இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – வெற்றி
ரிஷபம் – ஆதரவு
மிதுனம் – தனம்
கடனம் – நிம்மதி
சிம்மம் – கவனம்
கன்னி – உற்சாகம்
துலாம் – பிரீதி
விருச்சிகம் – ஆக்கம்
தனுசு – பொறுமை
மகரம் – அன்பு
கும்பம் – போட்டி
மீனம் – அச்சம்
சந்திராஷ்டமம் – திருவாதிரை, புனர்பூசம்
Blog
-
Rasi palan
-
July 17 Aadi 1
ஜூலை 17 – ஆடி 1 – தட்சிணாயன புண்ணியகாலம்
விகாரி வருடம் – ஆடி 1
தட்சிணாயன புண்ணியகாலம்
17-ஜூலை-2019 புதன்
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : சூன்ய
திதி நேரம் : பிரதமை அ.கா 4.51
நட்சத்திரம் : உத்திராடம் இ 11.40
யோகம் : அமிர்த-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : திருவாதிரை,புனர்பூசம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
Ayyanar Koil kumbabishegam
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள அவனியாபுரத்தில் 300 ஆண்டுகால வரலாற்று சிறப்புமிக்க அவனியாபுரம் அய்யனார் திருக்கோவில் முப்பதாவது மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் அவனியாபுரம் அயன் பாப்பாக்குடி கண்மாய் கரையில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ துர்க்காருடைய அய்யனார் திருக்கோயில். 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க இத்திருக்கோயிலில் அருள்மிகு ஸ்ரீ அய்யனார் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி இருப்பது தமிழ்நாட்டிலேயே இங்கு தான்.
திருக்கோவிலின் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த சனிக்கிழமை கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜையுடன் கும்பாபிஷேக பூஜை துவங்கியது.
அதன் முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க வானத்தில் கருடன் வட்டமிட சிவாச்சாரியார்கள் புனித கும்பத்திலிருந்து கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
இவ்விழாவில் அவனியாபுரம், பெருங்குடி, வில்லாபுரம். வல்லானந்தபுரம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக வந்து குடும்பத்துடன் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
-
Thirupathy Azhvar thirumanjanam
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சம்பிரதாய முறைப்படி கணக்கு சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளதால் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் கடைசி நாள் சம்பிரதாய முறைப்படி வருடாந்திர கணக்கு முடிக்கப்பட்டு ஆடி 1 ஆம் தேதி புதிய கணக்கு தொடங்கி பழைய கணக்குகள் சுவாமிக்கு சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி நாளை ஏழுமலையான் கோவிலில் ஆனி வார ஆஸ்தானம் நடைபெற உள்ளது.

ஏழுமலையான் கோவிலில் உகாதி ( தெலுங்கு வருடப்பிறப்பு ) , ஆனி வார ஆஸ்தானம் , வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய நான்கு உற்சவங்களுக்கு முன்னதாக வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில் கோவில் முழுவதும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும்.
இதனை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் என்று அழைக்கப்படுவது வழக்கம். அவ்வாறு நாளை ஆனிவார ஆஸ்தானம் நடைபெற உள்ளதால் இன்று காலை 6 மணி முதல் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை செயல் அலுவலர் தர்மா ரெட்டி ஆகியோர் தலைமையில் கோவிலில் உள்ள மூலவர் கருவறையில் பட்டு துணியால் மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம் வகுலமாதா சன்னதி, யோக நரசிம்மர் சன்னதி, வரதராஜ சுவாமி சன்னதி உள்ளிட்ட அனைத்து இடங்களும் தண்ணீரால் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றது.


இதையடுத்து பச்சைக்கற்பூரம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மூலிகைகள் கலவைகளை கொண்டு கோவில் சுவற்றில் உள்ள அனைத்து இடங்களிலும் தெளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மூலவர் சன்னதியில் அணிவிக்கப்பட்டிருந்த பட்டு வஸ்திரங்கள் அகற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து 11 மணிக்கு பிறகே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
-
Kaaraikaal ammyar
காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் பிச்சாண்டவர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு நடைபெற்ற மகா அபிஷேகம்.
கைலாசநாதர் கோயிலில் 3-ஆம் நாளான திங்கள்கிழமை பிச்சாண்டவர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் பல்வேறு வகையிலான திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, ஆராதனைகள் செய்யப்பட்டன.
நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். 4-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் கையில் மாங்கனி ஏந்தியவாறு பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது.
