Blog

  • Theipirai Astami Vszhipadu

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி உலக மக்கள் நலன் கருதியும், இயற்கை வளம் வேண்டியும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்று மாலை 5.00 மணி முதல் 7.30 மணி வரை பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கும், அஷ்ட பைரவர் சகித மஹா காலபைரவருக்கும் தச பைரவர் யாகத்துடன் விசேஷ அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது.

    பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், பக்தர்களின் பாவத்தை நீக்குபவர் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவருக்கு நடைபெறும் யாகங்களிலும், அபிஷேகங்களிலும் பங்கேற்று பைரவரை வழிபாடுவது வாழ்கையில் சிறந்த பலன்களை அளிக்கும். ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவபெருமானுடைய அம்சம் ஆவார்.

    தேய்பிறை அஷ்டமி திதியியை முன்னிட்டு நடைபெற்ற இந்த யாக பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்று பிரச்சனைகள் தீரவும், தொல்லைகள் நீங்கவும், நல்லருள் கிடைக்கவும், எண்ணிய காரியங்கள் நிறைவேறவும், நல்ல மக்கள் செல்வங்களை பெறவும், உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிடைக்கவும், தொழிலில் லாபம் உண்டாகவும், வழக்குகளில் வெற்றி பெறவும், எதிரிகள் விலகவும், கடன் தொல்லைகள் தீரவும், யம பயம் அகலவும், நீண்ட ஆயுள் கிடைக்கவும், வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பு உண்டாகவும், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடவும், வறுமை நீங்கவும், பகைவர்களின் தொல்லைகள் அகலவும், பயம் நீங்கவும், பைரவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றவும், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியை பெறவும், வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படவும், வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறவும், வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடையவும், சனி கிரகத்தினால் ஏற்படும் தொல்லைகள் அகலவும், வெளி நாடு வேலை வாய்புகள் கிடைக்கவும் மேலும் பல்வேறு நன்மைகளை ஏற்ப்பட கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது.

    மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளசிகளை வழங்கி இறை பிரசாதம் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.


    "Yagnasri Kayilai Gnanaguru" Dr. Sri Muralidhara Swamigal
    FOUNDER
    Sri Danvantri Arogya Peedam,

  • July 26 Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – செலவு
    ரிஷபம் – தடங்கல்   
    மிதுனம் – நட்பு
    கடனம் – வரவு
    சிம்மம் – கவலை
    கன்னி –  அமைதி  
    துலாம் –  வீம்பு
    விருச்சிகம் – நன்மை 
    தனுசு – போட்டி 
    மகரம் –   பரிசு 
    கும்பம் – நஷ்டம் 
    மீனம் – மகிழ்ச்சி
    சந்திராஷ்டமம்    – சுவாதி,விசாகம்

  • July 26 Aadi Kiruthigai

    ஜூலை 26 – ஆடிக்கிருத்திகை 
    விகாரி வருடம் – ஆடி 10
     கார்த்திகை கார்த்திகை
    26-ஜூலை-2019 வெள்ளி  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    நவமி          
    திதி நேரம்    :    நவமி    மா    4.32
    நட்சத்திரம்    :    பரணி    மா    4.24
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சுவாதி,விசாகம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Varam Tharum Aadi Kiruthigai

    ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள். குறிப்பாக பழநியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

     எல்லா முருகன் கோயில்களிலும் ஆடிக்கிருத்திகையன்று   பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, திருவீதி உலா என விமரிசையாக பல விழாக்கள், உற்சவங்கள் நடைபெறுகிறது. கந்தன் காவடிப் பிரியன் என்பதால், அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மச்சக்காவடி, சேவல் காவடி, தீர்த்தக் காவடி என பல்வேறு விதமாக காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை  செலுத்துவது வழக்கம்.

    ஜோதிட சாஸ்திரத்தின்படி முருகப் பெருமான் செவ்வாயின் அம்சமாதலால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத் தடை, செவ்வாய் தோஷ தடை, குரு, செவ்வாய் திசை நடப்பவர்கள் ஆடி கிருத்திகை நாளன்று முருகப் பெருமானை பக்தியுடன் மனமுருக பிரார்த்தித்தால் சகல தோஷ, தடைகளும்  நீங்கி வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    தைமாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகவும் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.

    மனத் தூய்மைக்கும், மன ஒருமைக்கும் வழிசெய்யும் விரதங்களைக் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும். முறையாக விரதங்கள் மேற்கொள்வதால் நமது உடலும், உள்ளமும் தூய்மையாகி மனம் அமைதியும் சந்தோஷமும் அடைகிறது.
     

