Blog

  • Karikaal Mangani thiruvizha

    63-நாயன்மார்களில் ஒருவரும், அம்மையப்பன் இல்லாத இறைவன் சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவரும், அமர்ந்த நிலையில் இருப்பவருமான சிறப்பு பெற்ற காரைக்காலம்மையாரின் வாழ்க்கை வரலாறு அனைவரும் அறிந்ததே. 

    அவரது கணவர் பரமத்தத்தர் கொடுத்தனுப்பிய மாங்கனிகளில் ஒன்றினை சிவனடியாருக்கு அமுதிட்டு பின்னர் கணவர் வந்து சாப்பிட கேட்ட இரண்டாவது மாங்கனியினை இறைவனிடம் வேண்டிப்பெற்றவர். 

    இதனால் அவரது கணவர் பிரிந்து மதுரைக்கு சென்று மாற்றாளை மணந்து அவரது மகளுக்கு இவரது பெயரான புனிதவதியார் என்ற பெயரை சுட்டி இவர் தேடி வந்த போது இவரின் காலில் விழுந்து குடும்பத்தோடு வணங்கியதால் தனது உடலை உதிர்த்து பேயுறு வாங்கியவர் காரைக்காலம்மையார் என்றழைக்கப்படும் புனிதவதியார். 

    பின்னர் இறைவன் உள்ள கைலாயமலையில் காலூன்றாமல் கைகொண்டு தலைகீழாக நடந்து சென்று அதன்பின்னர் திருவாலங்காட்டில் முக்திபேறு அடைந்தவர். இவர் இயற்றிய திருவிரட்டை மணிமாலை, திருவந்தாதி நூல்கள் தமிழுக்கு அவர் அளித்த கொடை. கர்நாடக இசைக்கு முன்னோடியாக விளங்கிய காரைக்காலம்மையார் தென்னக இசையின் தாய் என்று போற்றப்படுகிறார்.
             
    ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற இவரது வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் விதமாக காரைக்காலில் ஆண்டு தோறும் மாங்கனித்திருவிழா நடைபெற்று வருகிறது. அம்மையார் இறைவனிடம் மாங்கனிப்பெற்றதன் நினைவாக பக்தர்கள் மாங்கனிகளை வேண்டிப்படைத்து அதனை வீசியெறிவதும் தாவிப்படிப்பதுமான நிகழ்வு இந்தியாவில் வேறெங்கும் காணமுடியாத அற்புதம். 

    பிரசித்திபெற்ற மாங்கனித்திருவிழா காரைக்காலில் வரும் 13-ம் தேதி மாலை விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்குகிறது. முதல் நிகழ்வாக மாப்பிள்ளை அழைப்பு, அதனைத்தொடர்ந்து அடுத்தநாள் 14-ம் தேதி திருக்கல்யாணம், அன்று மலை சிவபெருமான் பிட்ஷாடணமூர்த்தியாக எழுந்தருளி வெள்ளை சாத்தி புறப்பாடு நடைபெறவுள்ளது. 

    முக்கிய நிகழ்ச்சியான மாங்கனி இறைத்தல் 16-ம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக பிட்ஷாடண மூர்த்தியான சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடைபெற்று அடியார் கோலத்தில் பவழக்கால் விமானத்தில் பத்மாசனத்தமர்ந்து வேதபாராயணத்துடன் வீதியுலா நடைபெறும். அப்போது பக்தர்கள் வேண்டுதலுக்காக மாங்கனிகளை வீசியெறியும் நிகழ்ச்சி நடைபெறும். இது வேறெங்கும் காண முடியாத அரிய நிகழ்ச்சியாகும்.  

    மாங்கனித் திருவிழாவையொட்டி அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோயிலில் அதற்கான பூர்வாங்கப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பந்தல்போடும் பணியும் நடைபெற்று வருகிறது. திருவிழாவின் போது பயன்படுத்தப்படும் பொம்மைகளும் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. மொத்தத்தில் காரைக்காலின் மிகப்பெரும் விழாவான மாங்கனித்திருவிழாவிற்கு தீவிராமாக தயாராகிக் கொண்டிருக்கிறது காரைக்கால்.
     

  • Thirupathy Hundiyal Kanikkai

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வியாழக்கிழமை காலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 44 ஆயிரத்து 574 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 

    புதன்கிழமை காலை 3 மணி முதல் இரவு 12 மணிவரை 70,028 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கைகளை வியாழக்கிழமை எண்ணப்பட்டது. இதில் 4.50 கோடி ரூபாய் பக்தர்கள் உண்டியலில் செலுத்தி உள்ளனர்.

