணுவிடம் சென்ற போது அவர் கொடுத்த விளக்கத்தில் திருப்தி அடையாததால் சிவபெருமானிடம் சென்று விளக்கம் கேட்குமாறு' மகாவிஷ்ணு கூறியதால் நாரத முனிவர் கைலாயம் சென்று சிவபெருமானிடமும் விளக்கம் கேட்டார், அப்போது சிவபெருமான் பூலோகம் சென்று சுயம்பு வடிவாக தோன்றிய ஆயிரம் சிவலிங்கங்களை வழிபடுமாறும் அப்படி வழிபட்டால் அதற்கான விளக்கத்தை தானே" வந்து கூறுவதாக தெரிவித்தார், அதனை ஏற்று நாரத முனிவரும் பூலோகம் வந்து பல ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்து, நிறைவாக திருமாற்பேறு என்ற இடத்தில் உள்ள கோவிலுக்கு சென்ற அங்கு கருவறையில் ஒரு சிவலிங்கம் இருந்தது. அதன் எதிரில் லிங்கத்தை வணங்கிய வாறு'  விஷ்ணுவின் சிலையும் இருந்தது. அதைக் கண்ட நாரத முனிவருக்கு வியப்பு ஏற்பட்டது.

    இதனால் இது விஷ்ணு ஆலயமா ? அல்லது சிவன் ஆலயமா ?  என்ற சந்தேகம் உண்டாகவே"
      அங்கிருந்த அர்ச்சகரியிடம் கேட்டார்.  அந்த அர்ச்சகரும்" இது விஷ்ணுவின் ஆலயமே என்று கூறினார். அதைக் கேட்ட நாரத முனிவருக்கு ஆச்சரியம் உண்டானது அப்படி என்றால் இங்கு மூலவராக விஷ்ணு இல்லையே . என காரணம் குறித்து கேட்டபோது, அர்ச்சகர் அவருக்கு ஆலய பெருமை குறித்து எடுத்துக் கூறியதை நாமும் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

    புராண காலத்தில் குபன் என்ற  மன்னன் ஒருவன், ததீசி எனும் மாமுனிவருடன் யுத்தம் செய்த போது.  விஷ்ணுவின் பக்தன் ஆன"மன்னனின். வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட மகா விஷ்ணு' அவனுக்கு ஆதரவாக தானும் ததீசி முனிவருக்கு எதிராக போர் புரிந்தார், அப்போது மகாவிஷ்ணு நடத்திய சக்கர யுத்தத்தை தனது தகவலிமையால், ததீசி முனிவர் அதனை செயலற்று போகும்படி செய்தார். இதனால்,  தனது ஒரே சக்தி வாய்ந்த ஆயுதமான சக்ராயுதமே செயல் இழந்து போனதால், கவலையடைந்த மகாவிஷ்ணு' என்ன செய்வதென்று புரியாமல்  தேவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அவர்களின் அதன்படி,  மகாவிஷ்ணு, ஏற்கனவே"  சலந்தராசூரன் எனும் கொடுங்கோலனை  அழிக்க தான் உருவாக்கிய சுதர்சன சக்கரம்,  சிவபெருமானிடம் இருப்பதை அறிந்து அதனை,  சிவபெருமானிடம் இருந்து மீண்டும், திரும்பப் பெற்றுக் கொள்ள எண்ணி, சிவ வழிபாடு நடத்தி தவம் இருக்க முடிவு செய்து, சிவபெருமானை துதித்து பூஜை செய்ய முடிவு செய்து, சிவ பூஜையை செய்ய சக்தி வாய்ந்த சுயம்புலிங்கம் தோன்றிய கோவிலை தேடி அலைந்து, இறுதியாக' உமையவள் பூஜித்து வணங்கிய திருமாற்பேறு" எனும் இந்த இடத்தை வந்தடைந்து, உமையவள், பூஜித்த அதே" சுயம்புலிங்கத்தை நாள்தோறும்,  ஆயிரம் தாமரை மலர்களை கொண்டு, பூஜை செய்து. மகாவிஷ்ணு' சிவபெருமானை நோக்கி தவம் தவம் புரிந்தவாறு இருந்தபோது, ஒருநாள் அவரை சோதிக்க நினைத்த சிவபெருமான்.

    வேண்டும் என்றே" விஷ்ணு கொண்டு வந்து 1000, தாமரை மலர்களில் ஒரு மலரை மாயமாக மறைய செய்து விட்டார். 999 தாமரை மலர்களைக் கொண்டு, அர்ச்சனை செய்தபோது, கடைசி மந்திரத்தை உச்சரித்து போட,  தாமரை மலர் ஒன்று இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மகாவிஷ்ணு மனம் தளராமல். உடனே" தனது ஒரு கண்ணை பிடுங்கி அதையே தாமரை மலராக எண்ணிக்கொள்ளுமாறு, ஈசனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டார். மகாவிஷ்ணுவின் பக்தியைக் கண்டு வியந்த சிவபெருமான். இறைவனாக இருந்தாலும், தன்னை வணங்கும்போது, தன் பக்தியை உணர வைக்க' தனது கண்ணையே பிடுங்கி பூஜித்ததை கண்டு, உள்ளம் மகிழ்ந்து ஈசன் கண்களை மேலும் அழகு பெற செய்து' தன்னிடம் இருந்த சக்கரத்தையும், மகாவிஷ்ணுவிடம் கொடுத்து, போரில் வெற்றி பெற வாழ்த்தி, இனி செந்தாமரை கண் அழகர் என அழைக்கப்படுவாய்" என அருளினார்.

    மகாவிஷ்ணு சிவபெருமானை வழிபட்டு, தனது சக்கரத்தை திரும்ப பெற்றதினால்  இதை,  ஹரி சக்ரபுரம் என கூறப்படுவதுண்டு,  ஆகவே உண்மையான பக்திக்கு ஒரு எடுத்துக்காட்டாக இக்கோவில் இருப்பதாக, அர்ச்சகர் கூறவும், அதைக் கேட்ட நாரதர் பக்திக்கு அடையாளம், அந்த கோவிலில்  உள்ள மகா விஷ்ணுவே என்பதை புரிந்து கொண்டு உடனடியாக ஈசனையும், திருமாலையும் சந்திக்க வேண்டி மேல் லோகம் புறப்பட்டு, சென்றார். இந்த அறிய புராண வரலாற்று நிகழ்வு அரங்கேறிய திருக்கோவில். தற்போது திருமாற்பேறு என்றும் , அருள்மிகு ஸ்ரீ மணிகண்டேஸ்வரர் எனவும், போற்றப்படுகிறது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோவில்' இறைவனைப் போற்றி திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், பதிகம் பாடி உள்ளனர்.

