Blog

  • June 26 – Indraya naal eppadi

    ஜூன் 26 – துர்க்கா ஸவாபனம்
    விகாரி வருடம் – ஆனி 11
    26-ஜூன்-2019 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    நவமி          
    திதி நேரம்    :    நவமி    இ    3.48
    நட்சத்திரம்    :    ரேவதி    முழுவதும்    0.00
    யோகம்    :    மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    அஸ்தம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Anjaneyar worship

    ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து வழிபாடு செய்யக்கூடாது என்று சொல்வதுண்டு.

    ஏனெனில் பிரம்மச்சாரியான ஆஞ்சநேயரை வழிபாடு செய்பவரும் திருமணம் ஆகாமல் பிரம்மச்சாரியாகவே இருந்து விடுவார் என்ற மூடநம்பிக்கை பரவி இருப்பதே இதற்கு காரணம்.

    அனுமன் ராமபிரானின் பக்தன் மட்டுமல்லாமல் ராமனின் உற்ற நண்பரும் ஆவார்.

    சிவபெருமானின் அம்சமான ஆஞ்சநேயர் ஒரு பிரம்மச்சாரி  மட்டுமல்ல ஒரு சிரஞ்சீவியும் ஆவார்.

    பிரிந்து கிடந்த ராமன் மற்றும் சீதையை மீண்டும் ஒன்று சேர்த்தவர் ஆஞ்சநேயரே ஆவார்.

    இந்திரஜித்தின் நாகாஸ்திரத்தினால் உயிருக்கு போராடிய லட்சுமணனை சஞ்சீவி மூலிகையை கொண்டு வந்து உயிர்ப்பித்தவரும் ஆஞ்சநேயரே.

    தமது நண்பன் சுக்ரீவனுக்கும் நல்வழி காட்டியவர் ஆஞ்சநேயரே, நம் வீடுகளில் இருக்க வேண்டிய மூர்த்திகளில் ஆஞ்சநேயரும் ஒருவர்.  

    பஞ்சமுக ஆஞ்சநேயரே வீட்டில் வைத்து வழிபாடு செய்யத்தக்கவர், ஆஞ்சநேயரின் வடிவங்களில் சஞ்சீவிராய ஆஞ்சநேயரே மிகவும் வலிமை மிக்கவர்.

    இத்தகைய ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து வணங்கும் போது கட்டாயம் ராமபிரானின் படம் இருக்க வேண்டும்.

    வழிபாடு செய்யும் காலத்தில் ராம நாமத்தினை நாம் சொல்ல வேண்டும், நமது அனைத்து விதமான கோரிக்கைகளையும் அவரிடம் வைத்து வணங்க வேண்டும்.

    கோரிக்கைகள் ஏதுமில்லாமல் ஆஞ்சநேயரை வழிபாடு செய்யக்கூடாது, ராமனை துதிக்கும் மக்களின் துதியை  கேட்பதற்காகவே ஆஞ்சநேயர் சிரஞ்சீவியாக வாழ்ந்து மக்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

  • Manai dhosham Neekum Valampuri sangu

    பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசிபோட்டு அதில் சங்கை வைத்து பூ, பொட்டிட்டு வணங்கி வருவதால் உணவுக்குப் பஞ்சமே வராது.

    காத்து கருப்பு சேஷ்டை உள்ள வீட்டில், பூஜை அறையில் ஒன்பது இடம்புரி சங்குகளை அடுக்கி ஒவ்வொரு சங்கினுள்ளும், ஒரு குண்டு மஞ்சள், ஒரு கருகுங்கிலிய கட்டி, ஒரு படிகாரக்கட்டி இவைகளை போட்டு தூப தீபம் காட்டி, வீட்டின் நான்கு மூளைகளிலும், நான்கு சங்குகளை புதைக்கவேண்டும். மீதம் இருக்கும் ஐந்து சங்குகளையும் வீட்டின் வாசலுக்கு நேராக கீழே புதைத்து விடலாம். இப்படி செய்தால் வீட்டில் காத்து கருப்பு சேஷ்டை அனுகாது.

    வீட்டை சுற்றி எட்டு திக்கிலும் எட்டு வலம்புரிச்சங்கையும் மண்ணில் புதைத்து விட்டால் மனை தோஷம் விலகும்.

    புது வீட்டின் வாசப்படிக்கு கீழ் மூன்று இடம்புரி சங்கும், வாசப்படிக்கு மேல் மூன்று வலம் புரி சங்குகளையும் வைத்து வீடு கட்டினால் மங்கள கரமான வீடாக இருக்கும்.

