ஜூலை 19 – ஆடி முதல் வெள்ளி
விகாரி வருடம் – ஆடி 3
19-ஜூலை-2019 வெள்ளி
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : திரிதியை
திதி நேரம் : துவிதியை கா 6.35
நட்சத்திரம் : அவிட்டம் அ.கா 4.22
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : ஆயில்யம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
Blog
-
July 19 Aadi Friday
-
Aadi Viradhangal Sirappugal
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
ஆடி மாதம்…. சூரியன் மிதுனராசியில் இருந்து கடக ராசிக்கு எப்போது வருகிறாரோ அந்தநாள் ஆடி மாதத்தின் முதல்நாள் ஆகும்.
ஆடி மாதத்தின் சிறப்புகள்:
ஆடி மாதம் சூரிய பகவான் கடக ராசியில் சஞ்சரிக்கிறார்.ஆடி மாதத்தில் சந்திரனின் ஆளுமை கூடுகிறது. அதனால் இந்த மாதம் சக்தியின் மாதமாக கருதப்படுகிறது.
ஆடி மாதத்தில் அம்மனுக்கு உகந்த கூழ், வேப்பிலை, எலுமிச்சை வைத்து படையல் செய்து வழிபட வேண்டும்.
ஆடி மாதத்தில்தான் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய பல முக்கியமான தினங்கள் இருக்கின்றன.
ஆடி செவ்வாய், வெள்ளி, ஆடிப்பதினெட்டு, ஆடிப்பூரம் ஆடிப்பௌர்ணமி, அடி அமாவாசை, ஆடி தபசு, ஆடி கிருத்திகை, ஆடிப் பெருக்கு என பல சிறப்பு வழிபாட்டு தினங்கள் உள்ளன.
ஆடி கிருத்திகை: இந்த வருடத்திற்கான ஆடி கிருத்திகை, ஆடி மாதம் 10-ம் தேதி ( 26 ஜூலை 2019) அன்று வருகிறது. இது முருகனுக்கு உகந்த தினம்.
ஆடி வாஸ்து பூஜை: ஆடி மாதம் 11-ம் தேதி ( 27 ஜூலை 2019) அன்று வாஸ்து பூஜை வருகிறது.
ஆடி அமாவாசை: ஆடி மாதம் 15-ம் தேதி ( 31 ஜூலை 2019) அன்று ஆடி அமாவாசை நிகழ்கிறது. இந்த நாள் நம் முன்னோர்களை வழிபட மிகவும் உகந்த நாள்.
ஆடி பதினெட்டு: ஆடி மாதம் 18-ம் தேதி (03 ஆகஸ்டு 2019) அன்று ஆடி 18 வருகிறது. ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ‘ஆடிப்பெருக்கு’ என்று கொண்டாடுகிறார்கள்.
கருட ஜெயந்தி: ஆடி மாதம் 20-ம் நாள் ஆகஸ்ட் 5-ம் தேதி ஆடி மாத வளர்பிறையில் நாக பஞ்சமி, கருட பஞ்சமி அனுஷ்டிக்கப்படுகிறது.
வரலட்சுமி விரதம்: ஆடி மாதம் 24-ம் தேதி (9-ம் ஆகஸ்ட் 2019) அன்று வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது.
ஆடி அறுதி: ஆடி மாதம் 32- ம் தேதி ( 17 ஆகஸ்ட் 2019) அன்று ஆடி அறுதி. ஆடி மாதத்தின் கடைசி நாளாகும். அன்றைய தினம்தான் விவசாயிகள் நாற்று நடுவார்கள்.
-
Sri Sri Ravi Shankarudan
ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் மகிழ்ச்சிக்கான வழிகளைக் கற்றுக்கொள்ளவிருக்கின்றனர் – இந்தியா முழுவதும் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.
