Blog

  • Thirupathy New Facility

    பக்தர்களின் வசதிக்காக திருப்பதி ரயில் நிலையம் முன்பாக உள்ள விஷ்ணு நிவாஸம் காம்ப்ளக்ஸ் அறைகள் முழுவதும் நேரடியாக வரும் பக்தர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

    இதனால், சென்னையிலிருந்து ரயிலில் செல்லும் பக்தர்கள் ரயில் நிலையத்துக்கு எதிரிலிருக்கும் விஷ்ணு நிவாஸத்தில் அறை எடுத்துத் தங்கி சுவாமி தரிசனம் செய்யலாம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அறைகள் ஒதுக்கப்படும். 

    திருப்பதி பஸ் ஸ்டாண்டு எதிர்புறமுள்ள சீனிவாசம் காம்ப்ளக்ஸும், மாதவ நிலையமும் வழக்கம்போல் ஆன்லைன் மூலமே முன்பதிவுசெய்யப்படும். இந்தத் தகவலை திருப்பதி தேவஸ்தானம் செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது. 

    திருப்பதி ஏழுமலையானையும் திருச்சானுர் பத்மாவதி தாயாரையும் தரிசிக்க தினமும் ஏராளமான பக்தர்கள் இந்தியா முழுவதுமிருந்து வந்த வண்ணம் உள்ளனர். தேவஸ்தானத்துக்குச் சொந்தமான அறைகள் திருமலையில் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் அவை யாவும் ஆன் லைன் வழியாகவே பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 90 நாள்களுக்கு முன்பாகவே இவற்றுக்கான முன்பதிவுகள் முடிந்து விடுகின்றன. இதனால் பலரும் கீழ்திருப்பதியில் அறை எடுத்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். 

    திருப்பதி பஸ் ஸ்டாண்டு எதிர்புறமுள்ள `சீனிவாசம் காம்ப்ளக்ஸு'ம், `மாதவ நிலையமும், ரயில் நிலையத்துக்கு `விஷ்ணு நிவாஸு'ம் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான தங்கும் விடுதிகளாகும். இந்த விடுதிகளுக்கும் ஆன் லைன் முன்பதிவு மூலம் மட்டுமே ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டிய நிலையே இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – உயர்வு 
    ரிஷபம் – பெருமை  
    மிதுனம் – குழப்பம் 
    கடனம் – அன்பு
    சிம்மம் – பாசம் 
    கன்னி –  வெற்றி
    துலாம் –  ஆக்கம் 
    விருச்சிகம் – லாபம் 
    தனுசு – தனம் 
    மகரம் –   பக்தி 
    கும்பம் – சினம் 
    மீனம் – கோபம் 
    சந்திராஷ்டமம்    – மூலம்
     

  • July 2 Amavasai

    ஜூலை 2  – அமாவாசை
    விகாரி வருடம் – ஆனி 17
     அமாவாசை 
    திருவள்ளூர் வீரராகவர் தெப்பம்
    02-ஜூலை-2019 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    அமாவாசை          
    திதி நேரம்    :    அமாவாசை    இ    1.36
    நட்சத்திரம்    :    மிருகசீரிடம்    கா    8.43
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    மூலம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Thirupathy Masu Kattupattai Kurikka

    திருப்பதி திருமலையில் மாசுப்பாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

    சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் பொருட்டு, டீசல் வாகனங்களின் பயன்பாட்டை படிப்படியாக குறைத்து, பேட்டரியின் மூலம் இயங்கும் வாகனங்களின் சேவை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக திருமலை திருப்பதி தேவஸ்தான டிரஸ்ட் போர்டு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.

    டிரஸ்டு போர்டு தலைவர் சுப்பா ரெட்டி, வைகுண்டம் கம்பார்ட்மெண்ட், நாராயணகிரி கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு ஏழுமலையானின் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பிரசாதம் தயாரிக்கும் கூடத்திலும் அவர் சோதனை நடத்தினார்.

    பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த சுப்பா ரெட்டி கூறியதாவது, கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு உணவு. குடிநீர், மருத்துவ வசதிகள் என அனைவருக்கும் நிறைவான வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. வார இறுதிநாட்களில் ஏழுமலையான் தரிசனத்திற்கு 18 முதல் 20 மணிநேரம் வரை காத்திருக்க வேண்டியிருப்பதாக பக்தர்கள் கூறினர்.

    தற்போது தான் புதிய போர்டு கட்டமைக்கப்பட்டு, புதிதாக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். தரிசன காத்திருப்பு நேரம் குறைப்பு குறித்து அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.

  • Nalan Kulathil Adaigalai vittu sella thadai

    திருநள்ளாறில் உள்ள நளன் தீர்த்தக் குளத்தில் நீராடும் பக்தர்கள், குளத்திலேயே ஆடைகளை விட்டுச் செல்ல விதிக்கப்பட்ட ததடை அமலுக்கு வந்து இருக்கிறது. 

     திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயிலுக்கு தரிசனத்துக்கு வரும் பக்தர்கள், நளன் தீர்த்தக் குளத்தில் நீராடிவிட்டு, தங்கள் ஆடைகளைக் குளத்திலும், குளக்கரையிலும் விட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் தண்ணீர் மாசடைவதாக புகார் எழுந்தது. மேலும், அவ்வப்போது தண்ணீரை புதுப்பிக்க வேண்டியுள்ளதால், நிலத்தடி நீர் கோடிக்கணக்கான லிட்டர் வீணாகிறது. 

    இதனை கருத்தில் கொண்டு, நளன் தீர்த்தக் குளத்தில் பக்தர்கள் ஆடைகளை விட்டுச் செல்ல ஜூலை 1 முதல் தடை விதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு தற்போது அமலுக்கு வந்து இருக்கிறது. இனிமேல் நளன் குளத்தில் ஆடைகளை விட்டுச் செல்ல முடியாது. 

