Tag: Thirupathy

  • Jammu Thirupathy

    ஜம்மு காஷ்மீர் மற்றும் பிரதமர் மோடி தொகுதியான வாரணாசி,  மும்பை ஆகிய இடங்களில் ஏழுமலையான் கோவில் கட்ட திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுப்பா ரெட்டி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி ஆகிய இரண்டு நாட்கள் சம்பிரதாய முறைப்படி ஜனவரி 6 மற்றும் 7ம் தேதிகளில் எத்தனை பக்தர்களை முடிந்த அளவிற்கு சுவாமி தரிசனம் செய்து வைத்து பரமபத வாயில் வழியாக அனுமதிக்க முடியுமோ அவ்வளவு பக்தர்களை அனுமதிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

    2019 – 2020 ஆம் ஆண்டிற்கான தேவஸ்தான பட்ஜெட் 3116.25 கோடி ரூபாயில் இருந்து 3243.19 கோடி ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இதில் உண்டி மூலமாக 1231 கோடி ரூபாய் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதனை 1285 கோடி ரூபாயாகவும், பிரசாத விற்பனையின் மூலம் 270 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 330 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார். 

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 30 கோடி ரூபாயில் ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,  ஜம்மு-காஷ்மீர்  மாநிலத்திலும்,  உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி தொகுதியான அங்கு ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக  அவர் கூறியுள்ளார். 
     

  • Thirupathy Dharshan

    சூரியகிரகணம் வியாழக்கிழமை காலை 8.08 மணிக்கு தொடங்கி 11.16 மணி வரை நடைபெற உள்ளது. வழக்கமாக ஏழுமலையான் கோவிலில் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்துக்கு  ஆறு மணி நேரத்திற்கு முன்னதாக கோவில் மூடப்படுவது வழக்கம். அவ்வாறு புதன்கிழமை இரவு 11 மணிக்கு கோவில் கதவுகள் அடைக்கப்பட உள்ளது. 

    இதற்காக இரவு 10 மணியுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டு கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு அர்ச்சகர்கள் மூலவர் சன்னதி முதல் ராஜகோபுரம் உள்ள மகா துவாரம் கதவு வரை அனைத்தையும் மூட உள்ளனர். மீண்டும் சூரியகிரகணம் நிறைவு பெற்ற பிறகு வியாழக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு கோவில் கதவுகள் திறக்கப்பட்டு ஆகம முறைப்படி  கோவில் முழுவதும் சுத்தம் செய்து சூரிய கிரகணத்தால் ஏற்பட்ட தோஷத்திற்கு பரிகாரமாக பூஜைகள் மேற்கொள்ள உள்ளனர். 

    இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை மதியம் 2 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளது. சூரிய கிரகணத்தை ஒட்டி ஏழுமலையான் கோவிலில் நடைபெறக்கூடிய திருப்பாவாடை சேவை,  கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை,  வசந்த உற்சவம் , ஆர்ஜித பிரம்மோற்சவம் ஆகியவை வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் சூரிய கிரகணத்தை யொட்டி திருப்பதி மற்றும் திருமலையில் தேவஸ்தானம் சார்பில் வழங்கக்கூடிய அன்னப் பிரசாதம் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்படுவதாகவும் பக்தர்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மதியம் 4 மணிக்கு பிறகு  உணவுகள் தயார் செய்யப்பட்டு வழக்கம்போல் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். 

    இதேபோன்று திருப்பதியிலுள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார், கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவில்,  கோவிந்தராஜ ஸ்வாமி கோவில்,  கோதண்டராம சுவாமி கோவிலும் சூரிய கிரகணத்தை யொட்டி  வியாழக்கிழமை மதியம் 2 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Thirupathy Ezhumalayan vedio

    திருமலை  திருப்பதியில் சுவாமி ஏழுமலையான்  வெங்கடேச பெருமாள்  தரிசனம் . சுவாமி கர்ப்பகிரத்திலிருந்து வருடம்  ஒரு முறை மட்டுமே வெளியே  வருவார்  அந்த  அற்புத திருக்காட்சியை  அனைவரும்  ஆனந்தமுடன் தரிசனம் செய்யுங்கள் …….

