Blog

  • Rasi palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – சோர்வு 
    ரிஷபம் – கவலை 
    மிதுனம் – நட்பு
    கடனம் – பாராட்டு
    சிம்மம் – அமைதி 
    கன்னி –  நன்மை  
    துலாம் –  சாந்தம் 
    விருச்சிகம் – ஆர்வம் 
    தனுசு – சுகம் 
    மகரம் –   வெற்றி
    கும்பம் – மேன்மை   
    மீனம் – தனம் 
    சந்திராஷ்டமம்    – அவிட்டம்
     

  • July 6 Chadurthi Viradham

    ஜூலை 6 – சதுர்த்தி விரதம்
    விகாரி வருடம் – ஆனி 21
    06-ஜூலை-2019 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    சதுர்த்தி          
    திதி நேரம்    :    சதுர்த்தி    மா    4.54
    நட்சத்திரம்    :    மகம்    இ    2.14
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அவிட்டம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Thikkuvai problem

    சிறு வயதிலிருந்தோ அல்லது திடீரென்றோ திக்கு வாய்ப் பழக்கத்திற்கு  ஆளாவனவர்கள் உண்டு. இதற்கு எளிமையான நிவாரண முறையை சித்தர்கள் அருளியுள்ளார்கள். 

    சுத்தமாகத் தயார் செய்த விபூதியில் சிறிது நீர் விட்டுக் குழைத்து அதை உடலில் 36 பட்டைகளாக இட்டுக் கொண்டு திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அருளிய வேயுறு தோளி பங்கன் என்று தொடங்கும் பதிகத்தை 11 முறை ஓதி வரவும்.

    வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
    மிக நல்ல வீணை தடவி
    மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் 
    உளமே புகுந்தவதனால்
    ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
    சனி பாம்பிரண்டும் உடனே
    ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
    அடியாரவர்க்கு மிகவே!

     தொடர்ந்து இவ்வாறு வழிபட்டு வர திக்கு வாய் குணமாகும். 
     

  • Athi varadhar sirappu dharisanam

    40 ஆண்டுகளுக்கு பிறகு காட்சி தரும் அத்தி வரதரை தரிசிக்க நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால் தற்போது சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.  ரூ.500 செலுத்தி ஆன்லைனில் பதிவு செய்தவர்களில் தினமும் ஆயிரம் பேர் வரை அத்தி வரதரை தரிசிக்கலாம். 

    காஞ்சீபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் விழா கடந்த 1-ந் தேதி தொடங்கியது. கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 48 நாட்கள் இந்த விழா நடைபெற உள்ளது.

    அத்திவரதரை தரிசிக்க நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். கடந்த 5 நாட்களில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து உள்ளனர்.

     அத்திவரதர் தரிசனம் செய்வதற்கென ஆன்லைனில் கடந்த 2 நாட்களாக ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். ஆன்லைனில் முன்பதிவு செய்தோருக்கான தரிசனம் நேற்று தொடங்கியது.

    அதன்படி தினந்தோறும் இரண்டு வேளைகளில் 500 பேர் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். காலை 11 மணியில் இருந்து 12 மணி வரை 500 பேர் மாலை 5 மணி முதல் 6 மணி வரை 500 பேர் என மொத்தம் ஆயிரம் பக்தர்கள் ஆன்லைனில் ரூ. 500 செலுத்தி தரிசனம் செய்தனர்.

    சிறப்பு தரிசனம் மேற் கொண்டவர்கள் முக்கியஸ்தர்கள் செல்லும் வரிசையில் சென்றனர். அவர்களுக்கு அத்திவரதர் பெருவிழா என அச்சிடப்பட்ட கைப்பையுடன் சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது.
     

  • Thirupathy Ezhumalayan Hundiyal Kanikkai

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் மாதம் 24. 66 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து 100 கோடி ரூபாய் உண்டியலில் காணிக்கை செலுத்தினர். 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டு 2018 ஆண்டு ஜூன் மாதம் 24.01 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து  91.81 கோடி ரூபாய் உண்டியலில் காணிக்கை செலுத்தினர். 