" நீங்கள் செய்ய வேண்டியது மிக அதிகம், அதைச் செய்வதற்கான நேரம் மிகக் குறைவு; மற்றும் பணியைச் செய்ய ஆற்றல் இல்லை. அதற்கு நீங்கள் என்ன செய்ய முடியும் என்றால் உங்கள் ஆற்றலை அதிகரித்துக் கொள்வதாகும். பிராணயாமம் (சுவாச பயிற்சிகள்), தியானம் மற்றும் சுதர்சனக் கிரியா ஆகியவை உங்களுக்கு அதிக ஆற்றலைத் தருகின்றன, மேலும் உங்களை அதிக உற்பத்தித் திறன் உள்ளவராக ஆக்குகின்றன" என்று குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறுகிறார்.

குருதேவரால் கண்டறியப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த தாள கதியுள்ள சுவாச நுட்பமான சுதர்சனக் கிரியா ஆனந்தப்பயிற்சித் திட்டத்தின் மூலக்கல் ஆகும்.இந்த தனித்துவம் நிறைந்த சுவாச நுட்பம், மன அழுத்தம் மற்றும் கோபம், விரக்தி மற்றும் மனச்சோர்வு போன்ற எதிர்மறை உணர்ச்சிகளை நீக்கி, ஒருவரை ஆற்றலுடன் ஆனால் அமைதி நிறைந்தவராக, கவனக் கூர்மையுடன் ஆயின் இளைப்பாறிய நிலையில் உள்ளவராக வைக்கின்றது.
தொழில்நுட்பப் பரிசைப் பயன்படுத்தி ஷில்லாங் முதல் மும்பை வரை மற்றும் ஜம்மு முதல் சென்னை வரை அனைத்து நகரங்களை இணைத்து 3000+ க்கும் மேற்பட்ட வலை இடங்களிலிருந்து பங்கேற்பாளர்கள் மகிழ்ச்சியின் ரகசியங்களை அறிந்து கொள்ள ஒரு மெய்நிகர் கூட்டமாக இப்பயிற்சி அமைந்து இருக்கும். முழு நாடும் மகிழ்ச்சி அலைகளில் ஒன்று சேரும். கடந்த 36 ஆண்டுகளில், இந்த நுட்பம் பல்வேறு தரப்பு பின்னணி மற்றும் சமயம் -விவசாயிகள், மருத்துவர்கள், இல்லத்தரசிகள், போராளிகள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், போர் வீரர்கள், இளைஞர்கள், வணிகர்கள், வழக்கறிஞர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள், சமணர்கள் மற்றும் பலர், என மனிதகுலத்தை சுவாச சக்தியின் மூலம் ஒன்றிணைத்துள்ளது.

"ஒரு தனித் தொழில் புகைப்படக் கலைஞராக, ஆக்கப்பூர்வமாக இருப்பதால், எந்த வொரு தடையையும் தெளிவாக எதிர் கொள்ள வேண்டும்," என்று மும்பையைச் சேர்ந்த கலைஞர் பங்கஜ் ஆனந்த் கூறுகிறார். மேலும் "ஒரு நிலையான மனநிலை மட்டுமே ஆக்கப்பூர்வமாக இருக்க முடியும். சுவாசம், தியானம் மற்றும் ஆன்மீகத்தின் துணைப் பொருளாக படைப்பு உணர்வு மலர்கின்றது" என்று கூறுகிறார்.
சக்திவாய்ந்த சுவாச நுட்பங்கள், யோகா, பிராணயாமம் மற்றும் தியானம் தவிர, வாழ்க்கையில் எந்தவொரு கடினமான அல்லது மன அழுத்தமுள்ள சூழ்நிலையையும் கையாள நடைமுறை வாழ்க்கை கருவிகளை வழங்கும் ஊடாடும் ஞான அமர்வுகளும் இந்தப் பயிற்சித் திட்டத்தில் இருக்கும். இதன் விளைவாக, திட்டத்தின் முடிவில், மக்கள் அமைதியான, நிலையான, மகிழ்ச்சியான மனநிலையையும், சுற்றியுள்ள அனைவருடனும் தொடர்பு கொள்ளும் உணர்வையும் அனுபவிக்கிறார்கள்.

