Blog

  • Positive energy

    வீட்டில் அனைத்து ஜன்னல்களையும் நன்கு திறந்து வையுங்கள். நல்ல காற்றோட்டமும் வெயிலும் உள்ளே வருவது எதிர்மறை ஆற்றல்கள் உள்ளே புகுவதை தடுக்கும், எடுக்கும்.

    வீட்டில் தேவையற்ற பொருட்களை சேர விடாதீங்க! அது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் காந்தமாகி அவற்றை ஈர்த்து சேர்க்கும்

    வீட்டிற்குள் வெறும் கால்களோட நடக்கப் பழகுங்க! பூமியில் நம் பாதம் பதிவதால் நம்முள் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை பூமி ஈர்த்துக் கொள்ளும். இதனால் நம் உடல் ஆற்றலை தக்க வைத்து சமன்படுத்தும்.

    அந்த காலத்தில் காலணிகளை வெளியேவிட்டுட்டு வீட்டுக்குள் நுழையும் போது கால்களை கழுவி செல்லும் பழக்கம் இருந்தது. அப்படிச் செய்வதால், வெளியே இருந்து நாம் கொண்டு வரும் எதிர்மறை ஆற்றல்களை, வீட்டுக்கு வெளியிலேயே விட்டு சுத்தமாக உள்ளே வந்தார்கள். ஆனால் இன்று இது கடினமான செயலாகி விட்டது. குறைந்தபட்சம் காலணிகளை வாசலில் விட பழகினால், தேவையற்ற எதிர்மறை ஆற்றல்களை வெளியே நிறுத்தலாமே. 

    வெளியே வெட்டவெளியில், தோட்டத்தில் தினம் நடைபயிற்சி செய்வது, நேர்மறை ஆற்றல்களை மீண்டும் ஊக்கமளித்து நமக்கு புத்துணர்வை அளிக்கவல்லது.

    தரையை பெருக்கித் தள்ளுவதும் எதிர்மறை ஆற்றல்களை அசைத்து குப்பையோடு குப்பையாக வெளியேற்றும்

    கல் உப்புக்கும் இந்த சக்தி அபாரம். வீட்டை துடைக்கும் போதோ கழுவும் போதோ, ஒரு கை கல் உப்பை வாளியில் போட்டு அந்த நீரை உபயோகிப்பதும் அதிக பலனை தரும்

    தொட்டிகளில் செடிகளும் மரங்களும் வீட்டைச் சுற்றி வளர்ப்பதும் இந்த எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றும்.

    கல் உப்பு கரைத்த நீரில் குளித்தாலோ, கை கால்களை அவ்வபோது சற்று நேரம் ஊற வைப்பதாலோ நம் உடலை பற்றி உள்ள எதிர்மறை ஆற்றல்களை சுத்தப்படுத்தலாம்.

    தொடர் பிரார்த்தனைகள் வீட்டில் நேர்மறை ஆற்றலை நூறு சதவிகிதம் அதிகப்படுத்தும்.

    நமது எண்ணம், செயல், பேச்சு அனைதையும், நாம் நேர்மறையாக வைத்திருக்க வேண்டும். இவை எதிர்மறையாக இருந்தால், எதிர்மறை ஆற்றல்களை அதிகமாக நம்முள் ஈர்த்துவிடும்.

    வீட்டை நன்கு வெளிச்சமாக வைத்திருக்க பழக வேண்டும். வெளிச்சம் எதிர்மறையை நீக்கும்

    கடவுளின் மீதும் நம் மீதும் முழு நம்பிக்கை வையுங்கள். நம்முடையே தேர்வுகளே நமது விதியை தீர்மானிக்கின்றது. 
     
  • Viyapputum Viralgalin Attral

    மானுட சமூகத்தின் உடல், மனம் சார்ந்த நலனுக்கும், அவை சந்திக்கும் பிரச்சனைகளுக்கும் தமிழர்கள் தீர்வு கண்டதைப்போல உலகில் வேறு எவரும் தீர்வு கண்டிருக்க மாட்டார்கள் என்று உறுதியாகக் கூறலாம்.

    வாழும் முறையான வாழ்வியலிலேயே நோய் நீக்குதல், வாழ்வியல் கொண்டே நலமுடனும், வலிமையுடனும் வாழ்ந்து என்ன சாதிக்க விரும்புகிறோமோ அதனைச் சாதிக்க அனைத்து வழிகளையும் கண்டுபிடித்து இந்த உலகிற்குச் சொன்னவர்கள் நமது முன்னோர்கள் அதிலும் குறிப்பாக சித்தர் பெருமக்கள்.