    மாலை 6 மணி நிலவரப்படி இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வைகுண்டத்தில் உள்ள 31 அறைகளும் நிரம்பி கோகுலம் பக்தர்கள் ஓய்வு அறை வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருப்பதால் தரிசனத்திற்கு 24 மணி நேரம்

    ரூபாய் 300 டிக்கெட் ஆன்லைன் மூலம் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்

    ஆதார் அடையாள அட்டையின் மூலமாக சர்வ தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்கள் மற்றும் மலைப் பாதையில் பாதயாத்திரையாக வந்து திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் அனுமதிக்கப்பட்டு 5 மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்
     

  • Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – இன்பம் 
    ரிஷபம் – பாராட்டு
    மிதுனம் – சுகம் 
    கடனம் – வரவு
    சிம்மம் – அமைதி
    கன்னி –  மேன்மை 
    துலாம் –  தாமதம் 
    விருச்சிகம் – செலவு
    தனுசு – சுபம் 
    மகரம் –   நிம்மதி
    கும்பம் – சாந்தம்  
    மீனம் – நன்மை 
    சந்திராஷ்டமம்    – அசுவினி, பரணி
     

  • July 12 Indraya Naal Eppadi

    ஜூலை 12 – ஸ்மார்த்த ஏகாதசி
    விகாரி வருடம் – ஆனி 27
    12-ஜூலை-2019 வெள்ளி 
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    ஏகாதசி          
    திதி நேரம்    :    ஏகாதசி    இ    3.14
    நட்சத்திரம்    :    விசாகம்    இ    7.09
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    : அசுவினி, பரணி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Soundararaja perumal koil kumbabishegam

    சேலம் அம்மாப்பேட்டையில் பிரசித்தி பெற்ற சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேக  விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். 

     சேலம் மாநகர்,  அம்மாபேட்டையில் அமைந்துள்ள பிரசித்திப்பெற்ற  ஸ்ரீ சவுந்தரவல்லி சமேத வரதராஜ பெருமாள் தேவஸ்தானத்துக்கு சொந்தமான சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த வாய்ந்தது. 

    இந்த கோவிலில் சௌந்தரராஜ பெருமாள், சௌந்தரவல்லி தாயார், ஸ்ரீ ஆண்டாள், தன்வந்தரி, வைஷ்ணவி கருடன், ஆஞ்சநேயர் ராமானுஜர் போன்ற பல்வேறு இது இஷ்ட தெய்வங்கள் அமையப்பெற்று பக்தர்களுக்கு அருள் பாவித்து வருகின்றனர். இந்த கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்து,  கோவிலின் விமான கோபுரத்தை  அழகுப்படுத்தி,  புனரமைத்து கோவில் வளாகத்தில் இந்தியாவில் உள்ள 108 திவ்யதேச கோயில்களை ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ் அமைந்திருக்கும்  வகையில்  108 திவ்ய தேச கோயில்களையும்  சிலை வடிவில் வடிவமைத்து பெருமை சேர்த்துள்ளனர்.

    இந்நிலையில்  பணிகள் முடிவடைந்து , இன்று திருக்கோயில் கும்பாபிஷேகம் மற்றும் மகா சம்ப்ரோக்ஷண விழா  வெகு விமர்சையாக நடைபெற்றது . கடந்த  செவ்வாய்க்கிழமை முதல் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. இதற்கான  யாக சாலைகள் அமைக்கப்பட்டு,  முதல் கால, இரண்டாம் மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடைபெற்றன. 

    இதனையடுத்து   இன்று காலை நான்காம் மற்றும் ஐந்தாம் கால பூஜைகள் மற்றும் பூர்ணாகுதி செய்யப்பட்டு, யாகசாலைகளில் வைக்கப்பட்ட தீர்த்த கலசங்கள் மேளதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோயில் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேள வாத்தியங்கள் இசைக்க, வானவெடிகள்  முழங்க, வானமாமலை ஸ்ரீ ஸ்ரீ மதுரகவி ராமானுஜர் சுவாமி திருக்கோவிலில் ஸ்ரீ மத் எம்பெருமானார் ஜீயர் சுவாமி திருச்சித்ரகூடம் கூடம் ஸ்தலத்தார் பூவே ரங்காச்சாரி உள்ளிட்டோர் முன்னிலையில் கோபுரத்தில் அமையப்பெற்ற கலசங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு மகா சம்ப்ரோக்ஷண விழா நடைபெற்றது .

    இதனைதொடர்ந்து கோவிலில் உள்ள அனைத்துத் தெய்வங்களுக்கும் 108 திவ்ய தேச கோயில்களுக்கும் சம்ப்ரோஷணம் விழா சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து கோவில் மீது ஊற்றப்பட்ட புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இந்த வைபவத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் முன் திரண்டு கோபுரதரிசனம் செய்து,  சௌந்தரராஜப் பெருமாளையும் வணங்கினர். தொடர்ந்து கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

  • Prathapa simeswarar koil kumbabishegam

    பழமை வாய்ந்த ஸ்ரீ பிரதாப சிம்மேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி அமைச்சர் கமலக்கண்ணன் உட்பட ஏராளமான பக்தர்கள்  பங்கேற்று சாமி தரிசனம்.