    இங்கு தாமரை மலர்களால் திருமால் ஈசனை வழிபட்டதால், எம் பெருமானுக்கு தாமரை கண்ணழகர் என காரணயரும் உண்டு, அறியும் சிவனும் ஒரே இடத்தில் அருள் பாவிப்பதால் சிவா விஷ்ணு கோவிலாகவும் கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் பிரம்மோற்சவம், அன்று கருட வாகனத்தில் பெருமாள் காட்சி தருகிறார்.  இந்த அருள்மிகு ஸ்ரீ மணிகண்டேஸ்வரர் திருக்கோவில் வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டத்தில் திருமால்பூர் என்னும் இடத்தில் உள்ளது.

    பொன் .கோ.முத்து திருவள்ளூர்

  • சிலந்தி கடித்து ரணமான சிவலிங்கத்தில் ரத்தம் வழிவதை கண்டு கலங்கி நின்ற சிவ அடியார்

    சோழ நாட்டில் சாத்தமங்கையில்,  திருநீலநக்க என்ற சிவ அடியார் வாழ்ந்து வந்தார். பரமன் மீது பக்தி கொண்ட அவர்,  ஒரு நாள் தனது துணைவியார் மங்கையர்க்கரசியுடன்' திருவாதிரை நட்சத்திரத்தன்று ஸ்ரீ அயவந்தீஸ்வரரை வணங்குவதற்காக கோவிலுக்கு சென்று, அங்கு மலர்களால் இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டுக் கொண்டிருந்தபோது, சிவலிங்கத்தின் மீது சிலந்தி ஒன்று ஊர்ந்து வருவதை  மங்கையர்க்கரசியார். கவனித்தார் ஈசன் திருமேனியில் ‘ சிலந்தியா ?. அதை அகற்ற வேண்டும்’ என்ற எண்ணத்துடன். தனது வாயால் அதை ஊதினார். ஆனால்" சிலந்தி அங்கிருந்து  செல்லவில்லை.

    இதனால் மீண்டும் மீண்டும் வாயால் ஊதியபடி சிலந்தியை விரட்ட முயற்சி செய்தார். அப்போது அதைக் கண்டு ஆத்திரம் அடைந்த  திருநீலநக்கர் என்ன ஆணவம் உனக்கு" எச்சிலை ஈசன் மீது  தெறிக்க விடுவாய்,  உன் எச்சில் இறைவன் மீது விழுந்து விட்டது. இந்த செயல் ஆகமத்திற்கு எதிரானது,  நீ தெய்வத்தை அவமதித்து விட்டாய்"  என்று மங்கையர்கரசியாரை கடுமையாக கண்டித்து விட்டு, கோபத்தில் அவரை அங்கேயே' விட்டு விட்டு, தான் மட்டும் புறப்பட்டு சென்று விட்டார்.  மங்கையர்கரசியோ, கணவனின் கோபத்திற்கு ஆளானதை எண்ணி' ஆலயத்தின் நூல், அமர்ந்து இறைவனை வழிபட்டார். ஈசனே" நான் செய்தது பெரும் பிழை என்றால், கருணை கொண்டு' என்னை மன்னித்து விடு. என் கணவன். என்னை விட்டு விலகும் படி செய்து விடாதே” என இறைவனே" சரணா கதி என அவன் திருவடியில் பணிந்து கிடந்தார். அன்றிரவு திருநீலநக்கர் கனவில் தோன்றிய ஈசன்'  திருநீலநக்கரே " உம் துணைவி எம்மிடம் தாயின் கருணையோடு, நடந்து கொண்டார். அவர் மீது பிழை ஏதுமில்லை'  பொழுது விடிந்ததும் கோவிலுக்கு, வந்து என் திருமேனியை பார்" என்றார்.

    உறக்கம் களைந்து கண் வீழ்த்த  திருநீலநக்கர். சேவல் கூவி" கதிரவன் தோன்றும் முன் , பதற்றத்துடன் கோவிலுக்கு ஓடி சென்று பார்த்தபோது. கருவறையில்  இருந்த இறைவனின் லிங்க திருமேனியில்  மங்கையர்கரசியாரின், எச்சில்பட்ட இடத்தைத் தவிர்த்து  மற்ற இடங்களில் எல்லாம் சிலந்திக் கடித்துப் புண்ணாகிய சிவபெருமானின் சுயம்பு திரு மேனியில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. ஈசனுக்கு நேர்ந்த கதியை நினைத்து கண்ணீர் விட்டு கதறினார். இறைவா அடியேன் அறியாது செய்த தவறை மன்னித்து அருளுங்கள்" என பணிந்து நின்றார். அப்போது சிலந்தி கடித்த காயம் நீங்கி இயல்பு நிலைக்கு வந்த லிங்கத் திருமேனியிலிருந்து ஜோதி வடிவில் எழுந்தருளிய  சிவபெருமான் முன் திருநீலநக்கரும்- மங்கையர்கரசியாரும் திருவடியில் விழுந்து வணங்கினர்.

    மங்கையர்கரசியை தனது தாயாக ஈசனே" ஏற்றுக்கொண்டதை எண்ணி மனம் மகிழ்ந்து.  மங்கையர்கரசியாரை மீண்டும் அழைத்துக் கொண்டு இருப்பிடம் சென்றார்.இவ்நிகழ்வுக்கு பின்  சிவபெருமானுக்கு தொண்டுபுரிவதும் அடியாருக்கு பணி செய்வதை  பாக்கியமாக  அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருநீலநக்க நாயனாரும், அவரின் துணைவியா  மங்கையர்கரசியாரும் செய்து கைலாய நாதன் கரம் பற்றி பிறப்பில்லா நிலை அடைந்தனர். 
    பூதிப் புயத்தர் புயத்திற் சிலந்தி புகலும்அஞ்சிஊதித் துமிந்த மனைவியை நீப்பஉப் பாலவெல்லாம்பேதித் தெழுந்தன காணென்று பிஞ்ஞகன் காட்டுமவன்நீதித் திகழ்சாத்தை நீலநக் கன்எனும் வேதியனே." 
     

