விநாயகர் பெருமான் ஞானத்தில் சிறந்தவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே எந்த காரியம் செய்தாலும் முதலில் பிள்ளையார் சுழி போட்டுத்தான் நாம் தொடங்குவோம் அரிதாக கிடைத்த ஞானப் பழத்தை பெறுவதற்கான தகுதி தனது தனது மூத்த மகனான விநாயகருக்கு உள்ளதா ? அல்லது இளைய மகன் முருகனுக்கு உள்ளதா ? என்பதை சோதித்து பார்க்க சிவபெருமான் இருவருக்கும் இடையே உலகை யார் முதலில் சுற்றி வருகிறீர்களோ'அவர்களுக்கே இந்த ஞானப்பழம் என அறிவித்தார் முருகன் தனது வாகனமான மயில் மீது ஏறி உலகை சுற்றிவர புறப்பட்டபோது தனது தாய் தந்தையை சுற்றி வந்து அந்த ஞானப்பழத்தை தான் பெற்று முருகனை ஆண்டி கோலத்தில் பழனி மலை மீது நிற்க வைத்தவர் விநாயகர் அந்த விநாயகர் பெருமான் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சுயம்புவாக தோன்றி தற்போது வளர்ந்து வரும் அதிசயம் எங்கே தெரியுமா ?
ஆந்திர மாநிலம் அரகோண்டா அருகே உள்ள காணியம்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சுயம்பு விநாயகர் ஆலயம் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் விவசாயி ஒருவர் கிணறு தோண்டியதாகவும் அப்போது, கட பாறையில் மண்ணைத் தோண்டிய போது கணீர்" என பாறையில் இடித்தது போன்று சப்தம் கேட்டதால் அந்த இடத்தில் கைகளால் மண்ணை அப்புறப்படுத்தி பார்த்தபோது சுயம்பு விநாயகரின் தலைப்பகுதி மட்டும் தென்பட்டது, அதனை அங்கேயே விட்டுவிட்டு கிணற்றை தோண்டி உள்ளனர். நாளடைவில் அந்த சுயம்பு விநாயகர் சிலை படிப்படியாக வளர தொடங்கியுள்ளது இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அங்கேயே விநாயகப் பெருமானுக்கு ஆலயம் ஒன்றை எழுப்பி வழிபட்டு வந்தனர். தற்போது விநாயகர் பெருமான் அருள் பாவிக்கும் கருவறையில் கிணற்றிலிருந்து ஊற்று நீர் வெளியேறி விநாயகரை சுற்றியும் தேங்கி நிற்கிறது இதன் காரணமாக ஆண்டுதோறும் விநாயகர் பெருமான் வளர்ந்து கொண்டே வருகிறார், இதனை அறிந்த பக்தை ஒருவர் விநாயகர் பெருமானுக்கு வாங்கி கொடுத்த வெள்ளி கலசத்தை அவருக்கு அணிவித்து அன்றாட பூஜைகள் செய்து வந்தனர், என்ன ? அதிசயம் அந்த வெள்ளி கவச சிறிதாகி விநாயகர் பெருமான் தனது உருவத்தை பெரிதாக காட்டி அருளினார்.
சிறிது காலம் கழித்து அரசியல் பிரமுகர் ஒருவரும் புதிதாக வெள்ளிக்கவசம் செய்து விநாயகருக்கு காணிக்கை கொடுத்தார் அந்த வெள்ளிக் கவசமும் நாளடைவில் சிறியதாகி விட்டது தற்போது ஆண்டுக்கு ஆண்டு விநாயகர் பெருமான் வேகமாக வளர்ந்து தன்னை வணங்க வரும் பக்தர்களை அதிசயத்து வருகிறார். சொந்தமாக காணிநிலம் வேண்டும் என எண்ணுபவர்கள் இந்தக் காணியம்பாக்கம் அதிசய விநாயகரை ஏழு சதுர்த்திகள் தொடர்ந்து வழிபட்டு வந்தால் அவர்களது எண்ணம் ஈடேறி வருவதாக பக்தர்களின் நம்பிக்கை, இதுவரை விநாயகருக்கு அணிவிக்கப்பட்டு சிறியதாகப் போன வெள்ளி கவசங்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஊற்றெடுக்கும் கிணற்று நீரில் விநாயகர் சிலை வளர்ந்து வருவதை ஒரு அதிசயமான நிகழ்வாக காணப்படுகிறது.
பொன்.கோ.முத்து திருவள்ளூர்