Blog

  • August Month predictions – Simmam

    (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
    சிம்மராசியினரே இந்த மாதம் ராசிநாதன் சூரியன் விரையஸ்தானத்தில் இருக்கிறார். பின்பாதியில் ராசிக்கு ஆட்சியாக வருகிறார். வீண் அலைச்சல் குறையும். சிக்கல்கள் தீரும். எண்ணிய காரியம் கைகூடும் குறிக்கோள் நிறைவேறும். சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். சமூகத்தில் அந்தஸ்து உண்டாகும்.  

    தொழில் வியாபாரத்தில் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்க முற்படுவார்கள். அவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது.  வாடிக்கையாளர்களின் தேவைகளை சமாளித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் உண்டாகும். குறிக்கோளை அடைவது லட்சியமாக கொண்டு செயல்படுவீர்கள். புதிய தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும். 

    குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த வாக்குவாதங்கள் அகலும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியே  தங்க நேரிடலாம்.  சுபச்செலவுகள்  ஏற்படும் வாய்ப்பு உள்ளது.  உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம். அடுத்தவரை பார்த்து எதையும் செய்ய தோன்றலாம். அதனை விட்டு விடுவது நல்லது.

    பெண்களுக்கு எண்ணிய காரியம் கை கூடும். வீண் அலைச்சல் குறையும் சிக்கலான பிரச்சனைகளில் நல்ல முடிவு கிடைக்கும்.

    கலைத்துறையினருக்கு வீண்வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த காரியங்கள் தடைகளின்றி முடியும். எதிர்ப்புகள் மறையும். 

    அரசியல் துறையினருக்கு பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். மனஉறுதி அதிகரிக்கும். சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும். 
    மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் மதிப்பெண் பெற எண்ணுங்கள். அதற்கான முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.

    பரிகாரம்: தினமும் கோதுமை தூளை காகத்திற்கு வைக்க பிரச்சனைகள் குறையும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி
    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

     

  • August Month predictions- Kadagam

    (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
    கடக ராசியினரே இந்த மாதம் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை  வெற்றிகரமாக செய்வீர்கள். ஆனால் தாமதமான பலனே கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக வந்து சேரும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனமாக இருப்பது நல்லது. தைரியம் அதிகரிக்கும். 

    தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் ராசியில் இருக்கிறார். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக இல்லாவிட்டாலும் நிதானமாக இருக்கும். பணவரத்து வரும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.

    நீண்ட நாட்களாக தொழிலில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஆலோசித்து செய்வது நன்மை தரும். மேல் அதிகாரிகள் கூறுவதற்கு மாற்று கருத்துக்களை கூறாமல் இருப்பது நல்லது. சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். 

    குடும்பத்தில் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன்  நிதானமாக பேசுவது குடும்ப அமைதியை தரும்.   நண்பர்கள், உறவினர்கள் விலகி செல்வது போல் இருக்கும். விட்டு பிடிப்பது நல்லது. குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள்.

    பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மாற்று கருத்துக்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும்.

    கலைத்துறையினருக்கு நீங்கள் மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் தயங்க மாட்டீர்கள். பேச்சுத் திறமை அதிகரிக்கும். எதிர் பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும்.  
    அரசியல் துறையினருக்கு வீண் அலைச்சல் வேலைப்பளு இருக்கும். மனம் மகிழும் காரியங்கள் நடக்கும். பேச்சு திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். பயணங்கள் செல்ல நேரலாம். 

    மாணவர்களுக்கு எதையும் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசித்து செய்வது நன்மை தரும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

    பரிகாரம்: அம்மனுக்கு பூஜை செய்து விரதம் இருப்பது கஷ்டங்களை போக்கும். மன குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
     

  • August Month predictions – Midhunam

    (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
    மிதுன ராசியினரே இந்த மாதம் ராசியாதிபதி புதன் ஆட்சியாக சஞ்சாரம் செய்கிறார். கடித போக்குவரத்து சாதகமான பலன் தரும். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. மனதில் தைரியம் உண்டாகும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தடைபட்டிருந்த கல்வியை தொடர்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். 

    தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதூரியமான பேச்சின் மூலம் தங்களது வியாபாரத்தை லாபகரமாக செய்வார்கள். தேவையான பண உதவியும் கிடைக்கும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக உழைப்பும் அதற்கேற்ற பலனும் உண்டாகும். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நன்மை தரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணியிட மாற்றம் கிடைக்கும்.

    குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.  குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தினரிடமும் உறவினர்கள், நண்பர்களிடம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். 
    பெண்களுக்கு மனதில் தைரியம் உண்டாகும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வீண்வாக்குவாதத்தை விட்டு நிதானமாக பேசுவது நன்மை தரும். 

    கலைத்துறையினருக்கு மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். புத்தி சாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். 
    அரசியல் துறையினருக்கு வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. மேலிடத்திற்கு நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.
    மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். எதிர்பார்ப்புகளை குறைத்து இருப்பதை வைத்து முன்னேற முயற்சிப்பது நல்லது.

    பரிகாரம்:  புதன்கிழமையில் நவகிரகத்தில் புதனை நெய்தீபம் ஏற்றி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்
    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

  • August Month predictions – Rishabam

    (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)
    ரிஷப ராசியினரே இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரன் தைரியஸ்தானத்தில் இருப்பதன் மூலம் நீண்ட நாட்களாக தடைபட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். ராசியாதிபதி சுக்கிரனுடன் குரு பகவான் திரிகோணப்படி சம்பந்தம் பெறுவதன் மூலம் அதிர்ஷ்டம் உண்டாகும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலும் கொள்கைக்காக  பாடுபடுவீர்கள். அதிகம் பேசுவதை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் சொல்வதை நம்பும் முன் அதைப்பற்றி ஆலோசனை செய்வது நல்லது.

    தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஒரே குறிக்கோளுடன் இருப்பதை விட்டு வாடிக்கையாளர் தேவை அறிந்து செயல்படுவது முன்னேற்றத்திற்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும். அரசாங்கத்தின் மூலம் உதவிகளைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் துணிச்சலாக வேலைகளை செய்து  வெற்றி பெறுவார்கள். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளால் நன்மையும் உண்டாகும். எதிர்பார்த்த பதவி உயர்வில் பெறுவதில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். 

    குடும்பாதிபதி புதன் ஆட்சியாக இருப்பதால் கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். அதனால்  நன்மையும் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.  
    பெண்களுக்கு அதிகம் பேசுவதை தவிர்த்து செயலில் வேகம் காட்டுவது நல்லது. அடுத்தவர் கூறுவதை செய்யும் முன்பு அது பற்றி ஆலோசனை செய்வது நல்லது. 

    கலைத்துறையினருக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத செலவு உண்டாகும். சொத்து மனை சம்பந்தமான காரியங்களில் தடை, தாமதம் ஏற்படலாம். வீண்பயம் ஏற்படும். ஏற்கனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும். 

    அரசியல் துறையினருக்கு சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை. 
    மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் கவனத்துடன் படிப்பீர்கள். ஆசிரியர், சக மாணவர் மத்தியில் நன்மதிப்பு உண்டாகும்.

    பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வர பணத் தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

     

  • August Month predictions – Mesham

    (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
    மேஷ ராசியினரே இந்த மாதம் ராசியாதிபதி செவ்வாய் சுகஸ்தானத்தில் இருக்கிறார். எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களது செய்கை உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். எனவே நிதானமாக இருப்பது நல்லது. சொந்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன விஷயங்களால் மன நிறைவை அடைவீர்கள். எதிர்பாலினரிடம் பழகும் போது கவனம் தேவை.  

    தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். மருந்து, ரசாயனம் போன்ற தொழில்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான காரியங்களில் ஈடுபடும் போது அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது காரிய வெற்றியை உண்டாக்கும். எளிதில் மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு உண்டு.

    குடும்பஸ்தானத்தை குரு பார்க்கிறார். குடும்பம் தொடர்பான கவலைகள் மறையும். குடும்ப செலவை சமாளிக்க  பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் ஆன்மீக எண்ணங்கள் ஏற்படும். வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும்.

    பெண்களுக்கு அடுத்தவர்கள் செயல்கள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். எனவே  நிதானமாக செயல்படுவது நன்மையை தரும். எந்த பிரச்சனையையும் சமாளிக்கும் திறமை  கூடும். 
    கலைத்துறையினருக்கு நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். தேவையான  பொருள்களை வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் வரும்.

    அரசியல் துறையினருக்கு மனஸ்தாபம் நீங்கும். நண்பர்களிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. வாழ்வில் முன்னேற அக்கறை காட்டுவீர்கள். மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி  திருப்திகரமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி குறையும். எதையும் அவசரப்படாமல் நிதானமாக செய்வது நல்லது.