    வீட்டின் கிணற்றிலோ அல்லது போரில் பெளர்ணமி திதி அன்று சந்திர உதயத்திற்கு பின் வலம்புரி சங்கினுள் இறைவன் படம் பொறிக்கப்பட்ட தங்க காசு அல்லது வெள்ளி காசு போட்டு சங்கில் கடல் நீரை நிரப்பிய வாழை மரத்தின் சாரை அதில் கொஞ்சம் இட்டு கங்காதேவியை மனதில் நினைத்து பூஜித்து கினற்றிலோ அல்லது போரிலோ போட்டு விட்டால் அந்த நீர் புனித தீர்த்தமாக மாறி விடும்.

    மனிதர்கள் யாரேனும் இறக்கும் தருவாயில் இருக்கும் போது அவர்களுக்கு பச்சை பசும்பாலை வலம்புரி சங்கின் மூலம் வாயிலும், உச்சி தலையிலும் ஊற்றி வந்தால் அவர்களுக்கு ஜீவ முக்தியும், மறுபிறவி இல்லாமையும் இருக்கும்.

    சுமங்களிபூஜை செய்து குறைந்தது ஐந்து சுமங்கலிகளுக்கு வலம்புரி சங்கை தானமாககொடுத்தால், பெண்கள் தீர்க சுமங்களியாகவும் ஆரோக்கியத்துடன் நல்ல பிள்ளை பேறுகளும் நிலைத்து இருக்கும்.
     

  • Rasi palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – பிரீதி
    ரிஷபம் – மகிழ்ச்சி 
    மிதுனம் – ஆர்வம் 
    கடனம் – நன்மை 
    சிம்மம் – பாசம் 
    கன்னி –  முயற்சி
    துலாம் –  சுகம் 
    விருச்சிகம் – வரவு
    தனுசு – ஓய்வு
    மகரம் –   பரிசு  
    கும்பம் – நிம்மதி
    மீனம் – பாராட்டு
    சந்திராஷ்டமம்    – உத்திரம்
     

  • June 25 – Indraya Naal Eppadi

    ஜூன் 25 – சோழவந்தான் மாரியம்மன் தேர்
    விகாரி வருடம் – ஆனி 10
    25-ஜூன்-2019 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    அஷ்டமி          
    திதி நேரம்    :    அஷ்டமி    இ    2.30
    நட்சத்திரம்    :    உத்திரட்டாதி    அ.கா    4.23
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திரம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Veetil kula deivam vaasam seiya

    ஒரு குடும்பத்தை எப்பேர்ப்பட்ட துன்பங்களிலிருந்தும் காக்கும் சக்தி குலதெய்வ  வழிபாட்டிற்கு உண்டு.  குலதெய்வங்கள் எங்கோ ஒரு கிராம கோவிலில் மட்டுமே இருக்கவேண்டும் என்பதில்லை. நமது வீட்டிலும் குலதெய்வத்தை குடிகொள்ள செய்ய முடியும். நம் முன்னோர்கள் வகுத்து இருக்கும் சில வழிமுறைகளை பின்பற்றுவதால் நமது வீட்டில் நம்முடைய குலதெய்வம் வாசம் செய்ய தொடங்கி நமக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும்.
     
    குல தெய்வம் வீட்டில் தங்க வழிமுறை ஒரு கலச சொம்பு பாத்திரத்தில் வெட்டிவேர், பச்சை கற்பூரம், ஏலக்காய் போன்றவற்றில் சிறிதளவு சேர்த்து அதில் கொஞ்சம் பன்னீர் ஊற்றவேண்டும். பன்னீர் எந்த அளவிற்கு ஊற்றுகிறோமோ அதே அளவிற்கு சுத்தமான நீரை ஊற்றி வைக்க  வேண்டும். பின்பு அந்த சொம்பு பாத்திரத்தை நூல் கொண்டு சுற்ற வேண்டும். நூல் சுற்ற தெரியாதவர்கள், கடைகளில் கலச சொம்பிற்கு கட்டும் சிறியளவு பட்டு துணியை வாங்கி, அத்துணியை சொம்பின் மீது சுற்றிவிடவும்.

    பின்பு உங்கள் பூஜையறையில் ஒரு மரப்பலகை அல்லது பீடத்தை வைத்து, அதில் தலைவாழை இலையை போட்டு, அதில் பச்சரிசி ஒரு ஆழாக்கு அளவு பரப்பி, அதில் இந்த கலச சொம்பை வைக்க வேண்டும். இந்த சொம்பிற்குள் வெற்றிலைகள் அல்லது மாவிலைகளை செங்குத்தாக வைத்து, அதற்கு நடுவில் ஒரு வாழைப்பூவை நுனி பகுதி மேல்நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும். 
     
    ஓம் பவாய நம
    ஓம் சர்வாய நம 
    ஓம் ருத்ராய நம 
    ஓம் பசுபதே நம 
    ஓம் உக்ராய நம 
    ஓம் மஹாதேவாய நம 
    ஓம் பீமாய நம 
    ஓம் ஈசாய நம

    என்கிற மந்திரத்தை 108 முறை துதித்தவாறு வில்வ இலைகள், ஊமத்தம் பூக்கள் கொண்டு கலசத்திற்கு  அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். 
     
