Blog

  • Need positive energy

    வீடு சிறியதோ…. பெரியதோ…. நமக்கு தேவை அமைதியான சூழல், நல்ல சிந்தனை, வாழ்க்கையில் சந்தோஷம். இவை நிறைந்து இருந்தால் தான் வாழ்க்கையை தங்கு தடையின்றி பயணிக்க முடியும். 

    சிலர் வீட்டில் அடிக்கடி பிரச்னை, நிம்மதியற்ற சூழல், நோய் தாக்குதல், பதற்றம் இவ்வாறு தொடர்ந்து ஏற்பட்டு கொண்டு இருக்கும். இது போன்ற வீட்டில் ஏதோ எதிர்மறை சக்திகள் ஆட்கொண்டுள்ளதாகப் புரிந்துகொள்ள வேண்டும். 

    இந்த எதிர்மறை சக்திகளை விரட்டி நேர்மறை சக்திகள் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்? 

    ஜோதிட ரீதியாக பாசிடிவ் எனர்ஜி என்னும் நேர்மறை சக்திகளை நம் வீட்டிற்குள் கொண்டுவருவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம். 

    வீட்டினுள் இருக்கும் ஒவ்வொரு அறையிலும் ஒரு விரிப்பு விரித்து ஏதேனும் ஒரு சிறிய செப்பு அல்லது பித்தளை அல்லது கண்ணாடி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கவும். இதனை காலையில் செய்வதே சிறந்தது. தினமும் காலையில் இந்த தண்ணீரை மாற்றவும். பழைய தண்ணீரை செடியிலோ அல்லது மொட்டை மாடியிலோ விட்டு விடலாம். 

    உதாரணமாக.. சிவன் கோயிலிலும், பெருமாள் கோயிலிலும் உள்ள கர்ப்பகிரஹத்தில் செப்புப் பாத்திரம் அல்லது பித்தளையில் தீர்த்தம் வைத்திருப்பார்கள். பெருமாள் ஆலயத்தில் கர்ப்பகிரகத்தில் கொடுக்கும் தீர்த்தத்தில் துளசியும், பச்சைக் கற்பூரமும் சேர்ப்பார்கள். சிவன் கோயிலில் கொடுக்கும் தீர்த்தத்தில் வில்வமும், மஞ்சள் பொடியும் கலந்திருக்கும்.

    இவ்வாறு நாம் வசிக்கும் வீட்டினுள் தினமும் செய்துவந்தால் எதிர்மறை ஆற்றல் மறைந்து நேர்மறை சக்திகள் உருவாகும். தினமும் இதைச் செய்து பாருங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் பிரச்சினைகள் மறைந்து சந்தோஷம் பிறக்கும்.

  • Meenatchi amman koil Aadi Mulaikattu

    உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆடிமுளைக்கொட்டுத் திருவிழா ஆகஸ்ட் மாதம் 1 – ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

    தமிழகத்தில் ஆடிப்பட்டம் தேடி விதை என்ற வாக்கின்படி விவசாயிகள் ஆடி மாதத்தில் விதை விதைப்பில் ஈடுபடுவது வழக்கம். தங்கள் நிலங்களில் அமோக விளைச்சல் வேண்டி முளைக்கட்டு வைத்து இறைவனை வேண்டி வழிபாடு நடத்துவர். இதன்படி  மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா வரும் ஒன்றாம் தேதி தொடங்க உள்ளது. 

    அம்மன் சந்நிதி முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொங்கும். முளைக்கட்டு திருவிழா 10 நாள்கள் திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி மீனாட்சியம்மன் பஞ்சமூர்த்திகளுடன் காலை, மாலை வேளைகளில் ஆடி வீதியில் சிறப்பு நாதஸ்வர கலைஞர்கள், தவில் வித்வான் ஆகியோரின் இன்னிசையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 

    இதில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி ஏழாம் நாள் திருவிழாவில் இரவு திருவீதியுலா முடிந்த பின்னர் உற்சவர் சந்நிதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் வைபவம் நடைபெறுகிறது என்று திருக்கோயில் இணை ஆணையர் ந.நடராஜன் தெரிவித்துள்ளார்.
     