    திருநீலக்க நாயனார்-மங்கையர்க்கரசியார் வணங்கிய அருள்மிகு ஸ்ரீ அயவந்தீஸ்வரர் திருக்கோவில், நாகபட்டினம் மாவட்டம், நன்னிலம் வட்டத்திற்கு உட்பட்ட  சீயாத்த மங்கை கிராமத்தில் உள்ளது.  திருஞானசம்பந்தர் இவரை வழிபட்டு' ; மேகம் உறிஞ்சும் பெருஞ்சாத்த மங்கை’ என பதிகம் பாடினார். இங்கு ஈசனுக்கு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் என்ற திருப்பெயரும், அன்னை அருள்மிகு ஸ்ரீ  இருமலர்கண்ணியம்மை, உபயபுஷ்ப விலோசினி என்றும் அழைக்கப்படுகிறாள். கிழக்கே புனித சூரிய தீர்த்தமும்,(அக்கினி தீர்த்தம்) மேற்கே சந்திர தீர்த்தமும்,(குளிர்ந்த திருத்தம்) இத்திருகுளத்தில் புனித நீராடி. காலை சூரிய உதயத்திற்கு பின், மாலை சந்திர ஊதியத்திற்கு பின்னும் ஏழு பௌர்ணமிகள் தொடர்ந்து இறைவனை வழிபட்டால், திருமண தடை நீங்கும், குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இணக்கம் ஏற்படும், பிள்ளை பேரு பாக்கியம் உண்டாகும், செல்வம் செழிக்கும், என்பது நம்பிக்கை, இந்த ஆலயம் ருத்ர வியாமளா தந்தரம் ஆகமத்தில் கட்டப்பட்டுள்ளது. கோவிலுக்குள் நுழைந்ததும் திருநீலநக்க நாயனார், மங்கையர் கரசி அம்மையார், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகப் பெருமான், ஆகியோரும் உள்ளனர். இறைவன் சன்னதியில் ஐந்து நிலை ராஜகோபுரம், அம்பிகை சன்னதி முன் இரண்டு நிலை கோபுரமும் அடியார்களை இன்முகத்துடன் வரவேற்கிறது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

     

  • இராவணனை நெருங்க முடியாமல் நின்ற சனீஸ்வரன்!

    ஈசனை மெய்ஞானத்துடன் வணங்கும் பக்தர்களை  சனீஸ்வரனாலும் நெருங்க முடியாது' என்பதற்கு சாட்சி மார்க்கண்டேயன் மட்டுமல்ல, தென் தமிழகம் வந்தபோது சிவ பூஜையில் இருந்த இலங்கை மன்னன் இராவணனை நெருங்க முடியாமல் சனீஸ்வர பகவான் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற திருக்கோவில் எங்கே உள்ளது தெரியுமா ? வாருங்கள் தரிசிக்கலாம்.

    திருக்கைலாயத்தில் ஒரு ஒரு நாள்  பூத பூத கணங்கள் ஆயிரம் பேர், சிவஞான விளக்கத்தை அறிய வேண்டி  சிவபெருமானிடம் முறையிட்டனர்.  சிவபெருமானும், அவர்களின் கோரிக்கையை  ஏற்று, அவர்களுக்கு சிவஞான விளக்கம் அளிக்க எண்ணி' பின்  பூத கணங்களிடம், "நீங்கள் அனைவரும்,  புனித பூமியான தென்னாட்டிற்கு  செல்லுங்கள். அங்கு தென் பகுதியில்'  பெண்ணை ஆற்றின் படுகையில் உள்ள  இரண்டு சுவைகளை அறிய செய்யும் இரு வேறு' மரங்கள் உள்ளன. ஒன்று கசப்பை உணர்த்தும் வில்வம், மற்றொன்று இனிப்பை உணர்த்தும் மாமரம்.  அமைந்துள்ள நதிக்கரையில், சுயம்புபாக நான் வீற்றிருப்பேன். அங்கு அகத்திய மாமுனிவர் வந்து தினந்தோறும்  எம்மை வணங்குவது  வழக்கம்.

    நீங்களும் அவ்விடத்தில் எம்மை வேண்டி தவம் இருங்கள். உரிய நேரத்தில் நான்  அங்கு தோன்றி உமக்கு' சிவஞான விளக்கம் அளிக்கிறேன்" என உரைத்தார். ஈசனின் வாக்கில் நெகிழ்ந்த  பூதகணங்கள் இறைவனிடம் ஆசி பெற்றுக் கொண்டு,  பூலோகம் வந்தடைந்தனர். சிவபெருமான்  குறிப்பிட்ட இடத்தை தேடி வந்து கொண்டிருந்தனர்.  அப்போது திடீரென அகத்திய மாமுனிவர் எதிரே வருவதைக் கண்டு, அவரை வணங்கி' பூலோகம்    வந்த விவரத்தை எடுத்துரைத்தனர்.  அப்போது அகத்திய முனிவர்,
     "நான் பொதிகை மலை நோக்கி  செல்கிறேன். நீங்கள் குறிப்பிட்ட வில்வம், மாமரம் உள்ள அந்த திருத்தலம், செல்லும் வழியில் தான் உள்ளது. என்னுடன் வாருங்கள்" அழைத்துச் செல்கிறேன்' என அவர்களுக்கு சுயம்பு வடிவான சிவலிங்கத்தை காட்டி பூஜித்து விட்டு, பூதகணங்களை வாழ்த்தி தனது பயணத்தை தொடர்ந்தார்.

    பின்னர் பூதகணங்கள்  அங்கேயே தங்கி புனித நீராடி சிவனை வழிபட்டு, கடும் தவம் இருந்தனர். அவர்களின் பக்திக்கு இணங்கி  சிவபெருமான் தோன்றி அவர்களுக்கு காட்சியளித்து. தன்னை வழிபட்ட ஆயிரம் பூத கணங்களுக்கும்,  சிவபெருமான் சிவஞான விளக்கம் அளித்தார். அதைக் கேட்டு தெளிவு பெற்ற ஆயிரம் பூத கணங்களும் ஈசனுக்கு சிரம் தாழ்த்தி தங்கள் நன்றியினை தெரிவித்து, பூலோகத்திலேயே ஒரு யுக காலம் சிவனை வணங்கி தவம் இருந்து வில்வ மரங்களாக மாறி, வில்வ இலைகளால் சிவனை அர்ச்சனை செய்து சிவன் ஞான பேரின்ப முக்தி அடைய விரும்புவதாக வேண்டினர், அதன்படி இறைவன் அருள ஆயிரம் பூதகணங்களும் வில்வ மர வனமாக மாறியதால்' இந்த இடம் 'வில்வாரண்யம்' என பெயர் பெற்றது.

