Tag: Thirupathy

  • Thirupathy Rush

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய புரட்டாசி மாத சனிக்கிழமையை ஒட்டி பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி இருக்கிறது. இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய 24 மணி நேரமாகும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாதம் நான்காவது  சனிக்கிழமையை ஒட்டி பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்படுகிறது. இதனால் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக உள்ளது. ஏற்கனவே பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு தேவஸ்தானம் இன்றும் , நாளையும் மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு வழங்கக்கூடிய திவ்யதரிசனம் மற்றும் ஆதார் அட்டை மூலம் பழகக்கூடிய சர்வ தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. 

    இதனால் இலவச தரிசனத்தில் மட்டும் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இலவச தரிசனத்தில் வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 31 அறைகளும் நிரம்பியதை அடுத்து லேபாக்சி சந்திப்பு வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இதனால் தரிசனத்திற்கு சுமார் 24 மணி நேரம் ஆகும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது .ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் நான்கு மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்து வருகின்றனர். 

    நேற்று வெள்ளிக்கிழமை காலை 3 மணி முதல் இரவு 12 மணிவரை 78,012 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதில் 42 ஆயிரத்து 270 பக்தர்கள் மொட்டை அடித்து தலை முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் 2.86 கோடி ரூபாய் காணிக்கையாக செலுத்தி இருப்பதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் திருமலையில் உள்ள பக்தர்கள் ஓய்வு அறை அனைத்தும் நிரம்பி உள்ளது. இதனால் அறைகள் கிடைக்காத பக்தர்கள் ஆங்காங்கே உள்ள மர நிழலிலும், மண்டபங்களில் தங்கி வருகின்றனர்.
     

  • Thirupathy Dharshan

    திருப்பதியில் பிரம்மோற்சவம் நடைபெற்ற 8 நாட்களில் 7 லட்சத்து 7,737 பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தனர்.

    தேவஸ்தான செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால் செய்தியாளர்களுக்கு  அளித்த  பேட்டியில் கூறுகையில்  ஏழுமலையான் கோயிலில் கடந்த ஆண்டு பிரம்மோற்சவத்தின் 8 நாட்களில் மூலவரை 5 லட்சத்து 90,584 பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தனர். 

    இந்த ஆண்டு பிரம்மோற்சவத்தின் 8 நாட்களில் 7 லட்சத்து 7737 பக்தர்கள் தரிசனம் செய்தனர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் ரூ 20.40 கோடி  காணிக்கை செலுத்தினர்.

    பிரம்மோற்சவத்தில் பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் இருக்க 8 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டதால்  34 லட்சத்து  1384 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 3 லட்சத்து 23 ஆயிரம் பக்தர்கள் மெட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 

    18 மாநிலங்களை சேர்ந்த 357 கலைக்குழுவினர் 8210 பேர் சுவாமி வீதி உலாவின் போது கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். இதே போன்று அடுத்த ஆண்டு 25 மாநிலங்களில் இருந்து பக்தர்களை வரவழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • Thirupathy Divaya Daharshan

    பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததன் காரணமாக ரத்து செய்யப்பட்ட திவ்ய தரிசனம் மற்றும் சர்வ தரிசன டிக்கெட்டுகள் நாளை முதல் மீண்டும் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

    புரட்டாசி மாதத்தை ஒட்டி நடைபெற்ற பிரம்மோற்சவத்தில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் இருந்து வந்த நிலையில் கடந்த 3 ம் தேதி முதல் மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த திவ்ய தரிசனம் மற்றும் ஆதார் அட்டை மூலமாக வழங்கப்பட்டு வந்த சர்வ தரிசனம் டிக்கெட்கள் 14 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டதாக தேவஸ்தானம் அறிவித்தது.  

    இந்நிலையில் பிரம்மோற்சவம் நிறைவு பெற்றதையடுத்து பக்தர்கள் கூட்டம் தற்போது குறைந்துள்ளதால் நாளை முதல் மீண்டும் வழக்கம்போல் மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு வழங்க கூடிய திவ்ய தரிசனம் மற்றும் ஆதார் அட்டை மூலம் வழங்கக் கூடிய சர்வ தரிசன டிக்கெட்டுகள் மீண்டும் வழங்கப்படும் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