  • Aadi Tuesday

    ஆடியில் அத்தனை நாளுமே விசேஷம். எனினும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் அம்பிகைக்கு ஏற்றவை. `ஆடி செவ்வாய் தேடிக் குளி' என்பது ஆன்றோர் வாக்கு.

    ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிகளில் ஓளவையார் விரதமிருப்பது பெண்களின் வழக்கம். ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தவிர ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடி கிருத்திகை, ஆடித்தபசு, வியாச பௌர்ணமி, ஆடிப்பெருக்கு, வரலட்சுமி விரதம், கருட பஞ்சமி, ஆண்டாள் அவதார தினம், ஹயக்ரீவர் ஜயந்தி, கோவர்த்தன விரதம், குமார சஷ்டி, வாராஹி விரதம் என இந்த மாதம் முழுவதும் பண்டிகைகளும் விரதங்களும் நிறைந்து காணப்படும்.

    அது மட்டுமா? தெருவெங்கும் இருக்கும் அம்மன் ஆலயங்களில் ஞாயிற்றுக்கிழமைகள் களைகட்டும். கரகம் எடுத்தல், பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், கங்கா – காளி வேடமிட்டு ஆடுதல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், பம்பை உடுக்கை ஒலிக்க சாமியாடுதல் எனத் தமிழகம் எங்குமே பக்திப் பெருக்கெடுக்கும் மாதமும் ஆடிதான். விண்ணுலகில் இருந்த வேப்ப மரம் மண்ணுலகம் வந்த அதிசயமும் இந்த மாதத்தில் நடந்ததுதான்.
     

  • Rasi palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – இன்பம் 
    ரிஷபம் – போட்டி  
    மிதுனம் – செலவு
    கடனம் – புகழ்
    சிம்மம் – சிரமம்
    கன்னி –  பொறுமை 
    துலாம் –  விவேகம் 
    விருச்சிகம் – நஷ்டம் 
    தனுசு – தொல்லை
    மகரம் –   பாராட்டு
    கும்பம் – தடங்கல்
    மீனம் – லாபம் 
    சந்திராஷ்டமம்    – உத்திரம்
     

  • July 22 Sasti Viradham

    ஜூலை 22 – சஷ்டி விரதம் 
    விகாரி வருடம் – ஆடி 6
    22-ஜூலை-2019 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    சஷ்டி          
    திதி நேரம்    :    பஞ்சமி    ம    12.19
    நட்சத்திரம்    :    பூரட்டாதி    கா    9.28
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திரம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Nellaiappar koil Car

    தமிழகத்தில் உள்ள தேர்களில் நெல்லையப்பர் திருத்தேரே மிகப்பழைமையான தேராகும்.

    நெல்லைத் தேர் கி.பி.1505இல் செய்யப்பட்டு இன்று வரை சுமார் 500 வருடங்களுக்கு மேலாகத் தடை எதுவுமின்றி ஓடிவரும் தேர் எனும் பெருமைக்குரியது.

    1948 ஆம் ஆண்டு நம் நாடு சுதந்திரம் அடைந்ததன் வெற்றியைக் கொண்டாடுவதற்காக நெல்லை மக்களின் விருப்பப்படி தேரின் உச்சியில் ரிஷபக் கொடியோடு நம் தேசியக் கொடியும் பட்டொளி வீசிப் பறந்தது. இது போல் இந்தியாவில் வேறெங்கும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று வரையிலும் இயந்திரங்களின் உதவியின்றி முழுக்க முழுக்க மனிதச் சக்தி ஒன்றினாலேயே இழுக்கப்படும் மிகப்பெரிய தேர் இது ஒன்றுதான் என்பது இதன் தனிச்சிறப்பாகும்.

    4 வெளிச்சக்கரங்களும் 4 உள் சக்கரங்களும் கொண்டு தமிழகத்திலேயே அளவில் பெரியதாக விளங்கும் இத்தேரின் இரும்பு அச்சு லண்டனில் செய்யப்பட்டதாகும்.