    யோகம், யோகாசனம் என வடமொழியில் குறிப்பிடப்பட்டாலும் ஓகம் என்பதே சரியான தமிழ்ச் சொல். இதனைக் கண்டறிந்தவர்கள் நமது முன்னோர்கள், பேரறிவு படைத்த சித்தர் பெருமக்கள். ஆனால் அவர்களோ, இது நாங்கள் கண்டறிந்தது அல்ல எங்களுக்கெல்லாம் தலைமையானவர் சிவபெருமானும் அவரது சீடர்களுமே என்கின்றனர். 

    சித்தபெருமக்கள் பல்வேறு மருத்துவ முறைகளைக் கூறியிருந்தாலும், வேகமான இந்த மின்னணு உலகிலும் எளிமையாகச் செய்து நலன் பெறுவதற்கும் மருத்துவ, ஓக முறைகளை நமக்கு அளித்துள்ளன.

    அப்படிப்பட்ட ஒரு ஓக முறைதான் முத்திரை ஓகம்.

    கை விரல்களைக் கொண்டு செய்யப்படும் ஓகமே, முத்திரை ஓகம்.

    இதற்கு அறிவியல் அடிப்படை என்னவென்று உடனே நமக்குள் கேள்வி எழுவது இயல்பு.

    இதற்கு முதலில் உடலியல் பற்றிய அடிப்படை அறிதல் மிக முக்கியமானது.  உடலியல் இதையே மெய்யியல் என்றும் அழைக்கிறோம். மெய் இயல் என்பது உண்மையான இயல் என்று ஒரு பொருள் இருந்தாலும் மெய் என்றால் உடல் என்ற ஒரு பொருளும் உள்ளது. எனவே மெய்யியல் என்பது உடலியல் என்றும் பொருள் கொள்ளலாம்.

    இந்த உலகமும், நமது மனித உடல் உள்பட எல்லா உயிர்களும் ஐம் பூதங்கள் என்று சொல்லப்படும் ஐந்து விதமான இயற்கைப் பொருளால் உருவானது என்பது அடிப்படை.

    நாம் எளிதாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்றால், நிலம், நெருப்பு, நீர், காற்று, ஆகாயம் என்ற ஐந்து பொருட்கள் அல்லது ஐந்து பூதங்கள் என்று அழைக்கிறோம்.

    நாம் வாழும் இந்த பூமி என்பது நிலம். அந்தப் பூமியின் மத்தியிலும், சூரியனிலும் இருப்பது நெருப்பு. கடல் உள்பட நீர் நிலைகளில் இருப்பது நீர், எப்போதும் சிலு சிலுவென, சில நேரங்களில் கடுமையாக வீசுவது காற்று. இதில் ஆக்சிஜன் எனப்படும் காற்று இல்லையெனில் நாம் உட்பட எந்த உயிரும் வாழ இயலாது. இதற்கு அடுத்ததாக ஆகாயம். அதாவது பூமியைச் சுற்றியுள்ள எல்லா வெற்றிடங்களுமே ஆகாயம் அல்லது புரியும்படியாக வானம் என்று வைத்துக்கொள்ளலாம். இந்தியாவில் இருப்பவர் ஒருவர் மேல் நோக்கிப் பார்த்தால் தெரிவதும் ஆகாயம்தான், அமெரிக்காவில் இருந்து ஒருவர் மேல் நோக்கிப் பார்த்தாலும் ஆகாயம்தான்.

    ”அண்டத்தில் உள்ளதே
    பிண்டத்திலும் உள்ளது”

    என்கிறார் சித்தர் பெருமான் ஒளவைப் பிராட்டி.

    அண்டம் என்பது ஆங்கிலத்தில் Universe என்று பொருள். பிண்டம் என்றால் உடல் என்று பொருள். இந்த அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது என்ற ஒரு மாபெரும் அறிவியல் உண்மையை நான்கு சொற்களில் சொல்லும் திறன்தான் சித்தர் பெருமக்களின் பேரறிவுத் திறன். 

    அந்தவகையில் அண்டத்தில் பார்த்த அதே நிலம், நெருப்பு, நீர், காற்று, ஆகாயம்தான் மனிதனின் பிண்டத்திலும் அதாவது உடலிலும் உள்ளது என்கிறார் ஔவையார்.

    சதைப் பிடிப்போடு இருக்கும் இந்த உடல் நிலம். ரத்தம் உள்பட உடலில் உள்ள நீர்மப் பொருள் நீர். உடலை வெப்பமாக வைத்திருந்து ரத்தம் உறையாது இருக்கவும் உடல் தட்ப வெப்ப நிலையைச் சீராக வைத்திருக்கவும் வெப்பம் அவசியம். அதை உருவாக்குவது நெருப்பு. நாம் மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுவதே காற்று. காற்று இல்லையெனில் ஒரு விநாடிகூட நாம் உயிர் வாழ இயலாது. இவற்றுக்கெல்லாம் தலையாயதாக இருப்பது ஆகாயம். 

