Blog

  • 1000 KG Milagai vatral yagam

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் இருக்கும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலக நலன் கருதி வரும் ஆடி அமாவாசை அன்று 1000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு மஹா காளி யாகம் நடத்தப்பட இருக்கிறது. 

    ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், ஆக்ஞைப்படி  வருகிற 31.07.2019 புதன்கிழமை காலை 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 1000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு காலத்தை வென்று தீமைகளை அழித்து வெற்றிகளை தரும் சரப சூலினி ப்ரத்யங்கிரா மஹா காளி யாகத்துடன், அஷ்டபைரவர் யாகங்கள் நடைபெற உள்ளது.

    காளி, காலத்திற்கும், கால மாறுதல்களுக்கும் அதிபதி ஆவாள். ஏவல், பில்லி சூனியம், செய்வினை இவற்றிற்கும் காரணம் இவளே. இவற்றை போக்குவதும், நீக்குவதும் இவளே. காளி ஞானத்தின் வடிவம். அறியாமை எனும் இருளை போக்குபவள். தன்னை அண்டியவர்களின் பயத்தினை போக்கி அனைத்து துன்பங்களிலிருந்தும் காப்பவள். கருணையின் வடிவம். 

    இவளின் அருள் இருந்தால் காலத்தையும், மரணத்தையும் வெல்ல முடியும். ஞானத்தையும், செல்வத்தையும், கல்வியையும், அளிப்பவள் இவளே. இவள் துணிவை தருபவள், பயத்தை போக்குபவள், நோய்களை போக்குபவள், மரணமில்லா பெருவாழ்வு தருபவள். 

    இந்த யாகங்கள் துஷ்ட சக்திகள் அகலவும், கலைத்துறையில் சிறந்து விளங்கவும், உயர் பதவி கிடைக்கவும், கடன் தொல்லைகள் நீங்கவும், வியாபாரம் மற்றும் தொழிலில் உள்ள தடைகள் நீங்கவும், தடைப்பட்ட திருமணம் நடைபெறவும், குழந்தை பாக்கியம் பெறவும், கல்வியில் மேன்மை அடையவும், சொந்த வீடு, வாசல், நன்மைகள் அமையவும், சரப சூலினி ப்ரத்யங்கிரா மஹா காளி யாகத்துடன் அஷ்டபைரவர் யாகம் நடைபெற உள்ளது.

    மேலும் இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் நெய், தேன், மூலிகை பொருட்கள், பழங்கள், பட்டு வஸ்திரங்கள், ஆசார்ய வஸ்திரங்கள், மளிகை பொருட்கள், புஷ்பங்கள், நிவேதன பொருட்கள், மிளகாய் வற்றல், சிகப்பு நிற புஷ்பங்கள், சிகப்பு நிற பழங்கள், சமித்துக்கள், போன்றவை அளித்து கைங்கரியத்தில் பங்குபெற்று இறையருளுடன் குருவருள் பெற்று மகிழ்ச்சியுடன் நல்வாழ்வு வாழலாம். 
     

  • Rasi palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – சிந்தனை 
    ரிஷபம் – பாராட்டு
    மிதுனம் – விவேகம்  
    கடனம் – சோர்வு
    சிம்மம் – சிக்கல்
    கன்னி –  மகிழ்ச்சி
    துலாம் –  அச்சம் 
    விருச்சிகம் – பகை
    தனுசு – சாந்தம் 
    மகரம் –   அனுகூலம் 
    கும்பம் – இன்பம் 
    மீனம் – கவலை 
    சந்திராஷ்டமம்    – உத்திரட்டாதி, ரேவதி
     

  • July 10 Indraya Naal Eppadi

    ஜூலை 10 – ஸ்ரீவீரராகவப் பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் 
    விகாரி வருடம் – ஆனி 25
    10-ஜூலை-2019 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
     குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    நவமி          
    திதி நேரம்    :    அஷ்டமி    கா    7.42
    நட்சத்திரம்    :    சித்திரை    இ    8.28
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திரட்டாதி,ரேவதி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Siva rathiri 4 kala poojai

    விரதங்களிலெல்லாம் மேலான விரதம் சிவராத்திரி. இந்த விரதமிருந்து தேவாதிதேவர்களும், முனிவர்களும், மனிதர்களும் ஏன் விலங்கினங்கள் கூட மிகப்பெரிய வரங்களைப் பெற்றார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. 