  • Muruga perumanukku Ugandha Aadi Kiruthigai

    முருகப்பெருமானுக்கு பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டாலும் தைப்பூசம், தை கிருத்திகை, பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை போன்றவை மிகவும் முக்கியம் வாய்ந்த விழாக்களாக கருதப்படுகிறது. 

    எல்லா மாதங்களிலும் கிருத்திகை வரும். ஆனால் ஆடிக்கிருத்திகை போன்ற சிறப்பு தை மாதக் கிருத்திகையில் கூட இருக்காது.  அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழனி, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றில் ஆடி கிருத்திகை விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

    கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப்பெருமானின் நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷம். உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். அனைத்து முருகன் கோயில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை வீதிஉலா என விமரிசையாக நடைபெறும்.

    இது தேவர்களின் மாலை காலம். எனவே, இக்காலத்தில் உப்பில்லா உணவை எடுத்துக்கொண்டு கார்த்திகை விரதம் இருந்தால் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது. பலரும், ஆடி மாதத்தில் இருந்து துவங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிப்பார்கள்.

    நட்சத்திரங்களில் கிருத்திகையும் சிறப்பு வாய்ந்தவையாகும். முருகன் பிறந்தது விசாக நட்சத்திரம் என்று சொல்லப்பட்டாலும், அவனைப் பாலூட்டி, சீராட்டி வளர்த்தது கார்த்திகைப் பெண்கள் என்பதால் அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.
     

  • Thiruthani Aadi Barani vizha

    திருத்தணியில் ஆடி கிருத்திகை முதல் நாளான இன்று பரணி விழா தொடங்கியது .  ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கம்,  மருத்துவ வசதி  தீயணைப்பு வசதி செய்யப்பட்டு உள்ளது  1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா தொடங்கியது விழாவின் முதல்நாளான இன்று பரணி நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. திருத்தணிக்கு காஞ்சிபுரம் வேலூர் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 260 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

    அதேபோல் சென்னையில் இருந்து திருத்தணிக்கு  வருவதற்கு 3 சிறப்பு ரயில்களும், தரிசனம் முடிந்து செல்ல மூன்று சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது. பரணி விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் பன்னீர் காவடி புஷ்ப காவடி  எடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.  

    பக்தர்களின் வசதிக்காக மருத்துவ வசதிகளும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார் . அதேபோல் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க பாதுகாப்பு பணிக்காக ஆயிரத்து 1500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

  • Thirupathy Ezhumalayan Koil Pallava Urchavam….

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  பல்லவ உற்சவம் நடைபெற்றது. மைசூர் மகாராஜா பிறந்த உத்திராட நட்சத்திரத்தில்  ஒவ்வொரு ஆண்டும் பல்லவ உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது.  அதன்படி இன்று  மாலை சகஸ்கர தீப அலங்கார சேவை முடிந்த பிறகு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக கர்நாடக சத்திரத்திற்கு எழுந்தருளினர். 

    அங்கு கர்நாடக மாநில அரசின் பிரதிநிதிகளும் , மைசூர் சமஸ்தான பிரதிநிதிகள் கர்நாடக சத்திரத்தில் சுவாமி தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.இதில் தேவஸ்தான சிறப்பு அலுவலர் பாலா சேஷாத்ரி,  போக்கசம் பொறுப்பாளர் குருராஜராவ், பார் பட்டதர் ராமசந்திர உள்ளிட்ட அதிகாரிகள் பக்தர்கள் பங்கேற்றனர்.

    மைசூர் மகாராஜா நினைவாக கடந்த 300 ஆண்டுகளாக  பல்லவ உற்சவம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகிறது. முதலில் இந்த உற்சவத்தை தோட்ட உற்சவம் என அழைக்கப்பட்டு  வந்தது .வரலாற்று புராணத்தின் படி  ஏழுமலையானின் தீவிர பக்தரான மைசூர் மகாராஜா சுவாமியின் மீது கொண்ட பக்தியினால் பல நன்கொடைகளை வழங்கி உள்ளார். 