    அண்டத்திற்கும், பிண்டத்திற்குமான இப்படி ஒரு ஒப்பீட்டின் அடிப்படையிலேயே நாம் முத்திரை ஓகத்தைப் புரிந்து கொள்வது எளிது.

    சொன்னால வியப்பாக இருக்கும். பிண்டம் எனும் உடலில் உள்ள இந்த ஐந்து பூதங்களின் பிரதிநிதியாக, சுவிட்சுகளாக இருப்பவைதான் நமது இரண்டு கைகளில் உள்ள விரல்கள். 

    இந்த விரல்களை வைத்துதான் முத்திரை ஓகம் செய்யப்போகிறோம்.  உடல் நலன், மன நலன் பெறப்போகிறோம். உடல் ஆற்றலை, உயிர் ஆற்றலை மிகச்சரியாக பயன்படுத்தப்போகிறோம்.

    எப்படி….. அடுத்தடுத்த கட்டுரைகளில் பார்ப்போம்.

    – விஷ்வா விஷ்வநாத், இதழியலாளர்

  • Viapputum Viralgalin Attral

  • Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – பெருமை 
    ரிஷபம் – நலம் 
    மிதுனம் – தெளிவு
    கடனம் – இன்பம்  
    சிம்மம் – நற்செயல்
    கன்னி –  தோல்வி
    துலாம் –  ஜெயம் 
    விருச்சிகம் – நஷ்டம் 
    தனுசு – உயர்வு
    மகரம் –   துன்பம் 
    கும்பம் – அனுகூலம் 
    மீனம் –     நட்பு
    சந்திராஷ்டமம்    – மிருகசீரிடம், திருவாதிரை
     
  • June 19 – Amirtha Yoga Naal

    ஜூன் 19 – அமிர்த யோக நாள்
    விகாரி வருடம் – ஆனி 4
    19-ஜூன்-2019 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    துவிதியை          
    திதி நேரம்    :    துவிதியை    மா    4.07
    நட்சத்திரம்    :    பூராடம்    ம    2.18
    யோகம்    :    அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    மிருகசீரிடம்,திருவாதிரை
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     
  • Koili seiya kudadhavai

    அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, சோமவாரம், சதுர்த்தி போன்ற நாட்களில் வில்வ இலை பறிக்கக்கூடாது. இதற்கு முந்தைய நாள் மாலையிலேயா இதை பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    கொடி மரம், நந்தி, கோபுரம் இவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது. விளக்கில்லாதபோது இருட்டில் வணங்கக் கூடாது. தகாத வார்த்தை மற்றும் எதிர்மறை சொற்களை பேசக்கூடாது. மேலே துண்டு போட்டுக் கொண்டு சுவாமி தரிசனம் செய்யக்கூடாது.
     
    பிரம்மா, விஷ்ணு, சிவன், இம்மூவரை வணங்கும்போது, சிரசின் மேல் 12 அங்குலம் உயர்த்தி கைகூப்பி வணங்க வேண்டும். அரசரையும், தகப்பனாரையும்  வணங்கும்போது வாய்க்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும்.
     
    மாதா, பிதா, குரு தெய்வங்களை வணங்கும்போது ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். பூமியில் நெடுஞ்சாண் கிடையாக வணங்க வேண்டும். ஆனால் பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

  • Girivalam selvadhu eppadi

    கிரிவலம் என்றாலே நமக்கு மனதில் முதலில் வந்து நிற்பது திருவண்ணாமலை. 
    கிரி- மலை, வலம் – மெதுவாக மலையை சுற்றி வருவது

    30 ஆண்டுகளுக்கு முன்பாக,திருவண்ணாமலை சென்று கிரிவலம் செல்பவர்கள்  அனைவருமே ஆன்மீகவாதிகளாக இருப்பார்கள். ஆனால் தற்போது சாதாரண மக்களும் கிரிவலம் செல்ல தொடங்கியுள்ளனர். 

    பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்வது நன்று. உலகில் 84 லட்சம் உயிரினங்கள் இருக்கிறதாக வேதங்கள் கூறுகிறது.. இவைகளுக்கு உயிர்ப்பு ஆற்றல் கிடைக்கக் கூடிய நாள் தான் பவர்ணமி. இந்த நாளில் கிரிவலம் செல்வது உகந்தது. 

    மலையில் இருக்ககூடிய தாவரங்கள்,மூலிகைகள்,உயிர் ஆற்றல் உள்ள ஜீவ சமாதிகள்,சித்தர்களின் அகர்ஷன சக்திகள் மூலமாக நம்முள் நல்ல மாற்றத்தை கொடுக்கும். 