    அன்னை பார்வதி சாபம் நீங்கியது, இந்திரன் பதவி பெற்றது, கணபதி கணங்களின் முதல்வரானது, ஸ்ரீராமபிரான் தோஷம் நீங்கியது, முசுகுந்த சக்கரவர்த்தி குரங்கு வடிவிலிருந்து மீண்டு மிகப்பெரிய அரசரானது என எல்லாமே இந்த சிவராத்திரி விரதத்தினால்தான் நடைபெற்றது. 

    சிவராத்திரி அன்று கண்விழித்து நான்கு கால பூஜை செய்வோர் எவருக்கும் இனி பிறப்பே இல்லை என்பதும் சகல பாவங்களையும் ஒழித்து முக்தி பெறுவார்கள் என்பதும் புராணங்கள் சொல்லும் நம்பிக்கை. ஈ, எறும்பு தொடங்கி திருமால் வரை இந்த சிவராத்திரியின் மகிமையை உணர்ந்தே பல்வேறு ஆலயங்களில் சிவபூஜையினை இந்த நாளில் மேற்கொண்டார்கள். 

    அப்படி ஒரு சிறப்பான மகா சிவராத்திரி நாளில் அறியாமல்தான் செய்த பூஜையின் பலனால் வேடன் ஒருவன் பெருமைபெற்ற விதம் சுவாரஸ்யமானது. 

    மகா சிவராத்திரி

    அயோத்தியை தசரத சக்கரவர்த்தி ஆட்சி செய்துகொண்டிருந்த காலமது. அயோத்தியின் எல்லையிலிருந்த அடர்ந்த வனத்தில் வாழ்ந்து கொண்டிருந்தான் வியாதன் என்ற வேடன். ஒருநாள் பகல்வேளையில் தொடங்கிய அவனது வேட்டை இருட்டிய பிறகும்கூட முடிவடையவில்லை. 

    ஒரு சின்னஞ்சிறு முயல் கூட அன்று அவனுக்குக் கிடைக்கவில்லை. பசித்திருக்கும் தனது குடும்பத்தை எண்ண எண்ண அவனுக்கு ஆத்திரம் மிகுதியானது. கண்சிமிட்டும் நேரத்துக்குள் ஒரு சிறுத்தையைக்கூட தைத்து விடும் அவனது வில்லாற்றலுக்கு அந்த நாள் சவால் விடுவதைப்போல இருந்தது. சூரியன் மயங்கி மேற்கு திசையில் விழுந்துவிட்டான். 

    வியாதனின் கண்கள் பிரகாசமாகி விலங்குகளை நோக்கிச் சென்றன. எதிரே இருந்தால் விலங்குகள் ஓடிவிடும் என்று எண்ணி தாகம் தீர்க்க ஒரு குடுவையில் நீரை எடுத்துக்கொண்டு ஒரு வில்வ மரத்தின் மீது ஏறி அமர்ந்துகொண்டான். சற்று நேரத்துக்குப் பிறகு சலசலக்கும் ஒலிக்கிடையே ஒரு மானைக் கண்டுவிட்டான் வியாதன். 

    ஆர்வம் பெருகி அதை நோக்கி அம்பை குறிவைக்கும் நேரத்தில் அந்த மான் அவனிடம் கெஞ்சிப்பேசத் தொடங்கியது. 'அய்யா குட்டி ஈன்ற என் மனைவிக்கு உணவு எடுத்துச்செல்ல வந்துள்ளேன், தயவு செய்து என் இருப்பிடம் சென்று இந்தத் தழைகளைக் கொடுத்துவிட்டு வரும்வரை என்னைக் கொல்லாதீர்கள்' என்று மன்றாடியது.  
     

