ஜூன் 30 – பிரதோஷம்
விகாரி வருடம் – ஆனி 15
பிரதோஷம்
30-ஜூன்-2019 ஞாயிறு
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : திரையோதசி
திதி நேரம் : திரையோதசி அ.கா 4.16
நட்சத்திரம் : கார்த்திகை கா 9.08
யோகம் : சித்த-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : அனுஷம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
Blog
-
June 30 – pradhosham
-
Atthi varadhar thiruvizha
40 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் அத்தி வரதர் திருவிழா நாளை மறுதினம் துங்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் அத்தி வரதர் திருவிழா நாளை மறுநாள் ஜூலை 1 ஆம்தேதி துவங்கவுள்ளது அதற்கான ஏற்பாடுகள் இரவு பகலாக தீவிரமாக நடைபெற்று வருகின்றது
வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் இருந்து அத்தி வரதரை நேற்றிரவு வெளியே எடுத்தனர் ஆனால் பக்தர்கள் பார்க்க அனுமதியில்லை திங்கள் கிழமை ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனத்திற்க்காக வைக்கப்படவுள்ளது
இந்த அத்தி வரதர் திருவிழைவை முன்னிட்டு ஜுலை 1 ஆம் தேதி காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகள் ஒருநாள் விடுமுறையும் மீதமுள்ள 47 நாட்கள் அரை நாட்கள் மட்டுமே இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது
அத்தி வரதர் திருவிழாவுக்காக தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு என 5 மொழிகளில் தகவல் பலகை (வழிகாட்டி) வைக்கப்படவுள்ளனர்
5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் ஆங்காங்கே குடிநீர் தொட்டி கழிப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றனர் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் எந்த கோவிலுக்கு சென்றாலும் கோவிலில் ஒரு உற்சவரை மட்டுமே தரிசிக்க முடியும் ஆனால் அத்தி வரதர்திருவிழாவின் சிறப்பு 40 ஆண்டுக்கு ஒரு முறை ஒரே நேரத்தில் இரண்டு உற்சவரை தரிசிக்கலாம்.
-
Thiruthani vel
திருத்தணி முருகன் கோவில் ராஜகோபுரத்தில் 5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மின் விளக்குகளால் ஆன வேல் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில், மலைக்கோவிலில் உள்ள மாடவீதிக்கு முன்பாக, 3.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவில் நிர்வாகம், 123 அடி உயரத்திற்கு ராஜகோபுரம் கட்டும் பணிகளில் நிறைவடைந்தது.
மேலும், ராஜகோபுரத்தில் இருந்து மாடவீதிக்கு இணைப்பு படிகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை குன்றத்துார் பகுதியைச் சேர்ந்த ஒரு பக்தர் கதிரவன் என்பவர் கோவிலுக்கு, 5 லட்சம் ரூபாய் காணிக்கை வழங்கினார், ராஜகோபுரம் முன்புறத்தில் மின்விளக்குகளால் ஆன 45 அடி உயரத்திற்கு வேல் பொருத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதையடுத்து ராஜகோபுரத்தின் மீது கோவில் நிர்வாகம் வேல் பொருத்தம் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது.
-
Chidamparam Aani thirumanjanam kodiyetram
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 7ந் தேதி தேரோட்டமும், 8ந் தேதி ஆனி திருமஞ்சன தரிசனமும் நடக்கிறது
பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மற்றும் ஆனி மாதங்களில் தேரோட்டம் மற்றும் தரிசன உற்சவ விழா 10 தினங்களுக்கு சிறப்பாக நடக்கும். இந்த ஆண்டிற்கான ஆனி திருமஞ்சன திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி இன்று காலை கோயிலில் நடராஜர் சன்னதிக்கு எதிரே உள்ள கொடி மரத்திற்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் கோயில் கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் நடராஜ ரத்தினசபாபதி தீட்சிதர் கொடியேற்றி வைத்து திருவிழாவை துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு ஆராதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து இன்று முதல் தினமும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் நகர வீதிகளில் உலா வரும்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 7ந் தேதி தேரோட்டம் நடக்கிறது அன்று காலை கோயிலின் மூலவரான நடராஜர், சிவகாமசுந்தரி மற்றும் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட 5 சாமிகள் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் வைக்கப்பட்டு நான்கு மாட வீதிகளையும் வலம் வரும். அப்போது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நடராஜரை வேண்டி வடம் பிடித்து தேர் இழுப்பார்கள் அன்று இரவு தேர் நிலைக்கு வந்தவுடன் கோயிலின் உள்ளே இருக்கும் ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்படும்.