    கிரிவலம் செல்லும் போது அமைதியாய், ஆனந்தமாய், பய  பக்தியுடன்  நடந்து வர வேண்டும். அவ்வாறு  நடக்கும் போது இறை சிந்தனையுடன் இறை நாமத்தை மனதில்  சொல்லிக்கொண்டே  நடக்க வேண்டும்.

    ஆண்கள்,மேலாடை இல்லாமல் கிரிவலம் செல்வது நல்லது. மேலும் பட்டு  அல்லது கதர் ஆடையை  அணிந்து கிரிவலம் வந்தால், நல்ல ஆற்றலை  பெற முடியும்..

    கூட வருபவர்களிடம் பேசிக் கொண்டு வருவது, சாப்பிட்டுக்கொண்டே கிரிவலம் வருவது தவறான ஒன்று. 

    கிரிவலம் செல்லும் போது, வேகவாக நடந்தோ அல்லது ஓடவோ கூடாது. அருணாச்சல புராணம் சொல்லுவது நல்லது. 
     
  • Ambigai slogam

    ஓம்பாசேநா பத்தசாத்யாம் ஸ்மரசர விவசாம்
    வாமதோஷ்ணா நயந்தீம் ஸெளவர்ணாம்
    வேத்ரயஷ்டீம் நிஜகர கமலயனா பரேணா
    ததானாம் ரக்தாம் ரக்தாங்க ராகாஸ்மர
    குஸும யுதாம் அஸ்வ சம்ஸ்தாம் ப்ரசன்னாம்
    தேவீம் பாலேந்து சூடாம் மனசி முனிநுதாம்
    பார்வதீம் பாவயாமி!

    பஞ்சாங்க சுத்தியுடைய திங்கள், வியாழக்கிழமைகளிலும், பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி திதி, ஜென்ம நட்சத்திர நாட்களிலும் சொத்து அல்லது பொருள் விரயத்துக்கான வழக்குகளைப் பொறுத்து, குறிப்பிட்ட தினங்களிலும் வழிபடலாம்.

    முதலில் கலச ஸ்தாபனம் செய்து, கிழக்கு முகமாக தேவியை கலசத்தில் எழுந்தருளச் செய்யவேண்டும். யாகாக்னி மேடை செய்து கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்தவாறு, ஐவகைப் பழங்கள், எள், புளிச்சாதம் ஆகிய நிவேதனங்களை தயார் செய்துகொள்ள வேண்டும். பின்பு நவதானியங்கள், கொள்ளு, சிவப்பு நிற மலர்கள், நவ சமித்துக்கள் சமர்ப்பித்து, பசு நெய்யுடன் தாமரை மலர் சேர்த்து மூலமந்திரம் கூறி யக்ஞம் செய்யலாம்.

    மேலும் சிவன், விஷ்ணு, அம்மன் சந்நிதிகளிலும், விசேஷமாக ஐயனார், முனீஸ்வரன் சந்நிதிகளின் எதிரில் உள்ள குதிரைச் சிலைகளில், முன் செல்லும் பாவனையில் உள்ள காலுக்கு எதிரில் அமர்ந்து தேவியின் மூலமந்திரத்தை ஜபம் செய்தும் வழிபடலாம். 90 நாட்களுக்கு மேல் ஜபம் தொடரக்கூடாது ஒரு நாளுக்கு 108 தடவை ஜபிக்கலாம். ஜபம் தொடங்குவதற்கு முன்பாக தகுந்த குருவின் மூலம் உபதேசம் பெற்றுச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். ஜபம் செய்பவர்கள் முதலில் தியானத்தை ஒருமுறை சொன்ன பிறகு, யந்திர ஸ்தாபனம், சக்தி ஊட்டல் செய்துவிட்டு ஜபம் தொடங்க வேண்டும்.
     
  • June 18 indraya naal eppadi

    ஜூன் 18 – இன்றைய நல்லநேரம்
    விகாரி வருடம் – ஆனி 3
    18-ஜூன்-2019 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    பிரதமை          
    திதி நேரம்    :    பிரதமை    ம    3.12
    நட்சத்திரம்    :    மூலம்    ம    12.46
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    : ரோகிணி, மிருகசீரிடம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     
  • Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – மகிழ்ச்சி 
    ரிஷபம் – லாபம் 
    மிதுனம் – யோகம் 
    கடனம் – இன்பம்  
    சிம்மம் – சிரத்தை
    கன்னி –  ஜெயம் 
    துலாம் –  நன்மை 
    விருச்சிகம் – செலவு
    தனுசு – பகை 
    மகரம் –   கீர்த்தி
    கும்பம் – தெளிவு
    மீனம் –     அமைதி
    சந்திராஷ்டமம்    – ரோகிணி, மிருகசீரிடம்