    காரைக்கால் அருகே உள்ள அகர சேத்தூர்  பகுதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ பிரதாப சிம்மேஸ்வர சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோயிலில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

    இந்த கும்பாபிஷேகத்தை ஒட்டி கோயிலின் திருப்பணிகள் கடந்த  6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது. கோயிலின் திருப்பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 07ஆம் தேதி அன்று தொடங்கியது 21 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் 8ம் கால யாகபூஜை இன்று காலை 10  மணிக்கு நிறைவடைந்தது. இதையடுத்து மேளதாள வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது.

    யாகத்தில் வைக்கப்பட்டு பூஜை செய்த புனித நீர் கலசங்களை சிவாச்சாரியர்கள் தலையில்  சுமந்து பிரகாரம் சுற்றி வந்து பின்னர் கோபுர கலசங்களுக்கு கொண்டு சென்றனர்.

    இதை தொடர்ந்து  கோயிலின்  கலசங்களுக்கு  சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்ற,  கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தீபாராதனையும் ,சுவாமி ,அம்பாளுக்கு அபிஷேகமும் நடைபெற்றன. இக்கும்பாபிஷேகத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன்  ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
     

  • Karpaga vinayakar koil kumbabishegam

    அரக்கோணத்தில் அருள்மிகு கற்பக விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமற்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு விநாயகர் அருளை பெற்றனர். 

    வேலூர் மாவட்டம் அரக்கோணம் சுவால்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு கற்பக விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 9 ம் தேதி ஸ்ரீ விக்னேசுவரா பூஜை, ஸ்ரீ மகா கணபதி ஹோமம், ஸ்ரீ மகா லட்சுமி ஹோமம் போன்ற பல்வேறு பூஜைகளுடன் துவங்கியது. 

    நாள் தோரும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை 4ம் கால யாகசாலை பூஜைகளுடன் துவங்கி வேத பண்டிதர்கள் மந்திரங்களை முழுங்க கோபுரத்தில் புனித நீர் ஊற்றி அருள்மிகு கற்பக விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றது. 

    பின்னர் ஆலயத்தில் பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு விநாயகரை வழிப்பட்டனர். 
     

  • Athi Varadhar dharshan

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு காட்சி தரும் அத்தி வரதரை கடந்த 10 நாட்களில் மட்டும் 12 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். 

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் வைபவ திருவிழா ஜூலை 1 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட்டு 17 ஆம் தேதி வரை 48 நாட்கள் திருவிழா நடைபெறுகின்றது.

    11வது நாளான இன்று அத்தி வரதர் காவி நிற பட்டாடையிலும் கதம்பம் பூ மலர்களால் அரங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றார்.

    நேற்றுடன் 10 நாட்களில் 12 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா  தெரிவித்துள்ளார்.

    48 நாட்கள் நடைபெறும் அத்தி வரதர் திருவிழாவுக்காக வெளி மாநில, வெளி நாடுகளில் இருந்து அத்தி வரதரை தரிசனம் செய்ய காஞ்சிபுரம் வந்த வண்ணம் உள்ளனர். கோயில் வளாகம் மட்டும் அல்லாமல் நகரம் முழுவதும் போலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

    இன்று  காலை  5 மணி முதலே  வெளி மாநிலங்களிலும், வெளி மாவட்டங்களில் இருந்தும் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்தி வரதரை தரிசனம் செய்து வருகின்றனர் அத்தி வரதரை தரிசிக்க மாவட்ட நிர்வாகம் அனைத்து வசதிகளும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அத்தி வரதரை தரிசிக்க வந்த பக்தர்கள் கூறுகின்றனர். 

    மேலும் நாளை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் அத்திவரதரை தரிசனம் தரிசனம் செய்ய இருக்கிறார். 
     

  • Rasi palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – புகழ்
    ரிஷபம் – ஆதாயம் 
    மிதுனம் – தனம்   
    கடனம் – விவேகம் 
    சிம்மம் – சுகம் 
    கன்னி –  ஆதரவு
    துலாம் –  தாமதம்  
    விருச்சிகம் – லாபம் 
    தனுசு – தெளிவு
    மகரம் –   நன்மை 
    கும்பம் – அன்பு  
    மீனம் – நிம்மதி
    சந்திராஷ்டமம்    – ரேவதி, அசுவினி
     

  • July 11 Indray Naal Eppadi

    ஜூலை 11 – ராமநாதபுரம் கோதண்டராமர் தேர்
    விகாரி வருடம் – ஆனி 26
     subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    ராமநாதபுரம் கோதண்டராமர் தேர்
    11-ஜூலை-2019 வியாழன்  
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    தசமி          
    திதி நேரம்    :    தசமி    அ.கா    4.19
    நட்சத்திரம்    :    சுவாதி    இ    7.38
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரேவதி,அசுவினி
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்