பக்தர்கள் மாங்கனியுடன் அர்ச்சனை செய்து, பட்டு வஸ்திரம் சாற்றி வழிபாடு நடத்துவர். அப்போது தெருவெங்கும் உள்ள வீடுகள், வணிக கட்டடங்களின் மேல் தளங்களில் இருந்தவாறு சப்பரம் நகர்ந்த பின்னர் பக்தர்களை நோக்கி மாங்கனிகள் இறைக்கப்படுகிறது.
-
Karaikkaal Maangani Thiruvizha
காரைக்கால் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பிச்சாண்டவர் வீதியுலா மற்றும் மாங்கனி இறைத்தல் விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
சிவபெருமானால் அம்மையே என்ற அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையார். 63 நாயன்மார்களில் ஒருவரான இவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கி, ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழாவாக காரைக்கால் கைலாசநாதர் கோயில் நிர்வாகத்தால் நடத்தப்படுகிறது.
காரைக்காலில் அம்மையாருக்கென தனிக்கோயில் அமைந்திருக்கிறது. கணவர் பரமதத்தர் தமக்காக அனுப்பிய மாங்கனியை சிவனடியாருக்கு படைத்த புனிவதியார், கணவர் வந்து சாப்பிடும்போது அனுப்பிய மாங்கனியை கேட்டபோது திகைத்த அவர், இறைவனால் கிடைக்கப்பெற்ற மாங்கனியை கணவருக்குப் பரிமாறினார். இதனால் பெருமைப்பட்டது மாங்கனி.
எனவே அம்மையாரை, மாங்கனியை மையமாக வைத்து இந்த திருவிழா விமரிசையாக நடத்தப்படுகிறது. காரைக்காலில் கடந்த ஆண்டு வரை 4 நாள்கள் திருவிழாவாக நடத்தப்பட்டு வந்த நிலையில், நிகழாண்டு முதல் 5 நாள்கள் திருவிழாவாக நீட்டிக்கப்பட்டு நடத்தப்படுகிறது.
-
Karaikaal Ammayar mangani thiruvizha
காரைக்காலம்மையார் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் இத்திருவிழா கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுவாக, பரமசிவன் அடியார் கோலத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தங்க கவச அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா வந்தபோது பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், மாங்கனிகளை இறைத்து சிவனை வழிபட்டனர்.
திருவிழாவையொட்டி, மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்கள் மட்டுமன்றி, வெளிநாடுகளில் இருந்தும் இத்திருவிழாவைக் காண ஏராளமானோர் வந்துள்ளனர்.
-
Thanjai thirukalyanam
உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில், பெருவுடையாருக்கும் _ பெரியநாயகி அம்மனுக்கும் திருக்கல்யாணம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவன் – பார்வதி திருக்கல்யாணத்தை பார்த்து பரவசம் அடைந்தனர்.
நாட்டிலேயே மாபெரும் கற்கோயிலாகத் திகழும், ஆயிரம் ஆண்டு கால பழமை வாய்ந்த தஞ்சாவூர் பெரிய கோயிலில், நேற்று இரவு பெருவுடையாருக்கும் – பெரியநாயகி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது
திருமண தோஷமுடையவர்கள் தோஷங்கள் நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறவும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உன்டாகவும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பக்தர்கள் பழங்கள், குங்குமம் ,மஞ்சள் கிழங்கு, திருமங்கல்ய சரடு, வெற்றிலை, சீவல் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கி திருக்கல்யாண வைபோகத்தில் ஆயிரக்கணக்காள பக்தர்கள் பங்கேற்றனர்.
-
Rasi palan
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – பக்தி
ரிஷபம் – நன்மை
மிதுனம் – சாந்தம்
கடனம் – நஷ்டம்
சிம்மம் – பெருமை
கன்னி – தொல்லை
துலாம் – உற்சாகம்
விருச்சிகம் – வரவு
தனுசு – ஆர்வம்
மகரம் – வெற்றி
கும்பம் – தடங்கல்
மீனம் – ஓய்வு
சந்திராஷ்டமம் – மிருகசீரிடம், திருவாதிரை
-
July 16 Chandra Graganam
ஜூலை 16 – சந்திர கிரகணம்
விகாரி வருடம் – ஆனி 31
பவுர்ணமி பவுர்ணமி
சந்திர கிரகணம்
16-ஜூலை-2019 செவ்வாய்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : பவுர்ணமி
திதி நேரம் : பவுர்ணமி இ 3.34
நட்சத்திரம் : பூராடம் இ 9.48
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம், திருவாதிரை
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்