Blog

  • Rasi palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – யோகம் 
    ரிஷபம் – புகழ் 
    மிதுனம் – சாந்தம்
    கடனம் – அமைதி
    சிம்மம் – பொறுமை
    கன்னி –  கஷ்டம் 
    துலாம் –  பரிசு
    விருச்சிகம் – ஓய்வு 
    தனுசு – கவனம் 
    மகரம் –   பிரீதி
    கும்பம் – நலம் 
    மீனம் – ஆர்வம்  
    சந்திராஷ்டமம்    – சுவாதி
     

  • June 28 Indraya Naal Eppadi

    ஜூன் 28 – ஸ்மார்த்த ஏகாதசி
    விகாரி வருடம் – ஆனி 13
    28-ஜூன்-2019 வெள்ளி 
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    ஏகாதசி          
    திதி நேரம்    :    ஏகாதசி    அ.கா    5.00
    நட்சத்திரம்    :    அசுவினி    கா    7.45
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சுவாதி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Dhosham Neekum Parigarangal

    ஆசான், வேதம் படித்தவர், நம் முன்னோர்கள் மற்றும் சாதுக்களை விழுந்து வணங்கிட, புண்ணிய யாத்திரைக்கு இல்லாதவருக்கு பொருள் கொடுத்து உதவுது, குழந்தை பெற்ற ஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவது, குருவின் ஆசிகள் கிடைக்கும்.

    படுக்கை அறையில் தலை அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்ர தோஷம் படிப்படியாக குறையும்.

    வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் ஈமச் சடங்குகள் செய்ய பணம், பொருள் கொடுத்து உதவி செய்தல் சனியின் ஆசிகளை கொடுத்து ஆயுளை விருத்தி செய்யும்.

    சிவ பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் பசித்து தவிக்கும் உயிர்களுக்கு உணவு அளிப்பதும், கோவிலுக்கு சொர்ணத்தை தானமாக அல்லது கலசத்திற்கு தருவது, தொழு நோய் / குஷ்டம் கண்டவர்களுக்கு வைத்திய செலவு அல்லது அவர்களுக்கு நல்ல உணவு அளிப்பது சூரியனின் ஆசிகளை கொடுத்து நல்ல ஆரோக்கியம் மற்றும் வம்ச விருத்தி செய்யும்.

    அடிக்கடி பசுவிற்கு வாழை பழம், கற்கண்டு பொங்கல் கொடுப்பது சந்திரனின் ஆசிகளை நமக்கு கொடுத்து புகழை பெற்று தரும்.

    திருமணம் செய்ய ஏழை பெண்களுக்கு பொருள் கொடுத்து உதவுதல், நம் வாழும் மனை, தொழில் செய்யும் மனை கைகளால் தொட்டு வணங்குதல், மேலும் பூமிக்கு மரியாதை செய்தல், பல உயிர்களை வளர்த்தல் (விலங்கு, பறவைகள்), உயிர் பலிகளை நாம் தவிர்த்தல், இல்லாதவர்களுக்கு மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்தல் செவ்வாயின் ஆசிகளை கொடுத்து அஷ்ட சுகம்களையும் தரும்.

    பாழடைந்த சிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவது, பிரதோஷ நாளில் சிவஸ்தலங்களுக்கு முடிந்த வரையிலான அபிஷேகத்திற்கு தேவையிலான பொருட்களை வாங்கி கொடுப்பது, வெள்ளத்துடன் பச்சரிசி துளை கலந்து அந்த கோவிலின் சுற்று பிரகாரத்தில் தூவி விடுவது தேவர்களை சாந்தி படுத்திவிடும், இவர்கள் நம் முன்னோர்களுக்கு மோட்ச பதவி அளிப்பார்கள்.
     

  • Ucchi Pillayar Vazhipadu

    கர்பப்பை புற்றுநோய், கர்ப்பம் நழுவுதல் போன்ற கோளாறுகளால் வருந்தும் பெண்களுக்கு உதவும் ஓர் உத்தம வழிபாடு இதோ.

     திருச்சி மலைக்கோட்டை திருக்கோயில் படிக்கட்டுகளில்  ஒவ்வொரு படிக்கட்டிலும் ஒரு கொழுக்கட்டையை வைத்து வணங்கி மலை ஏறிச் செல்லவும்.  மடியில் அரிசி சாதத்தை கட்டிக் கொள்ளவும். உச்சிப் பிள்ளையாரை தரிசனம் செய்தவுடன் அங்கிருந்தே ஸ்ரீரெங்கநாதரையும்  தரிசனம் செய்யவும். 

