Blog

  • World Yoga Day

    ஜூன் 21… சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது.  
    ஐயாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஐநா பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தி உரையாற்றியிருந்தார். 

    2014 டிசம்பர் 11 அன்று 193-உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபை சூன் 21 ஆம் நாளை 'பன்னாட்டு யோகா நாளாக' அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.  ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் நாள் சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என ஐ.நா சபை அறிவித்துள்ளது. 

    முதல்முறையாக 2015, ஜுன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக இந்தியத் தலைநகர் தில்லியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தலைமை வகித்தார். 

    இன்று தொடங்கி 5 நாட்கள் இந்தியாவின் பல்வேறு இடங்களில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள், பிரபலங்கள் யோகா செய்யும் படங்கள் வழக்கமாக இணையத்தில் வைரலாகும். யோகா தினத்தின் வரலாறு, பலன்கள் பற்றிப் பார்ப்போம். 

    நாமும் நம் உடல் ஆரோக்கியத்தைப் பேண இந்த ஐந்துநாட்கள் யோகா செய்து உடலை திடமாக்குவோம். 

  • June 21 Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – சிந்தனை
    ரிஷபம் – இன்சொல் 
    மிதுனம் – ஜெயம்
    கடனம் – பாராட்டு  
    சிம்மம் – போட்டி
    கன்னி –  துணிவு
    துலாம் –  நஷ்டம் 
    விருச்சிகம் – யோகம்
    தனுசு – ஈகை
    மகரம் –   உயர்வு
    கும்பம் – அமைதி
    மீனம் –     சிரமம்
    சந்திராஷ்டமம்    – புனர்பூசம், பூசம்

  • June 21 – Yoga Day

    ஜூன் 21 – யோகா தினம்,
    விகாரி வருடம் – ஆனி 6
    யோகா தினம், திருத்தங்கல் பெருமாள் தேர்
    21-ஜூன்-2019 வெள்ளி 
    கரிநாள்
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    சதுர்த்தி          
    திதி நேரம்    :    சதுர்த்தி    இ    7.08
    நட்சத்திரம்    :    திருவோணம்    மா    6.33
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    : புனர்பூசம், பூசம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Yoga seivadhanal kidaikum palangal

    யோகா கலையை ஆயிரக்கணக்கான சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள்  வாழ்நாள் முழுவதும் பயிற்சி பெற்று கண்டுபிடித்துள்ளனர். மச்சேந்திரநாதர், கோரக்கநாதர், திருமூலர் போன்றோர் கடைபிடித்த யோகா கலையை பின்பற்றுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்…. 

    யோகா ஆசனம் பயிற்சியை முறையாக செய்வதன் மூலம் பல நோய்களை குணப்படுத்த முடியும். அதேபோல நோய்கள் வராமல் தடுக்கவும் யோகா கலை அவசியம். யோகா கலையை முறையாக பின்பற்றுவதால் நமக்கு தொல்லை கொடுக்கும் நோய்களை கட்டுப்படுத்தவும் முடியும். 

    யோகா செய்வதனால் கிடைக்கும் பலன்களை முழுமையாக பெற தகுதிபெற்ற யோகா நிபுணரின் கீழ்தான் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். முறையாக செய்தால் மட்டுமே நமக்கு பலன்கள் கிடைக்கும்.

    இளவயதிலேயே முறையாக பயிற்சி செய்தால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பல நோய்கள் வராமல் தவிர்க்கலாம். தினமும் யோகா செய்வனால் ரத்தஓட்டத்தை சீராகும், எலும்புகள், தசை நார்களை வலிமையாக, உறுதியாக வைக்க உதவும்
    யோகப் பயிற்சி உடலின் பலவீனமான பகுதிகளை வலுவடைய செய்கிறது. உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. மரணத்தை தள்ளிப்போடுகிறது. சர்க்கரை நோய், ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும். ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது.
     
    யோகா செய்வதனால் உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும்.  மனஅழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும். தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு வளர்க்க முடியும். கவனச் சிதறலில் இருந்து விடுபட்டு, மனஒருமைப்பாட்டை வளர்க்க முடியும். 

    மாணவர்கள் கற்கும் திறனை மேம்படுத்த முடியும். மனநோய்களான மனஇறுக்கம், அபரிமித உணர்வுகள், வன்முறை உணர்வுகள், பயம் போன்றவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.
     

