Blog

  • Kanchi athi varadhar

    சின்ன காஞ்சிபுரத்தில் பழமை வாய்ந்த வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள ஆனந்தபுஷ்கரினி என்ற குளத்தில் இருந்து வருகிற 1/07/2019 தேதியில் அத்திவரதர் வெளியே வந்து நாற்பத்து எட்டு 48 நாட்கள் வசந்த மண்டபத்தில் அருள்புரிகிறார். நின்ற கோலத்தில் இருபத்தி நான்கு 24 நாட்கள்.  சயன கோலத்தில் இருபத்தி நான்கு 24 நாட்கள்
     
    அடுத்த தரிசனம் 2059ல்  நாற்பது ஆண்டுகள் பின் கிடைக்கும். 40 ஆண்டு ஒரு முறை மட்டுமே அத்திவரதரை காண முடியும். ஏனெனில் அவர் இருப்பதோ,  நம்   கண்ணனுக்கு புலபடாத தண்ணிருக்கு அடியில். கோவிலின் நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள இரண்டு குளங்களில் தென்திசையில் உள்ள நீராழி மண்டபத்தின் கீழே நீருக்கு அடியில் உள்ள ஒரு மண்டபத்தில் தன்னை மறைத்துக்கொண்டு இருக்கிறான் அத்தி வரத பெருமாள்.

    இந்த குளத்தின் நீர் என்றும் வற்றுவ தில்லை. அதனால் பெருமாள் யார் கண்ணுக்கும் புலப்பட மாட்டார். பெருமாளின் தாருமயமான திருமேனி. மிகப்பெரிய அத்தி மரத்தால் வடித்து , பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரம்மனின் யாகத் தீயினின்று தோன்றியதால் சிறிது பின்னப்பட்டுவிட்டார். எனவே அசரீரி மூலம் தன்னை ஆனந்தத் தீர்த்தத்தில் விட்டுவிட்டு பழைய சீவரத்திலிருந்து சிலையை காஞ்சியில் பிரதிஷ்டை செய்யுமாறு கூறினார்.

    பெருமாள் பெரும் உஷ்ணத்தைத் தணிக்கவே தெப்பக் குளத்தில் வாசம் செய்கிறாராம். அப்படியே இவரை வெள்ளித் தகடு பதித்த பெட்டியில் சயனக் கோலத்தில் வைத்து ஆனந்த புஷ்கரணி மண்டபத்தின் நடுவே நீரில் வைத்து விட்டனர்.

    பழைய சீவர பெருமாளை தேவராஜப் பெருமாள் என பிரதிஷ்டை செய்து விட்டனர். ஆனந்த தீர்த்தம் என்றும் வற்றாது. எனவே நீரை இறைத்து விட்டு ஆதி அத்தி வரதரை வெளியே கொண்டு வருவார்கள்.

    வெள்ளி தகடுகள் பதித்த பெட்டியில் சயன கோலமாக, அமிர்தசரஸ் என்னும் அந்த குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள்,  40 வருடங்களுக்கு  ஒரு முறை, மேலே வந்து, சயன மற்றும் நின்ற கோலமாக எழுந்தருளி இருப்பார்.

    வசந்த மண்டபத்தில் 48 நாட்கள் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்…

    நின்ற கோலத்திலும்,சயனக் கோலத்திலும் தரிசனம் தந்தபின் மீண்டும் அனந்தத் தீர்த்தத்தில் சயனித்து விடுவார். பக்தர்கள் மிகவும் தொன்மையான இந்த அத்தி வரதரை, உற்சவ விழா வழிபாட்டோடு கண் குளிர தரிசிக்கலாம். பிறகு மீண்டும் வெள்ளி தகடுகள் பதித்த பெட்டியில் வைத்து குளத்தில் மூழ்கடிக்கப் பட்டுவிடுவார்.

  • Thirumana thadai neekum Tuesday

    செவ்வாய் தோஷம் காரணமாக சிலருக்கு திருமணம் நடைபெறக் காலதாமதம் ஏற்படக்கூடும். அதற்கு பரிகாரம் செய்ய வேண்டியது அவசியமாகும். செவ்வாய் தோஷ பரிகாரங்கள் பல வகைகளில் செய்யப்படுகின்றன. 

    செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதி நாளில் விநாயகருக்கு அபிஷேக ஆராதனை செய்து விரதம் இருப்பதால் நல்லவை நடைபெறும். 41 செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும். விரதநாள் அன்று அதிகாலை எழுந்து நீராடி சிவந்த ஆடை உடுத்தி, செவ்வாய் கிரகத்திற்கு செண்பகப்பூ, சிவப்பு அலரி ஆகிய மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். 

    விரதம் பூர்த்தி செய்யும் நாள் ஐந்து பேருக்கு விருந்து அளிக்க வேண்டும். அவர்களுக்கு சிவப்பு நிறத்தில் ஆடைகள், செம்புச் சொம்பு, தம்ளர் மற்றும் தாம்பூலத்துடன் தட்சணையும் அளித்து அவர்களை வணங்கி ஆசிபெற வேண்டும்.

    செவ்வாய் தோஷமுள்ள பெண்ணுக்கு திருமணம் தடங்கலாகிக் கொண்டே வந்தால் வளர்பிறையில் வரும் செவ்வாய்க்கிழமையில் பரிகாரம் செய்ய வேண்டும். அந்த பரிகாரத்தை நாமே நம் வீட்டிலேயே செய்து கொள்ளலாம். வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை நீராடி சிவந்த ஆடை உடுத்தி மாங்கல்யத்தை தெய்வத்தின் முன் மஞ்சள் சரட்டில் கோர்த்து வைத்து வணங்கி எடுத்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். 

    செவ்வாய்க்கிழமை முழுவதும் மாங்கல்யத்தை அவிழ்க்க கூடாது. மறுநாள் காலை நீராடி நெற்றியில் குங்குமமிட்டு தெய்வத்தை வணங்கி மாங்கல்யத்தை அவிழ்த்து ஏதாவது ஓர் ஆலயத்தின் உண்டியலில் சிறிது காணிக்கை சேர்த்து சமர்ப்பித்து விட வேண்டும். சிவந்த ஆடையை யாருக்காவது தானம் செய்து விட வேண்டும். இவ்விதம் செய்தால் திருமணம் தடையின்றி விரைவாக நடைபெற்று விடும்.
     

  • Rasi palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – நோய் 
    ரிஷபம் – திடம் 
    மிதுனம் – பகை
    கடனம் – தடங்கல்
    சிம்மம் – வரவு
    கன்னி –  ஆசை
    துலாம் –  நலம் 
    விருச்சிகம் – லாபம் 
    தனுசு – அன்பு
    மகரம் –   பரிதி 
    கும்பம் – ஜெயம்  
    மீனம் – சுகம் 
    சந்திராஷ்டமம்    – ஆயில்யம், மகம்
     

  • June 23  subamugurthanaal 

    ஜூன் 23 சுபமுகூர்த்த நாள்
    விகாரி வருடம் – ஆனி 8
    23-ஜூன்-2019 ஞாயிறு  
    சுபமுகூர்த்த நாள்(காலை 7.30 – 9.00)
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    சஷ்டி          
    திதி நேரம்    :    சஷ்டி    இ    10.58
    நட்சத்திரம்    :    சதயம்    இ    11.37
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    : ஆயில்யம், மகம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Athi varadharai kaana sirappu Erpadu

    40 ஆண்டுகளுக்குப் பிறகு அனந்தசரஸ் தெப்பக்குளத்திலிருந்து வெளிப்படும் அத்திவரதர் வரும் ஜூலை 1 – ம் தேதி பக்தர்களுக்குத் தரிசனம் தரவிருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளைக் கோயில் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. 

