Blog

  • July 15 subamugurthanaal

    ஜூலை 15 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
    விகாரி வருடம் – ஆனி 30
     subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    15-ஜூலை-2019 திங்கள்  துல்ஹாதா11
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 6.00 – 7.30)
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    ராகு    :    7.30 – 9.00    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    சதுர்த்தசி          
    திதி நேரம்    :    சதுர்த்தசி    இ    2.42
    நட்சத்திரம்    :    மூலம்    இ    8.28
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரோகிணி,மிருகசீரிடம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Nellaiappar Car Fest

    நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம், பக்தர்களின் சிவசிவா கோஷத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றாக நெல்லையில் அமைந்து இருக்கிறது நெல்லையப்பர் கோவில். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனித்திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.

    அந்த வகையில் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் ஆகிய சுவாமிகளுக்கு 5 தேர்கள் உள்ளன. இந்த ஆண்டுக்கான ஆனித்திருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், வீதி உலா வருதல், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிவசிவா கோஷம் எழுப்பியபடி, பக்தர்கள் தேர் வடத்தை பிடித்திழுத்தனர். 

    விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்சோதி, மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன், ஆய்வாளர் கண்ணன், தக்கார் சங்கர், நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள். தேரோட்டத்தையொட்டி போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
     

  • Thirupathy Rush

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியது. சாமி தரிசனம் செய்வதற்காக வைகுண்டத்தில் உள்ள 31 அறைகளும் நிரம்பி இன்று காலை 6 மணி நிலவரப்படி செங்குமிட்டா காட்டேஜ் வரை உள்ள வரிசையில் பக்தர்கள் மூன்று கிலோமீட்டர் தூரம் காத்திருந்தனர். 

    நேற்று இரவு திருமலையில் பலத்த மழை பெய்த நிலையில் கொட்டும் மழையிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் வெளியே கூட செல்ல முடியாத நிலையில் மழையிலேயே வரிசையில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் காத்திருந்தனர்.  சனிக்கிழமையான நேற்று காலை சுப்ரபாத சேவை முதல் இரவு 12 மணி வரை 90 ஆயிரத்து 25 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

    நேற்று எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கை 3.23 கோடி ரூபாய் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். இன்று சாமி தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு இலவச தரிசனத்தில் 24 மணி நேரமும், 300 ரூபாய் டிக்கெட் ஆன்லைன் மூலம் பெற்ற பக்தர்களுக்கு நான்கு மணி நேரமும் , ஆதார் அடையாள அட்டையின் மூலம்  சர்வ தரிசனம்  டிக்கெட் பெற்ற பக்தர்கள் மற்றும் மலைப்பாதையில் பாதயாத்திரையாக வந்து திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஏழு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
     

  • Thirupathy VIP Dharshan Issue

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது நடைமுறையில் உள்ள மூன்று விதமான விஐபி தரிசன முறையை ரத்து செய்யப்படும் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார். 

    இதனால் அதிகமுறை சுவாமி தரிசனத்திற்கு வரக்கூடிய முக்கிய பிரமுகர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் ஆண்டில் ஒருமுறை மட்டுமே விஐபி தரிசனத்தில் செல்லும் விதமாக செய்யப்படும் எனவும் அவர் கூறி இருக்கிறார். 

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதியில் செயல்பட்டு வரக்கூடிய பர்டு மருத்துவமனையை அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி , திருப்பதி புறநகர் மேம்பாட்டு ஆணைய தலைவர் செவி ரெட்டி பாஸ்கர் ரெட்டியுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.  பின்னர் அங்கு சிகிச்சை பெற்று வரக்கூடிய நோயாளிகளிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தார். 

    இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி பர்டு மருத்துவமனையில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் வட இந்தியாவிலிருந்து உத்தரப்பிரதேசம் , ராஜஸ்தான், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து அதிக அளவில் நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். 

    இங்கு சிகிச்சை பெறக் கூடிய நோயாளிகளுக்கும் அவர்களுடன் வரக்கூடிய உறவினர்களுக்கும் எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும். சுமார் 4 கோடியில் 40 அறைகள் கூடுதலாக கட்டப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார். 

    அறுவை சிகிச்சை மையத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அறங்காவலர் குழு கூட்டத்தில் இதற்கான ஆலோசனை செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். 

    இந்த மருத்துவமனையை சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும். கடந்த வாரம் ஸ்ரீவாரி சேவா சதன் கட்டிடத்தில் இருந்து கால் தவறி கீழே விழுந்து சிவிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிரிழந்த தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீவாரி சேவா  தன்னார்வலர் குடும்பத்தினரை தேவஸ்தானம் சார்பில் உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கி அந்த குடும்பத்திற்கு துணையாக தேவஸ்தான நிர்வாகம் இருக்கும் என்றார் அவர். 

    மேலும், ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் முக்கிய பிரமுகர்களில் எல் 1, எல்2,  எல் 3 என மூன்று ரகமாக பிரித்து தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் பல்வேறு முறைகேடுகள் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் இந்த மூன்று தரிசன முறையும் ரத்து செய்யப்படும் என்று சுப்பாரெட்டி கூறியுள்ளார்.

