இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – உயர்வு
ரிஷபம் – சுகம்
மிதுனம் – நேர்மை
கடனம் – கோபம்
சிம்மம் – விவேகம்
கன்னி – நன்மை
துலாம் – உதவி
விருச்சிகம் – அமைதி
தனுசு – பிரீதி
மகரம் – கவனம்
கும்பம் – அலைச்சல்
மீனம் – தடங்கல்
சந்திராஷ்டமம் – சதயம்,பூரட்டாதி
Blog
-
Rasi Palan
-
July 8 Aani Uthiram
ஜூலை 8 ஆனி உத்திரம்
விகாரி வருடம் – ஆனி 23
subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
ஆனி உத்திரம்
08-ஜூலை-2019 திங்கள்
வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 6.00 – 7.30)
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : சப்தமி
திதி நேரம் : சஷ்டி ம 12.03
நட்சத்திரம் : உத்திரம் இ 11.02
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : சதயம்,பூரட்டாதி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
Chidamparam car fest
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது சிவ சிவ என்ற பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாகிய விளங்குவது சிதம்பரம் நடராஜர் கோயில். சைவர்களுக்கு கோயில் என்றாலே அது சிதம்பரத்தைக் குறிக்கும். இந்த பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மற்றும் ஆன் மாதங்களில் தேரோட்டம் மற்றும் தரிசன விழா சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டிற்கான ஆனித் திருமஞ்சன தரிசன விழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர் முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 சாமிகள் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் வைத்து நகரத்தின் நான்கு மாட வீதிகளையும் வலம் வந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
தேருக்கு முன்னால் பெண் பக்தர்கள் கோலமிட்டபடி நகரை அழகுபடுத்த, சிவ பக்தர்கள் சிவ கோஷம் முழங்க பல்வேறு இசைக் கருவிகளுடன் நடனமாடி நடராஜர் தேருக்கு முன்னால் சென்றனர். தேரோட்டம் முடிந்து இரவு தேர் நிலைக்கு வந்தது. பின்னர் தேரில் இருந்து நடராஜர் உள்ளிட்ட சுவாமிகள் இறக்கப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து நாளை காலையில் மகாஅபிஷேகமும், பின்னர் திருவாபரண அலங்காரம், சித்சபை ரகசிய பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள், லட்சார்ச்சனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.
நாளை மதியம் 2 மணி அளவில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா நடைபெறுகிறது. அப்போது நடராஜர், சிவகாமசுந்தரி சகிதம் நடனமாடியபடியே பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய உள்ளனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
-
Thirupathy Ezhumalayan Online ticket
ஏழுமலையானைத் தரிசிக்க திருமலைக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகக் கோடை விடுமுறை காரணமாக திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
இலவச தரிசனம் செய்ய பல மணி நேரம் காத்திருக்க முடியாத பக்தர்கள் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்று விரைவாக தரிசனம் செய்வது வழக்கம்.
அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாத ரூ 300 காண தரிசன டிக்கெட் , அறைகள் ஆன்லைளில் 9 ஆம் தேதி வெளியீடப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாதத்திற்கான ரூபாய் 300 காண சிறப்பு தரிசன டிக்கெட், அறைகள் 9 ஆம் தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளும் விதமாக தேவஸ்தானம் கோட்டா வெளியீடு செய்ய உள்ளது.
எனவே பக்தர்கள் இந்த தகவல் மூலம் அக்டோபர் மாதம் சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 9 ஆம் தேதி முதல் தேவஸ்தான இணையதள முகவரி www.ttdsevaonline.com , தேவஸ்தானம் இ தரிசன கவுண்டர்கள், தபால் நிலையங்களில் ரூ 300 டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் ஆன்லைனில் அறைகள் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Thiruthani Theppa Thiruvizha
திருத்தணி முருகன் கோவிலில், வரும், 26ம் தேதி துவங்கி, 28ம் தேதி வரை நடை பெறும் தெப்பத் திருவிழாவிற்காக, குளத்தில், டிராக்டர் மூலம் தண்ணீரை நிரப்ப, கோவில் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும், ஆடி மாதத்தில் வரும் கிருத்திகையை ஆடிக்கிருத்திகையாக கொண்டாடப்படுகிறது.ஆடிக்கிருத்திகையை ஒட்டி, மலையடிவாரத் தில் உள்ள சரவண பொய்கை என்கிற திருக்குளத்தில், மூன்று நாட்கள் தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது.