    அத்திவரதர் எழுந்தருளும் உற்சவ வைபவம் குறித்த பல்வேறு வதந்திகள் பரவிக்கொண்டிருந்த நிலையில் விழா ஏற்பாடுகள் குறித்த அறிவிப்பைக் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

    அத்திவரதரைத் தரிசிக்க எந்தவித முன்பதிவுகளும் தேவையில்லை என்றும் நேரடியாகச் சென்று தரிசனம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, இணையத்தில் முன்பதிவு செய்யவேண்டும் என்ற தகவல் மக்கள் மத்தியில் பரவியிருந்ததால் அதுபற்றிய அறிவிப்புகளுக்காகக் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    அடுத்த மாதம் (ஜூலை) 1 – ம் தேதி அனந்தசரஸ் குளத்திலிருந்து வெளிப்படும் அத்திவரதர் முதல் 38 நாள்கள் சயனகோலத்திலும், கடைசி 10 நாள்கள் நின்ற நிலையிலும் காட்சியளிக்கிறார். ஆகஸ்டு 17 – ம் தேதி அத்திவரதர் மீண்டும் அனந்தசரஸ் குளத்துக்குச் சென்றுவிடுவார்.
     

  • Pavam Arindhu Parigaram seiya vendum

    பரிகாரம் செய்ய சொன்னாங்க செஞ்சேன் ஏதும் நடக்கல எடைக்கு எடை காணிக்கை தர சொன்னாங்க அப்படியும் ஏதும் நடக்கல..! என்று புலம்புகிறார்கள்..!

    பரிகாரம் என்றால் உண்மையில் என்னவென்று தெரியாதவர்களுக் காக இந்த கதை! நான் படித்து தெரிந்து கொண்டதை பகிர்கின்றேன்.!

    ஜோதிடர் சொன்ன "எல்லா பரிகாரமும் செஞ்சிட்டோம்… ஒன்னும் பிரயோஜனம் இல்லை. எதுவும் நடக்கலே.. இதுக்கு மேல என்ன செய்றதுன்னே புரியலே…” –

    பல நேரங்களில் ஜோதிட ஆலோசனை களின் பேரிலும் அல்லது தோஷங்களுக் காக பரிகாரம் செய்பவர்கள் மனதிலும் தோன்றும் விரக்தி இது.

    பரிகாரம் தொடர்பான குட்டி கதை.

    ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாட சென்றார்.  நேரம் போனது தெரியாமல் வேட்டையாடிக்கொண்டிருக்கும்போது மாலை நேரம் வந்து எங்கும் இருள் கவ்வத் தொடங்கிவிட்டது. அப்போது தூரத்தில் தெரிந்த ஒரு மரத்தின் மீது ஏதோ ஒரு மிருகம் அமர்ந்திருப்பதை போல இருந்தது.

    மிகப் பெரிய உருவமாக இருந்தபடியால் ஏதேனும் கொடிய மிருகமாகத் தான் இருக்கவேண்டும் என்று கருதி, வில்லில் அம்பைப் பூட்டி மரத்தை நோக்கி பாணத்தை செலுத்தினான்.

    அடுத்த சில வினாடிகளில் மரத்தின் மீதிருந்து “ஐயோ… அம்மா” என்ற குரல் கேட்டது. ஏதோ ஒரு மிருகத்தின் ஓலம் கேட்கும் என்று எதிர்பார்த்தால் இப்படி மனிதனின் ஓலம் கேட்கிறதே…

     யாரையோ தவறுதலாக கொன்று விட்டோமோ என்று அஞ்சி மரத்தை நோக்கி விரைந்தான். அங்கு சென்று பார்த்தால் பதினாறு வயதையொத்த சிறுவன் ஒருவன் இவரின் அம்புக்கு பலியாகி வீழ்ந்து கிடந்தான்.

    “இப்படி ஒரு விபரீதம் நிகழ்ந்து விட்டதே”என்று பதைபதைத்த அரசன், உடனே காவலாளிகளை கூப்பிட்டு, “இவன் பெற்றோர் அருகே தான் எங்காவது இருக்க வேண்டும்.

     உடனே கண்டுபிடித்து அழைத்து வாருங்கள்” என்று கட்டளையிட்டான். வீரர்கள் நாலாபக்கமும் விரைந்தனர். கடைசியில் ஒரு விறகுவெட்டி தம்பதியினரை அழைத்து வந்தனர்.