    தங்கள் வில்வ இலைகளை தாங்களே உதிர்த்து எடுத்து' இறைவனுக்கு  பூத கணங்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்…. அப்போது சிவ பக்தனான இலங்கை மன்னன்  இராவணன், திருக்கைலாயத்திலிருந்து அழியா வரம்    பெற்று தனது விமானத்தில் ஆகாய மார்க்கமாக வரும் போது, இந்த திருக்கோவிலை கண்டு, இராவணன் விமானத்தை உடனே தரை இறக்கினான். அப்போது  ஓம் நமச்சிவாய" ஓம் நமச்சிவாய" என்ற திருமந்திரம் உச்சரிக்கப்படுவதை கேட்டு, சிவ பக்தனான இராவணன் அங்குள்ள நதியில் புனித நீராடி சிவனை வணங்க' சென்றான். உச்சிக்கால பூஜை நேரம் என்பதால், அங்கிருந்த அனைத்து, வில்வ மரங்களும் பூத கணங்களாக மாறி வில்வ அர்ச்சனை செய்வதை கண்டு உள்ளம் மகிழுந்து.  

    தானும் சிவ பூஜையில் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டான். ஏற்கனவே தேவலோகத்தில் இராவணனை பிடிக்க பின் தொடர்ந்து வந்த சனி பகவான். இங்கு சிவ நாமம் ஒலித்துக் கொண்டிருந்ததால், சனிபகவானால் கோவிலுக்குள் செல்ல முடியவில்லை. ஈசனின் பேராற்றலை உணர்ந்த சனி பகவான், இராவணனை நெருங்க முடியாததால் தானும் சிவனை வணங்கி விட்டு, தான் வந்த வேலையை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக  தலபுராணம் சொல்கிறது.கடலூர் மாவட்டத்தில் வில்வநகர் பகுதியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோவில் இருக்கும் இடம், வில்வ மரங்கள் நிறைந்த வனமாக இருந்ததால், வில்வ' வனம்' என அழைக்கப்பட்டு, இறைவன் வில்வன நாதர்,வில்வநாதீஸ்வரர், என அழைக்கப்படுகிறார்.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவி

    படைப்பு கடவுளான பிரம்ம தேவனின் சக்தியாக விளங்கும் அன்னை சரஸ்வதி தேவியை' ரிக்வேதம்  ஒரு ஆறாக குறிப்பிட்டுள்ளது. வளமையை தந்து படைப்பு ஆற்றலை உருவாக்கி எண்ணங்களை தூய்மைப்படுத்துவதால், நீரோடு சரஸ்வதியை ஒப்பிடுகின்றனர். நீர் போல் பெருக்கெடுத்து ஓடும், சரஸ்வதி தேவி படைப்பின் சக்தியாகவும், கலைகள், கல்வி, பேச்சாற்றல், கவித்திறன் என கலைகளின் தலைவியாக சரஸ்வதி தேவி வணங்கப்படுகிறாள். அறிவு என்னும் ஒளிச்சுடரை தூண்டி அறியாமை இருளை அகல செய்யும், வெண்மையின் அடையாளமாக திகழும், சரஸ்வதி தேவி வெள்ளை நிற உடை அணிந்து, வெள்ளைத் தாமரையில் எழுந்தருளி தனக்கென அரிதாக தனி கோவில் கொண்டு அருள் பாவிக்கும் இடமானது.

    திருவாரூர் மாவட்டம்   கூத்தனூர். மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கலை வடிவமாக காணப்படும் இக்கோவிலின் முன் கலை நையத்துடன்  மண்டபம் காணப்படுகிறது. கருவறையில் மூலவராக சரஸ்வதி தேவி கலைகளின் அம்சமாகவே' பத்மாசனத்தில், வலது கீழ் கரத்தில்  முத்திரை, இடது கரத்தில் புத்தகமும்,  வலது மேல் கரத்தில்  அட்சர மாலையும், இடது மேல் கரத்தில் அமிர்த கலசத்துடன் கலை அம்சத்துடன் காணப்படுகிறாள். மேலும் இங்கு உள்ள 'ருத்ர கங்கை'எனும் அரசலாற்றில் சரஸ்வதி ஆறு சென்று அடைவதாக   வரலாறு கூறுகிறது. தங்களது பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் முன் பெற்றோர் இங்கு அழைத்து வந்து சரஸ்வதி தேவியை வணங்க செய்து அதன் பின்னே பள்ளியில் சேர்க்கின்றனர்.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • தான் படைத்த மலைகளுக்கு இடம் இல்லாததால் வருந்தி நின்ற பிரம்மன்!

    மணிமுக்தாற்றின் மேற்கு கரையில் மலையாகத் தோன்றி படைப்பு கடவுளான பிரம்ம தேவனை, அகத்திய மாமுனிவரை வணங்க வைத்து பூலோகம் தோன்ற கருணை புரிந்து லிங்கத்தில் எழுந்தருளி  விருத்தகிரீஸ்வரர் என்ற திருப்பெயருடன் அருள் பாவிக்கும் ஈசனின் வரலாற்றை அறிந்து கொள்வோம் வாருங்கள். 
     பிரம்மதேவன் புராண காலத்தின் ஆதியில்  பூலோகத்தை உருவாக்க எண்ணி முதலில் தண்ணீரை படைத்தான்.

    அப்போது  திருமால் தீய அரக்கர்களை  வெட்டி விழுத்தி அவ் உடல்கள் பிரம்மன் படைத்த நீரில் வீழ்ந்து மிதந்தன. அதனை கண்ட பிரம்மன் நீரும் அரக்கர்களின் உடல்களும் ஒன்றாக இருக்க மண்ணுலகம் தோன்ற அருளுமாறு சிவபெருமானிடம் வேண்டினார். அப்போது ஈசன் மலை வடிவாகத் தோன்றி பிரம்ம தேவனின் எதிரி நின்றார். அதனை அறியாமல் வேறு பல மலைகளைப் படைத்தான் பிரம்மன். தான் படைத்த மலைகளுக்கு இருக்க இடம் இல்லாமல் போனதால் வருந்தி நின்றான் பிரம்மன் இருக்க இடம்  இல்லை.  பெரிதும் வருந்தி மயங்கி நின்றார். அப்போது குறிப்பால் உண்மையை உணர்ந்து கொண்ட பிரம்மன் நல்லறிவு பெற்று மழையாய் நின்ற சிவபெருமானை பூஜித்து பக்தியுடன் வழிபட்டார்.