     

    பரிகாரம்: கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகனை வணங்க பிரச்சனைகள் குறையும். மனதில் அமைதி உண்டாகும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்; 

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
     

  • Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – சாந்தம் 
    ரிஷபம் – தடங்கல்   
    மிதுனம் – வெற்றி
    கடனம் – நட்பு
    சிம்மம் – கோபம் 
    கன்னி –  அச்சம்  
    துலாம் –  பெருமை 
    விருச்சிகம் – சிரமம் 
    தனுசு – சோதனை
    மகரம் –   முயற்சி
    கும்பம் – அனுகூலம்  
    மீனம் – புகழ்
    சந்திராஷ்டமம்    – விசாகம்,அனுஷம்

  • July 27 Vasthu Naal

    ஜூலை 27 – வாஸ்து நாள்
    விகாரி வருடம் – ஆடி 11
    27-ஜூலை-2019 சனி  
    வாஸ்து நாள்(காலை 07.44 – 08.20)
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    தசமி          
    திதி நேரம்    :    தசமி    மா    4.26
    நட்சத்திரம்    :    கார்த்திகை    மா    5.02
    யோகம்    :    அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    விசாகம்,அனுஷம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Thiruchendur Hundiyal Kanikkai

    திருச்செந்தூர் அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஜுலை மாத உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே அறுபத்தொறு லட்சம் ரூபாய்  கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

     உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை மாதத்திற்கான உண்டியல் எண்ணிக்கை கோவிந்தம்மாள் ஆதித்தனார் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் குமரதுரை தலைமையில் இன்று நடைபெற்றது. சிவகாசி பதினென்னு சித்தர் மடம் பீடம் குருகுல வேதபாடசாலை உழவாரப்பணிக்குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர். 

    இதில்  கோவில் யானை பராமரிப்பு , கோசாலை பராமரிப்பு , அன்னதானம் மற்றும்  நிரந்தர உண்டியல் என அனைத்து உண்டியல்களிலும் ஜூலை மாதத்திற்கான  உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே 61லட்சத்து 41 ஆயிரத்து 909 ரூபாய் மொத்தம் கிடைக்கப்பபெற்றுள்ளது.  

    மேலும் 1375 கிராம் தங்கமும்,    20,266 கிராமும் வெள்ளியும் காணிக்கையாக கிடைக்கப்பெற்றது. மேலும் லண்டன்,  சிங்கப்பூர் , மலேசியா போன்ற   வெளிநாட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 536 அயல்நாட்டு நோட்டுகளும்  காணிக்கையாக கிடைக்கபெற்றுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • Atthi Varadhar VIP Dhnarshan

    40 ஆண்டுகளுக்கு பிறகு காட்சி தரும் காஞ்சி அத்தி வரதரை தரிசிக்க நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பொது தரிசனத்திற்கு சுமார் 6 மணி நேரம் வரை ஆகிறது. 

    இந்த நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவக்டிககைகளை எடுத்து வருகிறது. 

    இதன்படி விஐபி தரிசனம் நன்கொடை பாஸ் வைத்திருப்பவர்கள் காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 மணிக்கு மேல் வந்தால் நன்கொடை பாஸ் வைத்திருப்பவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

    ஆன்லைன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அத்தி வரதரை தரிசிக்க அனுமதிக்கபடுவார்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார். 

  • Aadi kiruthigai murugan temples

    ஆடி கிருத்திகை தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

    தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்தனர். எராளமான பக்தர்கள், கடலில் புனித நீராடி, பால் குடம் எடுத்தும், காவடி எடுத்து ஆடிப் பாடியும் வேண்டுதல் நிறைவேற்றினர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலில், ஆடிக் கிருத்திகை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், மற்றும் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மூலவர் முருகப்பெருமான் வள்ளி தேவானை தாயாருடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் பால்குடம் எடுத்தும் காவடி ஏந்தியும் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

    திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயிலில் அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது.  ஆயிரக்கணக்கான பக்தர்கள நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ஏராளமானோர் காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.

    முருகப் பெருமான் செவ்வாயின் அம்சம். ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத் தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்சினைகள், சகோதரர்களால் சங்கடங்கள், குருதிசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆடிக் கிருத்திகை தினத்தில் கந்தனை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சனைகள், தொல்லைகள் தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும்.