    “இவர்கள் தான் அந்த பாலகனின் பெற்றோர். காட்டில் விறகு வெட்டி பிழைப்பது தான் இவர்கள் தொழில்” என்று மன்னனிடம் கூறினார்கள். மன்னன் அவர்களிடம் நடந்ததைக் கூறி, “என்னை மன்னித்து விடுங்கள்.  நான் வேண்டுமென்று உங்கள் மகனை கொல்லவில்லை.  அறியாமல் நடந்த தவறு இது. போதிய வெளிச்சம் இல்லாததாலும் தூரத்திலிருந்து அம்பெய்ததாலும் மரத்தின் மீதிருந்தது ஏதோ ஒரு விலங்கு என்று எண்ணி விட்டேன்….”

    தான் சொன்னதைக் கேட்டு அவர்கள் சமாதானாக வில்லை என்று யூகித்துக் கொண்டான்.

    அடுத்த நொடி கைதட்டி தனது காவலர்களை அழைத்தவன் இரண்டு பெரிய தட்டுக்கள் கொண்டு வருமாறு கட்டளையிட்டான். அருகே நின்று கொண்டிருந்த அமைச்சரிடம், இரண்டு தட்டுக்களை அவர்கள் முன்பு வைக்கச் சொன்னான். தட்டுக்கள் வைக்கப்பட்ட பிறகு அதில் ஒரு தட்டில் பொற்காசுகளை கொட்டி தான் அணிந்திருந்த விலைமதிப்பற்ற ஆபரணங்கள் நகைகள், நவரத்தின மாலை, முத்தாரம் என அனைத்தையும் வைத்தான்.

     பின்னர் தன் இடுப்பிலிருந்த உடைவாளை உருவி, அதை மற்றொரு தட்டில் வைத்தான். “மக்களை காக்கவேண்டிய நானே எனது குடிமகன் ஒருவன் உயிரிழக்க காரணமாகி விட்டேன்.  நான் தண்டிக்கப் படவேண்டியவன். பாதிக்கப்பட்ட உங்களிடமே தீர்ப்பை கூறும் வேலையை விட்டு விடுகிறேன்.

     நான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் இது தான்.  இதோ ஒரு தட்டு நிறைய பொற்காசுகள் விலைமதிப்பற்ற ஆபரணங்களும் இருக்கின்றன. அவற்றை எடுத்துக் கொண்டு என்னை மன்னியுங்கள்.

     அப்படி மன்னிக்க விருப்பம் இல்லை என்றால், மற்றொரு தட்டில் இருக்கும் உடைவாளை எடுத்து என்னை வெட்டி வீழ்த்தி உங்கள் மகனைக் கொன்றதற்கு பழி தீர்த்துக் கொள்ளுங்கள்..” என்று தனது கிரீடத்தை கழற்றி மந்திரியிடம் கொடுத்து இந்த பெற்றோர் முன்பு மண்டியிட்டு அமர்ந்தான் அரசன்.

    உடன் வந்த காவலர்களுக்கும் மந்திரி பிரதானிகளும் நடப்பதை பார்த்து திகைத்துப் போய் நின்றனர். அந்த விறகுவெட்டி நம் மன்னனை வெட்டிவிட்டால் என்ன செய்வது? மக்களுக்கும் மகாராணியாருக்கும் என்ன பதில் சொல்வது… செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர்.

    சில நிமிடங்கள் மௌனத்திற்கு பிறகு விறகு வெட்டி பேச ஆரம்பித்தான்… “ஒன்று நான் இந்த ஆபரணங்களையும் பொற் காசுகளையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அல்லது மன்னரை கொல்ல வேண்டும்… அப்படித்தானே…?

    நான் எதைச் செய்யப் போகிறேன் என்று அறிந்துகொள்ள அனைவரும் படபடப்புடன் காத்திருக்கிறீர் கள் சரி தானே? நான் விரும்புவது இந்த பொற்காசுகளையோ ஆபரணங்களையோ அல்ல… என் மகனே போய்விட்டபிறகு இவற்றை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்..?