    இந்த ஆண்டு ஜூன் மாதம் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை 24.66 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து 100.37 கோடி ரூபாய் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். 1.13 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

    கடந்த ஆண்டு 11.09 லட்சம் பக்தர்கள் மொட்டை அடித்து தலை முடி காணிக்கை செலுத்திய நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் 12.88 லட்சம் பக்தர்கள் மொட்டை அடித்து தலை முடி காணிக்கை செலுத்தியதாக மக்கள் தொடர்பு அலுவலர் ரவி தெரிவித்துள்ளார்.

  • Pattu Sennira Atthi Varadha

    அத்தி வரதர் சக்ர வாரத்தையொட்டி பட்டு செந்நிற ஆடையில் மல்லி மற்றும் முல்லை பூ அலங்காரத்துடன் காட்சியளித்தார்.

    உலக புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் வைபவ திருவிழா கடந்த திங்கள்கிழமை துவங்கியது கடந்த 5 நாட்களில் 3.5 லட்சம் பக்தர்கள் அதித் வரதரை தரிசனம் செய்துள்ளனர்

    அத்தி வரதரை தமிழகம் மட்டும் இல்லாமல் வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து தினமும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் 2 கிலோ மீட்டர் தூரம் காத்திருந்து 3 மணி நேரத்திற்க்கு பிறகே  தரிசனம் செய்து வருகின்றனர்

    இன்று 5 வது நாளில் அத்தி வரதர் சுக்ரவாரம் பெருமாளுக்கு உகந்த நாள் செந்நிற ஆடையுடன் மல்லி மற்றும் முல்லை பூ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்.

    கடந்த 4 நாட்களில் இதுவரை 3.5 லட்சம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர் அத்தி வரதர் திருவிழாவை முன்னிட்டு 2600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
     

  • Rasi palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – அமைதி
    ரிஷபம் – பெருமை 
    மிதுனம் – சிக்கல்
    கடனம் – இரக்கம் 
    சிம்மம் – நற்செயல்
    கன்னி –  பொறுமை 
    துலாம் –  அன்பு
    விருச்சிகம் – மகிழ்ச்சி
    தனுசு – வெற்றி
    மகரம் –   ஊக்கம் 
    கும்பம் – ஆதரவி  
    மீனம் – இன்பம் 
    சந்திராஷ்டமம்    – திருவோணம்
     

  • July 5 Indraya nalla neram

    ஜூலை 5 – இன்றைய நல்ல நேரம்
    விகாரி வருடம் – ஆனி 20
    05-ஜூலை-2019 வெள்ளி 
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    திரிதியை          
    திதி நேரம்    :    திரிதியை    இ    7.18
    நட்சத்திரம்    :    ஆயில்யம்    இ    3.55
    யோகம்    :    மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    திருவோணம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • problems in family

    சிவாலயங்களில் மூலவருக்குப் பின்புறத்தில் கோஷ்ட மூர்த்தியாய் அருள்புரியம் அர்த்தநாரீஸ்வரருக்கு வெள்ளிக் கிழமை, பஞ்சமி திதி நாட்களில் தேங்காய் எண்ணெயால் ஐந்து எண்ணிக்கையில் (5, 14, 23) அகல் விளக்கு தீபங்களை ஏற்றி வந்தால் கணவன்,  மனைவி இடையே உள்ள மனக் குறைகள் நீங்கி குடும்ப ஒற்றுமை பெருகும்.

    ஞாயிற்றுக் கிழமை ராகு கால நேரத்தில் (மாலை 4,30 முதல் 6 மணி வரை) தூங்கு மூஞ்சி மரத்தை வலம் வந்து வணங்கி வந்தால் காரணமில்லாமல் தூக்கம் வராமல் அவஸ்தைப் படுபவர்களுக்கு சுகமான நித்திரை கிட்டும்.

    மனிதன் உயிர் வாழ உணவைப் போல பெரியவர்களின் ஆசீர்வாதமும் அவசியமானதே. கூட்டுக் குடும்ப முறை மறைந்து பெரியவர்களுடன்  வாழ்வது அரிதாகி விட்டதால், 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அரசு, ஆல், வேம்பு, வன்னி போன்ற மரங்களை அவ்வப்போது வலம் வந்து வணங்குவதால் ஆயுள் விருத்தியாகும்.
     

  • Muruga Peruman 16 vagai kolam

    1. ஞானசக்திதரர் கோலம் : இந்த கோலத்தில் இருக்கும் முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் ஹஞானசக்திதரர்’ திருக்கோலமாகும்.