    இதில் மூலவருக்கும், சுவாமி தாயார் உற்சவருக்கும் பிளாட்டினம், தங்கம், வைரம் ,வைடூரியம், மரகத பச்சை போன்ற விலை உயர்ந்த ஆபரணங்களை வழங்கியுள்ளார். மேலும் பிரம்மோற்சவத்தில்  சுவாமி வீதி உலாவிற்காக கருட, கஜ,  முத்துப்பந்தல், சர்வ பூபால, குதிரை, சூரிய பிரபை, சந்திரப் பிரபை போன்ற வாகனங்களை நன்கொடையாக வழங்கினார். 

    சாமியின் வாகன சேவையில் ஐந்தாவது நாள் காலை பல்லக்கு உற்சவத்திற்காக யானை தந்தத்தால் பல்லக்கு தயார் செய்து நன்கொடையாக வழங்கி தனது பக்தியை தெரியப்படுத்தினார். மேலும் தினந்தோறும் ஏழுமலையான் கோவிலில் காலை சுப்ரபாத சேவைக்கு முன்னதாக மைசூர் சமஸ்தானம் தரப்பில் நவநீத ஆரத்தி அகண்ட தீபத்திற்காக  தினந்தோறும் 5 கிலோ நெய் வழங்கும் சம்பிரதாயத்தை அவர் தொடங்கி வைத்தார் தற்பொழுதும் இந்த சம்பிரதாயம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரப்படுகிறது. 

    மைசூர் மகாராஜா நினைவாக ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் உத்திராட நட்சத்திரம் அன்று இரவு ஏழு முப்பது மணிக்கு சிறப்பு ஆஸ்தானம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வருடாத்தில் முக்கிய நாட்களான உகாதி , தீபாவளி , ஆனிவார ஆஸ்தானம் போன்ற நாட்களில் மைசூர் மகாராஜா பெயரில் சிறப்பு ஆரத்தி வழங்கப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி உறியடி உற்சவம் அன்றும் மலையப்ப ஸ்வாமி கர்நாடக சத்திரத்திற்கு எழுந்தருளி பின்னர் கோவிலை வந்தடைவது வழக்கம்.

  • Muthu Maariamman Festival

    காளையார்கோவில் முத்துமாரியம்மன் ஆலயம் மது எடுப்பு விழா.  மழை வேண்டி பெண்கள் மது குடங்களை சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். 

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சோமசுந்தரம் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடி உற்சவம் விழாவை முன்னிட்டு மது எடுப்பு உற்சவம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. 

    ஆடிமாத உற்சவ விழா கடந்த 16ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நாள்தோறும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். விழாவின் முக்கிய நிகழ்வான இன்று, நேர்த்திக்கடன் இருந்த பக்தர்கள் இன்று மது குடங்களை தலையில் சுமந்து நகரின்  முக்கிய வீதிகள் வழியாக வந்து வாள் மேல் நின்ற அம்மன் கோவில் குளத்தில் கரைத்தனர். 

    முன்னதாக விரதம் இருந்த பெண்கள் கோயில் முன்புறம் ஒன்று கூடி கரகம், மதுக்குடங்களை வைத்து கும்மியடித்து, மழை வேண்டி அம்மனிடம் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இதனை தொடர்ந்து மேளதாளங்கள் வாணவேடிக்கைகள் முழங்க நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து  வாள் மேல் நின்ற அம்மன் ஆலய குளத்தில் தாங்கள் கொண்டு வந்த மதுக்கூட புனித நீரை ஊற்றினர். 

    மழை வேண்டி நடைபெற்ற இந்த விழாவில் ஜாதி மதம் கடந்து ஏராளமான பெண் பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றிட அம்மனை மனம் உருக வழிபட்டுச் சென்றனர்
     

  • July 25 Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – புகழ் 
    ரிஷபம் – கீர்த்தி     
    மிதுனம் – சுபம்  
    கடனம் – நட்பு
    சிம்மம் – அன்பு
    கன்னி –  அமைதி  
    துலாம் –  வெற்றி
    விருச்சிகம் – வரவு
    தனுசு – சுகம் 
    மகரம் –   கோபம் 
    கும்பம் – விவேகம் 
    மீனம் – திறமை
    சந்திராஷ்டமம்    – சித்திரை,சுவாதி
     

  • July 25 Indraya Naal Eppadi

    ஜூலை 25 – இன்றைய நாள் எப்படி?
    விகாரி வருடம் – ஆடி 9
    25-ஜூலை-2019 வியாழன்  
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    அஷ்டமி          
    திதி நேரம்    :    அஷ்டமி    மா    4.09
    நட்சத்திரம்    :    அசுவினி    ம    3.21
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சித்திரை,சுவாதி
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்