    அதில் மன மகிழ்ந்து சிவபெருமான், அரக்கர்களின் தசையும் தண்ணீரையும் ஒன்றாக இறுகி பூலோகம் தோன்றுமாறு செய்தார். அதற்கு மேதினி என்று பெயரிட்டார். பிரம்மன் படைத்த மலைகளுக்கும் இடம் அளித்தார். அப்போது  நாமே இம்மலை வடிவாகத் தோன்றி நின்றோம்.  நான் வேறு இம்மலை வேறு அல்ல.  இந்த மலை தோன்றிய பின்னரே பிரம்மா உன்னால் பல மலைகள் தோன்றின. எனவே"   நம்  மலைக்குப் பழமலை என பெயர் தாங்கி' இப்பழமலை மண்ணுலகுக்கு ஆணிவேராக ஆழ்ந்து நின்று மேலோங்கி சிவலிங்கமாக அருள் புரிந்து நிற்கும்.

    இதனை  மெய்ஞானத்தால் உணர்ந்து, பக்தியுடன் வணங்கி வழிபடும் அடியாருக்கு வாழ்வில் நலன்கள் பல கிடைக்கும் என அருளினார். இறைவன் அருள்மிகு ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர், பழமலைநாதர், முதுகுந்தர். எனவும், அன்னை அருள்மிகு ஸ்ரீ விருத்தாம்பிகை,  பாலாம்பிகை, இளைய நாயகி என அழைக்கப்படுகின்றனர். புனித தீர்த்தம்: மணிமுத்தாநதி, நித்தியானந்த கூபம், அக்னி, சக்ர தீர்த்தம், குபேர தீர்த்தம்.தலவிருட்சம்வன்னி மரம். இருப்பிடம்:  அருள்மிகு ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருதாச்சலம், கடலூர் மாவட்டம், இங்கு செல்ல வேண்டிய வழித்தடம். கடலூர் இருந்து திருச்சி செல்லும் வழியில் விருத்தாசலம், அங்கிருந்து     ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பாலக்கரை அருள்மிகு ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர் திருக்கோவில் உள்ளது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • லட்சுமணன் உயிர் காக்க அனுமனுக்கு உதவிய சிவபெருமான்

    திருவள்ளூர் மாவட்டம் காக்களுரில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ  செண்பகவல்லி உடனுறை ஸ்ரீ காரணீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இங்கு சஞ்சீவி மலையுடன் வந்து அனுமான் சிவனை வணங்கிய பெருமைக்குரிய இதன் சிறப்பை அறிந்து கொள்வோம் வாருங்கள்.

     ராமாயண காலத்தில் ராவண படையுடன் சீதையை மீட்க போராடிய தனது சகோதரன் ஸ்ரீராமனுக்காக லக்ஷ்மணனும் போர் புரிந்தான். அப்போது இராவணப்படை வீரர்கள் தாக்கியதில் காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த லட்சுமணனை காப்பாற்ற எண்ணிய ஸ்ரீ ராமன் சிகிச்சை அளிக்க மருத்துவம் குணம் கொண்ட குறிப்பிட்ட மூலிகையை  கொண்டு வருமாறு அனுமானை கிஷ்கிந்தா அனுப்பி வைத்தார். சஞ்சீவி மலை சென்று அடைந்த அனுமான் ராமன் குறிப்பிட்ட அந்த மூலிகை எதுவென்று தெரியாததால்' சஞ்சீவி மலையே பெயர்த்து எடுத்து தனது கையில் ஏந்தியவாறு வானில் பறந்து கொண்டு இருந்தார்.

    இந்த தகவலை அறிந்த இலங்கை மன்னன் இராவணன் தனது நண்பனான காக்காசூரன் என்ற அசுரனிடம், மூலிகையை கொண்டு செல்ல விடாமல் அனுமானை தடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தான். நண்பனுக்கு உதவி புரிய எண்ணிய காக்காசூரன் ஏற்கனவே அனுமானின் பலத்தை அறிந்திருந்த காரணத்தால், நேரடியாக சண்டையிடுவதை தவிர்த்து, தந்திரமாக அனுமானை மூலிகையை உரிய நேரத்தில் கொண்டு செல்ல விடாமல் தடுப்பதற்காக  ஆங்காங்கே 108 சிவலிங்கங்களை தனது தவ வலிமையால் பிரதிஷ்டை செய்தான். ராம பக்தனான அனுமான் ஆகாயத்தில் பறந்தபடியே பூமியில் சிவலிங்கம் இருப்பதைக் கண்டு, சஞ்சீவி மலையுடன் கீழே வந்து கையில் இருந்த சஞ்சீவி மலையை இறக்கி பூமியில் வைத்து விட்டு, இரு கரம் கூப்பி  சிவபெருமானிடம் உயிருக்கு போராடும் லட்சுமணன் பூரண நலம் பெற்று நீண்ட காலம் வாழவும், இலங்கையில் சிறைப்பட்டுள்ள சீதாப்பிராட்டியாருக்கு எவ்வித தீங்கும் நேர்ந்து விடாமல் காக்குமாறும், போரில் ஸ்ரீ ராமன் வெற்றி பெற வேண்டும் என பக்தியுடன் வழிபட்ட அனுமான் மீண்டும் சஞ்சீவி மலையை அங்கிருந்து எடுக்க முற்பட்டபோது.

    மலையை அங்கிருந்து நகற்ற முடியாமல் தடுமாறி நின்றான். அப்போது லிங்கத்துள் மறைந்திருந்த ஈசன் இது இராவணனின் சூழ்ச்சி"என்பதையும் தன் வடிவத்தை வைத்து உயிர் காக்கும் மூலிகைகளை கொண்டு செல்ல விடாமல் நடத்தப்பட்ட நாடகம் என்பதை அனுமானுக்கு, உணர்த்தியதோடு'அனுமானின் கையில் சென்று அமருமாறு சஞ்சீவி மலைக்கு கட்டளை இட்டதாகவும் அதன்படி உரிய நேரத்தில் சஞ்சீவி மலையை கொண்டு சென்று அனுமான் லக்ஷ்மணனின் உயிரை ஸ்ரீ ராமன் மூலம் காப்பாற்றியதாக இக்கோவில் புராண வரலாறு கூறுகிறது. இதன் காரணமாகவே' முற்காலத்தில் இப்பகுதி காக்கா சூரண பட்டணம், என அழைக்கப்பட்டு, லட்சுமணனின் உயிரை காக்க சிவபெருமான் அனுமானுக்கு உதவியதால் காக்களூர் என தற்போது அழைக்கப்படுகிறது. இத்திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள இறைவன். அருள்மிகு ஸ்ரீ காரணீஸ்வரர் என்ற திருப்பெயரிலும், அன்னை அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி எனவும் அழைக்கப்படுகிறாள். ஸ்ரீ அனுமான் வழிபட்ட இறைவனை நாமும் வணங்க சென்னை கோயம்பேட்டில் இருந்து பேருந்து மூலம் சென்று திருவள்ளூரில் இறங்கி அங்கிருந்து' காக்களுரை அடையலாம். 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • ஸ்ரீராமரிடம் கோரிக்கை வைத்த மாவட்ட ஆட்சியர் சீதாப்பிராட்டிக்கு தனி சன்னதி கட்டி கொடுத்தது ஏன் ?

    தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஏரி, குளங்கள் உள்ளன பெரும்பாலும் கிராமப்புறங்களில் காணப்படும் ஏரிகள் விளை நிலங்களின் பாசனம், குடிநீர், கால்நடைகளின் தாகம் தீர்க்கவும் பயன்பட்டு வந்தன தற்போது தொடர் மணல் கொள்ளை, தொழில் புங்க அமைத்தல், ஏரிகளை துரத்து வீட்டு மனை ஆக்குதல் போன்ற காரணங்களினால் ஏரி, குளங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது இதன் காரணமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை நீர் ஆனது, குடியிருப்பு பகுதிகளை சூழும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆனால் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஏரி உடைப்பை தடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் ஒருவர் வைத்த கோரிக்கையை ஏற்று ஸ்ரீ ராமனே நேரடியாக வந்து ஏரியை காத்ததால் தற்போது அந்த இடம் ஏரி காத்த ராமர் என மதுராந்தகம் அழைக்கப்படுவதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம் வாருங்கள். மதுராந்தகத்தில் உள்ள பெரிய ஏரியானது சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கியது. கோடை காலத்தில் மக்களின் தாகத்தை தீர்த்து வந்த இந்த ஏரியா ஆனது வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் போது நீரின் ஓட்டத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாமல் ஏரியில் உடைப்பு ஏற்பட்டு, கிராமங்களுக்குள் வெள்ளை நீரானது சூழ்ந்து பொதுமக்களுக்கு பெரும் இன்னலை ஏற்படுத்தி வந்தது,  மழை நீரை சேமித்து  வைக்கும் இந்த ஏரியில், அடிக்கடி உடைப்பு ஏற்படுவதை தடுக்க.

    அப்போது நாட்டை ஆண்ட ஆங்கிலேய அரசு ஏரியை பலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அதனால் பலன் ஏதும் ஏற்படாததால், லயோனல் பிளேஸ், என்ற ஆங்கிலேய மாவட்ட ஆட்சியர் ஏரிக்கரையைப் பலப்படுத்தப் பல முயற்சிகள் மேற்கொண்டார்.  ஆனால் பலனேதும் ஏற்படவில்லை. இதனால் ஆழ்ந்த சிந்தனையோடு இங்குள்ள  ராமர் கோயிலுக்கு வந்த ஆட்சியரிடம் அவரிடம், கோவில்  அர்ச்சகர் அவரிடம் சீதாப்பிராட்டி தாயாருக்கு தனி சன்னிதி அமைத்து தருமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும், அப்போது  மாவட்ட ஆட்சியரும் ராமரிடம்   கோரிக்கை ஒன்றை வைத்தார்.  இனி வரும் காலங்களில்  ஏரி உடைப்படாமல் காத்தால், கோவில் கட்டும் திருப்பணியை தானே ஏற்று நடத்துவதாக கோரிக்கை வைத்தார். மீண்டும் வடகிழக்கு பருவமழை தொடங்கி வழக்கம் போல் ஏரி நிரம்பி வழிந்தது.

    இந்தச் செய்தியை கேட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஏரியை பார்வையிட ஆட்சியர் லயோனல் பிளேஸ் வந்தபோது அவரது கண்களுக்கு இளைஞர்கள் இருவர் கைகளில் வில்லில் அம்பு ஏந்திய நிலையில் இருப்பதை கண்டுள்ளார்.  மின்னல் ஒளியில் இதனைக் கண்ட ஆட்சியர், அவர்கள் வைத்திருந்த அம்பில் இருந்தும் மின்னல் ஒளி தோன்றியதைக் கண்டு மெய்சிலிர்த்து போனார்.

    அதற்குப்பின்  ஏரிக்கரை உடையவில்லை எனவே தான் கூறியபடியே ஆட்சியர் அன்னை சீதாப்பிராட்டிக்கு  தனி சன்னிதி கட்டிக் கொடுத்தார் என கோவில் கல்வெட்டு குறிப்பிட்டுள்ளது. இந்த நிகழ்வுக்கு பின் இங்குள்ள ஸ்ரீராமன் ஏரி காத்த ராமன் என அழைக்கப்படுகிறார்.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • பாவங்கள் தீர பாண்டவர்கள் வழிபட்ட சுயம்புலிங்கம்!

    இந்திய திருநாட்டில் தொன்மை வாய்ந்த ஏராளமான திருக்கோவில்கள் உள்ளன இவற்றில் பெரும்பாலானவை நிலப்பரப்பிலேயே கட்டப்பட்டதாக இருப்பினும் ஒரு சிலது மட்டும் மலைகள் மீதும், குகைகள், அருவிகள் போன்ற இடங்களில் கட்டப்பட்டிருக்கும் ஆனால் கடலில் பாண்டவர்களால் கட்டப்பட்ட அதிசய கோவில் எங்கே உள்ளது தெரியுமா ?  

    குஜராத் மாநிலம் பவ்வு நகர் அடுத்த கோலியாக்கில் தான் இந்த அதிசய கடல் கோவில் உள்ளது. நிஷ்கலங்க் மகாதேவ் என அழைக்கப்படும் இந்த சிவன் கோவில் ஆனது' தனித்துவம் பெற்றதாகும் காரணம். கடலுக்கு அடியில் கட்டப்பட்டுள்ளது. இதனால் கடலில் ராட்சத அலைகள் வீசும் பொழுது நீரில் மூழ்கி, தாழ்வான அலைகள் வீசும் போது கம்பீரத்துடன் தனது தோற்றத்தை வெளிப்படுத்தி ஈசன் உள்ளே இருப்பதை அவ்வப்போது உறுதி செய்து வருகிறது. மேலும்  இறைவன் திருமேனி நீரில் மூழ்கி, கோவிலின் கொடி மரம் மற்றும் தூண்கள் மட்டுமே பக்தர்களின் பார்வைக்கு தெரியும்.