    “ஐய்யய்யோ'' அப்படியென்றால் இவன் மன்னரை கொல்லப் போகிறான் போலிருக்கிறதே எல்லாரும் வெடவெடத்து போனார்கள்.
    விறகுவெட்டி தொடர்ந்தான்…

     “நீங்கள் நினைப்பது போல நான் மன்னரைக் கொல்ல விரும்பவில்லை.  அவர் அளிக்கும் பொன் பொருளையும் விரும்பவில்லை.  நான் விரும்பியது எதுவோ அது கிடைத்துவிட்டது. தான் செய்த தவறு குறித்து மன்னர் மனம் வருந்தவேண்டும் என்று விரும்பினேன்.

    அவரோ வருந்திக் கண்ணீர் விட்டதோடு பெருந்தன்மை யாக தனது உயிரையும் பதிலுக்கு தியாகம் செய்ய துணிந்துவிட்டார்.  அது ஒன்றே எனக்கு போதும்.மன்னரை தண்டிப்பதால் என் மகன் எனக்கு மீண்டும் கிடைக்கப் போவதில்லை.  ஆனால், இந்த நாடு ஒரு நல்ல மன்னனை இழந்துவிடும்.  நான் அப்படி செய்தால் என் மகனின் ஆன்மாவே என்னை மன்னிக்காது.

    அதே நேரம் நான் பொன்னையும் பொருளையும் பெற்றுக் கொண்டால் என் மகனின் உயிருக்கு நான் விலைபேசியது போலாகிவிடும். மன்னர் தான் செய்த தவறுக்கு உளப்பூர்வமாக மனம் வருந்தி சிந்திய கண்ணீரே போதுமானது.  எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம்” என்று கூறி தன் மனைவியை அழைத்துக் கொண்டு தன் வழியே போய்விட்டான் விறகுவெட்டி.

    ஒரு விறகுவெட்டிக்கு இப்படி ஒரு பெருந் தன்மையா? இப்படி ஒரு ஞானமா என்று வியந்து போனார்கள் அனைவரும். 
    இந்த கதை கூறும் நீதி…

    அந்த மன்னன் தான் நாம். நாம் செய்யும் பாவங்கள் தான் அந்த கொலை. அந்த விறகுவெட்டி தான் இறைவன். இப்போது புரிகிறதா எப்படிப்பட்ட மனதுடன் பரிகாரம் செய்யவேண்டும் என்று. 

    பெரும் பாவத்தை செய்து பரிகாரம் செய்தால் போச்சு என்று  ஆணவத்தால் பணத்தாலோ, ஆடம்பர யாகங்களாலோ, ஆண்டவனுக்கு வெள்ளி தங்க ஆபரணங்களை செலுத்தினாலும் சரி, அர்ச்சகரையோ, அல்லது அந்த ஆலயத்தை சார்ந்தவரை வேண்டுமானால் திருப்தி படுத்தலாம், ஆண்டவனை ஒரு நொடி கூட திரும்பி பார்க்க கூட  வைக்க முடியாது.

    ஆனால், இந்த கதையில் வரும் மன்னன் நிலையில் நின்று,  ஆண்டவா, மனதுக்குள் வேறு எந்த சிந்தனையு மின்றி நீங்கள் செய்த தவறை, நினைத்து,  அறியாமல் நடந்த  தவறை எண்ணி வருந்தி மனமுறுகி, இனி எக்காலத்திலும் இது போல் நிகழாவண்ணம் நான் பார்த்துக் கொள்கிறேன். இந்த ஒரு முறை மன்னித்து விடு ! என உளமுருகி மன்றாடி கேளுங்கள். ஆண்டவன் முன் நீங்கள் கண் மூடி மனம் வருந்தி வேண்டும் போது ஆண்டவன் உங்களை கண்திறந்து பார்ப்பான். கருணை புரிவான். இப்படி செய்யும்  பரிகாரங்கள் தான் பலனளிக்கும்.