  • Thirupathy Bramorchavam Niraivu

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்ற பிரம்மோற்சவம் 

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 30 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி,பூதேவி தயார்களுடன்  பெரிய சேஷம், சின்ன சேஷம், அன்ன, கற்பக வீருட்சம், கருட, சிம்ம, அனுமந்த வாகனம் என பல்வேறு வாகனங்களில் காலையும் மாலையும் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான இன்று காலை கோயிலில் இருந்து அதிகாலை உற்சவ மூர்த்திகளும் சக்கரத்தாழ்வாரும் ஊர்வலமாக வராஹ சுவாமி கோயிலுக்கு வந்தனர். வராக சுவாமி கோயில் எதிரே மலையப்ப சுவாமி  தயார்களுக்கும் சக்கரத்தாழ்வாருக்கும் பால்,தயிர், தேன், இளநீர், உள்ளிட்ட சுகந்த திரவியங்களை கொண்டு ஜீயர்கள் முன்னிலையில் திருமஞ்சனம் நடைபெற்றது. 

    பின்னர் ஏழுமலையான் கோயில் தெப்ப குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் தெப்பள் குளத்தை சுற்றியிருந்த அயிரகணக்காண பக்தர்கள் புனித நீராடினர்.  சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரிக்கு பிறகு புனித நீராடினால் சகல பாவங்களும், தோஷங்களும் விலகி கஷ்டங்கள் தீரும் என்பது ஐதீகம் 

    ஒன்பது நாட்கள் பிரம்மோற்சவ வீதி உலாவில் சுவாமியில் பல்வேறு வாகன சேவையை காண வந்த முக்கோட்டி   தேவதைகள வழி அனுப்பும் விதமாக ஆகம முறைப்படி வேத மந்திரங்கள் முழுங்க கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் பிரம்மோற்சவத்திற்காக ஏற்றப்பட்ட கொடி இறக்கப்படுகிறது. இத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

  • Thirupathy Car Festival

    திருப்பதி ஏழுமலையான்  கோயிலில் பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான நாளை காலை 7 மணிக்கு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்  பாலீக்க உள்ள ஸ்ரீ தேவி, பூ தேவி சமேத மலையப்ப சுவாமி

    அலைபாயும் மனதை சிதரவிடாமல் கட்டுபடுத்தி சரிரம் என்னும் ரதத்தை நல் வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி் பூதேவி தயார்களுடன் பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று காலை 7 மணி முதல் 9.30 மணி வரை  மகா ரதம் எனப்படும் தேரில் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம் முழுங்கியபடி வடம் பிடித்து இழுக்க நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

    ரத உற்சவத்தின் போது  பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சுவாமியின் ரதஉற்சவத்தில் பங்கேற்று தரிசனம் செய்தால் மறு ஜன்மம் இருக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    கலியுகத்தில் துஷ்ட சக்திகளை வதம் செய்வதற்காக பாயும் தங்க குதிரை மீது பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாள் மலையப்ப சுவாமி கல்கி அலங்காரத்தில் இன்று இரவு 8 மணிக்கு பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.
     

  • Thirupathy Arakattlaiku Nankodai

    திருப்பதி ஏழுமலையான் கோவில் அன்ன பிரசாத அறக்கட்டளைக்கு பக்தர்கள் மூலமாக 1,126 கோடி ரூபாய் இதுவரை பக்தர்கள் நன்கொடை வழங்கி உள்ளனர்.

     பக்தர்கள் வழங்கிய நன்கொடையை வங்கியில் செலுத்திய  முதலீட்டின் மூலமாக வரக்கூடிய வட்டியில் இருந்து தினந்தோறும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.

     அன்னப்பிரசாத அறக்கட்டளைக்கு ஒரு நாளைக்கு 30 லட்ச ரூபாய் வரை செலவாகிறது.

    பிறந்த நாள், திருமண நாள், மற்றும் சுபநிகழ்ச்சிகள், நினைவுநாளில் நன்கொடை வழங்கும் பக்தர்களின் பெயரில்   அன்ன பிரசாதம் வழங்கும் திட்டமும் உள்ளது. இதன் மூலம்   30 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கும் பக்தர்கள் அவர்கள் குடும்பத்தினருடன் பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கலாம்.
     

  • Thirupathy 3 days dharshan Cancel

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3, 4 , 5 ஆகிய தேதிகளில் திவ்ய தரிசனம் மற்றும் சர்வ தரிசன டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி  நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான  கருட சேவை 4 ஆம் தேதி இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. 