    பின் மடியில் உள்ள சாதத்தை மலை மேல் உள்ள காக்கை, குருவி போன்ற பறவைகளுக்கு தானமாக அளித்து விடவும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் நோய்கள், அடி வயிற்றில் உருவாகும் கட்டி போன்ற பலவிதமான நோய்களுக்கும் நிவர்த்தி தருவதே மேற்கண்ட முறையில் அமையும் உச்சிப் பிள்ளையார் வழிபாடாகும். 

    சதுர்த்தி, சதுர்த்தசி, மூல நட்சத்திர நாட்களில் இத்தகைய வழிபாட்டை இயற்றுவது சிறப்பு.
     

  • Tamil Nadu Sivan Temples

    தமிழ்நாட்டில் மட்டும் 2500-க்கும் அதிகமான சிவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்கள் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டவையாகும். 

    சில சிவன் கோயில்கள் வரலாற்று மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அதாவது சைவ சமயத்தில் கூறப்படும் 28 ஆகமங்களின் அடிப்படையில் முக்கியமான 28 சிவன் கோயில்களைப் பற்றி இங்கே காண்போம். 

    திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டியிலிருந்து 2 கிமீ தொலைவில் திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்றாகும். பெரிய கோயில் விமான நிழல் கீழே விழாது என்ற நம்பிக்கை இருப்பது போல், திருவதிகை கோயிலின் நிழலும் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் இதை கட்டியதாக சொல்லப்படுகிறது. 

    திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயமானது, தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாகும். இது பாண்டிய மன்னர்களால் கி.பி. 700 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தனித்தனியே கட்டப்பட்ட இரண்டு கோயில்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான கோயில் இது. 

    திருவொற்றியூர் சென்னையிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள திருவொற்றியூரில் தியாகராஜர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் பல்லவ மன்னர்களால் 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. 

    மயிலாடுதுறையின் மிகபெரிய கோயிலாக ஸ்ரீ மாயூரநாத சுவாமி கோவில் திகழ்கிறது. இந்தக் கோயில் சுவர்களிலுள்ள மிகப் பழமையான பதிவுகளாக குலோத்துங்க சோழரின் பதிவுகள் உள்ளன. அதன் ஆரம்ப கட்டுமானத்திற்கு பிறகு, சற்றே புனரமைக்கப்பட்ட இந்த கோயில் சோழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக இன்னமும் விளங்குகிறது. 

    திருவானைக்காவல் கோயிலின் மூலவரான ஜம்புகேஸ்வரர் 5-ஆம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். அதாவது வடமொழியில் 'அப்பு' என்பதன் பொருள் நீர் என்பதாகும். இந்த லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். 

    தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு கட்டப்பட்ட கோயில்கள் எத்தனை இருந்தாலும் தஞ்சை பெரிய கோயிலுக்கு ஈடு இணை ஏதுமில்லை. வட நாடெங்கும் பயணித்து பல வெற்றிகளை சுமந்து வந்த ராஜராஜ சோழன் தான் வழியில் கண்ட பல்வேறு சிற்பக்கலை மரபுகளைச் சேர்ந்த கோயில்களின் தோற்றத்தில் கவரப்பட்டு அவற்றினும் சிறந்த ஒரு உன்னத கலைப்படைப்பை தனது ராஜ்ஜியத்தில் நிர்மாணிக்க விரும்பி மிகுந்த முனைப்புடன் இந்தக் கோயிலை உருவாக்கியிருக்கி உள்ளார். 

    தில்லை நடராஜர் கோயில், சிதம்பரம் மனிதனின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுகளை கொண்டது. அதன் அடிப்படையில் நடராஜர் கோயிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன. 

    திருவான்மியூரில் அமைதி தவழும் ஆன்மீகச்சுழலை கொண்டுள்ள மருந்தீஸ்வரர் கோயில் சென்னைக்கு வரும் பயணிகள் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய புராதன ஆன்மீகத்தலமாகும். 

    தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரே ஜோதிர்லிங்க ஆலயமாக இராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில் புகழ்பெற்றுள்ளது. மேலும் இராமேஸ்வரம் என்ற பெயர் வரக்காரணமாக ஸ்ரீ இராமநாதசுவாமி கோவிலை குறிப்பிடலாம். 

    எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களை கொண்ட எண்கோண அமைப்பில் அமைந்திருக்கும் திருவண்ணாமலை நகரில் பஞ்சபூத ஸ்தலங்களின் நெருப்புக்கான ஸ்தலமாக அண்ணாமலையார் கோயில் அறியப்படுகிறது. இக்கோவில் அக்னியை வெளிப்படுத்துவதாகவும், சிவபெருமான் இங்கு அக்னி லிங்கமாகவும் வணங்கப்படுகிறார். 