    மகாபாரத காலத்தில் நிஷ்கலங்க் சிவன் கோவில் குருசேத்திர போரின் போது கௌரவர்களை கொன்ற பாவங்களை போக்குவதற்காக போர் முடிந்து பல சிவ ஆலயங்களை பாண்டவர்கள் கட்டினர். அதில் ஒன்றுதான் இந்த சிவன் கோவில் என்றும் இங்குள்ள சுயம்புலிங்கத்தை பாண்டவர்கள் பூஜித்து பாவ விமர்சனம் பெற்றதாக புராணம் கூறுகிறது. சிறிய நிலப்பரப்பில் நற்புறமும் கடல் நீர் சூழ்ந்திருக்க ராட்சத அலைகள் தொடர்ச்சியாக வீசினாலும் அதனை எதிர்கொண்டு கம்பீரமாக நிலைத்து நிற்கும் வகையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோவில் தற்போதைய நவீன பொறியாளர்கள் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு சவாலாகவே உள்ளது. நிஷ்கலங்க் மகாதேவ் என அழைக்கப்படும் இங்கு அருள்பாவிக்கும் அருள்மிகு ஸ்ரீ சிவபெருமான் சுயம்புலிங்க வடிவில் மூலவராகவும், உலகம் பஞ்சபூதங்களால் ஆனது' பஞ்சபூதங்கள் தனக்குள் அடக்கம் என்பதை உணர்த்தும் விதமாக  சதுர மேடை ஒன்றில் தனித்தனியாக ஐந்து பஞ்சபூத சுயம்புலிங்கங்கள் அதனை வணங்கும் தோரணையில் எதிரி தனித்தனி நந்தீஸ்வரரும் அமையப் பெற்றுள்ளது தனி சிறப்பாகும். ஆவணி மாதத்தில் அம்மாவாசை இரவில்'பதர்வி, என அழைக்கப்படும் புகழ்பெற்ற திருவிழா நடைபெறுகிறது.   
       

    கோவிலுக்கு செல்லும் பிரதான பாதை நள்ளிரவு முதல் மதியம் வரை தண்ணீரில் மூழ்கி கிடக்கும். எனவே பக்தர்கள் மதியம் 1:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை இங்கு சுவாமி தரிசனம் செய்யலாம். அது சரி பிற மாநிலங்களில் இருந்து ஆன்மீக சுற்றுலா வரும் பக்தர்கள் இக்கோவிலுக்கு எப்படி செல்வது ? என்று தானே கேட்கிறீர்கள் பாவ்நகர் விமான நிலையம், இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் துல்லியமாக  இணைக்கப்பட்டுள்ளது. அதே போன்று  அகமதாபாத் மற்றும் மும்பை தொடர்வண்டி நிலையத்திலிருந்தும்,  ராஜ்கோட், அகமதாபாத், வதோதரா போன்ற முக்கிய நகரங்களிலிருந்து  பாவ்நகருக்கு பேருந்து சேவை உள்ளது. வாழ்வில் ஒரு முறை எனும் கடலுக்கு அடியில் பாண்டவர்கள் கட்டிய இந்த அதிசய கோவிலுக்கு வந்து இறைவனை தர்சிக்கும் வரத்தை சிவபெருமான் நமக்கு வழங்க வேண்டும்.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • ஸ்ரீ ஆதி ஜெகந்நாத பெருமாளிடம் வரம் வேண்டி வரும் பக்தர்களுக்கு பால் பாயாசமே”  பிரசாதம் !

    தசரத சக்கரவர்த்தியின் மூன்று மனைவியருக்கு பிள்ளை  பேரு பாக்கியம்  அளித்து சமுத்திர ராஜனை ஸ்ரீ ராமனிடம் சரணாகதி அடைய வைத்து வரம் வேண்டி வரும் பக்தர்களுக்கு பால் பாயாசத்தை பிரசாதமாக வழங்கும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படும் அற்புதத் தளம், ராமநாதபுரம் மாவட்டம்  திருப்புல்லாணி அருள்மிகு ஸ்ரீ ஆதிஜெகந்நாத பெருமாள் திருக்கோவில் ஆகும்,  இராமாயணத்துடன் தொடர்புடைய இதன் வரலாற்றை தெரிந்து கொள்வோம் வாருங்கள். 

    தசரத சக்கரவர்த்தி தனது மூன்று மனைவியருக்கும் நெடு நாட்களாக குழந்தை பிறக்காததால் மன வருத்தம் அடைந்தார். பின் சாஸ்திர வல்லுநர்களின் ஆலோசனைப்படி, பிள்ளைவரம் வேண்டி 1008, யாக குண்டங்கள் வளர்த்து வேத விற்பனர்கள் மூலம் மகா புத்திரகாமேஷ்டி யாகம், ஒன்றை நடத்தினார். அப்போது  யாக குண்டத்தில் இருந்து தோன்றிய தேவதூதர் கொடுத்த பாயாசத்தை, தன்னுடைய மூன்று மனைவிகளுக்கும் வழங்கினார். அதன் பலனாக' முதல் மனைவிக்கு ராமனும், இரண்டாவது மனைவிக்கு பரதனும், மூன்றாவது மனைவிக்கு லட்சுமணன் மற்றும் சத்ருக்ணன் ஆகிய மகன்கள் பிறந்தனர்; இலங்கை மன்னன்  ராவணனுடன் போர் புரிந்து.  சீதையை ஸ்ரீ ராமன் மீட்டு வந்தபிறகு, ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்து வழிபட்டார், பின் அங்கிருந்து புறப்பட்டு ஸ்ரீ ராமபிரான்.  

    திருப்புல்லாணி வந்து  தான் சீதையை மீட்க இலங்கை செல்லும் முன் இங்குள்ள ஜெகந்நாதரை தரிசிக்குச் சென்றபோது அவருக்கு,  திருப்புல்லாணி இறைவன்,  ஒரு சக்கர  பாணத்தை கொடுத்தான். அந்த சக்கர பாணத்தை யுத்தத்தின்போது பிரயோகித்துதான், ஸ்ரீ ராமன் ராவணனை வீழ்த்தியதாகவும், அந்த வெற்றியினை மீண்டும் வந்து பெருமாளின் பொற்பாதங்களில் சமர்ப்பித்து ராமன் இங்கு வழிபட்டான் எனவும் சொல்லப்படுகிறது. ராமன் இலங்கைக்கு செல்ல கடல் மேல் பாலம் கட்ட சமுத்திர ராஜனிடம் அனுமதி கேட்டு மூன்று நாட்கள் அங்கு காத்திருந்தான்.