    இப்பூஜையை மூன்று நாட்களுக்கு மட்டும் செய்தால் போதும். பூஜை முடிந்த பிறகு கலசம் வைக்கப்பட்ட பச்சரிசியை சமைத்து சாப்பிடலாம். பூஜைக்கு வைக்கப்பட்ட வாழைப்பூவையும் பக்குவம் செய்து சாப்பிடுவது நல்லது. கலசத்தில் உள்ள நீரை நமது வீடு முழுவதும் தெளிக்க  வேண்டும். இப்படி பூஜை செய்பவர்களின் இல்லத்தில் அவர்களின் குலதெய்வம் நிரந்தரமாக வாசம் செய்து நமக்கு நல்லருள் புரியும்.

  • Thirupathy Dharshan

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சந்திர கிரகணத்தையொட்டி ஜூலை 16ம் தேதி இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை கோவில் நடை அடைக்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜூலை 17 ஆம் தேதி காலை அதிகாலை 1.31 மணி முதல் 4.29 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. இதையொட்டி 16ஆம் தேதி இரவு 7மணி முதல் 17 ஆம் தேதி காலை 5 மணி வரை கோவில் நடை அடைக்கப்பட உள்ளது. 

    பின்னர் கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு சுப்ரபாத சேவையுடன் திறக்கப்பட உள்ளது. இதை தொடர்ந்து தோமாலை சேவை,  பஞ்சாங்கம் படித்து, அர்ச்சனை போன்ற சேவைகள் ஏகாந்தமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் அர்ச்சகர்கள் மட்டும்  நடத்த உள்ளனர். இதைத் தொடர்ந்து 11 மணிக்கு பிறகு சர்வ தரிசனத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். 

    16 ஆம்  தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்துடன் சந்திர கிரகணமும் ஏற்பட உள்ளதால் அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவை, வசந்த உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதேபோன்று 17ஆம் தேதி ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் ,வசந்த உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • OM Ennum Pranava mandiram

    மகிழ்வான வாழ்வுக்கு ஒரு மாய மந்திரம் தான் “ஓம்” என்னும் பிரணவ மந்திரம். ஒற்றைச் சொல்தான் என்றாலும் அதன் சக்தி சொற்களை கடந்தது. ஓம் எனும் மந்திரம் செய்யும் அற்புதங்கள்  அனுபவ பூர்வமாக நாம் உணர வேண்டிய ஒன்று. இந்த மந்திரத்தை உள்ளத்தில் ஒலித்தால் மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வை தரும். அமைதியை தேடி அலைகின்ற மனங்கள் ஜெபிக்க வேண்டிய மந்திரம் ஓம். 

    'ஓம்' என்று தொடர்ந்து உச்சரித்துக்கொண்டிருந்தால், உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைத்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவது ஆய்வில் தெரிந்துள்ளது. 

    ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் உடலுக்கு அதிகப்படியான ஆக்சிஜன் கிடைப்பதோடு,  ரத்த ஓட்டமும் சீராகிறது. இதயமும் செரிமான மண்டலமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது அதோடு மட்டும் அல்லாமல்  'ஓம்' என்று உச்சரித்துவர நாளடைவில் நம் எண்ணங்களின் மீது சுயக்கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இதனால், தேவையற்ற சிந்தனைகள், எண்ணங்கள், உணர்வுகள் உருவாவது தடுக்கப்படுகிறது. தூயமையான எண்ணத்தோடு சாந்தமான ஆரோக்கியமான ஒரு வாழ்வு வாழ ஓம் என்று உச்சரிப்போம் உன்னத வாழ்வுதனை பெறுவோம்.

  • Rasi palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – உயர்வு 
    ரிஷபம் – சுகம் 
    மிதுனம் – லாபம் 
    கடனம் – அன்பு
    சிம்மம் – இன்சொல்
    கன்னி –  வரவு
    துலாம் –  தடங்கல் 
    விருச்சிகம் – பகை
    தனுசு – ஆசை
    மகரம் –   சுபம்  
    கும்பம் – வாழ்வு
    மீனம் – சாதனை
    சந்திராஷ்டமம்    – பூரம் 

  • June 24 Indraya Nalla Neram

    ஜூன் 24  – இன்றைய நல்ல நேரம்
    விகாரி வருடம் – ஆனி 9
    24-ஜூன்-2019 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    சப்தமி          
    திதி நேரம்    :    சப்தமி    இ    12.50
    நட்சத்திரம்    :    பூரட்டாதி    இ    2.06
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூரம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்