    2.கந்தசாமி கோலம்  : கந்தசாமி கோலத்தில் இருக்கும் முருக பெருமானை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை இருக்கும் ஆண்டவர் கந்தசாமி திருவடிவ கோலத்தில் இருக்கிறார்.

    3. ஆறுமுக தேவசேனாபதி கோலம்  : இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும். சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது.

    4. சுப்பிரமணியர் கோலம்  : இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை அளிக்கக் கூடியவர். நாகை மாவட்டத்திலுள்ள  திருவிடைகழி முருகன் கோயில் மூலவர் சுப்பிரமண்யர் ஆவார்.

    5. கஜவாகனர் கோலம்  : இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும். திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோயில் கீழைக் கோபுரம் ஆகிய இடங்களில் யானை மீதிருக்கும் இவரது திருவுருவம் உள்ளது.

    6.சரவணபவர் கோலம் : தன்னை வழிபடும் அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர். சென்னிமலை, திருப்போரூர் ஆகிய இடங்களில் இவரது திருவடிவம் இருக்கிறது.

    7. கார்த்திகேயர் கோலம் : இவரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத் தரும். கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோயிலிலும், தாராசுரம் ஐராவதீச்வரர் கோயிலிலும் கார்த்திகேயர் திருவுருவம் உள்ளது.

    8. குமாரசாமி கோலம்  : இவரை வழிபட்டால் ஆணவம் அடியோடு நீங்கும். நாகர்கோவில் அருகில் இருக்கும் குமாரகோவிலில் இவரது திருவடிவம் உண்டு. கங்கை கொண்ட சோழபுரத்தில் இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது.

    9. சண்முகர் கோலம்  : இவரை வழிபட்டால் சிவசக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும். திருச்செந்தூரில் உள்ள முருகன் அருட்கோலம் சண்முகர் திருவடிவமாகும்.

    10. தாரகாரி கோலம் : ஹதாரகாசுரன்’ என்னும் அசுரனை அழித்ததால் முருகப்பெருமான் இத்திரு நாமத்தைப் பெற்றார். உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது. விராலி மலையில் உள்ள முருகன் கோயிலில் தாரகாரி இருக்கிறார்.

    11. சேனானி கோலம் : இவரை வழிபட்டால் பகை அழியும். போட்டிகளில் வெற்றிகிடைக்கும். பொறாமை நீங்கும். தேவிகாபுரம் ஆலயத்தில் சேனானி திருவுருவம் இருக்கிறது.

    12. பிரம்மசாஸ்தா கோலம் : இவரை வழிபட்டால் எல்லா வகைவித்தைகளிலும் தேர்ச்சி பெறலாம். சகலவித கலையறிவும் அதிகரிக்கும். கல்வியில் தேர்ச்சி கிட்டும். காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம் ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில் பிரம்மசாஸ்தா திருக்கோலம் உள்ளது.

    13. வள்ளிகல்யாணசுந்தரர் கோலம் : இவரை வழிபட்டால் திருமணத்தடைகள் விரைவில் அகலும், கன்னிப் பெண்களுக்குக் கல்யாண பாக்கியம் கிடைக்கும். திருப்போரூர் முருகன் கோயில் தூண் ஒன்றில் இவர் திருவுருவம் இருக்கிறது.

    14. பாலசுவாமி கோலம் : இவர், உடல் ஊனங்களையும், குறைகளையும் அகற்றும் தெய்வம். இவரை வழிபடுபவர்களுக்கு உடல் நலம் கிடைக்கும். திருச்செந்தூர்,  திருக்கண்டிர், ஆண்டாள் கும்பம் கோயில்களில் பாலசுவாமி திருவுருவம் இருக்கிறது.

    15. சிரவுபஞ்சபேதனர் கோலம் : இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் அகலும். திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளி பள்ளி ஆகிய இடங்களில்இவரது திருவுருவம் உண்டு.

    16. சிகிவாகனர் கோலம் : மயில் மீது இருக்கும் முருகன் அருட்கோலம் இது. ஆலயம் பலவற்றில் அழகுற அமையும் திருவடிவம். தன்னை வழிபடுபவர்களுக்கு இன்பமான வாழ்வு அளிப்பவர்.