    ஆனால் அவரது கோரிக்கையை சமுத்திர ராஜன் பரிசீலனை செய்யாமல் அலட்சியத்துடன்  இருந்தான். மேலும் ஸ்ரீ ராமனின்  முன்பாகத் தோன்றி இறுமாப்புடன் காரணம் ஏதும் சொல்லாமல் நின்றான். இதனால் சினம் கொண்ட  ஸ்ரீ ராமன் , கடலை நோக்கி அம்பு பிரயோகப்படுத்த முயன்றார். ஸ்ரீ ராமனின் வில் திறனை முன்னரே"  அறிந்திருந்த சமுத்திரராஜன், தனது மனைவி சமுத்திர அரசியுடன்  அங்கு தோன்றி, ஸ்ரீ ராமனிடம் சரணாகதி அடைந்தான். அதன் காரணமாக, ஸ்ரீ ராமர் வணங்கிய  இத்திருத்தளத்தில் புத்திர பாக்கியத்தின் மூல மந்திரத்தை தசரத சக்கரவர்த்திக்கு பெருமாள் எடுத்துரைத்த இடமும், அவன் பிரதிஷ்டை செய்து வணங்கிய நாகலிங்கமும் கோவிலில் உள்ளது.  அதிகாலையில், கடலில் புனித  நீராடி  கணவனும், மனைவியும் விரதம்  இருந்து பக்தியுடன் பெருமாளை வழிபட்டு. அன்று அன்றிரவு ஆலயத்தில் தங்கிவிட்டு, மறுநாள் காலையில் முறைப்படியாக நாகபிரதிஷ்டை மற்றும் புத்திர காமேஷ்டியாகம் செய்து, பிரசாதமாகத் தரப்படும் பால் பாயாசத்தை அருந்தினால் ஸ்ரீ சீதாராமனின் அருள்கொடையால் பிள்ளை பாக்கியம் ஏற்படும் என்பது தின்னம். 

         பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • ஊற்றெடுக்கும் நீரில் வளரும் அதிசய விநாயகர் வெள்ளிக் கவசங்கள் சிறியது ஆனது ஏன் ? 

    விநாயகர் பெருமான் ஞானத்தில் சிறந்தவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே எந்த காரியம் செய்தாலும் முதலில் பிள்ளையார் சுழி போட்டுத்தான் நாம் தொடங்குவோம் அரிதாக கிடைத்த ஞானப் பழத்தை பெறுவதற்கான தகுதி தனது தனது மூத்த மகனான விநாயகருக்கு உள்ளதா ? அல்லது இளைய மகன் முருகனுக்கு உள்ளதா ? என்பதை சோதித்து பார்க்க சிவபெருமான் இருவருக்கும் இடையே உலகை யார் முதலில் சுற்றி வருகிறீர்களோ'அவர்களுக்கே இந்த ஞானப்பழம் என அறிவித்தார் முருகன் தனது வாகனமான மயில் மீது ஏறி உலகை சுற்றிவர புறப்பட்டபோது தனது தாய் தந்தையை சுற்றி வந்து அந்த ஞானப்பழத்தை தான் பெற்று முருகனை ஆண்டி கோலத்தில் பழனி மலை மீது நிற்க வைத்தவர் விநாயகர் அந்த விநாயகர் பெருமான் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சுயம்புவாக தோன்றி தற்போது வளர்ந்து வரும் அதிசயம் எங்கே தெரியுமா ?

    ஆந்திர மாநிலம் அரகோண்டா அருகே உள்ள காணியம்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சுயம்பு விநாயகர் ஆலயம் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் விவசாயி ஒருவர் கிணறு தோண்டியதாகவும் அப்போது, கட பாறையில் மண்ணைத் தோண்டிய போது கணீர்" என பாறையில் இடித்தது போன்று சப்தம் கேட்டதால் அந்த இடத்தில் கைகளால் மண்ணை அப்புறப்படுத்தி பார்த்தபோது சுயம்பு விநாயகரின் தலைப்பகுதி மட்டும் தென்பட்டது, அதனை அங்கேயே விட்டுவிட்டு கிணற்றை தோண்டி உள்ளனர். நாளடைவில் அந்த சுயம்பு விநாயகர் சிலை படிப்படியாக வளர தொடங்கியுள்ளது இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அங்கேயே விநாயகப் பெருமானுக்கு ஆலயம் ஒன்றை எழுப்பி வழிபட்டு வந்தனர். தற்போது விநாயகர் பெருமான் அருள் பாவிக்கும் கருவறையில் கிணற்றிலிருந்து ஊற்று நீர் வெளியேறி விநாயகரை சுற்றியும் தேங்கி நிற்கிறது இதன் காரணமாக ஆண்டுதோறும் விநாயகர் பெருமான் வளர்ந்து கொண்டே வருகிறார், இதனை அறிந்த பக்தை ஒருவர் விநாயகர் பெருமானுக்கு வாங்கி கொடுத்த வெள்ளி கலசத்தை அவருக்கு அணிவித்து அன்றாட பூஜைகள் செய்து வந்தனர், என்ன ? அதிசயம் அந்த வெள்ளி கவச சிறிதாகி விநாயகர் பெருமான் தனது உருவத்தை பெரிதாக காட்டி அருளினார்.

    சிறிது காலம் கழித்து அரசியல் பிரமுகர் ஒருவரும் புதிதாக வெள்ளிக்கவசம் செய்து விநாயகருக்கு காணிக்கை கொடுத்தார் அந்த வெள்ளிக் கவசமும் நாளடைவில் சிறியதாகி விட்டது தற்போது ஆண்டுக்கு ஆண்டு விநாயகர் பெருமான் வேகமாக வளர்ந்து தன்னை வணங்க வரும் பக்தர்களை அதிசயத்து வருகிறார். சொந்தமாக காணிநிலம் வேண்டும் என எண்ணுபவர்கள் இந்தக் காணியம்பாக்கம் அதிசய விநாயகரை ஏழு சதுர்த்திகள் தொடர்ந்து வழிபட்டு வந்தால் அவர்களது எண்ணம் ஈடேறி வருவதாக பக்தர்களின் நம்பிக்கை, இதுவரை விநாயகருக்கு அணிவிக்கப்பட்டு சிறியதாகப் போன வெள்ளி கவசங்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஊற்றெடுக்கும் கிணற்று நீரில் விநாயகர் சிலை வளர்ந்து வருவதை  ஒரு அதிசயமான நிகழ்வாக காணப்படுகிறது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்