மறுநாள் 8ந் தேதி அதிகாலை மகா அபிஷேகமும், அதைத்தொடர்ந்து லட்சார்ச்சனை, திருவாபரண அலங்காரம், சித்சபையில் ரகசிய பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. பின்னர் மதியம் 2 மணி அளவில் நடராஜரும் சிவகாமசுந்தரியும் நடனமாடியபடியே ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலிப்பர். பின்னர் நடராஜர் சித்சபா பிரவேசமான கருவறைக்கு கொண்டு செல்லப்படும். பிரசித்தி பெற்ற இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோயில் தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
-
Rasi palangal
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – நலம்
ரிஷபம் – நன்மை
மிதுனம் – உதவி
கடனம் – ஆர்வம்
சிம்மம் – ஆக்கம்
கன்னி – தாமதம்
துலாம் – பக்தி
விருச்சிகம் – சாதனை
தனுசு – நட்பு
மகரம் – பணிவு
கும்பம் – வெற்றி
மீனம் – பெருமை
சந்திராஷ்டமம் – விசாகம்
-
June 29 – Karthigai
ஜூன் 29 – கார்த்திகை
விகாரி வருடம் – ஆனி 14
கார்த்திகை
29-ஜூன்-2019 சனி
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : துவாதசி
திதி நேரம் : துவாதசி அ.கா 4.56
நட்சத்திரம் : பரணி கா 8.39
யோகம் : சித்த-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : விசாகம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
Thirupathy Sirappu
சுவாமி புஷ்கரணி
திருமலையில் ஆயிரக்கணக்கான புனித தீர்த்தங்கள் இருக்கின்றன. இருப்பினும் வராக புஷ்கரணி என்ற சுவாமி புஷ்கரணி இதில் முக்கியமானது. அதேபோல தும்புரு, குமாரதாரா, சுப்பிரமணியா, பசுபுதாரா, கபில தீர்த்தம் போன்ற தீர்த்தங்களையும் பக்தர்கள் சென்று பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள். குறிப்பாக சுவாமி புஷ்கரணியில் ஏழுலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் கலக்கிறது. ஆகவே இது மிக புனிதமான நீராகும்.வெறுங்கை வேடன்
பொதுவாக தெய்வத்தின் சிலையில் ஒரு ஆயுதம் இருக்கும். ஆனால் திருப்பதி ஏழுமலையான் திருவுருவ சிலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் சங்க இலக்கியங்களில் வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார். அதேபோல் திருப்பதி கோயில் ஓவியங்களும் 300 ஆண்டுகள் பழமையானவை. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை.வாடாத ஆண்டாள் மாலை
திருவில்லிபுத்தூர் கோயிலில் இருந்து ஆண்டாள் அணிந்த மாலைகள் திருப்பதி கொண்டு வரப்பட்டு ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படுகிறது. இந்த மாலைகள் அதுவரை புதிய மாலைகளாகவே இருப்பது வியப்புக்குரியது.
-
Kettai Natchatiram
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பொதுவாக மன சஞ்சலங்கள் மிகுதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இவர்கள் சில எளிய பரிகாரங்கள் மூலம் மன சஞ்சலத்தில் இருந்து மீளமுடியும்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வியாழக் கிழமை தோறும் பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டு பாசுரங்களை 21 முறைக்குக் குறையாமல் ஓதி பிஸ்தா பருப்பு கலந்த பசும்பால் தானமாக அளிக்க வேண்டும்.