    இந்த கருட சேவையை காண 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்பதாலும் ,  புரட்டாசி மாதம் 3  சனிக்கிழமை அன்று தமிழக பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால்  3 , 4,  5 ஆகிய தேதிகளில் மலைப்பாதையில் பாதயாத்திரையாக  நடந்து வரும் பக்தர்களுக்கு வழங்கக்கூடிய திவ்ய தரிசனம் டிக்கெட் மற்றும் ஆதார் அட்டை மூலமாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட சர்வ தரிசனம் டிக்கெட் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டு உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

  • Simma Vaganathi Thirupathy Ezhumalayan

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான இன்று காலை யோக நரசிம்மர் அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி யோக நரசிம்மர் அலங்காரத்தில் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

    விலங்குகளுக்கு அரசனாக விளங்கும் சிங்கமும் நானே என்று உணர்த்தும் விதமாக மனிதர்களிடம் உள்ள விலங்களுக்குன்டான தீய எண்ணங்களை போக்கி கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக மலையப்ப சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுவாமி வீதஉலாவில் கேரள சண்டை மேளம், நாதஸ்வரம், மும்பை டிரம்ஸ் மேளம், மற்றும் பக்தர்களின் கோலாட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  

    முத்து எப்படி பரிசுத்தமானதோ அதை போன்று நம் மனதில் தீய எண்ணங்கள் இன்றி பரிசுத்தமாக இறைவனை அடைய வணங்கினால் முக்தி பெறலாம் என்பதை விளக்கும் வகையில் பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான இன்று இரவு முத்து பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி தயார்களுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார்.

  • Thirupathy Bramorchavam… Chinna Sesha vaganathi Veedhi Ula

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தில் இரண்டாவது நாள் சின்ன சேஷ வாகனத்தில் கிருஷ்ணர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று காலை 5 தலைகளுடன் கூடிய சிறய சேஷ வாகனத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலீத்தார். 

    பெரிய சேஷ வாகனத்தை ஆதிசேஷனாகவும் சிறிய சேஷ வாகனத்தை வாசுகியாக மலையப்ப சுவாமி வீதிஉலா வந்ததை அயிரகணக்காண பக்தர்கள் பக்தி மனம் உருக கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

    சுவாமி வீதிஉலாவில் கோயில் பெரிய ஜீயர், சின்ன ஜீயர் தலைமையில் ஜீடர்களின் சீடர்கள் நான்காயிரம் திவ்ய பிரபந்தம் பாடியபடி வந்தனர். இதில் பல்வேறு மாநிலத்தில் இருந்து வந்த பக்தர்கள் கோலட்டம் ஆடியும் சுவாமியின் பல்வேறு அவதாரங்களை குறிக்கும் விதமாக வேடம் அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர்.   

    பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று இரவு சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார். அன்னம் பால், தண்ணீரை வேறு செய்வது போல் பக்தர்களின் தீய எண்ணங்களை அகற்றி நல்ல எண்ணங்களை சுவாமி தனது பக்தர்களுக்கு அருள் புரிவதாக ஐதீகம்.

  • Thirupathy Ezhumalayan Koil Bramorchavam Kodiyetram

    திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மகா விஷ்ணுவின் வாகனமான கருடன் உருவம் வரையப்பட்ட மஞ்சள் கொடியை மலையப்ப சுவாமி தயார்கள், சக்கரத்தாழ்வார், விஷ்வ சேனாதிபதி, ஆகியோர் நான்கு மாடவீதியில் ஊர்வலமாக கொண்டு வந்தனர். 

    ஊர்வலத்தில் பக்தர்கள் கோலட்டம் பஜனைகள் செய்தபடி பங்கேற்றனர்.  பின்னர் கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் ஸ்ரீ தேவி, பூதேவி தயார்களுடன்  மலையப்ப சுவாமி முன்னிலையில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழுங்க கருட கொடியை  கொடிமரத்தில் ஏற்றினர். 

    இந்த பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டதின் மூலம்  சகல தேவதைகளையும் அஷ்டதிக் பாலகர்களான பூத, பேரேதா, யக்சா, ராக்‌ஷச, கந்தர்வ குணத்திற்கு இதன் மூலம் அழைப்பு விடுக்கப்படுகிறது. இந்த அழைப்பை ஏற்று முக்கோட்டி தேவதைகள் வந்து சுவாமிக்கு நடைபெறும் பிரம்மோற்சவத்தை காண்பதாக ஐதீகம்.