  • Thirupathy Hundiyal Kanikkai

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தை காட்டிலும் இந்த ஆண்டு நவம்பர் மாதம்  23 ஆயிரத்து 198 பக்தர்கள் கூடுதலாக சுவாமி தரிசனம் செய்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20 லட்சத்து 93 ஆயிரத்து 17 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த நிலையில் இந்த ஆண்டு 21 லட்சத்து 16 ஆயிரத்து 215 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 

    அதேபோல கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7 லட்சத்து 98 ஆயிரத்து 537 பக்தர்கள் மொட்டை அடித்து தலை முடி காணிக்கை செலுத்திய  நிலையில் இந்த ஆண்டு 8 லட்சத்து 75 ஆயிரத்து 545 பக்தர்கள் மொட்டை அடித்து தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். 

    சாமி தரிசனம் செய்த பக்தர்கள் கடந்த ஆண்டு 86 .77 கோடி ரூபாய் உண்டியலில் காணிக்கை செலுத்தி நிலையில் இந்த ஆண்டு 93.77 கோடி ரூபாயை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். சுவாமி தரிசனம் செய்தவர்களுக்கு அறைகள் வாடகைக்கு வழங்கப்பட்டதன் மூலம் கடந்த ஆண்டு 6.61 கோடி ரூபாய் வருவாய் கிடைத்த நிலையில் இந்த ஆண்டு 7.68 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும்   2018 – 19 ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரை சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் 707.95 கோடி ரூபாய் செலுத்திய நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை 777.78 கோடி ரூபாய் உண்டியலில் காணிக்கை செலுத்தியுள்ளனர். 

    இதேபோன்று ஏப்ரல் முதல் நவம்பர் வரை கடந்த ஆண்டு 562 கிலோ தங்கம் காணிக்கையாக செலுத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 803 கிலோ தங்கம் செலுத்தியுள்ளனர் இதன் மூலமாக கடந்த ஆண்டை காட்டிலும் 241 கிலோ தங்கம் கூடுதலாக செலுத்தப்பட்டுள்ளது. 1859 கிலோ கடந்த ஆண்டு வெள்ளி காணிக்கை செலுத்திய  நிலையில் இந்த ஆண்டு 3852 கிலோ செலுத்தியுள்ளனர். இந்த ஆண்டு  1993 கிலோ கூடுதலாக வெள்ளி பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். 

    இது தவிர தேவஸ்தானம் சார்பில் உள்ள 11 அறக்கட்டளைக்கு கடந்த ஆண்டு 178.08  கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கிய நிலையில் இந்த ஆண்டு 213.24 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கி உள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 35.16 கோடி ரூபாய் கூடுதலாக பக்தர்கள் நன்கொடை வழங்கி உள்ளதாக தேவஸ்தானம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • Thirupathy Thuvaaram

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி பத்து நாட்களுக்கு வைகுண்ட துவாரம் வழியாக பக்தர்களை அனுமதிக்க முடிவு

    வழக்கமாக இரண்டு நாட்களில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே வைகுண்ட துவாரம் வழியாக சுவாமி தரிசனம் செய்து வந்த நிலையில் 8 லட்சம் பக்தர்கள் வரை சுவாமி தரிசனம் செய்யும் விதமாக 10 நாட்களுக்கு வைகுண்ட வாயிலை திறந்து வைக்க தேவஸ்தானம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி ஆகிய இரண்டு தினங்கள் வைணவத் திருத்தலங்களில் பரமபத வாயில் எனும் வைகுண்ட வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது வழக்கம். அவ்வாறு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 6ம் தேதி வைகுண்ட ஏகாதசியும், 7 ஆம் தேதி துவாதசி ஆகிய இரண்டு தினங்கள் வைகுந்த வாயில்  திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். 

    இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு நாட்கள் மட்டுமே வைகுந்த வாசல் திறக்கப்பட்டு சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதால் பல பக்தர்கள் இந்த தரிசனத்தை காண முடியாமல் போகிறது. எனவே அதிக பக்தர்களுக்கு வைகுண்ட வாயில் தரிசனத்தை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதற்காக தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக ஏழுமலையான் கோவில் தலைமை அர்ச்சகர்களான வேணுகோபால் தீட்சிதர், ரமண தீட்சிதர், அனந்த சைன தீட்சிதர், சுந்தரவரத பட்டாச்சாரியா, ரங்காச்சாரி தீட்சிதர் ஆகிய 5 பேர் கொண்ட ஆகம ஆலோசகரின் ஆலோசனை கேட்கப்பட்டது. 