இப்படி அளித்து வந்தால் அவசரமாக எடுத்த முடிவுகளால் விளையும் துன்பங்களிலிருந்து நிவாரணம் பெற வழி பிறக்கும்.
-
Atthi Varadhar Story
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் திருக்குளத்தில் வாசம் செய்கிறார் அத்தி வரதர். 40 ஆண்டுகளுக்கு பிறகு குளத்தில் இருந்து வெளியே வந்து காட்சி தரும் அத்தி வரதர் ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து பக்தர்களுக்கு கட்சி அளிக்கிறார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளின் ஆதி மூர்த்தம்தான் அத்தி வரதர். ஆதி மூர்த்தியான அத்தி வரதர் பிரம்ம தேவரால் உருவாக்கப்பட்டவர். அவர்தான் திருக்குளத்தில் வாசம் செய்வதுடன், 40 வருடங்களுக்கு ஒருமுறை வெளியில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி தருகிறார். தற்போது நாம் கருவறையில் தரிசிப்பது வரதராஜப் பெருமாள் என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் அவர் பழைய சீவரம் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட தேவராஜப் பெருமாள்தான்.
திருவரங்கம், திருப்பதிக்கு எல்லாம் முந்தைய புராணச் சிறப்பு கொண்டது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில். ஆதியில் சிருஷ்டியை மேற்கொண்ட பிரம்மதேவர், தனது காரியம் செவ்வனே நடைபெற காஞ்சியில் ஒரு யாகம் செய்தார். தன்னை அழைக்காமல் யாகம் செய்த பிரம்மதேவரிடம் கோபம் கொண்ட சரஸ்வதி தேவி, யாகத்துக்கு வரவில்லை. சரஸ்வதி தேவி இல்லாமல் பிரம்மதேவரால் யாகத்தைப் பூர்த்தி செய்ய முடியாது. எனவே, பிரம்ம தேவர் சரஸ்வதி தேவிக்குப் பதிலாக காயத்ரி, சாவித்திரி ஆகியோரின் துணையுடன் யாகத்தைத் தொடங்கினார். சினம் கொண்ட சரஸ்வதி தேவி, பிரம்மதேவரின் யாகசாலையை அழிக்க வேகவதி ஆறாக மாறி வெள்ளப்பெருக்கெடுத்து வந்தாள்.
பிரம்மதேவரின் யாகத்தைக் காக்கத் திருவுள்ளம் கொண்ட திருமால், நதிக்கு நடுவில் சயனக் கோலம் கொண்டார். வெட்கிய சரஸ்வதி தேவி தன் பாதையை மாற்றிக்கொண்டாள். பிரம்மதேவரின் யாகமும் நிறைவு பெற்றது. தனக்காக வந்து யாகத்தைக் காத்த பெருமாளின் கருணையை எண்ணி நெகிழ்ந்த பிரம்மதேவர், பெருமாளைப் பணிந்து தொழுதார். தேவர்களும் பெருமாளை வணங்கி வரங்களைக் கேட்டனர். அவர்கள் விரும்பிய எல்லா வரங்களையும் கொடுத்ததால், பெருமாள், `வரதர்' என்ற திருப்பெயர் கொண்டார்.
ஒரு சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் பெருமாள் தேவர்கள் அனைவருக்கும் புண்ணியகோடி விமானத்தில் சங்கு, சக்கரம், கதை தாங்கிய திருக்கோலத்தில் காட்சி தந்தார். எனவே, அதே நாளில் பிரம்ம தேவர், தனக்கு தரிசனம் தந்த பெருமாளின் திருவடிவத்தை அத்தி மரத்தில் வடித்து வழிபட்டார்.