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வு அமைப்பு(AIIMS) மற்றும் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம்(NIMHANS) போன்ற புகழ்பெற்ற மருத்துவ நிறுவனங்களில் சுதர்சனக் கிரியா விளைவுகள் குறித்த ஒரு பரந்த ஆய்வின் படி, மன மற்றும் உடல் நல வழக்கமான நடைமுறையில் பின்வரும் நன்மைகள் உள்ளன.
• இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது
• மருந்துகள் மற்றும் உளவியல் சிகிச்சைகள் தோல்வியுற்ற நபர்களில் 71% முதல் 73% விகிதம் பதட்டம் குறைவு, மற்றும் 41% பதட்ட நீக்கம்
• சுதர்சனக் கிரியா கற்ற மன அழுத்த நோயாளிகள் ஒரு மாதத்திற்குள் 68-73% நிவாரண விகிதத்தை அனுபவித்துள்ளனர்
• தூக்கத்தின் ஆழ்ந்த அமைதியான கட்டங்களில் மூன்று மடங்கு அதிக நேரம்
• 12 வாரங்களில் மேம்படுத்தப்பட்ட நோயெதிர்ப்பு உயிரணு எண்ணிக்கை
• மேம்பட்ட சுவாச செயல்பாடு: சுவாச விகிதம் 1 வாரத்தில் 5% மற்றும் 12 வாரங்களில் 15% குறைந்து நுரையீரல் (முக்கிய) திறன் அதிகரிக்கின்றதுமகிழ்ச்சியான, ஆற்றல்மிக்க மற்றும் மன அழுத்தமில்லாத வாழ்க்கைக்கான ரகசியங் களை இந்த ஆனந்த உத்சவத்தில் ஆனந்தப்பயிற்சித் திட்டத்தில் ஆகஸ்ட் 16 முதல் 18, 2019 வரை வெப்காஸ்ட் மூலம் குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கற்பிப்பார் என்பதைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
சென்னையில், 50 க்கும் மேற்பட்ட இடங்களிலுள்ளவர்கள் இந்தப் பயிற்சித் திட்டத் தில் பங்கேற்கின்றனர் , மேலும் விவரங்களுக்கு, 8144265265 என்னும் எண்ணை அழைக்கவும்
பயிற்சி பற்றிய மேலும் தகவல்களை https://bit.ly/auwithgurudev இல் காணலாம்
ஊடகத் தொடர்பான கேள்விகளுக்கு, ராஜலக்ஷ்மி என்பவரை 9884017767 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
-
Atthi varadhar Darisanam
18 வது நாளில் கத்தரிபூ பட்டாடையில் செண்பக பூ அலங்காரத்தில் அத்தி வரதர் பக்தர்களுக்கு காட்சிளிக்கின்றார்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் வைபவ திருவிழா ஜூலை 1 ஆம் தேதி துவங்கியது ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார் இன்று 18 ஆம் நாளில் கத்திரிபூ பட்டாடையிலும் செண்பவ பூ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்.
அத்தி வரதரை தரிசிக்க தினந்தோறும் வெளி தமிழகம் மட்டும் இல்லால் மாநிலம் வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
நேற்று 17 வது நாளில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர் 17 நாட்களில் மொத்தம் 20 லட்சத்துக்கும் அதிககேகானோர் தரிசனம் செய்துள்ளனர்.
-
Thirupathy Ezhumalayan Puspa Pallaku
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனி வார ஆஸ்தான உற்சவத்தை முன்னிட்டு திருமலையில் இன்று மாலை சுமார் 3 டன் எடையுள்ள பல்வேறு வகையான மலர்களால் தயார் செய்யப்பட்ட புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளிய ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி கோயில் மாட வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஆனிவார ஆஸ்தான உற்சவத்தை முன்னிட்டு சேலத்தை சேர்ந்த மனிசங்கர் என்னும் பக்தர் அளித்த நன்கொடை மூலம் ஒரு வார காலமாக தேவஸ்தான தோட்டத்துறை கண்காணிப்பில் 15 ஊழியர்கள் பிரம்மாண்டமான அழகிய புஷ்ப பல்லக்கு தயார் செய்யும் பணிகள் நடைபெற்றன.