  • Thirupathy malai padhayil

    திருப்பதி மலைபகுதியில் மாலை 6 மணிக்கு மேல் பைக்கில் செல்ல தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 
       
    திருப்பதி மலைப்பாதையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெண்கள் இரண்டு பேரை சிறுத்தை தாக்கியதன் எதிரொலியாக இந்த முடிவு எடுக்கப்படுகிறது. 

    திருப்பதி 2-வது மலைப்பாதையில் மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 பெண்களை சிறுத்தைப்புலி விரட்டி வந்துதாக்கியது. அதில் இருவரும் காயம் அடைந்தனர். மேலும் அந்த வழியாக கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்தவர்களை சிறுத்தைப்புலி விரட்டி தாக்க முயன்றது.

     
    இந்த சம்பவம் தொடர்பாக திருமலை-திருப்பதி தேவஸ்தான வனத்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் பங்கேற்றுப் பேசினார்.

    திருப்பதி மலைப் பாதையில் 2 பெண்களை சிறுத்தைப் புலி தாக்கிய சம்பவம் எதிரொலியாக, திருப்பதி மலைப்பாதையில் காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை மட்டுமே மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள் செல்ல அனுமதிக்கப்பட உள்ளது.

    மாலை 6 மணிக்குமேல் மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள் செல்ல அனுமதி கிடையாது. அந்த வாகனங்களுக்குத் தடை விதிக்க உள்ளோம். அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி, அதற்கான உத்தரவு விரைவில் அமல்படுத்தப்படும். பக்தர்கள், பொதுமக்கள் ஆகியோரின் பாதுகாப்பு நலன் கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • Eri Katha Ramar koil therottam

     மதுராந்தகத்தில் ஏரி காத்த கோதண்ட ராமர் கோவில் பெரிய தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்

    காஞ்சிபுர்ம மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஏரி காத்த கோதண்டராமர் திருக்கோவில்  ஆனி மாத பிரம்மோற்சவ விழா இன்று எட்டாம் நாள் விழாவில்  பெரிய தேரோட்டம் நடைபெற்றது 

    இதில் கருணாகரப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி வலம் வந்தனர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்

  • Sangadangali Theerkum vinayakar slogam

    பிறப்பிலேயே சகல ஞானங்களையும் பெற்ற கணபதிக்குக் குரு என்று எவருமே இல்லை. அவரே ஞான உருவானவர். அதனால்தான்  கல்வியில் சிறந்து விளங்கவும், தேர்வில் வெற்றி பெறவும் எல்லாக் குழந்தைகளுக்கும் கணபதி அருளுகிறார்.

    தன்னை நாடி வரும் பக்தர்களின் செல்வநிலையை உயர்த்தி, அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அருளும் கற்பகத் தருவாக, பிள்ளையார்பட்டியில் கோயில் கொண்டிருக்கும் கற்பக விநாயகர், யோக கணபதியாக திருமகளின் அம்சம் கொண்டு அருள்கிறார்.

     சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை,
    'மூஷிக வாகன மோதக ஹஸ்த 
    சாமர கர்ண விளம்பித சூத்ர 
    வாமன ரூப மஹேஸ்வர புத்ர 
    விக்ன விநாயக பாத நமஸ்தே…’

    என்ற ஸ்லோகத்தைச் சொல்லி வணங்கினால் எல்லாச் சங்கடங்களும் நீங்கி, சகல சௌபாக்யங்களையும் பெறலாம்.

  • Rasi Palan

    இன்று இந்த ராசிக்காரர் கோபத்தை குறைக்கனும் ….
    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – செலவு 
    ரிஷபம் – பாராட்டு 
    மிதுனம் – தனம் 
    கடனம் – போட்டி 
    சிம்மம் – கோபம் 
    கன்னி –  முயற்சி
    துலாம் –  நன்மை 
    விருச்சிகம் – நிறைவு
    தனுசு – வெற்றி
    மகரம் –   பொறுமை 
    கும்பம் – மறதி
    மீனம் –     சுகம் 
    சந்திராஷ்டமம்    – திருவாதிரை, புனர்பூசம்
     

  • June 20 – Sangadahara Chadurthi

    ஜூன் 20 – சங்கடஹர சதுர்த்தி
    விகாரி வருடம் – ஆனி 5
     சங்கடஹர சதுர்த்தி 
     subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    20-ஜூன்-2019 வியாழன்  ஷவ்வால்16
    சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    திரிதியை          
    திதி நேரம்    :    திரிதியை    மா    5.26
    நட்சத்திரம்    :    உத்திராடம்    மா    4.15
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    : திருவாதிரை, புனர்பூசம்
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • Irai Nambikkai

    முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலைத் தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். 

    அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளியில் வலம் வந்து கொண்டிருந்தனர். மரத்தடியில் ஒளிப்பிழம்பாய் அமர்ந்திருந்த முனிவரைக் கண்டதும் உளம் நெகிழ்ந்த அம்மை, ஐயனைப் பார்த்து, ”மரத்தடியில் பார்த்தீர்களா?” என்றாள்.

    ''பார்த்தேன்” என்றார் பரமன்.

    ''பார்த்த பிறகு சும்மா எப்படி போவது? ஏதேனும் வரம் கொடுத்துவிட்டுப் போகலாம், வாருங்கள்” என்றாள் அம்மை.

    ''அட, அவன் அந்த நிலையெல்லாம் கடந்தவன். இப்போது அவனிடம் செல்வது வீண்வேலை. வேண்டாம் வா! நம் வழியே போகலாம்…”

    ஆனால் பார்வதி விடவில்லை. ஐயனை வற்புறுத்தி மரத்தடிக்கு அழைத்து வந்துவிட்டாள்.

    ''வணக்கம் முனிவரே!” என வணங்கினர் அம்மையும் அப்பனும்.

    முனிவர் நிமிர்ந்து பார்த்தார். “அடடே! எம்பெருமானும் பெருமாட்டியுமா! வரணும் வரணும்…” என்று வரவேற்றார் முனிவர். தாகத்திற்கு மோர் கொடுத்து உபசரித்தார். 

    அவ்வளவுதான். மீண்டும் கிழிசலைத் தைக்கத் தொடங்கிவிட்டார்.

    சற்றுநேரம் பொறுமையாகக் காத்திருந்துவிட்டு, “சரி, நாங்கள் விடை பெறுகிறோம்” என்றனர் அம்மையும் அப்பனும்.

    ''மகிழ்ச்சியாய்ப் போய் வாருங்கள், வணக்கம்” என்று சொல்லிவிட்டு மீண்டும் கிழிசலைத் தைக்க முனைந்தார் முனிவர்.

    அம்மை குறிப்புக் காட்ட, அப்பன் பணிவாய்க் கேட்டார்…, 

    “முனிவரே! நாங்கள் ஒருவருக்குக் காட்சி கொடுத்துவிட்டால் வரம் கொடுக்காமல் போவதில்லை. எனவே தாங்கள் ஏதாவது வரம் கேளுங்கள். கொடுக்கிறோம்” என்றார்.

    முனிவர் சிரித்தார். “வரமா! உங்கள் தரிசனமே எனக்குப் போதும். வரம் எதுவும் வேண்டாம். உங்கள் வழியைத் தொடருங்கள்” என்று சொல்லிவிட்டுப் பணியில் ஆழ்ந்தார்.

    அப்பனும் அம்மையும் விடவில்லை. “ஏதாவது வரம் கொடுக்காமல் செல்லமாட்டோம்” என்று பிடிவாதமாய் நின்றனர்.

    முனிவர் வேறு வழியின்றி ஒரு வரம் கேட்டார். 
    “நான் தைக்கும்போது இந்த ஊசிக்குப் பின்னாலேயே நூல் போகவேண்டும்; அது போதும்” என்றார்.

    இதைக்கேட்ட அம்மையும் அப்பனும் திகைத்தனர்.

    ''ஏற்கனவே ஊசிக்குப் பின்னால்தான் நூல் போகிறதே. இதற்கு நாங்கள் ஏன் வரம் தரவேண்டும்?” என்று அம்மை பணிவாய்க் கேட்டார்.

    ''அதைத்தான் நானும் கேட்கிறேன். நான் ஒழுங்கு தவறாமல் நடந்துகொண்டு வந்தால் வரவேண்டிய பலன் நியதிப்படி தானாகப் பின்னால் வருமே. இடையில் நீங்கள் எதற்கு எனக்கு வரம் தரவேண்டும்?” என்று கேட்டார் முனிவர்.

    முனிவரின் விளக்கத்தைக் கேட்ட அம்மையும், அப்பனும் சிரித்துவிட்டு, மகிழ்ச்சியாய் சென்றனர்.

    ''இருள்நீங்க இன்பம் பயக்கும் மருள்நீங்கி 
    மாசறு காட்சி யவர்க்கு.—–வள்ளுவர்''

    தூய்மையான இறை நம்பிக்கை கொண்டவர்களுக்கு,”நாம் சரியாக நடந்துகொண்டால் நமக்குரிய விளைவும் சரியாக இருக்கும் என்ற மனத்தெளிவு பிறக்கிறது.

    திருச்சிற்றம்பலம்