  • Venkatesa perumal kumbabishegam

    திருத்தணி  அருகேள உள்ள  வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு   வழிபட்டனர். திருவள்ளூர் மாவட்டம்  திருத்தணி அடுத்த கொல்லகுப்பம் கிராமத்தில் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது கோயிலின் திருப்பணிகள் முடிந்து  கும்பாபிஷேகம் நடந்தது.

    இதற்காக கோவில் வளாகத்தில் 5 யாகசாலைகள் 1008 கலசங்கள் வைத்து நான்கு கால பூஜைகள் நடைபெற்றது  காலை 9 மணிக்கு கலச ஊர்வலம் நடந்தது தொடர்ந்து கோயில் கோபுரத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது நண்பகல் 11 மணிக்கு வெங்கடேச பெருமாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது இதில் திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர் இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர் .

  • Thirupathy Dharshan

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 16 ஆம் தேதி 5 மணி நேரம் மட்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அன்றைய தினம் சர்வ தரிசனம் மற்றும் திவ்ய தரிசன டிக்கெட்டுக்கள் வழங்கப்படுவது ரத்து செய்யப்படுகிறது தேவஸ்தானம் அறிவிப்பு

    17ஆம் தேதி அதிகாலை 1.31 மணி முதல் 4. 29 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதையொட்டி சந்திர கிரகணம் ஏற்படும் ஆறு மணி நேரத்திற்கு முன்னதாக ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்பட உள்ளது. 

    மேலும் 17 ஆம் தேதி ஆனிவார ஸ்தானம் எனப்படும் சம்பிரதாய முறைப்படி பழைய கணக்குகள் முடிக்கப்பட்டு புதிய கணக்கு தொடங்கும் உற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி 16 ஆம் தேதி காலை 6 மணி முதல் 11 மணிவரை கோவில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. எனவே  12 மணிக்கு பிறகே பக்தர்கள் தரிசனத்திற்கு அன்று அனுமதிக்கப்பட உள்ளனர். 

    மேலும் சந்திர கிரகணத்தையொட்டி அன்று மாலை 6 மணியுடன் கோவில் நடை அடைக்கப்பட உள்ளது. எனவே 16ம் தேதி மதியம் 12 மணி முதல் ஐந்து மணி நேரம் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். எனவே  அன்று ஆதார் அட்டை மூலமாக வழங்கக்கூடிய சர்வ தரிசனம் டிக்கெட் மற்றும் மலைப்பாதையில் நடந்து வரக்கூடிய பக்தர்களுக்கான திவ்ய தரிசனம் டிக்கெட் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. 

    17 ஆம் தேதி சந்திர கிரகணம் நிறைவடைந்த பிறகு 5 மணிக்கு கோவில் கதவுகள் திறக்கப்பட்டு  கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை ,கொலுவு ஆகியவை ஏகாந்தமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் நடத்தப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து ஆனி வார ஆஸ்தான சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு மதியம் 12 மணிக்கு பிறகு தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப் பட உள்ளதாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – பொறுமை 
    ரிஷபம் – ஆக்கம் 
    மிதுனம் – நன்மை  
    கடனம் – போட்டி
    சிம்மம் – முயற்சி
    கன்னி –  உழைப்பு 
    துலாம் –  வெற்றி
    விருச்சிகம் – கவலை 
    தனுசு – கவனம் 
    மகரம் –   சுகம் 
    கும்பம் – தடங்கல்
    மீனம் – அனுகூலம் 
    சந்திராஷ்டமம்    – பூரட்டாதி, உத்திரட்டாதி
     

  • July 9 Indraya Naal Eppadi

    ஜூலை 9 – இன்றைய நல்ல நேரம்
    விகாரி வருடம் – ஆனி 24
    09-ஜூலை-2019 செவ்வாய்
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    அஷ்டமி          
    திதி நேரம்    :    சப்தமி    கா    9.44
    நட்சத்திரம்    :    அஸ்தம்    இ    9.38
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    : பூரட்டாதி,உத்திரட்டாதி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Chidamparam Natarajar thirumanjanam

    சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன திருவிழா தரிசனம் நடந்தது. நடராஜர் சிவகாமசுந்தரி சமேதமாக நடனமாடியபடியே பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    பூலோக கைலாயமாகவும், பஞ்சபூத தலங்களில் ஆகாய ஸ்தலமாகவும் விளங்குவது சிதம்பரம் நடராஜர் கோயில். பிரசித்தி பெற்ற இந்த கோயிலின் இந்த ஆண்டிற்கான ஆனித் திருமஞ்சன தரிசன விழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

    இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று நடந்த  தேரோட்டத்தில் நடராஜர், சிவகாமசுந்தரி உள்ளிட்ட 5 சாமிகள் தனித்தனி தேர்களில் நகர வீதிகளை வலம் வந்தது. பின்னர் நேற்று இரவு தேரிலிருந்து சாமி இறக்கப்பட்டு கோயிலுக்குள் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டது..

    இன்று அதிகாலையில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு மகாஅபிஷேகம் நடந்தது. பின்னர் திருவாபரண அலங்காரம், லட்சார்ச்சனை உள்ளிட்ட பூஜை மற்றும் அலங்காரங்களைத் தொடர்ந்து சித்சபையில் ரகசிய பூஜையும் நடந்தது. 

    இதையடுத்து இன்று மாலையில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா நடைபெற்றது. அப்போது ஆனந்த நடராஜ மூர்த்தி, சிவகாமசுந்தரி சமேதமாக நடனமாடியபடியே ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து கருவறைக்கு சென்றது. இந்நிகழ்ச்சியின்போது பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நடராஜர், சிவகாமசுந்தரியை பய பக்தியுடன் தரிசித்தனர். இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.

  • Thirupathy Govindaraja swamyku pushpa yagam

    திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 3 டன் மலர்களால் உற்சவமூர்த்திகளுக்கு புஷ்ப யாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

    திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர புஷ்பயாகத்தையொட்டி நேற்று  அங்குரார்ப்பணம் நடந்தது.  இதில்  உற்சவமூர்த்தி சேனாதிபதி நான்கு மாடவீதியில் பவனிவந்தார். அதைதொடர்ந்து சிறப்பு யாக சாலை அமைக்கப்பட்டு யாகம் நடந்தது. 

    புஷ்ப யாகத்தையொட்டி, காலை உற்சவமூர்த்திகளான ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்தராஜ சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர் கொண்டு திருமஞ்சனம் நடந்தது. இதையடுத்து ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் இருந்து கூடையில் வைக்கப்பட்ட மலர்கள்  செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தலைமையில் அதிகாரிகள் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். 

    பின்னர் மதியம் 1 மணி முதல் 4 மணி வரை துளசி, சாமந்தி, சம்பங்கி, ரோஜா, மருவம், தாழம்பூ உள்ளிட்ட 12  ரகமான 3 டன் மலர்களால் உற்சவமூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜ சுவாமிக்கு புஷ்ப யாகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

    மாலை 6 மணிக்கு உற்சவமூர்த்திகள் நான்குமாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். புஷ்ப யாகத்திற்காக தமிழகம் ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா மாநிலங்களில் இருந்து  பக்தர்கள் நன்கொடையாக மலர்களை வழங்கினர். இதில் பங்கேற்ற செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் செய்தியாளர்களிடம் கூறுகையில் ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யக்கூடிய பக்தர்களில் 25% என தினந்தோறும் 10 ஆயிரம் முதல் 24 ஆயிரம் பக்தர்கள் வரை கோவிந்தராஜ சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

    அதற்கேற்ப பக்தர்களுக்கு தேவையான வசதிகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் மேம்படுத்தி வருகிறது. கோவிந்தராஜா சுவாமி கோவிலில் கடந்த மாதம்  11ம் தேதி முதல் 19ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்றது. இந்த பிரம்மோற்சவத்தில் தெரிந்தோ தெரியாமலோ அர்ச்சகர்கள், பணியாளர்கள், பக்தர்கள் மூலமாக ஏற்பட்ட தோஷங்களுக்கு பரிகாரமாக இந்த புஷ்ப யாகம் நடத்தப்பட்டது என அவர் தெரிவித்தார்.