    முக்கிய பிரமுகர்களுக்கு அவரவர் பதவி மற்றும் தகுதிக்கேற்ப எவ்வாறு தரிசனம் செய்து வைப்பது என்பது குறித்து அறங்காவலர் குழு கூட்டத்தில் ஆலோசித்து சாதாரண பக்தர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நல்ல முடிவை விரைவில்  எடுக்கப்படும். 

    ஒரே ஆண்டில் அதிக முறை தரிசனத்திற்கு வரக்கூடிய முக்கிய பிரமுகர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆண்டில் ஒரு முறை மட்டுமே தரிசனத்திற்கு வரும் விதமாக செய்யப்படும் என அவர் தெரிவித்தார். 

    ஏற்கனவே  துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தபோது முக்கிய பிரமுகர்கள் ஆண்டில் ஒரு முறை மட்டுமே சாமி தரிசனத்திற்கு வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இதனால் சாதாரண பக்தர்கள் சிரமம் அடைவதைத் தவிர்க்க முடியும் என அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது .
     

  • Karaikaal Ammayar thirukalyanam

    பரமதத்தருக்கும் – புனித வதியார் என்கிற காரைக்காலம்மையாருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏராளமானோ பங்கு பெற்று சாமி தரிசனம் செய்துள்ளனர்…..வீடியோ காட்சி…. 

  • Rasi palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – அமைதி 
    ரிஷபம் – புகழ்
    மிதுனம் – நன்மை 
    கடனம் – ஆதாயம் 
    சிம்மம் – அன்பு 
    கன்னி –  ஊக்கம்   
    துலாம் –  பொறுமை 
    விருச்சிகம் – வெற்றி 
    தனுசு – பகை 
    மகரம் –   பாராட்டு
    கும்பம் – அச்சம் 
    மீனம் – செலவு 
    சந்திராஷ்டமம்    – கார்த்திகை,ரோகிணி
     

  • July 14 Pradhosham

    ஜூலை 14 – பிரதோஷம்
    விகாரி வருடம் – ஆனி 29
     பிரதோஷம் 
    14-ஜூலை-2019 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    திரையோதசி          
    திதி நேரம்    :    திரையோதசி    இ    2.28
    நட்சத்திரம்    :    கேட்டை    இ    7.33
    யோகம்    :    மரண-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    கார்த்திகை,ரோகிணி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • July 13 Indraya Naal Eppadi

    ஜூலை 13 –  திருநள்ளாறு சனிபகவான் ஆராதனை
    விகாரி வருடம் – ஆனி 28
    கண்டதேவி, கானாடுகாத்தானில் சிவன் தேர் 
    13-ஜூலை-2019 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    துவாதசி          
    திதி நேரம்    :    துவாதசி    இ    2.35
    நட்சத்திரம்    :    அனுஷம்    இ    7.00
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பரணி,கார்த்திகை
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – பக்தி
    ரிஷபம் – ஆதரவு
    மிதுனம் – புகழ்
    கடனம் – சோர்வு
    சிம்மம் – உற்சாகம் 
    கன்னி –  நன்மை  
    துலாம் –  நற்செயல் 
    விருச்சிகம் – கவனம் 
    தனுசு – பாசம் 
    மகரம் –   மகிழ்ச்சி 
    கும்பம் – வெற்றி
    மீனம் – இன்பம் 
    சந்திராஷ்டமம்    – பரணி,கார்த்திகை
     

  • Thirupathiyil July 16 Dharshan

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சந்திர கிரகணத்தையொட்டி 16ஆம் தேதி பல சிறப்பு தரிசனங்களைத் தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்துள்ளது. 

    இந்த ஆண்டின் சந்திர கிரகணம் 17 ஆம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது.இந்நிலையில் ஏழுமலையான் கோவிலில் 16 ஆம் தேதி தேதி காலை 6 மணி முதல் 12 மணி வரை ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் என்னும் கோவிலை முழுவதும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. 

    மேலும் அன்று இரவு சந்திர கிரகணத்தையொட்டி இரவு 7 மணி முதல் 17-ஆம் தேதி காலை 5 மணி வரை கோவில் கதவுகள்  அடைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஏழுமலையான் கோவிலில்  மாற்றுத்திறனாளிகள், மற்றும் மூத்த குடிமக்கள் , சுபதம் நுழைவு வாயில் வழியாக அனுமதிக்கக் கூடிய ஒரு வயது குழந்தையுடன் பெற்றோர்கள் செல்லும் தரிசனம்,  17-ஆம் தேதி அதிகாலை நடைபெறக்கூடிய அங்கப் பிரதட்சனை சேவை ஆகியவை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. மேலும் 16 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் ஐந்து மணி நேரம் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளதால் அன்றைய தினம் ஆதார் அடையாள அட்டையின் மூலமாக வழங்கக் கூடிய சர்வ தரிசனம் டிக்கெட் மற்றும் மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கான திவ்ய தரிசனம் டிக்கெட் ஆகியவையும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இலவச தரிசனத்தில் மட்டும் அந்த ஐந்து மணிநேரத்திற்கு மட்டும்  பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.