    இந்த ஆலோசனையில் ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி பத்து நாட்களுக்கு வைகுந்த வாசல் திறக்கப்படுவது போன்று ஏழுமலையான் கோவிலில் 10 நாட்களுக்கு வகையில் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்க ஆகம ஆலோசகர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால் ஸ்ரீரங்கம் கோவிலில் பாஞ்சராத்திர ஆகம முறைகள் பின்பற்றப்பட்டு வரும் நிலையில் ஏழுமலையான் கோவிலில் வைகானச ஆகமம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

    இருப்பினும் ஆகம ஆலோசகர்கள் ஐவரும்  சேர்ந்து பத்து நாட்களுக்கு வைகுண்ட வாயில் திறந்து பக்தர்கள் அனுமதிக்க சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் டிசம்பர் மாத முதல் வாரத்தில் நடைபெறக்கூடிய அறங்காவலர் குழு கூட்டத்தில் இதற்கான  தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. அதன் பிறகு ஜனவரி 6ம் தேதி வைகுண்ட வாசல் திறக்கப்பட்டு 15ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட வாயில்  தரிசனம் செய்யும் வாய்ப்பை தேவஸ்தனம் ஏற்படுத்தித்தர திட்டமிட்டுள்ளனர். 

    இரண்டு நாட்கள் மட்டும் வைகுண்ட வாயிலில்  பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்யக் கூடிய நிலை இருந்த நிலையில் பத்து நாட்கள் வைகுந்த வாயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதன் மூலமாக சுமார் 8 லட்சம் பக்தர்கள் வரை சுவாமி தரிசனம் செய்ய முடியும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  • Thirupathy dharshan

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூர்ய கிரகணத்தையொட்டி டிசம்பர் 25, 26 ம் தேதிகளில் 13 மணி நேரம் கோவில் நடை அடைக்கப்படுகிறது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் டிசம்பர் 26 ம் தேதி காலை அதிகாலை 8.08 மணி முதல் 11.16  மணி வரை சூர்ய கிரகணம் ஏற்படவுள்ளது. கோயில் சம்பர்தாயபாடி சூர்ய கிரகணம், சந்திர கிரகணத்தின் 6 முன்னதாக கோயில் கதவுகள் மூடப்படுவது வழக்கம் . 

    அதன்படி டிசம்பர்  25 ஆம் தேதி இரவு 11 மணிக்கு கோயில் கதவுகள் மூடப்படுகிறது. 26 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 12 மணிக்கு கோயில் கதவுகள் திறக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு சுப்ரபாதம், தோமாலை சேவை,  பஞ்சாங்கம் படித்து, அர்ச்சனை போன்ற சேவைகள் ஏகாந்தமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் அர்ச்சகர்கள் மட்டும்  நடத்த உள்ளனர். இதைத் தொடர்ந்து மதியம் 2 மணிக்கு பிறகு சர்வ தரிசனத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

  • Thirupathy Free Laddu

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் ஒவ்வொரு  பக்தர்களுக்கு இலவசமாக  1 லட்டு பிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    அதேவேலையில் சர்வ, திவ்ய தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு இனி சலுகை விலையில் லட்டு வழங்குவது நிருத்தப்பட்டு ஒரு லட்டு 50 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.  அவ்வாறு வரக்கூடிய பக்தர்களில் இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கும் , ஆதார் அட்டை மூலமாக சர்வ தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கும், அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் பாதயாத்திரையாக வரக்கூடிய திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்றவர்களுக்கு தரிசனத்திற்கு செல்லக்கூடிய வைகுண்டம் காத்திருப்பு அறைக்கு செல்லும் நுழைவாயிலில் சலுகை விலையில் 4 லட்டுகள் பெறுவதற்கு 70 ரூபாய் கட்டணம் பெறப்பட்டு டிக்கெட் வழங்கப்படுகிறது. 

    ஒரு லட்டு தயார் செய்வதற்கு 40 ரூபாய் செலவு செய்யப்பட்டு வரும் நிலையில்  பக்தர்களுக்கு சலுகை விலையில் லட்டு வழங்குவதால் தேவஸ்தானத்திற்கு குமார் ஆண்டுக்கு 200 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    இதனால் கடந்த ஆண்டு கூடுதல்களை லட்டுகளை தேவஸ்தானம் சார்பில் கோவிலுக்கு வெளியே ஒரு லட்டின் விலை ரூபாய் 25 ல் இருந்து  ஐம்பது ரூபாயாக விலை உயர்த்தி விற்பனை  செய்து வருகிறது.  

