தசரத சக்கரவர்த்தியின் மூன்று மனைவியருக்கு பிள்ளை பேரு பாக்கியம் அளித்து சமுத்திர ராஜனை ஸ்ரீ ராமனிடம் சரணாகதி அடைய வைத்து வரம் வேண்டி வரும் பக்தர்களுக்கு பால் பாயாசத்தை பிரசாதமாக வழங்கும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படும் அற்புதத் தளம், ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருள்மிகு ஸ்ரீ ஆதிஜெகந்நாத பெருமாள் திருக்கோவில் ஆகும், இராமாயணத்துடன் தொடர்புடைய இதன் வரலாற்றை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
தசரத சக்கரவர்த்தி தனது மூன்று மனைவியருக்கும் நெடு நாட்களாக குழந்தை பிறக்காததால் மன வருத்தம் அடைந்தார். பின் சாஸ்திர வல்லுநர்களின் ஆலோசனைப்படி, பிள்ளைவரம் வேண்டி 1008, யாக குண்டங்கள் வளர்த்து வேத விற்பனர்கள் மூலம் மகா புத்திரகாமேஷ்டி யாகம், ஒன்றை நடத்தினார். அப்போது யாக குண்டத்தில் இருந்து தோன்றிய தேவதூதர் கொடுத்த பாயாசத்தை, தன்னுடைய மூன்று மனைவிகளுக்கும் வழங்கினார். அதன் பலனாக' முதல் மனைவிக்கு ராமனும், இரண்டாவது மனைவிக்கு பரதனும், மூன்றாவது மனைவிக்கு லட்சுமணன் மற்றும் சத்ருக்ணன் ஆகிய மகன்கள் பிறந்தனர்; இலங்கை மன்னன் ராவணனுடன் போர் புரிந்து. சீதையை ஸ்ரீ ராமன் மீட்டு வந்தபிறகு, ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்து வழிபட்டார், பின் அங்கிருந்து புறப்பட்டு ஸ்ரீ ராமபிரான்.
திருப்புல்லாணி வந்து தான் சீதையை மீட்க இலங்கை செல்லும் முன் இங்குள்ள ஜெகந்நாதரை தரிசிக்குச் சென்றபோது அவருக்கு, திருப்புல்லாணி இறைவன், ஒரு சக்கர பாணத்தை கொடுத்தான். அந்த சக்கர பாணத்தை யுத்தத்தின்போது பிரயோகித்துதான், ஸ்ரீ ராமன் ராவணனை வீழ்த்தியதாகவும், அந்த வெற்றியினை மீண்டும் வந்து பெருமாளின் பொற்பாதங்களில் சமர்ப்பித்து ராமன் இங்கு வழிபட்டான் எனவும் சொல்லப்படுகிறது. ராமன் இலங்கைக்கு செல்ல கடல் மேல் பாலம் கட்ட சமுத்திர ராஜனிடம் அனுமதி கேட்டு மூன்று நாட்கள் அங்கு காத்திருந்தான்.
ஆனால் அவரது கோரிக்கையை சமுத்திர ராஜன் பரிசீலனை செய்யாமல் அலட்சியத்துடன் இருந்தான். மேலும் ஸ்ரீ ராமனின் முன்பாகத் தோன்றி இறுமாப்புடன் காரணம் ஏதும் சொல்லாமல் நின்றான். இதனால் சினம் கொண்ட ஸ்ரீ ராமன் , கடலை நோக்கி அம்பு பிரயோகப்படுத்த முயன்றார். ஸ்ரீ ராமனின் வில் திறனை முன்னரே" அறிந்திருந்த சமுத்திரராஜன், தனது மனைவி சமுத்திர அரசியுடன் அங்கு தோன்றி, ஸ்ரீ ராமனிடம் சரணாகதி அடைந்தான். அதன் காரணமாக, ஸ்ரீ ராமர் வணங்கிய இத்திருத்தளத்தில் புத்திர பாக்கியத்தின் மூல மந்திரத்தை தசரத சக்கரவர்த்திக்கு பெருமாள் எடுத்துரைத்த இடமும், அவன் பிரதிஷ்டை செய்து வணங்கிய நாகலிங்கமும் கோவிலில் உள்ளது. அதிகாலையில், கடலில் புனித நீராடி கணவனும், மனைவியும் விரதம் இருந்து பக்தியுடன் பெருமாளை வழிபட்டு. அன்று அன்றிரவு ஆலயத்தில் தங்கிவிட்டு, மறுநாள் காலையில் முறைப்படியாக நாகபிரதிஷ்டை மற்றும் புத்திர காமேஷ்டியாகம் செய்து, பிரசாதமாகத் தரப்படும் பால் பாயாசத்தை அருந்தினால் ஸ்ரீ சீதாராமனின் அருள்கொடையால் பிள்ளை பாக்கியம் ஏற்படும் என்பது தின்னம்.
பொன்.கோ.முத்து திருவள்ளூர்