அந்த வகையில், நடப்பாண்டிற்கான ஆடி அஸ்வினி, 24ம் தேதியும், ஆடி பரணி, 25ம் தேதியும், ஆடி கிருத்திகை, 26ம் தேதியும் நடைபெற உள்ளது.ஆடி கிருத்திகையையொட்டி, 26ல் துவங் கும் தெப்பத் திருவிழா, 28ம் தேதி வரை நடக்கிறது.
இந்நிலையில், கடந்தாண்டு பருவ மழை இல்லாததால், கோவில் குளத்தில் தண்ணீர் மிக குறைந்த அளவில் உள்ளது.இதில் தண்ணீரில் தெப்பம் கட்டுவதற்கும், தெப்பத் திருவிழா நடத்துவதற்கும் முடியாது. திருத்தணியில் போதிய மழை பெய்யாததால், குளத்திற்கு தண்ணீர் வரத்து இல்லை.ஆகையால், முதற்கட்டமாக தெப்பம் கட்டுவதற்கு, டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்து, திருக்குளத்தில் விடுவதற்கு, கோவில் நிர்வாகம் தீர்மானித்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது.
இதற்காக, தனியார் டிராக்டர் உரிமையாளர்களிடம் பேச்சு நடத்தி, ஒரு டிராக்டர் தண்ணீர், 600 ரூபாய் வீதம், திருக்குளத்திற்கு விடுவது என, தீர்மானித்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் விட பக்தர்களுக்கு அழைப்புமுருகன் கோவில் திருக்குளத்தில் தண்ணீர் இல்லாத தால், தெப்பத் திருவிழா நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, கோவில் நிர்வாகம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் டிராக்டர் மூலம் தண்ணீர் விட ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அதன்படி கடந்த மூன்று தினங்களாக டிராக்டர் மூலம் தண்ணீர் திருக்குளத்திற்கு விடப்பட்டுள்ளது. தொடர்ந்து இப்பணிகள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
Rasi Palan
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – விவேகம்
ரிஷபம் – நற்செய்தி
மிதுனம் – தனம்
கடனம் – தோல்வி
சிம்மம் – அன்பு
கன்னி – பாராட்டு
துலாம் – ஆர்வம்
விருச்சிகம் – உற்சாகம்
தனுசு – மகிழ்ச்சி
மகரம் – சுகம்
கும்பம் – புகழ்
மீனம் – போட்டி
சந்திராஷ்டமம் – அவிட்டம்,சதயம் -
Nellaiappar koil Aani therottam
நெல்லையப்பர் கோவிலில் ஆனி தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.
பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். திருஞானசம்பந்தர் பதிகம் பாடிய தலமும் ஆகும்.
இந்த கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாக்களில் ஆனி மாதம் 10 நாட்கள் நடைபெறுகின்ற தேரோட்ட திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். ஆனி திருவிழாவையொட்டி தேரோட்டமும் நடைபெறும்.
இந்த நிலையில், நெல்லையப்பர் கோவிலில் ஆனி தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 10 நாள் திருவிழாவின் 9ம் நாளான 14ந்தேதி முக்கிய நிகழ்ச்சியான ஆனி தேரோட்டம் நடைபெறுகிறது.
-
Drowpathy amman koil thiruvizha
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பேளூர் பேரூராட்சி மற்றும் குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட திரெளபதி அம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

36 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது நடைபெற்று வரும் விழாவை கான ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.



செவ்வாய்கிழமை அன்று தீமிதி திருவிழா நடைபெறுவதையொட்டி இன்று துரோபதி அம்மன் திருக்கல்யாணம் பூஜை நடைபெற்று சாமி ஊர்வலம் நடைபெற்றது.
-
Thiruthani murugan koil Aadi kiruthigai
திருத்தணி முருகன் கோவிலில் இம்மாதம், 24ம் தேதி முதல் 28 ம் தேதி வரை ஆடிக்கிருத்திகை திருவிழா நடைபெற உள்ளது. மொத்தம் ஐந்து நாட்கள் நடைபெறும் விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் வந்து முருகப்பெருமானை தரிசிப்பர்.
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆட்சியர் மகேஸ்வரி தலைமையில் முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் மலைக்கோவிலில் நடந்தது.
ஆலோசனை கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தரப்படவுள்ளது. விழாவிற்கு, அரசு போக்குவரத்து துறை சார்பில், மொத்தம், 260 பேருந்துகளும், ரயில்வே துறை சார்பில் மூன்று நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பக்தர்கள் பாதுகாப்புக்காக, 2000 போலீசார் ஈடுபடுத்தபட உள்ளனர். முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்றச்சம்பங்கள் எதுவும் நடக்காமல் இருக்கவும், பொது சுகாதார துறை சார்பில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி கூறி இருக்கிறார்.