    இந்நிலையில் சலுகை விலையில் பக்தர்களுக்கு வழங்கக்கூடிய லட்டுகளை முற்றிலுமாக ரத்து செய்து சாமி தரிசனத்திற்கு செல்லக்கூடிய பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்கி மீதமுள்ள லட்டுகளை ரூபாய் 50 க்கு விற்பனை செய்து பக்தர்கள் தேவைக்கு ஏற்ப எத்தனை லட்டுகள் வேண்டுமென்றாலும் வழங்க  தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    விரைவில்  விலை உயர்வு நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • Thirupathy VIP Dharshan

    திருப்பதி விஐபி தரிசனத்திற்கு புக் செய்ய புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஸ்ரீவானி அறக்கட்டளைக்கு தொகையை செலுத்தும் விதமாக மேற்படி அறக்கட்டளைக்கு ஆன் லைனில் பணம் செலுத்தலாம்.

    திருப்பதி கோவில் அபிவிருத்திக்காக அமைக்கப்பட்ட ஸ்ரீவானி அறக்கட்டளைக்கு ரூ 10000 நன்கொடை செலுத்துகிறவர்களுக்கு விஐபி தரிசன வசதி கொடுக்கப்படுகிறது. இதன் மூலமாக கோவில் அறக்கட்டளைக்கு நிதி குவிவதுடன், விஐபி தரிசனமும் ஒழுங்கு படுத்தப்படுகிறது.

    தற்போது ஸ்ரீவானி அறக்கட்டளைக்கு ஆன் லைனில் நிதி அளிக்கும் வசதி செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான ‘ஆப்’பில் பத்தாயிரம் ரூபாய் செலுத்திவிட்டு, ரூ 500-க்கு விஐபி தரிசன டிக்கெட் பெறலாம். ஸ்ரீவானி அறக்கட்டளைக்கு ஆன்லைனில் பணம் செலுத்த, கடந்த 21-ம் தேதி முதல் வசதி செய்யப்பட்டுள்ளது.

  • thirupathy VIP Dharshan

    ஒரு பக்தர் எத்தனை முறை வேண்டுமென்றாலும் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடையாக செலுத்தி சுவாமி தரிசனம் செய்து கொள்ளலாம்.

    இதற்காக www.ttdsevaonline.com என்ற இணையதளத்தில் ஸ்ரீவாணி அறக்கட்டளை என்ற லிங்க் மூலமாக ரூ 10 ஆயிரம்  நன்கொடை செலுத்தி ரூ 500 விஐபி டிக்கெட்டுகளை பெறலாம்.

    நேரடியாக திருமலைக்கு வந்தாலும் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கி விஐபி டிக்கெட்டுகளை பெறும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இடைத்தரகர்கள் மற்றும் முறைகேடுகளை தவிர்க்கவும் அனைத்து பக்தர்களும் விஐபி தரிசனத்தில் செல்லவேண்டும் என்பதே இந்த திட்டம்.

    ஆன்லைன் மூலம் ஒரு நாளைக்கு 500 விஐபி டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

  • Thirupathy Ezhumalayan Puspayagam

    திருப்பதி ஏழுமலையானுக்கு 7 டன் மலர்களால் புஷ்பயாகம் நடைபெற்றது. இதில் ஏராளமனோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை மாத திருவோண நட்சத்திரத்தில் ஆண்டு தோறும் ஏழுமலையானுக்கு புஷ்பயாகம் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் இருந்து 7 டன் மல்லி, முல்லை, ரோஜா, சாமந்தி உள்ளிட்ட மலர்கள் கொண்டு வரப்பட்டன.

      இந்த மலர்கள் பாபவிநாசம் வனத்தில் வைக்கப்பட்டு காலை 10 மணிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் மேள தாளம் முழங்க ஏழுமலையான் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

    இதில் திருப்பதி தேவஸ்தான சிறப்பு அதிகாரி தர்மா ரெட்டி, செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி மற்றும் உறுப்பினர்கள், அர்ச்சகர்கள், உள்பட ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

    மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை ஏழுமலையானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மலர் அபிஷேகம் நடைபெறுகிறது.