  • June 22 – Sani bagavan Aradhanai

    ஜூன் 22 – சனிபகவான் ஆராதனை
    விகாரி வருடம் – ஆனி 7
    திருநள்ளாறு சனிபகவான் ஆராதனை
    22-ஜூன்-2019 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    பஞ்சமி          
    திதி நேரம்    :    பஞ்சமி    இ    9.02
    நட்சத்திரம்    :    அவிட்டம்    இ    9.04
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    : பூசம், ஆயில்யம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Rasi palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – பயம் 
    ரிஷபம் – நட்பு
    மிதுனம் – தடங்கல்
    கடனம் – களிப்பு   
    சிம்மம் – நோய் 
    கன்னி –  கவலை
    துலாம் –  தாமதம்  
    விருச்சிகம் – எதிர்ப்பு 
    தனுசு – வரவு
    மகரம் –   நலம் 
    கும்பம் – சுகம் 
    மீனம் –     பெருமை 
    சந்திராஷ்டமம்    – பூசம், ஆயில்யம்
     

  • World biggest Murugan Statue

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திர கவுண்டம்பாளையத்தில் உலகிலேயே மிக உயரமான முருகன் சுவாமி திருவுருவ சிலை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.  இரண்டரை வருடமாக இந்த முருகன் திருவுருவ சிலை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    மலேசிய தலைநகர் கோலாலம்பூர் அருகே பத்துமலைக் குகை கோயிலின் நுழைவாயிலில் உலகிலேயே மிக உயரமான முருகன் சுவாமியின் திருவுருவ சிலை அமைக்கப்பட்டது. அதன் உயரம் 108அடி ஆகும். ஆனால் இந்த முருகன் திருவுருவச்சிலை 126 அடி உயரம் கொண்டது. 

    மலேசியா பத்துமலை முருகன் தரிசிக்க பல நாடுகளில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அதைப்போலவே தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திர கவுண்டன் பாளையத்தில்  அமையும் முருகன் திருவுருவ சிலைக்கு பக்தர்கள் அயல் நாடுகளில் இருந்தும் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

    மலேசியாவில் முருகன் சிலையை வடிவமைத்த தமிழகத்தை சேர்ந்த திருவாரூர் தியாகராஜன் அவர்களின் குழுவினர் இந்த திருவுருவ சிலையை தற்போது முழுவீச்சில் வடிவமே வடிவமைத்து வருகின்றனர்.

     தரை தளத்தில் இருந்து 146 அடியாகவும் முருகன் சிலை மட்டும் 126 அடி உயரமும் கொண்டதாகவும் அமைக்கப்பட்டு வருகிறது.அடுத்த ஆண்டு பங்குனி உத்தரத்தில் இந்த திருஉருவச்சிலை முழுமையாக நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடை பெறுவதற்கு கோயில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். 

  • Kovai Kumbabishegam Vedio

    கோவை வடவள்ளி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கரிவரதராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்ற மஹா கும்பாபிஷேக திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு பெருமாளை வழிபட்டு சென்றனர்.

    கோவை வடவள்ளி அடுத்த முல்லை நகர் பகுதியில் சுமார் நானூறு ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ பூமி நீளா தேவி சமேத கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில் சுமார் நானூறு ஆண்டுகள் பழமையான திருக்கோவில் மதுரை மன்னராக இருந்த திருமலைநாயக்கரால் உருவாக்கப்பட்ட கோவில் என கூறப்படுகிறது.இந்த நிலையில் திருக்கோவில் புணரமைப்பு பணிகள் நிறைவடைந்து மஹா கும்பாபிஷேகம்  நடைபெற்றது.

    முன்னதாக குண்டம் அமைத்து கணபதி வழிபாட்டுடன் துவங்கிய கும்பாபிஷேக விழாவில் புரோகிதர்கள் மந்திரங்கள் முழங்க வேள்விகள் நடைபெற்றன.தொடர்ந்து  குடங்களில் கொண்டுவரப்பட்ட புனித நீரால் திருக்கோவில் விமானக்களுக்கு மஹா கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது.

    அப்போது வானில் கருடன் தோன்ற திரளாக கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு பெருமாளை வழிபட்டனர்.பின்னர் பக்தர்களுக்கு கும்பாபிஷேக தீர்த்தம் தெளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டன……..