இப்படித்தான் அத்தி வரதர் மண்ணுலகில் எழுந்தருளினார். பிரம்மதேவரால் உருவான அத்திமர வரதராஜரை தேவலோக யானையான ஐராவதம் தனது முதுகில் சுமந்தது. பின்னர் ஐராவதம் சிறு குன்றாக உருமாறி அத்தி கிரி, வேழமலை என்று பெயர் பெற்றது. அத்திகிரியில் எழுந்தருளிய பெருமாள் ஞானியர்களுக்கும் தேவர்களுக்கும் வேண்டும் வரங்களை வேண்டியபடியே அருள்புரிந்து வந்தார்.
பின்னர் ஒருமுறை பிரம்மதேவர் அத்தி வரதரை முன்னிருத்தி ஒரு யாகம் செய்தார். யாகத் தீயின் காரணமாக அத்தி வரதர் பின்னப்பட்டுவிட்டார். பிரம்மதேவர் பதறிப் போனார். வேறு எந்த வடிவத்திலும் பெருமாளை உருவாக்க முடியாத சூழலில், பிரம்மா திருமாலை வேண்டினார். அவருடைய ஆலோசனையின்படி, அத்தி வரதரை, கோயிலிலுள்ள நூற்றுக் கால் மண்டபத்துக்கு வடக்கிலுள்ள இரண்டு திருக்குளங்களில் தென் திசையிலுள்ள நீராழி மண்டபத்துக்குக் கீழே உள்ள மற்றொரு மண்டபத்தில் வெள்ளிப் பேழையில் சயனக் கோலத்தில் வைத்தார்.
யாகத்தீயில் உஷ்ணமான பெருமான், கலியுகம் முழுக்க இந்த அமிர்தசரஸ் எனும் ஆனந்த புஷ்கரணி திருக்குளத்தில் குளிர்ந்த நிலையில் இருப்பார் என்றும், இதனால் எந்தக் காலத்திலும் இந்தத் திருக்குளம் வற்றாது என்றும் பிரம்மதேவருக்குச் சொல்லப்பட்டது. அத்தி வரதர் திருக்குளத்துக்கு அடியே சென்றதும், பழைய சீவரம் என்ற ஊரில் இருந்த தேவராஜப் பெருமாள் அத்திகிரிக்கு அருள வந்தார்.
-
Veliye vandha atthi varadhar….
கோவிந்தா…. கோவிந்தா…. பக்தி கோஷம் முழங்க 40 ஆண்டுகளுக்கு பின்னர் அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் சிலை எடுக்கப்பட்டது.
காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் நீருக்குள் இருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருக்குளத்தில் இருந்து எழுந்தருளி 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கடந்த 1979-ம் ஆண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர் சிலை பின்னர் மீண்டும் குளத்தில் வைக்கப்பட்டது.
தற்போது 40 ஆண்டு களுக்கு பிறகு இந்த ஆண்டு மீண்டும் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இந்த விழா வருகிற 1-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 17-ந்தேதி வரை 48 நாட்கள் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கான விழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.அத்திவரதர் விழாவுக்காக அத்திவரதர் சிலையை திருக்குளத்தில் இருந்து வெளியே கொண்டு வருவதற்காக குளத்தில் உள்ள நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. பின்னர் சேறு, சகதிகளை அகற்றும் பணிகள் கடந்த சில நாட்களாக வேகமாக நடந்து வந்தன.
இதற்கிடையே இன்று அதிகாலை சுமார் 2.45 மணியளவில் குளத்தில் இருந்து அத்திவரதர் சிலையை அர்ச்சகர்கள் வெளியே எடுத்து வந்தனர். பின்னர் சிலையை வசந்த மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து வசந்த மண்டபத்தில் அத்தி வரதருக்கு சிறப்பு பூஜைகள், சடங்குகள் நடந்து வருகின்றன.
அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு தற்போது அனுமதி கிடையாது. வருகிற 1-ந்தேதி காலை முதல் பக்தர்களுக்கு அத்திவரதர் அருள்பாலிக்கிறார்.