ரோஜா, மல்லி, முல்லை, கனகாம்பரம் உள்ளிட்ட ஒன்பது வகையான சம்பர்தாய மலர்களும் இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து வகை மலர்கள் என 3 டன் எடையுள்ள மலர்களால் தயார் செய்யப்பட்ட புஷ்ப பல்லக்கின் முன்பகுதியில் மகாவிஷ்ணுவும், பின் பகுதியை யோக நிலையில் அமர்ந்திருக்கும் ஆஞ்சநேயரும், புஷ்ப பல்லக்கில் இரு புறங்களையும் ஆஞ்சநேயர், கருடாழ்வார் கிருஷ்ணர் ஆகியோர் அலங்கரிக்கும் வகையில் புஷ்ப பல்லக்கு தயார் செய்யப்பட்டிருந்தது.
மாலை கோவிலில் இருந்து புறப்பட்டு புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளி ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு இடையே கோயிலில் மாட வீதிகளில் உற்சவம் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.அப்போது நான்கு மாடவீதிகளில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானின் புஷ்பப் பல்லக்கு வாகன சேவை பக்தி மனம் உருகி கற்பூர ஆரத்தி எடுத்து வழிப்பட்டனர்.
-
July 18 Indraya naal eppadi
ஜூலை 18 – திருவோண விரதம்
விகாரி வருடம் – ஆடி 2
18-ஜூலை-2019 வியாழன்
கரிநாள்
நல்ல நேரம் : 10.30 – 12.00
ராகு : 1.30 – 3.00
குளிகை : 9.00 – 10.30
எமகண்டம் : 6.00 – 7.30
திதி : சூன்ய
திதி நேரம் : துவிதியை முழுவதும் 0.00
நட்சத்திரம் : திருவோணம் இ 1.52
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : புனர்பூசம்,பூசம்
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம் -
Rasi palan
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – நன்மை
ரிஷபம் – சிக்கல்
மிதுனம் – ஆதரவு
கடனம் – உயர்வு
சிம்மம் – உதவி
கன்னி – வரவு
துலாம் – ஆர்வம்
விருச்சிகம் – பக்தி
தனுசு – நலம்
மகரம் – செலவு
கும்பம் – சிந்தனை
மீனம் – பெருமை
சந்திராஷ்டமம் – புனர்பூசம், பூசம் -
Puspa Pallakil Thirupathy Ezhumalayan

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆனி வார ஆஸ்தானத்தை யொட்டி 3 டன் மலர்களால் வடிவமைக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.




-
Thirupathy Srirangam Silk
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆனிவார தினத்தையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலை முகலாயர்கள் படையெடுப்பின்போது பாதுகாக்க ஏழுமலையான் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு ரங்கநாதர் மண்டபத்தில் 20 ஆண்டுகள் வைக்கப்பட்டது. அதனை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆனிவார ஆஸ்தானத்தின் பொழுது ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம்.
அவ்வாறு இன்று பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படும் ரங்கநாதர் கோவிலில் இருந்து விஷ்ணு சகஸ்ரநாமத்துடன் கூடிய பட்டு வஸ்திரங்களை இந்து அறநிலையத் துறை கூடுதல் ஆணையாளர் அபூர்வா சர்மா, ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், தகவல் துறை ஆணையாளர் பிரதாப் குமார் தலைமையில் பட்டு வஸ்திரங்களை கொண்டு வரப்பட்டு பெரிய ஜீயர் மடத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
பின்னர் வீதிகளில் யானைகள் அணிவகுத்து செல்ல நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஏழுமலையான் கோவிலில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டியிடம் வழங்கப்பட்டது. இதில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை செயல் அலுவலர் தர்மா ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.