Blog

  • Danvantri Arogya Peedam

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி 23.07.2019 காலை 10.00 மணிக்கு ஆடி செவ்வாய்கிழமையை முன்னிட்டு தடைகளை தகர்க்கும் அதர்வண பத்ரகாளி யக்ஞசொரூபிணி ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவிக்கு 1000 கிலோ மிளகாய் வற்றல் அபிஷேகம் துவங்கியது. 

    இந்த அபிஷேகமானது வருகிற 30.07.2019 ஆடி செவ்வாய்கிழமை வரை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து ஆடி அமாவாசையை முன்னிட்டு வருகிற 31.07.2019 புதன்கிழமை காலை 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 1000 கிலோ மிளகாய் வற்றலை கொண்டு காலத்தை வென்று தீமைகளை அழித்து வெற்றிகளை தரும் சரப சூலினி ப்ரத்யங்கிரா மஹா காளி யாகத்துடன், அஷ்டபைரவர் யாகங்கள் நடைபெற உள்ளது.

    ஆடி செவ்வாய்கிழமையான துவங்கிய 1000 கிலோ மிளகாய் அபிஷேகம் பக்தர்களுக்கு ஏற்படும் திருஷ்டி தோஷங்கள் அகலவும், இரத்த சம்பந்தமான நோய்கள் நிவர்த்தியாகவும், திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறவும், புத்திர பக்யம் உண்டாகவும், தடைகள் நிவர்த்தியாகி முயற்சிகளில் வெற்றி பெறவும், ஏவல், பில்லி, சூன்யம் நம்மை விட்டு அகலவும், சத்ரு உபாதைகள் நிவர்த்தியாகவும் இங்கு பிரத்யேகமாக வைக்கப்பட்டுள்ள மிளகாய் வற்றலை பெற்று யாக குண்டத்தை மூன்று முறை வலம் வந்து அவரவர்கள் பிரார்த்தனை நிறைவேற மஹா காளி ப்ரத்யங்கிரா தேவிக்கு அபிஷேகம் செய்தனர். 

    மேலும் பல்வேறு நன்மைகளுக்காக பிரார்த்தனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான கிராம, நகர பொதுமக்கள், தமிழகம் மட்டுமின்றி பிறமாநில பக்தர்களும் பங்கேற்று பக்தியுடன் மிளகாய் அபிஷேகம் செய்து வருவதாக  தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    – தொடர்புக்கு

    "Yagnasri Kayilai Gnanaguru" Dr. Sri Muralidhara Swamigal
    FOUNDER
    Sri Danvantri Arogya Peedam,
    04172-230033, 0944330203
    ,
  • Atthi Varadhar August 1

    காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் சுமார் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்தி மரத்தால் செய்யப்பட்ட அத்தி வரத பெருமாள் பக்தர்களுக்கு தரிசனம் தருவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை அத்திவரதர் தரிசனத்திற்கு கோயில் நிற்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. 

    முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும், அடுத்த 24 நாட்கள் நின்ற கோலத்திலும் அத்தி வரதர் காட்சி தருவார் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் ஜூலை 25ம் தேதி முதல் அத்தி வரதர் நின்ற நிலை தரிசனம் தருவார் என கூறப்பட்ட நிலையில், தற்போது நின்ற நிலை தரிசனம் குறிப்பிட்ட நாளில் தரிசனத்திற்கு வைக்க வாய்ப்பில்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  சிலையை நிற்கும் நிலைக்கு மாற்றி ஆகஸ்ட் 1 – 17 வரை அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி தருவரர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஏற்கனவே தரிசனம் செய்த பக்தர்கள் நின்ற நிலையில் இருக்கும் அத்தி வரதரை  மீண்டும் தரிசனம் செய்ய வர வாய்ப்புள்ளதால், பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
     

  • Atthi Varadhar Dharshan

    காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே எடுக்கப்பட்டு இருக்கும் ஸ்ரீ அத்தி வரதர் பெருமானை தரிசிக்க நாள் தோரும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 

    பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தாலும் கட்டுகடங்காத பக்தர்கள் கூட்டத்தால் இலவச தரிசனம் செய்ய பல மணி நேரம் காத்திருக்கும் நிலை பக்தர்களுக்கு ஏற்படுகிறது. எனவே அத்தி வரதர் தரிசனம் செய்வதற்கான சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட் விற்பனையை இந்து அறநிலையத் துறை இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

    https://tnhrce.gov.in/eservices/special_dharshan.php?tid=1864&catcode=0&_ga=2.152857657.1000015531.1563945046-1890711362.1553951719

    மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த லிங்கை கிளிக் செய்து அத்தி வரதரை தரிசிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் அத்தி வரதரை சில நிமிடக்ளில் எளிதாக தரிசித்து விட்டலாம்.  