    சென்னை சென்னையின் பழமையான மைலாப்பூர் பகுதியில் இந்த கபாலீசுவரர் கோயில் வீற்றுள்ளது. இந்த கோயில் சிவபெருமான் மற்றும் அவரது துணைவியார் பார்வதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இன்று சாந்தோம் சர்ச் உள்ள இடத்தில் வீற்றிருந்த கபாலீசுவரர் கோயிலின் ஆதி அமைப்பு போர்த்துகீசியர்களால் சிதைக்கப்பட்ட பிறகு தற்போது நாம் காணும் கோயில் விஜயநகர மன்னர்களால் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

    ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம் 600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில், காஞ்சிபுரத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயில் சிவபெருமானுக்கான பஞ்சபூத கோயில்களுள், நிலத்தை குறிக்கும் பஞ்ச பூத ஸ்தலமாகும். 

    சென்னையிலிருந்து 67 கி.மீ தொலைவில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோயில் 1400 ஆண்டுகள் பழமையானது. இங்கு காணப்படும் ஒரு கல் மண்டபம் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (கி.பி. 610-640) காலத்தில் கட்டப்பட்ட சிவனுக்குரிய குடைக்கூளி என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 

    கும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயத்தில் தான் ஆண்டுதோறும் மாசிமக விழாவும், 12 ஆண்டுகளுக்கொருமுறை மகாமகப் பெருவிழாவும் கொண்டாடப்படுகின்றன. இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமையானதென நம்பப்படுகிறது. 

    ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயில், திருவெண்காடு தமிழ்நாட்டிலுள்ள ஒன்பது நவக்கிரக ஸ்தலங்களுள், இது நான்காவது ஸ்தலமாகும். இந்தக் கோயில் 1000 முதல் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இக்கோயிலில், நவக்கிரகங்களுள் ஒருவரும், பக்தர்களுக்கு அறிவும், செல்வமும் வழங்கக்கூடியவருமான புதன் பகவானுக்கு தனி சந்நிதி அமைத்து வணங்கி வருகின்றனர். 
     

  • Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – லாபம் 
    ரிஷபம் – மகிழ்ச்சி 
    மிதுனம் – களிப்பு   
    கடனம் – சோர்வு
    சிம்மம் – மறதி  
    கன்னி –  தனம் 
    துலாம் –  ஓய்வு
    விருச்சிகம் – நிம்மதி
    தனுசு – பாராட்டு
    மகரம் –   அலைச்சல்
    கும்பம் – ஆர்வம் 
    மீனம் – யோகம் 
    சந்திராஷ்டமம்    – சித்திரை
     

  • June 27 Indraya Naal Eppadi

    ஜூன் 27  – ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு
    விகாரி வருடம் – ஆனி 12
    27-ஜூன்-2019 வியாழன் 
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    தசமி          
    திதி நேரம்    :    தசமி    அ.கா    4.38
    நட்சத்திரம்    :    ரேவதி    கா    6.14
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சித்திரை
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • Veetil vaithu vangum deivangal

    பொதுவாக வீட்டில் அவரவர் குல தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இது மிகவும் நன்மை பயக்கும்.

    அவரவர் இஷ்ட தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இதுவும் நன்மை பயக்கும்.

    எந்த ஒரு விநாயகர் படத்தினையும் வைத்து வணங்கி வரலாம். முழு முதற் கடவுள் இவரே. இவரை வழிபடுவதால் நம் வாழ்வில் அனைத்து நலங்களையும் பெறலாம்.

    குழந்தை கடவுளரின் படம் எதுவாக இருந்தாலும் வைத்து வணங்கி வரலாம். இது குழந்தை வரம் தரும்.

    ‘ராஜ அலங்கார முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். அரசாங்க காரியங்களில் வெற்றி பெறவும், அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களும், அரசியலில் முன்னேற துடிப்பவர்களும் வணங்க வேண்டிய கடவுள் இவரே.

    மணக்கோலத்தில் இருக்கும் முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம்.

    அர்த்தநாரீஸ்வரின் படம் வைத்து வணங்கி வரலாம். நாம் அனைவரும் வணங்க வேண்டிய கடவுள் இவரே.

    சக்தியுடன் இருக்கும் சிவபெருமானின் படத்தினை வணங்கி வரலாம். சக்தியுடன் இருக்கும் சிவபெருமானுக்கே மிகவும் வலிமை அதிகம்.