    இனி கோயில் குளக்கரையில் பல இடங்களில் தொட்டிகள் வைக்கப்படுகின்றன. இதில்தான் உடைகளைப் போட வேண்டும். இதுகுறித்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்' என்று கோயில் நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது. 

  • Thiruchendur Prasadham

    உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு  சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் பக்தர்களின் வசதிக்காக  கோவில் பிரசாத விற்பனை நிலையம்  மூலம் குறைந்த விலையில்  பிரசாதங்கள் விற்பனை தொடங்கி இருக்கிறது. 

    இந்து சமய அறநிலையதுறை கோவில்களில் வழங்கப்படும்  பிரசாதங்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக ஏலம் முறையில்  தனியார்க்கு குத்தகைக்கு விடப்பட்டு  விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த பிரசாத விற்பனையில்  பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும்  பிரசாதங்கள் தரம் குறைவாக இருப்பதாகவும்  புகார்கள்  எழுந்தது. 

    இதனையடுத்து இந்து சமய  அறநிலையத்துறையின்  முதல் நிலை கோவில்களில் பிரசாதம் மற்றும் பஞ்சாமிர்தங்களை நேரடியாக கோவில் விற்பனை நிலையங்கள்  மூலம் விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து உலகப்புகழ்பெற்ற முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான  திருச்செந்தூர் அருள்மிகு  சுப்பிரமணியசுவாமி கோவிலில் கோவில் பிரசாத விற்பனை நிலையம் மூலம் நேரடி பிரசாத விற்பனையை இணை ஆணையர் குமரதுரை தொடக்கி வைத்தார். 

    இதன்மூலம் ரூ 50 முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த லட்டு , புளியோதரை , சர்க்கரை பொங்கல் , தேன்குழல்  மற்றும் பிரசாத பை உள்ளிட்ட பிரசாத பொருட்கள் பக்தர்கள் வசதிக்காக பத்து ரூபாய் முதல் ஐம்பது ரூபாய் வரை குறைந்த விலையில் விற்பனைக்கு வழங்கப்படுகிறது. குறைந்த விலையிலான பிரசாதங்களை பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். 

    கோவில் பிரசாதம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவது பக்தர்களிடம் வரவேற்றை பெற்றது. இதனையடுத்து கோவிலில்  விரைவில் பஞ்சாமிர்தம்  விற்பனையும் பக்தர்களின் வசதிக்காக நேரடி விற்பனையில் தொடங்கும் என கோவில் இணை ஆணையர் குமரதுரை  தெரிவித்துள்ளார்.

  • Atthi varadhar thiruvizha

    நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை காஞ்சிபுரம் தேவராஜர் கோயில் தரிசன திருவிழா கோலாகலமாகத் தொடங்கி இருக்கிறது.  கடந்த ஒரு மாதமாகவே காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயிலில் நடைபெறும் அத்திவரதர் தரிசனத்துக்காக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. 

    கடந்த 27-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு அனந்த சரஸ் குளத்திலிருந்து அத்திவரதரை வெளியே எடுத்து வசந்த மண்டபத்தில் வைத்தனர். சயனக் கோலத்தில் உள்ள அத்திவரதர் சிலையை சுத்தம்செய்து, அவருக்கு பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை 11 மணிக்கு புண்ணியாக வாசனம், ஜலசம்ரோஷம், தைலக்காப்பு, ஹோமம் ஆகிய பூஜைகள் முடித்து சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. சுவாமி தரிசனம் கொடுக்கும் வசந்த மண்டபம் பூக்கள் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு மிக எழிலுடன் காணப்பட்டது.

    அதிகாலை 2.45 மணிக்கு அத்திவரதர் சிலை மைய மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றன. இதனை அடுத்து, பக்தர்கள் தரிசனம் தொடங்கியது.

    ஆகஸ்ட் 17-ம் தேதி வரை 48 நாட்களுக்கு அத்திவரதர் பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அத்தி வரதர் வைபவத்தை காண தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும் பக்தர்கள் அணி திரண்டு வந்துள்ளனர்.
     

  • July 1 Indraya Nalla Neram

    ஜூலை 1 – இன்றைய நல்ல நேரம்
    விகாரி வருடம் – ஆனி 16
    01-ஜூலை-2019 திங்கள்
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    சதுர்த்தசி          
    திதி நேரம்    :    சதுர்த்தசி    இ    3.03
    நட்சத்திரம்    :    ரோகிணி    கா    9.11
    யோகம்    :    அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    கேட்டை
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Rasi palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – நட்பு
    ரிஷபம் – வெற்றி 
    மிதுனம் – நற்செயல்
    கடனம் – நலம் 
    சிம்மம் – பொறுமை 
    கன்னி –  நிம்மதி
    துலாம் –  பணிவு
    விருச்சிகம் – லாபம் 
    தனுசு – உறுதி
    மகரம் –   ஊக்கம் 
    கும்பம் – பாராட்டு 
    மீனம் – கவனம் 
    சந்திராஷ்டமம்    – கேட்டை
     

  • Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – ஆர்வம் 
    ரிஷபம் – நஷ்டம் 
    மிதுனம் – சோர்வு
    கடனம் – பாராட்டு 
    சிம்மம் – ஓய்வு
    கன்னி –  உயர்வு
    துலாம் –  முயற்சி
    விருச்சிகம் – செலவு
    தனுசு – ஈகை
    மகரம் –   இரக்கம் 
    கும்பம் – யோகம் 
    மீனம் – சிரத்தை
    சந்திராஷ்டமம்    – அனுஷம்