    முற்காலத்தில் இதன் மேல்பகுதியில் 9 தட்டுகள் இருந்ததாகவும் இப்போதுதான் அதனை 5 தட்டுகளாக குறைத்துவிட்டதாகவும் கூறுவர்.

    சதுர வடிவிலான இத்தேரின் முன்பகுதியில் நடுநாயகமாக இறைவனும் அம்மையும் ரிஷப வாகனத்தில் இருக்கும் சிற்பம் உள்ளது. இதன் இருபுறமும் கணபதியும் முருகனும் அவரவர் வாகனங்களில் வீற்றிருக்கின்றனர். இடப்பக்கம் இத்தலத்தின் மூர்த்தியான கங்காள நாதர் குண்டோதரன், மான், மோகினி இவர்களுடன் இருக்கின்றார். இவரை அடுத்து இராவணன் கயிலை மலையை அசைக்கும் சிற்பம் உள்ளது.

    வலப்பக்கம் நடராஜர் நடனமாடுகிறார். தேரின் பின்பகுதியில் விஷ்ணுவின் தசாவதாரங்கள் காணப்படுகின்றன. தேரின் ஒவ்வொரு மூலையிலும் வீரபத்திரர் உள்ளார். தேரின் கீழ்மட்டத்தில் பூதகணங்கள் வரிசையாக உள்ளன. தேரின் கிழக்குப் பகுதியில் பாலியல் சிற்பங்கள் காணப்படுகின்றன. இதற்கும் மேல் விஸ்வகர்மா சிற்பம் வேலைப்பாட்டுடன் திகழ்கிறது.

    தேரின் பின்னால் கீழ்ப்பகுதியில் வீரர்கள் போர் செய்யும் சிற்பத் தொகுதி உள்ளது.  தேரின் மேல் பகுதியில் அகத்தியர், முனிவர்கள்,யானை உரி போர்க்கும் இறைவன், விரிந்த சடையுடன் தவம் செய்யும் யோகிகள் எனப் பல வகையான சிற்பங்களை நாம் காணலாம். மொத்தத்தில் இத்தேர் ஒரு நடமாடும் கலைக்கூடம் எனலாம். 

  • Kulam Kaakum Kula Deivam

    குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.  அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.  

    எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.  குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை.  யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.

    ஒருவர் எந்த வழிபாடு செய்யாவிட்டாலும் பரவாயில்லை.  ஆனால் குலதெய்வ வழிபாடு மட்டும் செய்யாமல் இருக்கவே கூடாது.  அது நமது குலத்திற்கே கேடு விளைவிக்கும்.  குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பது பழமொழி.  

    ஆம் யார் தம்மை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்களோ அவர்களிடம் தான் குழந்தைகளும் தெய்வங்களும் சென்று சேர்ந்து விடும்.  தங்களுக்கு வசதியான நாட்களில் குலதெய்வ வழிபாடு செய்கிறார்கள்.  இது மிகவும் தவறு.

    குலதெய்வமே தெரியாமல் பல குடும்பங்கள் பலவித இன்னல்களை அனுபவித்து வருகின்றன.  குலம் தெரியாமல் கூட இருக்கலாம்.  ஆனால் குலதெய்வம் தெரியாமல் ஒருவர் இருக்கக்கூடாது.  குலதெய்வம் தெரியாமல் எந்த பூசைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் மற்றும் மந்திர செபங்கள் செய்தாலும் பலனில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.  எனவே எப்பாடுபட்டாவது குலதெய்வத்தினை கண்டறிந்து அதற்குரிய வழிபாட்டினை செய்து வரவேண்டும்.

    நமது முன்னோர்கள் நமது குலதெய்வத்தினை வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவரவர் சொந்த பந்தங்கள், உறவினர்கள் மற்றும் பங்காளிகள் இவர்களுடன் ஒன்று சேர்ந்து கூட்டு வழிபாடு நடத்தி நிம்மதியாக வாழ்ந்திருக்கிறார்கள்.  அவர்களின் வாழ்க்கையின் இன்னல்கள் வந்தாலும் அவை வெகு நாட்கள் நீடிப்பதில்லை.  குலதெய்வத்தின் அருளால் அவை சூரியனைக் கண்ட பனி போல் விலகி விடும்.