    ராதையுடன் இருக்கும் குழலூதும் கிருஷ்ணரின் படம் வைத்து வணங்கி வரலாம். இது திருமணத்தடையை நீக்கும் வடிவம் ஆகும்.

    குடும்பத்துடன் இருக்கும் சிவபெருமானின் படம் வைத்து வணங்கி வரலாம். இதுவே எல்லா வடிவங்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது.

    தனது மனைவியான சொர்ணதாதேவியை அணைத்தவாறு தன் மடியில் அமர்த்தி அருள்பாலிக்கும் சொர்ணபைரவரின் படமும் வீடுகளில் வைத்து வணங்கத் தக்கதே.

    ராமர், சீதை, லட்சுமணன் இவர்களுடன் கூடிய அனுமனின் படமும் சிறப்பானதே. பஞ்சமுக அனுமன் கேட்ட வரங்களை எல்லாம் அள்ளித் தருபவர். அனுமனின் படம் வைத்தால் அதனுடன் ராமனின் படத்தையும் கட்டாயம் வைக்க வேண்டும்.

    லட்சுமியுடன் கூடிய நாராயணனின் எந்த ஒரு அவதாரத்தையும் தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம்.

    சிவகாமசுந்தரியுடன் நடனமாடும் நடராசரை தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இது சிவசக்தி அருளைத் தரும்.

    ஞானத்தினை போதிக்கும் தட்சணாமூர்த்தியின் படம் வீட்டில் வைத்து வணங்கி வழிபாடு செய்வது நன்று.

    கலைமகளின் படமும் வீட்டில் வைத்து வணங்கத் தக்கதே. இதனால் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பேச்சுத்திறமையும், எழுத்துத்திறமையும் உண்டாகும்.

    லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம்.

    அலர்மேல்மங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படம் வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொழிலில் நல்ல வருமானமும், சுகமான வாழ்க்கையும் அமையும்.

    துர்க்கையின் படம் வீட்டில் வைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. இதனால் தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும்.

    சித்தர்கள், மகான்கள், முனிவர்கள், யோகிகள், ரிஷிகள் இவர்களின் படங்களையும் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இதனால் குருவருள் வந்து சேரும். தோஷங்கள் விலகும்.

  • Varagi amman navarathiri vizha

    தஞ்சை பெரியகோவிலில் உள்ள வராகி அம்மனுக்கு ஜூலை 1 ஆம் தேதி ஆஷாட நவராத்திரி விழா  தொடங்குகிறது.

    உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வரும் தஞ்சை பெரிய கோவிலுக்கு இந்தியா மட்டும் அல்லாது வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்த கோவிலில் உள்ள வராகி அம்மனுக்கு ஆண்டு தோறும் ஆஷாட நவராத்திரி பெருவிழா 11 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி பெருவிழா வருகிற ஜூலை 1-ந்தேதி தொடங்குகிறது.

     
    அன்று காலை கணபதிஹோமம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து வராகி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெறுகிறது. மாலையில் வராகி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. விழா நாட்களில் தினமும் காலையில் யாகமும், மாலையில் அம்மனுக்கு அலங்காரமும் நடைபெறுகிறது.

    2-ம் நாள் – அம்மனுக்கு மஞ்சள் அலங்காரம் 

    3-வது நாள் – குங்கும அலங்காரம் 

    4-வது நாள் – சந்தன அலங்காரம்

     5-வது நாள் – தேங்காய்ப்பூ அலங்காரம் 

    6-வது நாள் – மாதுளை அலங்காரம்

    7-வது நாள் – நவதானிய அலங்காரம் 

    8-வது நாள் – வெண்ணெய் அலங்காரம் 

    9-வது நாள் – கனிவகை அலங்காரம் 

    10-வது நாள் – காய்கறி அலங்காரம் 

    11-வது நாள் – புஷ்ப அலங்காரம் 

    கடைசி நாள் அன்று மாலை அம்மன் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. 

  • Indraya Raasi palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – நன்மை 
    ரிஷபம் – லாபம்  
    மிதுனம் – கவனம்  
    கடனம் – உதவி
    சிம்மம் – ஆர்வம்  
    கன்னி –  வரவு
    துலாம் –  உயர்வு 
    விருச்சிகம் – செலவு
    தனுசு – வெற்றி
    மகரம் –   பெருமை
    கும்பம் – களிப்பு
    மீனம் – இன்பம் 
    சந்திராஷ்டமம்    – அஸ்தம்