  • Rasi palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – உயர்வு 
    ரிஷபம் – சினம்    
    மிதுனம் – அன்பு 
    கடனம் – போட்டி
    சிம்மம் – ஜெயம் 
    கன்னி –  நன்மை  
    துலாம் –  பகை 
    விருச்சிகம் – இன்பம் 
    தனுசு – தீரம் 
    மகரம் –   பெருமை 
    கும்பம் – மகிழ்ச்சி
    மீனம் – எதிர்ப்பு
    சந்திராஷ்டமம்    – அஸ்தம், சித்திரை
     

  • July 24 Indraya Nalla Neram

    ஜூலை 24 – இன்றைய நல்ல நேரம்?
    விகாரி வருடம் – ஆடி 8
    24-ஜூலை-2019 புதன் 
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    சப்தமி          
    திதி நேரம்    :    சப்தமி    ம    3.16
    நட்சத்திரம்    :    ரேவதி    ம    1.47
    யோகம்    :    மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    அஸ்தம்,சித்திரை
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Aadi Kiruthigai viradham

    தேவர்களை சிறைப்பிடித்து,மக்களை கொடுமைப்படுத்திய சூரனை வதைக்க வேண்டி ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறுமுகனை வளர்க்கும் பொறுப்பு ஆறு கார்த்திகை பெண்களிடம் கொடுக்கப்பட்டது. கார்த்திகைப் பெண்களும் குமரனை  பாலூட்டி போற்றி வளர்த்தார்கள். 

    அவனை சேர்த்து ஒன்றாக்கிய  உமையுடன் அங்கே எழுந்தருளிய சிவபிரான், கார்த்திகைப் பெண்களைப் போற்றி வாழ்த்தி இனி கந்தன் இந்தப் பெண்களின் பெயரால் `கார்த்திகேயன்' எனவும் அழைக்கப்படுவான் என்று கூறி அருளினார்.  மேலும் அவர்களுக்கு நட்சத்திர பதவியும் அளித்து, இந்த கார்த்திகைப் பெண்களின் நட்சத்திரம் வரும் சமயம் முருகனுக்கு விரதம் இருப்பவர்களுக்கு,அவனருளால்  குறைகள் நீங்கி, நல்வாழ்வும், முக்தியும் கிடைக்கும் என்று அருளிச் செய்தார்.

    இது தான் கிருத்திகை அல்லது கார்த்திகை விரதம் என்று அழைக்கப்படுகிறது. ‘ஆறுமுக உருவாய்த் தோன்றி அருளொடு சரவணத்தின் வெறிகமழ் கமலப்போதில் வீற்றிருந்து அருளினானே’ என்று கந்த புராணம் சிறப்பித்துக் கூறுமளவிற்கு ஆடிக் கிருத்திகை விரதம் மிகவும் பிரசித்தி பெற்றது

     கிழமைகளில் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. திதிகளில் சஷ்டி திதி முக்கிய விரதமாகும். நட்சத்திரத்தில் ‘கிருத்திகை’ முருகனின் நட்சத்திரம் ஆகும். மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரம் வந்தாலும், ஆடி மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரம் விசேஷமானது.

    முருகனுக்கு உகந்த விரதங்களுள் ஆடிக்கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள். வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.
     

  • Narasimmar vazhipadu

    நரசிம்மரின் அருள் பெற விரும்புபவர்கள், ஸ்ரீமத் பாக வதத்தில் உள்ள பிரகலாத சரித்திரத்தின் 7-வது ஸ்கர்தம் 1 முதல் 10 அத்தியாயங்கள் வரை பாராயணம் செய்ய வேண்டும். பிரகலாதரால் செய்யப்பட்ட ஸ்தோத்திரத்தில் 7-வது ஸ்கந்தம் 9-வது சர்க்கத்தையும் பாராயணம் செய்தல் வேண்டும்.

    நரசிம்மன் என்றால் ‘ஒளிப்பிழம்பு’ என்று பொருள். மகா விஷ்ணு எடுத்த இந்த அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும், பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.

    நரசிம்மனிடம் பிரகலாதன் போல் நாம் பக்தி கொண் டிருக்க வேண்டும். அத்தகைய பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு, நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார். நரசிம்மரை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

    நரசிம்மரை ‘மருத்யுவேஸ்வாகா’ என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.

     ‘அடித்தகை பிடித்த பெருமாள்’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது ‘பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறுவினாடியே உதவுபவன்’ என்று இதற்கு பொருள்.

     நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களில் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார். 

    வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை அந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். இதுவே நரசிம்ம ஜெயந்தியாகும்.

    நரசிம்மரின் அவதாரம் இறைவன் எங்கும் உள்ளார் என்பதை உணர்த்துவதாகும்.

     நரசிம்மர் வைணவ சமயத்தில் அதிகம் வழிபட கூடிய விஷ்ணுவின் அவதாரம் ஆகும்.

    நேபாளத்தில் உள்ள ராஜோபாத்யாய பிராமனர்கள், நரசிம்ம அவதாரத்தை கொண்டாடும் வகையில் காட்மண்டு பள்ளத்தாக்கில் ஆவனி மாதம் தேய்பிறை ஐந்தாம் நாள் (பஞ்சமி) ஸ்ரீ நரசிம்ம யாத்திரையை மேற்கொள்கிறார்கள். இந்த மரபு நூறு வருடங்களுக்கு மேலாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது.

    நரசிம்ம சுவாமி இந்தியா வெங்கிலும் வழிபடப்பட்டாலும், தமிழ் நாடு, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களில் தான், இவருக்குத் புகழ் வாய்ந்த தனிக்கோவில்களும் சிறப்பு வழிபாடும் அதிகமாக உள்ளது.
     

  • Thiruthani Aadi kiruthigai

    திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்ப திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

    அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலில்  ஆடிக்கிருத்திகை, தெப்பல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து காவடிகளுடன் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதில் பல பக்தர்கள், தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் மொட்டை அடித்தல், வேல் குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செய்வர். விழாவையொட்டி, முருகப்பெருமானுக்கு பால், பன்னீர், திருநீறு, சந்தனம், மஞ்சள் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். இதனைத்தொடர்ந்து பச்சை மாணிக்க மரகதக் கல், தங்க கீரிடம், தங்க வேல் மற்றும் வைர ஆபரணங்கள் முருகப்பெருமானுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். 

    லட்ச கணக்கான பக்தர்கள் கூடும், இத்திருவிழாவில், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரும் வகையில், நகரின் முக்கியப் பகுதிகளிலும், கோயிலைச் சுற்றியும் தாற்காலிக பேருந்து நிலையங்கள், குடிநீர் வசதி, நடமாடும் மருத்துவக் குழுக்கள், தடையில்லா மின்சாரம் வழங்குதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட உள்ளன. 

    மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 400 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரம் துப்புரவுப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    மேலும், சரவணப்பொய்கை குளத்தில் 3 நாள்கள் நடைபெறும் தெப்பல் விழாவில் அரசியல் பிரமுகர்கள், உள்ளூர் பிரமுகர்கள் அதிக அளவில் அமருவதால் ஏற்படும் இடையூறைக் கட்டுப்படுத்த, இந்த ஆண்டு முதல் இசைக் கலைஞர்கள், கோயில் குருக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் யாரும் தெப்பலில் ஏற அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
     

  • Rasi palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – லாபம் 
    ரிஷபம் – நன்மை   
    மிதுனம் – போட்டி 
    கடனம் – தனம் 
    சிம்மம் – வெற்றி
    கன்னி –  அமைதி 
    துலாம் –  பயம்  
    விருச்சிகம் – தாமதம் 
    தனுசு – நலம் 
    மகரம் –   கோபம் 
    கும்பம் – திறமை 
    மீனம் – புகழ்
    சந்திராஷ்டமம்    – உத்திரம், அஸ்தம்
     

  • July 23 Aadi Tuesday

    ஜூலை 23 – ஆடி செவ்வாய்
    விகாரி வருடம் – ஆடி 7
    23-ஜூலை-2019 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    அதிதி          
    திதி நேரம்    :    சஷ்டி    ம    1.58
    நட்சத்திரம்    :    உத்திரட்டாதி    கா    11.47
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திரம்,அஸ்தம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்