    பலர் தங்களின் செல்வ செழிப்பில் குலதெய்வத்தினை மறந்து விட்டார்கள்.  விளைவு வாழ்க்கையில் கண்டங்கள் மற்றும் கஷ்டங்கள்.  அது மட்டுமல்லாமல் குலமே தழைக்காமல் போனதும் உண்டு.
     

  • Aadi Amman Special

    ஆடி மாதம் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும்.

    ஆடி மாதம் முழுவதும் மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

    ஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும்.

    ஆடி மாதம் சுக்ல துவாதசியில் மகா விஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

    ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி தினத்தன்று அன்னதானம் செய்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

    ஆடி மாதம் சுக்லபட்ச திரயோதசியில் பார்வதி தேவியை நினைத்து விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும்.

    கஜேந்திரன் என்ற யானையை முதலை கவ்வியபோது அந்த யானை ஆதிமூலமே என்ற கதற உடனே திருமால் சக்ராயுதத்தை ஏவி யானையை காப்பாற்றினார். இதனை நினைவுப்படுத்தும் வகையில் ஆடி மாதம் எல்லா திருமால் தலங்களிலும் கஜேந்திர மோட்ச வைபவம் நடத்தப்படுகிறது.

    ஆடி மாதம் ஏகாதசி துவாதசி நாட்களில் அரச மரத்தை சுற்றி வந்து வழிப்டால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

    தஞ்சாவூரில் நிசும் சூதனி உக்கிர காளியம்மன் கோவில் உள்ளது. ஆடி பதினெட்டாம் பெருக்கு தினத்தன்று தஞ்சை மாவட்ட கிறிஸ்தவர்கள் அங்கு ரொட்டி ஆட்டுக்கறி படையலிட்டு வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும்.

    ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும்.

    ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.

    ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயாசம் சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும்.

    அம்மனை வழிபடும் போது மறக்காமல் லலிதாசகஸ்ர நாமம் சொல்ல வேண்டும்.

    ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து உணவு கொடுத்து ரவிக்கை சீப்பு குங்குமச்சிமிழ் கண்ணாடி வளையல் தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

    ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் பிறந்தாள் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் ஆடிப்பூரத்தன்று ஆண்டாளை நந்தவனத்துக்கு எழுந்தருள செய்வார்கள். அப்போது திருப்பாவை நாச்சியார் திருமொழி திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படும். இதனால் ஆண்டாள் மனம் குளிர்ந்து இருப்பாள். அந்த சமயத்தில் ஆண்டாளை வழிபட்டால் உங்களது எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும்.

    ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல் களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம் குழந்தை பாக்கியம் சகல நலன்களையும் நீங்காத செல்வத்தை பெறலாம் என்பது ஐதீகம்.

    ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து தூய ஆடை அணிந்து சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து செவ்வரளி செம்பருத்தி அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.

    ஆடி மாதத்தை “பீடை மாதம்” என்று ஒதுக்குவது அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில் “பீட மாதம்” என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.

    ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து கருப்புப் பட்டாடை நூறு முத்துக்கள் கோர்த்த மணிமாலை கருஊமத்தம் பூமாலை அணிவித்து மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.

    பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

  • Rasi palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – ஊக்கம் 
    ரிஷபம் – விவேகம் 
    மிதுனம் – பகை 
    கடனம் – ஜெயம் 
    சிம்மம் – வரவு
    கன்னி –  மறதி 
    துலாம் –  திடம் 
    விருச்சிகம் – வீம்பு  
    தனுசு – சுபம் 
    மகரம் –   திறமை 
    கும்பம் – சினம் 
    மீனம் – பாசம் 
    சந்திராஷ்டமம்    – பூரம்
     

  • July 21 Indraya Naal Eppadi

    ஜூலை 21 – இன்றைய நாள் எப்படி…..
    விகாரி வருடம் – ஆடி 5
    21-ஜூலை-2019 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    பஞ்சமி          
    திதி நேரம்    :    சதுர்த்தி    கா    10.26
    நட்சத்திரம்    :    சதயம்    கா    6.59
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூரம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்