OM Ennum Pranava mandiram

மகிழ்வான வாழ்வுக்கு ஒரு மாய மந்திரம் தான் “ஓம்” என்னும் பிரணவ மந்திரம். ஒற்றைச் சொல்தான் என்றாலும் அதன் சக்தி சொற்களை கடந்தது. ஓம் எனும் மந்திரம் செய்யும் அற்புதங்கள்  அனுபவ பூர்வமாக நாம் உணர வேண்டிய ஒன்று. இந்த மந்திரத்தை உள்ளத்தில் ஒலித்தால் மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வை தரும். அமைதியை தேடி அலைகின்ற மனங்கள் ஜெபிக்க வேண்டிய மந்திரம் ஓம். 

'ஓம்' என்று தொடர்ந்து உச்சரித்துக்கொண்டிருந்தால், உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைத்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவது ஆய்வில் தெரிந்துள்ளது. 

ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் உடலுக்கு அதிகப்படியான ஆக்சிஜன் கிடைப்பதோடு,  ரத்த ஓட்டமும் சீராகிறது. இதயமும் செரிமான மண்டலமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது அதோடு மட்டும் அல்லாமல்  'ஓம்' என்று உச்சரித்துவர நாளடைவில் நம் எண்ணங்களின் மீது சுயக்கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இதனால், தேவையற்ற சிந்தனைகள், எண்ணங்கள், உணர்வுகள் உருவாவது தடுக்கப்படுகிறது. தூயமையான எண்ணத்தோடு சாந்தமான ஆரோக்கியமான ஒரு வாழ்வு வாழ ஓம் என்று உச்சரிப்போம் உன்னத வாழ்வுதனை பெறுவோம்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *